இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை
Posted in இலங்கை செய்திகள்

இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை

இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை

இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.

எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.

இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Posted in இலங்கை செய்திகள்

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி,

வீடியோ

https://www.youtube.com/watch?v=aA7kavsF-D8
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்,அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவக தமிழ் பெண்கள் கண்ணீர் மல்க தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

மருத்துவர் அர்ச்சுனா அரசியல் போராட்டம் ,அது குறித்து மக்கள் தெரிவிக்கும்

வீடியோ

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .

இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .

தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,

நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .

சங்கு சங்கை ஊதுமா
Posted in இலங்கை செய்திகள்

சங்கு சங்கை ஊதுமா

சங்கு சங்கை ஊதுமா

சங்கு சங்கை ஊதுமா ,இலங்கையில் இடமிருந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விளங்கி வரும் அரியேந்திரன் கட்சி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார் ,

இதனால் இந்த சங்குக்கு சங்கு மக்கள்ஊதுவார்களா என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.

வைத்திய கலாநிதி அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் சங்கிற்கு பலத்த ஆதரவினை வழங்கி வந்தார்.

ஆனால் அவரது வழங்கியதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் பதுங்கி இருந்த பொது வேட்பாளர் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த தினம் சங்கிற்கு சங்கை ஊதிவிட்டார் அர்ஜுனர் இராமநாதன் தற்பொழுது சமூக ஊடகங்களில்

சங்கிற்கு தனது ஆதரவு என தெரிவித்து பாட்டு எழுதி பாடுங்கள் என அர்ச்சனா ராமநாதன் புலம்பேதேசம் மக்களுக்கு தெரிவித்திருந்தார் .

அதனை அடுத்து அவருக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து மூன்றுக்கு மேற்பட்ட சங்கு பாட்டுகளும் வழியாக இருந்தன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது சங்குக்கான தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அர்ஜுனன் ராமநாதன் தெரிவித்ததை அடுத்து ,தற்பொழுது சங்கு கட்சிகள் பதட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைமுகமாக நேரடியாகவும் அர்ச்சனா ராமனார் மீது கட்சிகள் சார்பில் தாக்குதலை நடத்த முற்பட்ட வேளையிலேயே ,அவர் இந்த கட்சிக்கான தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதாக தற்பொழுது பேசப்படுகின்றது.

சங்கு கட்சிக்கான அர்ஜுன இராமநாதனின் வழங்கிய நடவடிக்கை என்பது பொது வேட்பாளருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்கின்ற விடயம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம் ,நாட்டை விட்டு சிறப்பு விமானம் ஒன்று நுடாக தப்பியோட தயாராக மஹிந்த குடும்பம் என்கின்ற செய்தி ஒன்று தற்போது பரவலாக பரவி வருகின்றது.

இலங்கையில் விடுதலை புலிகளை முற்றாக ஒழித்து அதன் பின்னர் இலங்கைய அசைக்க முடியாத 50 ஆண்டுகால ஜனாதிபதிகள் தம் என கற்பனைகள் கண்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் இலங்கையை கொள்ளை அடித்து வேட்டையாடியது.

அதனை அடுத்து மகிந்த ராஜபக்சாவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டார் ,நாட்டை விட்டு ஓட்டமும் பிடித்தார்.

இன்றைய காலப்பகுதியில் இலங்கை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார சுமைகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் ,காரணமானது சிவப்பு சால்வைகளும் என மஹிந்த ராஜபக்ச குடும்பம் என்பது உறுதியானது.

அதனை அடுத்து தற்பொழுது இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரா திசாநாயக்க சிங்கள மக்களினால் பெற்றுக் கொள்வார் என்கின்ற கருத்து பரவி வருகின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் அனுராதா திசைநாயக்க மகத்தான வெற்றியை பெற்று விட்டால் ,

அது மஹிந்த ராஜபக்ச குடும்பம் அல்லது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,

தற்பொழுது நாட்டை விட்டு சிறப்பு விமானங்கள் தப்பியோட மகிந்த உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதர படுகொலைகளை நடத்தி ஜேவிபி கட்சியை உடைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது .

கடந்த கால ஆண்டும் ஆண்டு வந்த அரசாட்சிகளை அனுரா திசாநாயக்க பழி வாங்குவார் என்பதாலேயே இந்த சிறப்பு விமானம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா ,,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

மும்முனை ஜனாதிபதி வேட்பாளர் போட்டி பலத்த போட்டிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா திசநாயக்கா வெற்றி பெறுவார் என்கின்ற கருத்து நிலவுகிறது.

அவ்வாறாக காலப்பகுதியில் தற்பொழுது அனுர வரிக்குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

தேர்தல் முடிவு பெற்றதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டிய நிலை, இலங்கை வாழ் அரசியல் ஆளுகின்ற ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது வரி கொள்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சலுகைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதென அனுரா திசைநாயக்க தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வருகின்ற பொழுது மக்களை குஷி படுத்தவும் வாக்குகளை கொள்ளையடிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது சொற்களை அடித்து விளையாடுவது வளமையாகும்.

அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அனுரா திசநாயக்காவும் இப்படி தனது கொள்கை விரிப்பை அடித்துள்ளாரா என்பதும் ,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான வெற்றி பெறுவாரா என்பதும் இங்கே கேள்விக்குறியாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,சம்மாந்துறை போலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள துப்பாக்கிச் சம்பவம் இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாக உள்ளதாக சம்மாந்துறை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருநர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையவர் அழைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியரான இவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இது சகோதரருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத மூர்த்தி துப்பாக்கி பிரயோகத்தில் முடிவுற்றுள்ளதாகவும் தனது சகோதரனை சகோதரனை சுட்டு படுகொலை செய்துள்ளனர் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறுகின்ற வேளையில் தற்பொழுது இறுக்கமான தேர்தல் காணப்படுகின்ற வகையில் ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெறப் போவதாக இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

வரும் நாட்களில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற பயம் காணப்படுகிறது.

நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்
Posted in இலங்கை செய்திகள்

நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்

நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்

நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத

குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்

செப்டம்பர் 16 ஆம் திகதி ஹெட்டிபொல நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

  • நிரந்தர வறுமைக்கு முற்றுப்புள்ளி.

வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வரிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி

நிவாரணங்களை வழங்குவோம். எவரும் தொடர்ந்தும் வரியவர்களாக இருப்பதற்கு விருப்பமில்லாதமயால் நாம் வறுமையே ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • வீட்டில்லாதவர்களுக்கும் காணி இல்லாதவர்களுக்கும் வீடும் காணியும்.

தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம். கம் உதாவ செயற்த்திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். பிரதேச செயலாளர் பிரிவில் சர்வதேச தரத்திலான

இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் சர்வதேச மொழிகள் போன்ற துறையை இளைஞர்களுக்கு கற்பித்து அறிவை மேம்படுத்தும் வேலை திட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • விவசாயிகளுக்கு பல சலுகைகள்.

50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். பெரிய வெங்காய உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை

செய்யப்படுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

  • பொதுமக்களுக்கே நிவாரணங்கள்.

விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குகின்ற அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ்

உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். இந்த எரிபொருள் நிவாரணம் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் நிவாரணத்தை

தொழிலாளர் வர்க்கத்திற்கே வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டிய தேவை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி செயலணி.

இந்த நாட்டில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களை மையப்படுத்தி ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம். அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு

தனியான அலகொன்றையும் நிறுவுவோம். மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு

கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு

அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு

அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு ,தமிழ் பொதுவேட்பாளர் அரியேந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .

ஜனாதிபதிக்கு தேர்தல் பலத்த போட்டியை கட்சிகளுக்கு இடையில் ஏற்படுத்தி வரும் நிலையில் ,அதனை எதிர்கொண்டு பொது வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் அரியேந்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் எனும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழர்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் என்கின்ற நிலையில் தற்பொழுது அரியேந்திரன் மீது முக்கிய கட்சிகளின் பார்வை திரும்பியுள்ள வேளையில் இவ்வாறான விடயம் வெளியிட பட்டுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
Posted in இலங்கை செய்திகள்

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?

இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .

அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .

தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .

எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .

ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .

கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்

எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே

அர்ச்சுனா சங்கு மோதல்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா சங்கு மோதல்


அர்ச்சுனா சங்கு மோதல்

அர்ச்சுனா சங்கு மோதல், இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு சங்கு சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் .

இவ்வாறான கால பகுதியில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அதனது ஆதரவை வழங்கினார் .

அதனை அடுத்து சர்வதேசம் தழுவிய மக்கள் சங்கிற்கு மிக பெரும் ஆதரவை வாழங்கியுள்ளனர் .

இவ்வாறான வேளையில் தற்போது அர்ச்சுனா இராமநாதன் என்ன தான் பேசினார் ,

காணொளியில் உள்ளே விடயம் இதில் பார்க்கவும் .

வீடியோ

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்

காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை ,இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப்

பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack), அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு மீள்வதற்கான வாய்ப்பை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவது மிகவும் முக்கியமானது என்றும் ஜூலி கொசெக் (Julie Kozack) கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது

மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும்”

தனியார் கடன் வழங்குநர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த

அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கிய மைல்கற்களாக அமையும் என்றார்.

மேலும், IMF பணிக்குழாமினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து, அதன் மதிப்பீட்டை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கை அதிகாரிகளின்

வேண்டுகோளுக்கு இணங்க, IMF பணிக்குழாமினால் இந்த மதிப்பீட்டை இலங்கை பிணைமுறி உரிமையாளர்களின் நிதி ஆலோசகர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் எங்களின் பணி அதிலிருந்து முடிவடைகிறது. கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் பங்கேற்பதில்லை என்பதை நான் இங்கு வலியுறுத்த வேண்டும்.

அந்த பேச்சுவார்த்தைகள் கடன் பெற்ற நாட்டிற்கும் அதன் கடன் வழங்குநர்கள் இடையில் நடைபெறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் கடன்

நிலைபேற்றுத்தன்மையின் பொதுவான மதிப்பீட்டை மாத்திரமே செய்கிறது. மேலதிக விபரங்களுக்கு, இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையைப் ஆராயுமாறு பரிந்துரைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் கடன் நிலைபேற்றுத்தன்மை மதிப்பீடு (DSA) தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜூலி கொசெக் (Julie Kozack),

“இதற்கான எனது பதில் எனது முந்தைய பதில்களைப் போலவே உள்ளது. முதலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில்,

இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கை தனது

வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு, இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடைந்த சாதனைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

மூன்றாவது மீளாய்வுக்கான காலம் குறித்து தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே, ஜனாதிபதித் தேர்தல்

நிறைவடைந்த பின்னர், புதிய அரசாங்கம் அல்லது இலங்கை மக்கள் செய்யும் தெரிவின் அடிப்படையில், வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம். அதன்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு .கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்
Posted in இலங்கை செய்திகள்

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்

வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம்.

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டு செல்வோம்.

இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரினால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான

இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது. எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றை

பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.

சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்கிற்கு மீண்டும் 15 வீத வட்டி

அத்தோடு ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்த்து சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டியை மீண்டும் பெற்றுக் கொடுப்போம்.

வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு திட்டத்தை நிறுத்தினாலும் தாம் அதிகாரத்திற்கு வந்த

உடனே உதா கம்மான திட்டத்தை நிறைவு செய்து அதனை மக்களிடம் கையளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பல சலுகைகள்

விவசாயிகளுக்கு 5,000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம்.

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் தொடர்ந்து இந்த நிவாரணங்களை வழங்குவோம்.

செல்வந்தர்களுக்கு இந்த நிவாரணங்கள் தேவைப்படுவதில்லை. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமே இந்த நிவாரணம் பெறுமதியாக அமைகின்றது.

  • இளைஞர்களுக்கான புதிய வேலை திட்டங்கள்

இளைஞர் சமூகத்துக்காக இளைஞர் தொழில்நுட்ப மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம் ஆங்கில மொழி கல்வி,

தொழில் உருவாக்கம் போன்றவற்றை சர்வதேச தரத்தில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தொழில் வாய்ப்பில்லாத இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

  • வறுமை ஒழிக்கும் புதிய வேலை திட்டங்கள்

வறுமையை ஒழிக்கின்ற நோக்கில் 24 மாதங்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து திட்டங்களின் கீழ் மாதமொன்றுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரவ விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 49 வயதுடைய வதுரவ-வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வெயங்கொட பொலிஸார் குறிப்பிடத்தக்கது

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு


பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
நாடளாவிய ரீதியில் கடந்த 14 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8 ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்

அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில்

ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட நிறைவேற்று பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.

இதுவரை கபே அமைப்புக்கு 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றது தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது.

2015, 2019 நடைபெற்ற தேர்தல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமுமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8 ம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் அரச சொத்து துஸ்பிரயோகம்,

போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களை வீடியோ பதிவுகள் போலி

முகநூல் மற்றும் வட்சாப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளது இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் ஒன்று வரும் போது சமாதானமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு

கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர்,

ஒட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடவுள்ளனர்.

இருந்தபோதும் அரசியல்கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் வேண்டிக்கொள்ளுவது இதுவரை

காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை எவ்வாறு ஈடுபட்டுவந்தீர்களே, அதே

போன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .

இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் ,ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.