Posted in இலங்கை செய்திகள்

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

கொழும்பில் பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல்

கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான

இந்திக்க ஹப்புகொட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் வீதிநிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வீதிகளில் உள்ள மின்சார சமிஞ்சை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர்

ஹப்புகொட தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார கால ஒத்திகையாக வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பமானது.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் வீதி நிரல்

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்..

இதற்கு அமைவாக கொழும்பு பிரதான 4 வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று 17 பணியாளர்களுடன் இந்தியாவில் இருந்து கொழும்பு’

துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலில் கடமையில் ஈடுபட்ட 7 பேர் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர் , சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று

நோயாளர்களா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இறுதி கொரோனா நோயாளர் குணமடையும் வரையில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை

கடைப்பிடிப்பது கட்டாயமாகுமென்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

நாம் மேற்கொண்ட சிறந்த சேவையின் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடிந்நது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு.

தற்பொழுது சிலர் நினைக்கின்றனர் இந்த தொற்றினால் நாட்டிற்கு பிரச்சினை இல்லை என்றும், இன்னும் சிலர் தொற்று ஏற்பட்டால்

அதனை இராணுவத்தினர் கட்டுப்படுத்திவிடுவர் என்றும் நினைக்கக் கூடும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்கள்

பல சிரமங்களை எதிர்கொண்டனர். அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது என்றும் இராணுவ தளபதி கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்

இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை

அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலிளித்திருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பு

விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக

புரிந்துகொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதில் வெளிப்படுத்தியிருப்பதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.

13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கைக்கு, இந்தியா

15 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்று பொய்யானதாகும் என்றும் அவர் கூறினார்.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதி உதவி பேரம்பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்;று விசேட செய்தியாளர்

மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடல்

பற்றிய உண்மைக்கு புறம்பான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், கடன்கள் , அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள் ,. மீனவர்கள் தொடர்பான நெருக்கடிகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இரண்டு

நாடுகளுக்கும் இடையில் , எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் நிதி உதவி தேவையாயின் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த

அமைச்சரரிடம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான மாகாண சபை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர்: இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்த திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுதும் நடைமுறையில் உண்டு. இராஜாங்க அமைச்சரின் கூற்று அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது.

இதனை நீக்குவதாக பிரதமரோ ஜனாதிபதியோ ஒரு போதும் தெரிவிக்கவில்லை. இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் அமுல்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தின்

கீழான மாகாண சபை முறையை எமது அமைப்பு வரவேற்றது. அதனை இப்பொழுதும் நாம் வரவேற்கின்றோம். சில தமிழ் அமைப்புக்கள் தான் இதனை விமர்சித்தன.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல : இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இந்த

கலந்துரையாடல் 45 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. இது நாடுகளுக்கு இடையில் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக

கலந்துரையாடப்பட்டது. எந்த முரண்பட்ட விடயங்களும் இதில் இடம்பெறவில்லை, சுமுகமான நல்லுறவுடன் பேச்சுவார்த்தைகள நடைபெற்றன.

பல கலந்துரையாடல்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும்.

தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து ஒருபோதும் முடிவு எடுக்கமாட்டோம்

Posted in இலங்கை செய்திகள்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில்

தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16

வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும் வீடு சென்று பார்த்த போது

தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார்.

எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி

அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான்

பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு

வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய மூன்று தையல் இயந்திரங்களை திருட்டுப் போன இடத்தில் திருடன் மீண்டும் வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர்

பாடசாலையில் இருந்த மூன்று தையல் இயந்திரங்களும் திருடப்பட்டிருந்தன.

இதனை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு பொலிஸாரிடம்


ஒப்படைத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குறித்த தகவலை அறிந்து கொண்ட திருடன், திருடப்பட்ட மூன்று தையல்

இயந்திரங்களையும் திருடிய இடத்தில் மறுநாள் வைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் ஐக்கிய அரபு

இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் தொற்று

உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழரின் நினைவேந்தல் உரிமை மற்றும் அடக்குமுறைகளை வலியுறுத்தி

முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் இடம்பெறவுள்ள

பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிணைந்த

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு

மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கந்தளாய் சீனி தொழிற்சாலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்தக் கைத்தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 25 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை சுமார் 26 வருடங்களாக மூடப்பட்டுள்ளது. கடந்த

அரசாங்கம் இதனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய போதிலும் அது திறக்கப்படவில்லை.

இதனால் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஏக்கர்

நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் சீனி தொழிற்சாலை

ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதியுடன் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும்

நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்ந்த பட்ச நிர்ணய விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்படா

விட்டால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேங்காயின் சுற்று வட்டத்திற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி

வெளியிடப்பட்டதன் பின்னர், இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை

எடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் சோதனை

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் Unibuffels (improved version of

Unicorns), ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இத்த யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியினரால் The

Army’s Sri Lanka Electrical and Mechanical Engineer (SLEME) தயாரிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.20200924 uni 1


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த கவச வாகனங்கள் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பின்தங்கிய

பகுதிகளில் பணிபுரியும் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டின் நிமித்தம் உத்தியோகபூர்வமாக இப்புதிய கவச வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது மாலியில் 20 அதிகாரிகள் மற்றும் 223 இராணுவச் சிப்பாய்கள் உட்பட 243 ஐ.நா. இலங்கை அமைதிகாக்கும்

படையினர் மாலி அமைதிகாக்கும் படை அமைப்பில் பணியாற்றுவதுடன், 65 வாகனங்களும் சேவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புதிய கவச வாகனங்களானது ஐக்கிய நாடுகள் பாதுகப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினரால்
இலங்கை இராணுவத்தினரால்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று 2020.09.26 இடம்பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து

காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின்போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத்

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான

ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு

கிட்டியுள்ளதாகவும், அது தொடர்பில் இரு நாட்டு மக்களும் புதிய எதிர்பார்ப்புகளுடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலொன்றில்

ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது இருதரப்பு உறவு மற்றும் பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையினதும், இந்தியாவினதும் பாதுகாப்பு துறை, வணிக தொடர்புகள் என்பவை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் இருதரப்பு

ஒத்துழைப்பு பேணப்பட்டுவரும் ஏனைய பிரதான துறைகளினது ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

காணொளி மூலமான கலந்துரையாடலை ஆரம்பித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,

“நான் இந்த மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எந்நாளும் போன்று உங்களை இந்தியாவிற்கு நாம் மிகுந்த

அன்புடன் வரவேற்கிறோம். பாரத தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு நான் உங்களுக்கு எந்நாளும் அழைப்பு விடுக்கிறேன். இந்த

கலந்துரையாடலை இவ்வாறு மேற்கொள்ள கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்தும் நான் இந்த சந்தர்ப்பத்தில்

வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு மக்கள் ஆணையை பெற்று கொண்டுள்ளமை தொடர்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து

கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த பாரிய வாய்ப்பாகும். நம் இருவரதும் நாட்டு மக்கள் புதிய கனவுகளுடன், உத்வேகத்துடன் எம்மை நோக்கி

அவதானித்து கொண்டிருக்கின்றனர். எமக்கு அனைத்து தரப்பினரதும் முன்னேற்றத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியும். கல்வி, விவசாயத்துறை, வணிகம் போன்று பல்வேறு துறைகளில்

எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். உங்களது அரசாங்கத்தினால் அடிப்படை பொருளாதார திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

இங்கு உரையாற்றிய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாவது,
“இந்த மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்ற முதலாவது மாநாடு இதுவாகும்.

நாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காவிட்டாலும், எம் இருவருக்கும் இடையிலான நட்பு, சகோதரத்துவத்துவ உறவு அதே நிலையில் இருக்கின்றது என நான் கூறிக் கொள்கின்றேன்.
உலகம் முகங்கொடுத்து கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று நெருக்கடி ஆரம்பித்த சந்தர்ப்பம் முதல் இந்தியா அயல் நாடுகளுக்காகவும்,அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் பாராட்டுகின்றோம்.

சார்க் நாடுகளின் பிரதான நாடு என்ற வகையில் சார்க் வலயத்தின் அனைத்து தலைவர்களுடனும் இந்தியா இதேபோன்று தங்களது கருத்துக்களை பரிமாற்றி கொண்டது.

ஜனாதிபதி தேர்தல் போன்றே பொதுத் தேர்தலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது. அதேபோன்று அனைத்து இனத்தவர்களுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.

எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ப நாங்கள் கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கை தொடர்பாக பெருமை கொள்கிறோம்.

மிகவும் கடினமான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்தமை பற்றி கூற வேண்டும்.

அதேபோன்று எவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியவசிய தேவைகளை உச்ச அளவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதபோன்று கொவிட் வைரஸ் நிலைமையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட தேவையுடையோருக்கும், நாளாந்த கூலி பெறுவோறுக்கும், விவசாயிகளுக்கும் நிதி நிவாரணங்கள் பெற்று கொடுத்தோம்.

வெளிநாடுகளிலிருந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகித்தோம்.

கொவிட் வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டப்பட்டது.

சர்வதேச கடல் மார்க்கத்துடன் அண்மித்து காணப்படுவதால் ஏற்படும் பாதுகாப்பு, தேச எல்லை தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க எமது நாடுகள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.

கொவிட்-19 உலகளாவிய தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதியின் போது இலங்கையின் உற்பத்தி துறைகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவது உகந்ததாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். இது இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்.

சமய, கலாசார விடயங்கள் சமமாக காணப்படும் எமது நாடுகளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் இணையில்லாத தோழமையை அதே நிலையில் கொண்டு செல்லவும் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.

எமக்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளை போன்றே, எமது முற்பட்ட நாகரீகத்திலிருந்து பெறப்பட்ட பொறுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எம்.யூ.எம்.அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உட்பட அரசின் உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்

மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சட்டவிரோதமான

முறையில் மண் ஏற்றி வந்த இரு வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் இருந்து கனரக வாகனங்களில் சட்டவிரோதமான

முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வருவதாகப் பொலிஸாருக்குக்

கிடைத்த தகவலையடுத்தே இந்த வாகனங்கள் பறிமுதல்

செய்யப்பட்டுள்ள​தோடு, வாகனத்தின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை மோட்டார் சைக்கிளில்

கொண்டு சென்ற நபர் ஒருவர், தலுவ பிரதேசத்தில் வைத்து கைது

செய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், நாகவிலு பிரதேசத்தைச் சேர்ந்தவர்

என தெரிவித்துள்ள பொலிஸார், புத்தளம் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட

சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கமானது இன்று (27) இரவு கற்பிட்டி ஊடாக, இந்தியாவுக்குக்

கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி

இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி

எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை

அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால்

முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார்.

பின்னர், அந்த சாரதிகள் உடற்பயிற்சி சோத​னையை முடித்ததும் அவர்களுக்கு

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

Posted in இலங்கை செய்திகள்

395 மில்லியனில் இந்திய நிதி உதவி-மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி

395 மில்லியனில் இந்திய நிதி உதவி-மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியானது இந்திய நிதி உதவி 80 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடிய கணித விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கணணி கூடம் வகுப்பறைகள் நிர்வாக

அலகு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்துடன் 04 மாடி கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியாகி உள்ளது. இந்த கட்டிட தொகுதிக்கு மேலும் 15 மில்லியன் ரூபா செலவில் ஆய்வுகூட உபகரணங்கள் கணணிகள்

அனைத்து பிரிவிற்குமான தளபாடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கொழும்பு இலங்கைக்கான இந்திய உயர்

ஸ்தானிகர் அலுவலகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.

இந்த செயற்திட்டம் குறித்தான மீளாய்வு கலந்துறையாடல் ஒன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் அரசியல் மற்றும் மேம்பாட்டு

ஒத்துழைப்பு ஆலோசகர் திருமதி பானு பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. (23.09.2020 ) இந்த கலந்துறையாடலில் முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்கான வேலுகுமார் எம். உதயகுமார் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டிட அபிவிருத்திற்கான பனிப்பாளர் கலாநிதி

அபேசுந்தர பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திட்ட பனிப்பாளர் எஸ்.முரளிதரன் உட்பட அதிகாரிகளும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின்

நிகழ்ச்சிதிட்ட பணிப்பாளர்கள் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரன் பழைய மாணவர்

சங்கத்தின் செயலாளர் பா.திருஞானம் ஆசிரியர்களான பி.கமல்நாதன் ஜி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்; கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது முன்னெடுக்கப்பட்ட மலையக

பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பான விடயங்களின் முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் படி மலையத்தில் காணப்படும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி

95 மில்லியன் ரூபா செலவிலும் மேலும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில்

அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம் நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம் கண்டி மாவட்டத்தில்

நாவலபிட்டிய டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம் கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம் பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ்

வித்தியாலயம் காலி மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள்

அபிவிருத்தி செய்யபடவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு

பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன. தொடர்ந்து மேலும் மலையகத்தில் பின் தங்கியுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்hகன

பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதற்கும் அனுமதி கிடைத்துள்ள அதே நேரம் தெரிவு செய்யபட்ட பாடசாலைகள் முன்மொழிப்படும்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதி தலைவரும்

முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
உன்மையிலேயே இது ஒரு சந்தோஷமான விடயமாகும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது இதனை பெற்றுக்

கொள்வதற்காக இந்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். அதன் பயனாக இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. இதற்கு உதவி செய்த கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர்

முன்னால் கல்வி அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல் தொடர்ந்து இந்த

வேலைத்திட்டத்தை தற்போதும் முன்னெடுத்து வரும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர்; கல்வி அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும்

உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நாட்டைவிட்டு விடைபெற்று சென்ற முன்னால் இந்திய உயர் ஸ்தானிகர் சரன்ஜித் சிங் அவர்களுக்கும் தற்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களுக்கும் உயர்

அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்தக் கொள்கின்றேன் இந்திய நிதி உதவி 395 மில்லியனில் மலையகத்தில் தற்போது 10 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது தொடர்ந்து

எதிர்காலத்தில் மேலும் மலையக பாடசாலைகள் இணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார்

Posted in இலங்கை செய்திகள்

தேங்காய்க்கு நிர்ணய விலை-சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்க்கு நிர்ணய விலை-சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்களின் தன்மையை​ பொருத்து அதற்கான அதிகபட்ச சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் சுற்றுவட்டம் 12 அங்குலத்துக்கு குறைவாக இருக்கும் 60 ரூபாயும் 13

அங்குலமாக இருக்குமாயின் அதற்கான அதிக பட்ச சில்லறை விலை 65 ரூபாயெனவும் நிர்​ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 13 அங்குலத்துக்கு அதிகமான தேங்காய்க்கான விலை 70 ரூபாயெனவும்,

இந்த நிர்ணய விலை இன்று முதல் அமுலாகுமெனவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்தோடு, மேற்படி நிர்ணய விலைக்கு அதிகமான எந்தவொரு விற்பனை

முகவர்களும் தேங்காயை விற்பனை செய்ய முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு,

அண்மையில் தேங்காய் உற்பத்தி குறைந்தமையே விலையேற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் கட்சிகள்

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் திலீபனின் நினைவுகூரலுக்கான

உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம், சாவகச்சேரி சிவன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம்,

பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மக்களை வாழ வைப்பது என் கடமை – கோட்டா

கிராமத்துடன் கலந்துரையாடல்’ ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பதுளை, ஹல்துமுல்லையில் தெரிவிப்பு…

 அனைத்து வாய்மொழி ரீதியான உத்தரவுகளையும் சுற்றறிக்கை என கருத்திற்கொள்ளவும்…

 உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

 14 நாட்களுக்குள் சட்டம் செயற்படுத்தப்படும்…

 ஹல்துமுல்லை உட்பட பல பிரதேசங்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…

 பஃகுமாரதென்ன வித்தியாலயத்தின் அனைத்து குறைபாடுகளும் நிறைவு செய்யப்பட்டது….

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

‘அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும்

தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு

நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறவும்.’ ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

ஹல்துமுல்லைஇ பதுளை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசங்களில் ஒன்றாகவும் வெலங்விட்ட, ஹல்துமுல்லை பிரதேச செயலகப்

பிரிவின் பின்தங்கிய கிராமமாக உள்ளது. ‘ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வின் முதலாவது சந்திப்பு ஹப்புத்தளைஇ

வெலங்விட்ட 100 ஏக்கர் கிராமத்தின் குமாரதென்ன வித்தியாலத்தில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

பாதைகள்இ மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள்

தமது பாரம்பரிய கிராமங்களை விட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

முன்னர் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் கல்விகற்ற குமாரதென்ன வித்தியாலயம் 16 மாணவர்களுடன் இன்று இருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் குறிப்பிட்டனர்.

100 ஏக்கர் கிராமத்திலிருந்து வெலங்விட்ட வரையான பாதையை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்தல்இ நீரூற்றுக்களை இனங்கண்டு

குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இரண்டு மாதங்களுக்குள் மின்சாரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தொடர்பாடல் தடங்கள் காரணமாக மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களின்

கவலைகளை ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்து கொண்டார். ஒரு சில வாரங்களுக்குள் தொடர்பாடல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தாலும் கலந்துரையாடலில் பங்குபற்றி கிராமவாசிகள் ஜனாதிபதி

அவர்கள் எடுத்த தீர்மானங்களின் காரணமாக தமது கிராமங்களில் வாழ்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

குமாரதென்ன வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள்இ அப்பிரதேசத்தை சூழ உள்ள பிள்ளைகளுக்கு மீண்டும்

பாடசாலைக்கு வருகை தந்து கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு அதகாரிகளுக்கு தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களின் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

கிரவனாகம மற்றும் நிக்கபொத்த மகா வித்தியாலயங்கள் மற்றும் கொஸ்லந்த தேசிய பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் ஹாலி எல மலித்த

மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். அது

தவிர வெள்ளவாய கம்பஹ மகாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் சொரகுனே மற்றும் ஜனானந்த

வித்தியாலயங்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கும் ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவரின் வேண்டுகொளுக்கு தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி 07 கிராமங்களை

இணைக்கக்கூடிய மொரகெட்டிய வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யவும் உத்தரவிட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் 35 கிலோமீற்றர்களை கொண்ட பெரகல – வெள்ளவாய பகுதிஇ கெலிபனாவெலஇ ஹால்கன்ன வீதியின் வௌ்ளவாய வரையான பகுதிஇ 100 ஏக்கர் கக்குட்டு

அராவ மத்திய வீதி, தெஹிலந்த – அளுத்வெலயை இணைக்கும் வீதி மற்றும் கிளை வீதிகளை துரிதமாக நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகள் தொடர்பாக

மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உரிமம் மற்றும் உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச விவசாயிகள் நாட்டின் அதிக மிளகு விளைச்சலுக்கு மற்றும் வளமான விவசாயத்திற்கு உரிமை கோருகின்றனர். அதில் பலர் சேதனப் பசளை பயன்படுத்தி மிளகு

பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல்இ கறுவாஇ கோப்பி உட்பட அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் விவசாயிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வனப் பாதுகாப்பு அளவைகளின் போது இடம்பெற்று இருக்கின்ற தவறுகளை தீர்க்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

கூடியிருந்த சிறு பிள்ளைகள் இருக்கக்கூடிய அனைவரினதும் பிரச்சினைகளுக்கு இயலுமான வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி அவர்கள்இ கலந்துரையாடலின் பின்னர் பிரதேசத்தின் பயிர் நிலங்கள் மற்றும் பல வீடுகளுக்கும் சென்று தகவல்களை கேட்டறிந்தார்.

பிரசேத்தின் மகா சங்கத்தினர், அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாரச்சி, சாமர சம்பத் தசநாயக்க, ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஜனாதிபதியின் இபிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் பிரதேச அரசியல் பிரதிநிதிகள், நிறுவனங்களி்ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் – மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 18 விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்ட மூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரணானது என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விசேட மனுக்களை பரிசீலனை செய்வதற்காக பிரதம

நீதயரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன,

விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ ஆகியோரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நடைபாதையில் உறங்கும் நோயாளர்கள்

நடைபாதையில் உறங்கும் நோயாளர்கள்

வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் (1) போதிய இடவசதிகள் இன்மையால், நோயாளார்கள் விடுதிக்கு வெளியே

நடைபாதையில் படுத்துறங்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (1) காயங்கள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்படும்

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பகுதியாக செயற்பட்டு வருகின்றது.

குறித்த விடுதிக்குள் அண்ணளவாக 40 கட்டில்களே போடப்பட்டுள்ளது. அதனைவிட அதிகமான கட்டில்களை

போடுவதற்கு அவ்விடுதியில் இடவசதி இல்லாதநிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிகமான நோயாளர்கள் வருகைதரும்போது அவர்களுக்கு ஒதுக்குவதற்கு கட்டில்கள் இன்மையால், விடுதிக்கு வெளியே பிரதான கட்டடத்தின் வாயில் பகுதியில் நோயாளர்கள்

தங்கவைக்கப்பட்டு உள்ளனர். குறித்த பகுதி பொதுமக்கள், வைத்தியசாலை ஊழியர்கள் நடந்து செல்லும் ஒரு பகுதியாக காணப்படுகின்றது.

குறித்த விடுதியில் கட்டில்கள் பற்றாக்குறையால் நோயாளர்களுக்கு படுக்கைகளை ஒதுக்கிகொடுப்பதில் தாதிய உத்தியோகத்தர்களும்

அசௌகரியங்களை எதிர்கொள்ளும் அதேவேளை, விடுதியில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கை குறைவாக

காணப்படுவதால் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்படும் போது கடமைபுரியும் ஊழியர்கள் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

வடக்கின் முக்கிய வைத்தியசாலையாக காணப்படும் வவுனியா மருத்துவனைக்கு முல்லைத்தீவு, மன்னார் உட்பட பல பகுதிகளைச்

சேர்ந்த நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தீவிரமான நோயாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படும்குறித்த விடுதியில் போதிய வசதிகளை

ஏற்படுத்துகொடுக்க வேண்டும் என்பது நோயாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.