Tag: சனம் ஷெட்டி
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
சனம் ஷெட்டி
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல்
நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர் – சைபர் கிரைமில் நடிகை சனம் ஷெட்டி புகார்
சனம் ஷெட்டி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த
ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி…. காரணம் இதுவா?
சனம் ஷெட்டி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து
வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது
சர்ச்சையை ஏற்படுத்தியது. சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த
வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும்
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனம் ஷெட்டி
கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில்
தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
சனம் ஷெட்டி
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த
ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சனம் ஷெட்டியின் புகார்
இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான்
அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






