Posted in Uncategorized

பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு

பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு

பிரபல பாடகர்களான இருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து நடிகர்களாக மாற்றியிருக்கிறார் குஷ்பு.

பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு
குஷ்பு
குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும்

திரைப்படம் ’அரண்மனை 3’. இதில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி

பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே நடிகர்களாக மாறி

வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி பாடகர்கள் இருவர் அரண்மனை 3 படத்தில் நடிகர்களாகியிருக்கின்றனர்.

இந்தத் தகவலை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சங்கர் மகாதேவன் – குஷ்பூ – ஹரிஹரன்

பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் அரண்மனை 3 படத்தில் ஒரு பாடலை பாடியதோடு

அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். இதை படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு அந்த புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு
பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு
Posted in Uncategorized

மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

மக்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை

ஈரானின் முக்கிய படையணி சேர்ந்த இராணுவத்தினரை கொன்றார்

என்ற குற்றச்சாட்டில் இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது

அதன் படி மக்கள் ஒன்று கூடி நிற்க அவர்கள் முன்பாக இருவருக்கு தூக்கு தண்டனை அளிக்க பட்டது


ஈரானின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துளளது

Posted in Uncategorized

விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

இந்திய டில்லி பகுதியியல் ஆளும் மத்தியாசுக்கு எதிராக

விவசாயிகள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

இதனால் அவர்கள் போராட்டம் நாள் தோறும் வீரியம் அடைந்து

செல்லும் நிலையில் திடீரென அந்த பகுதியில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியது

இதன் மூலம் இவர்கள் மூலம் பரப்ப படும் செய்திகள் தடுக்க பட்டால்

அதன் வாயிலாக இவர்கள் போராட்டத்த்தை நசுக்கி விடலாம் எனது

ஆளும் மோடி அரசின் நிலைப்பாடாக உள்ளது எனப்து குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

இலங்கையின் சுதந்திர தின எதிர்வரும் மாசி மாதம் வரவுள்ள நிலையில்

அனைத்து வீடுகளில் சிங்கள கொடியை ஏற்றி மக்களை கொண்டாடுமாறு

இனவாத ஆளும் அரசு அறிவித்துள்ளது ,தமிழர் வீடுகளிலு இந்த கொடியினை

ஏற்றுமாறு மிரட்டல்கள் விடுக்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும்

தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted in Uncategorized

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை தடுக்கும் வகையில்

நிகழ்கால நிகழ்வுகளை மைய படுத்தி விடுக்க பட்ட விதிகளை மீறி செயல்

பட்ட முப்பது பேரை தாம் கைது செய்துள்ளதாக

காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்

சிலர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது

Posted in Uncategorized

பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் தடுப்பு விதிகளை

மீறி செயல்பட்ட சுமார் பதின் ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக

இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,கைதானவர்கள்

மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

மூத்த ஊடக போராளி மரணம்

மூத்த ஊடக போராளி மரணம்

இலங்கையின் குறிப்பிட்டு பேச கூடியவர்களளில்மலைக்கை இதழ் ஆசிரியர்

டொமினிக் ஜீவா முக்கியமானவர் ,இவரது பல்வேறு பட்ட சாதனைகள்

இன்றுவரை பேச படுகிறது ,பேனா முனை ஒன்று வீழ்ந்த செய்தி

கண்டு தவிக்கிறது பெரும் வாசக வட்டம் ,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

Posted in Uncategorized

சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

ஏஎவ்பி செய்தியினால் சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!

இலங்கையில் யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திட்டுள்ள சர்வதேச

செய்திநிறுவனமான (AFP)ஏஎவ்பி, யுத்த குற்றங்களில் ஈடுபட்டர்வகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

ஏஎவ்பி இந்தச்செய்தி சர்வதேச ஊடங்களின் கவனத்தினை இன்று பெற்றுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/1/27/un-rights-chief-seeks-sanctions-against-sri-lankan-generals-afp
https://www.lecourriercauchois.fr/actualite-273325-geneve-afp-conflit-separatiste-tamoul-au-sri-lanka-bachelet-veut-des-sanctions-contre-l-armee
https://www.france24.com/en/live-news/20210127-un-rights-chief-seeks-sanctions-against-sri-lanka-generals
https://www.channelnewsasia.com/news/asia/sri-lanka-united-nations-international-criminal-court-14052080
https://www.macaubusiness.com/un-rights-chief-seeks-sanctions-against-sri-lanka-generals/
https://www.lepoint.fr/monde/conflit-separatiste-tamoul-au-sri-lanka-bachelet-veut-des-sanctions-contre-l-armee-27-01-2021-2411536_24.php

மேலும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர்

முடிவடைந்த 37 வருட போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது.

உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும்

ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது.

மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை

மேற்கொள்ளலாம்.
நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல்

போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையினைச் ஏஎவ்பி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.

‘ஐநாவே ! சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து’ என்ற முழக்கத்துடன் 2015ம் ஆண்டு நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் முன்கையெடுத்திருந்த மில்லியன் கையெழுத்து போராட்டத்துடன் கருத்துருவாக்கமாக உருப்பெற்றிருந்த

இக்கோரிக்கை, படிப்படியாக தமிழர் தரப்புக்கள் அனைவரதும் முதன்மைக் கோரிக்கையாக மாறியுள்ளதோடு, இன்று ஐ.நா

ஆணையளரின் அறிக்கையூடாக முக்கிய பேசுபொருளமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது

Posted in Uncategorized

இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்

இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்

இலங்கை அரசின் தமிழ் இன அழிப்பு தொடர்பில் 12 ஆண்டுகள் ககழிந்துள்ள

நிலையில் எவ்வித பொறுப்ப கூறல்களை கூறாது தட்டி கழித்து

செல்கிறது இலங்கை ஆளும் அரசுகள்

இதனை அடுத்து விரைந்த்துபாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை

வழங்குமுகமாக

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

முடக்கப்பட்டிருந்த பல பகுதிகள் விடுவிப்பு

முடக்கப்பட்டிருந்த பல பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர்

பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில்

இருந்த விடுவிக்கப்படுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா

தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 9 கிராம உத்தியோகத்தர்

பிரிவுகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம

உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்

நட்சத்திர தம்பதியான சரண்யா – பொன்வண்ணன் ஆகியோரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்


சரண்யா பொன்வண்ணன் மகளின் நிச்சயதார்த்த புகைப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம்

செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரண்யா பொன்வண்ணன் மகளின் நிச்சயதார்த்த புகைப்படம்

இந்நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள்

மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா

பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சரண்யா
நடிகை சரண்யா
Posted in Uncategorized

ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு

ரசியா ,அமெரிக்கா அதிபர்கள் இடையில் முதலாவது பேச்சு

ரசிய அதிபர் புட்டீன் மற்றும் அமெரிக்கா அதிபர் பைடனுக்கு

இடையில் தொலைபேசி மூலம் பேச்சுவாத்தை இடம் பெற்றுள்ளது

பைடன் பதவி ஏற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது

பேச்சுவார்த்தை இதுவாக இடம்பிடித்துள்ளது ,மேலும் நூறு நாள்

வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பட்ட விரைவான

வேலைத்திட்டங்களை பைடன் ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது

இலங்கை பண்டுற பகுதியில் நபர் ஒருவரை சுட்டு கொன்ற கொலை குற்ற

சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக

காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது

Posted in Uncategorized

கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் கொலை வெறி

தாக்குதலில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை

அரசு அறிவித்துள்ளது

மேலும் பல பிரதேசங்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளன

Posted in Uncategorized

ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு

ஐநாவில் இலங்கை இன்று குற்ற சாட்டுக்கள் தொடர்பாக ஆவணம் கையளிப்பு

இலங்கையில் மகிந்தவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை

தொடர்பான நீதி விசாரணைகள் ஐநா மனித உரிமை பேரவையில் இடம்பெற்று வருகிறது

12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பொறுப்பு கூறலில் இருந்து

விலகி இனவாதத்தை கக்கி வருகிறது ஆளும் அரசு ,

ஆதற்கு அப்படித்தால் போல ஐநா இலங்கையை சர்வதேச நீதிமன்றில்

நிறுத்த போவதாக அறிவித்த நிலையில் இப்பொழுது ஓடி திரிகிறது ,இன்று

அது தொடர்பான ஆவணங்களை ஐநாவில் இலங்கை சரம்பிக்க படவுள்ளதாக தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

கூட்டமைப்பே என்னை சிறையில் அடைத்தது – பிள்ளையான் அழுகை

எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு

வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட

அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்

கேட்டறியும் மக்கள் சந்திப்பு கும்புறுமூலை பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (26) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள

வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது

யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள் அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம்.

இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும்

என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான

சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற

நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக்

காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது

கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை

அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக

ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி ஜெ.லோபன்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கும்புறுமூலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Posted in Uncategorized

வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்

வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்

இலங்கை கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில்

மணல் ஏற்றி பறிக்கும் லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

மரத்துடன் மோதியது ,இதன் பொழுது மரத்தின் கிளைகள் தககியதில்

சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த

காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் குடும்பத்தினரை ஆறா துயரில் ஆழ்தியுள்ளது

உயிர் குடித்த மரம்
உயிர் குடித்த மரம்
Posted in Uncategorized

இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு ஐந்து லட்சம் கொரனோ தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு

வழங்கும் முகாமாக ஐந்து லட்சம் தடுப்பு ஊசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

சீனாவுக்கு தலையும் ,இந்தியாவுக்கு வாலை காட்டும் இலங்கைக்கு

இந்தியா போராயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது

அனைத்தையும் பெற்று விட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து

கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு,

தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான

வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த ஐ.நா ஆணையாளரது அறிக்கை தொடர்பில் கருத்தினை வெளியிடும் போதே இதனை

தெரிவித்தள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற

அவரது பரிந்துரை உற்சாகத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா ஆணiயாளரு அறிக்கையில் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த

வேண்டும் என்ற பரிந்துரையே முதன்மையான தெரிவித்திருக்கின்றார். இதற்கு பின்னராகத்தான் பிற பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

‘சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழர்கள் பல ஆண்டுகளாக உழைத்து

வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டாக இதனை கோரியுள்ளதோடு,

காணாமலாக்கப்பட்ட உறிவினர்கள் பாதிக்கப்பட்ட மக்களும் கோரியியுள்ளனர் ‘ என அறிக்கையில் மனித உரிமைச்சபை ஆணையாளர் அதனை குறிப்பிட்டிருக்கின்றார்.தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டுக்காக தமிழர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளோம்.


2015ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டி

மில்லியன் கையெழுத்து போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. அவ்வேளையில் தாயக மக்கள் உட்பட 1.5 மில்லியன் பேர்

கையொப்பமிட்டிருந்தார்கள். அதுவொரு முக்கியதொரு தொடக்கம். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு சர்வதேச சட்டவாளர்கள் ஆணையம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்

நீதிமன்றத்தில சிறிலங்காவை பாரப்படுத்தச் சொல்லியிருந்தது. அடுத்து மனித உரிமைச்சபையின் முன்னாள ஆணையாளர்

உசேன், தனது அறிக்கையில் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை

தமிழர்களில் ஒரு தரப்பிடம் வலுவாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரர் தனது பரிந்துரையாக நேரடியாகவே இதனை தெரிவித்துள்ளார். இது எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக

ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது

அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது

ஐ.நா மனித உரிமைச்சபை நாடுகளை நோக்கிய ஐ.நா ஆணையரது இந்த பரிந்துரையினை அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது பூகோள அரசியலை சார்ந்து காணப்படுகின்றது.

ஆணையாளது பரிந்துரையினை அந்நாடுகள் நிராகரிக்க முடியாது என்றே நம்புகின்றேன். அதற்கான நாம் உழைக்க வேண்டும். அந்த

47 நாடுகளில் முக்கியமான நாடுகளை அடையாளங்கண்டு கடுமையாக தமிழர் தரப்பு உழைக்க வேண்டும்.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது பரிந்தரையினை மையப்படுத்தியே பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

இதேவேளை ஆணையாளரது அறிக்கையில் நமக்கு முழுயைமான உடன்பாடு இல்லை. குறிப்பாக நடந்தேறிய பாரிய மனித உரிமைமீறல்கள் ‘மீளநிகழாமை’ தொடர்பில் அங்கத்துவ நாடுகள்

ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டவர்கள்தான்

அந்த பொறிமுறையினை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/u_8E6MxCwmQ
Posted in Uncategorized

மகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்

மகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்

அரவிந்த் சாமி
அரவிந்த் சாமி

நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன்

சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
அரவிந்த் சாமி


மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்

அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில

வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின்

கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.

அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’,

கள்ளபார்ட் ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள்

முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின்

வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

மகளுடன் அரவிந்த் சாமி

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த

புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது