Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை
ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதோடு, காலத்திற்கு ஏற்ற வகையிலும் அதிக விலைக்கு
விற்பனை செய்யக்கூடிய வகையில் சிறந்த விவசாய செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் விவசாயத் திணைக்களம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையிலே காலத்திற்கு காலம் புதிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்களுடனான விவசாய செய்கைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்ற விவசாய
திணைக்களத்தின் மற்றுமொரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் பாதுகாக்கப்பட்ட பச்சை இல்லத்தில் உண்டான கறிமிளகாய் செய்கையை
மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதனை கற்பிக்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடைய அறுவடையும் நேற்று (04) நடைபெற்றுள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக பயிர்களை சிறந்த முறையில் விலை கூடிய நேரங்களில் செய்கை பண்ணக்கூடிய விதத்தினை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இக் காலப்பகுதி கறிமிளகாய் செய்கைக்கு உகந்த காலப்பகுதியாக இல்லாத போதும் அதனை சிறந்த முறையில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும், கிருமி நாசினிகளை
பயன்படுத்தாது இயற்கை உரத்தினை பாவித்து அதிக வருமானம் ஈட்டக்கூடிய இச் செய்கை முறையை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டு அதனுடைய அறுபடை வைபவமும் இடம்பெற்றிருக்கின்றது.
இவ் அறுவடை வைபவத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த முயற்சிகளின் ஊடாக விவசாயிகள் முன்னுதாரணமாக செயற்படுவதற்கான
விளக்கங்களையும் இந்த கறிமிளகாய் செய்கை தொடர்பாக பண்ணை முகாமையாளர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 300 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாப்பத்திரண தெரிவித்துள்ளார்.
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
துனிசியாவில் சோகம் – அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
மீட்புப் பணியில் வீரர்கள்
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.
இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். மேலும் இதுபற்றி துனிசியா கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்றார்.
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்றபோது எடுத்த புகைப்படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார்.
தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம்
முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிறது.
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர் – சைபர் கிரைமில் நடிகை சனம் ஷெட்டி புகார்
சனம் ஷெட்டி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த
ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்
50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்
ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் வெளியேறிய நிலையில் தற்பொழுது தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஐம்பது கிராமங்களை கொண்டு வந்துள்ளனர்
இந்த கிராமங்களில் தமது பாதுகாப்பை பலப்படுத்தியவாறு தலிபான் போராளிகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
தற்போது இராணுவத்தின் மிக முக்கியமுகாம் ஒன்று இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது ,கடந்த
மூன்றுநாட்கள் தாக்குதலில் மட்டும் 90 தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் ‘சுதந்திரத்திற்கான பறைக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இனப்படுகொலையை மறைக்க சிறிலங்காவை அனுமதிக்க வேண்டாம், இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம் என கோசம் எழுப்பியதுடன்,
சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர் – அரசன்
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீடடு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்
செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் -17 பேர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் -17 பேர் மரணம்
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சொந்தமான துருப்பி காவி சரக்கு விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன்போது அந்த விமானத்தில் 93 இராணுவத்தினர் இருந்துள்ளனர்
மூன்று விமானிகளுடன் புறப்பட்டு சென்ற இந்த விமானம் திடீரென வீழ்ந்து நொறுங்கியதில் பதினேழு பேர் மரணமாகியுள்ளனர்
ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்
இதில்; மூன்று இராணுவ வண்டிகள் ,ஐந்து சிப்பந்திகள் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி
திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி
அவுஸ்ரேலியாவின் கடல் பகுதியில் மனிதர் ஒருவர் நீச்சலில் ஈடுபட்டார் ,அப்பொழுது அவரது
அருகில் திமிங்கலம் ஒன்று தன் குட்டியுடன் நெருங்கியது ,மேற்படி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அச்சம் இன்றி மிக அருகில் மனிதர் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்
கருங் கடல் பகுதியில் ரசியாவின் முதல் தர பத்து வகையான சண்டை விமானங்கள் எதிரியின் கப்பல்கள் மீது எவ்விதம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற போர் ஒத்திகையில் ஈடுபட்டன
அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகைக்கு பதிலடியாக ரஷியாவும் இதனை நடத்தி காண் பித்துள்ளதுடன் ,புதுவகையான ஆயுதங்களையும் இதில் பயன் படுத்தியுள்ளது ,
இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்குள் நுழைந்தது ,ரசியாவின் செம்படைகள் ,அத்துடன் ஹிட்லர் கதை முடிவுக்கு வந்தது
அவ்வேளை பிரிட்டன் ,அமெரிக்காவினால் கூட ரசியாவை போல ஹிட்லரின் கோட்டைக்குள் புகுந்திட முயவில்லை என்பது வரலாற்று சான்றுகளாக உள்ள நிலையில்
இந்த போர ஒத்திகை இடம்பெருகின்றமை குறிப்பிட தக்கது
இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்
இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்
வட இந்திய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான சரக்கு
கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
ஈரானின் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,
ஈரானை தொடர்ந்து வலிந்து தகத்தலுக்கு இஸ்ரேல் உருவாக்கி வரும் நிலையில் ,தொடர் கடல் வழி தாக்குதலை ஈரான் தொடுத்துள்ளது
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என் ஏதிர் பார்க்க
படுகிறது ,ஈரானின் புதிய அதிபர் தெரிவு செய்ய பட்ட முதலாவது கப்பல் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
இலங்கையில் ஆடம்பர பொருட்களுக்கு ஆளும் கோட்டா அரசு தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை நிலை நிறுத்தும் முகமாகவும் ,இலங்கையின்
பொருளாதாரத்தை முன் நிறுத்தவும் இந்த தடை ,அல்லது கட்டுப்பாடு விதிக்க படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது
சுட்டெரிக்கும் வெயில் -கனடாவில் 719 பேர் மரணம்
சுட்டெரிக்கும் வெயில் -கனடாவில் 719 பேர் மரணம்
கனடாவில் என்றும் இல்லாதவாறு தற்போது அதிக வெப்பம் நிலவி வருகிறது ,இந்த வெப்பத்தின்
அகோரத்தில் சிக்கி ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 719 பேர் பலியாகியுள்ளனர்
இந்த வெப்பம் 49 டிகிரிக்கு மேலாக உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது
ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி
ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி
சரண்யா சசி
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல
படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.
சரண்யா சசி
இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா
ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்
ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் மர்ம ஆயுத தாரி ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஒருவயது மற்றும் ஒன்பது வயது சிறுவர்கள் தலையில் சூடு நடத்த பட்டுள்ளது ,இவர்கள் இருவரும் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
அது தவிர மேலும் ஏழுபேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நலமுடன் உள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர் ,மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து
Oahu, Hawaii கடல் பகுதியில் தரை இறக்க பட்டது ,இதில் விமானி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
மேற்படிசி விமானத்தை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
எரியும் கடல் – நடந்தது என்ன ..? VIDEO
எரியும் கடல் – நடந்தது என்ன ..?
Gulf of Mexico நாடுகளுக்கு இடையில் கடலுக்கு அடியால் எடுத்து செல்ல படும் எரிவாயு குழாய்
வெடித்து தீ பற்றியதில் அந்த கடல் பகுதி எரிந்த வண்ணம் உள்ளது ,அதாவது நீருக்கு மேல் தீ பற்றி பிடித்த படி எரியும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மேற்படி தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன
இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்
இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்
பிரான்ஸ் நாட்டில் தயாரிக்க படும் அதி சண்டை விமானங்களான Rafale fighter jets விற்பனை 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றது
,இதன் பொழுது பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி தற்போது நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
இந்த கால பகுதியில் இந்தியா முப்பத்தி ஆறு விமானங்களை வாங்கி குவித்தது ,அந்த விமான விற்பனை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
உலக
அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் முக முக்கிய இருநூறு நிறுவனங்கள் மீது சபைர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இணைய கைக்கர்கள் அவர்களின் கணணிக்குள் புகுந்து இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்
இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
IT and security management services to small- and medium-sized businesses







