Posted in Uncategorized

10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்

10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 10 ஆயிரம்

கிலோ மீட்டர் பயணித்து முடித்து ஐதராபாத் திரும்பி இருக்கிறார்.

10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்… உடன் பயணித்தவரின் நெகிழ்ச்சியான பதிவு
அஜித்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக்

பயணத்தைத் அஜித் தொடங்கினார். தனக்கு மிக நெருங்கிய

நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக

எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.

அஜித்

தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஐதராபாத் திரும்பியுள்ளார்

அஜித். இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:

“அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை – கோவை -சென்னை – ஹைதராபாத் –

வாரனாசி – காங்டாக் – லக்னோ – அயோத்யா – ஹைதராபாத் – சென்னை

என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக

முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர்

அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்’

இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in Uncategorized

செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம்

செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம் #

வவுனியா செட்டிகுளம் காட்டு பகுதியில் ஆயுத குழு ஒன்றுக்கும்

இராணுவத்திற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று

இடம்பெற்றுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக

இராணுவம் தெரிவித்துள்ளது

மர கடத்தலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக

தெரிவிக்க பட்டுள்ளது ,காயமடைந்தவர் வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

Posted in Uncategorized

இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 323 பேர் பலியாகியுள்ளனர்

நாள் தோறும் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி

போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி

இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவர் சோதனை சாவடியில்

பணிபுரிந்து வந்துள்ளார் ,அவ்வேளை அவ் வழியே பயணித்த

வாகனம் ஒன்று நிற்காது அந்த காவல்துறை ஊழியரை மோதி

தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்

இதனை அடுத்து தேடுதல் நடத்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்

Posted in Uncategorized

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

இலங்கை காலியில் உள்ள மருத்துவ மனையில் மருத்துவராக

பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளார்


இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வைத்தியர் மரணம் இதுவாக பதிவாகியுள்ளது

Posted in Uncategorized

தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

இலங்கையின் தென்மாகாண ஆளுநர் விலி காமவிற்கு கொரனோ

நோயானது தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in Uncategorized

ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்

ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்

அவுஸ்ரேலியா தலைநகர் பகுதியில் கடந்த தினம் இரவு ஒருலட்சம்

டொலர்கள் பெறுமதியான பெண்கள் கைப்பை ஒன்றினை திருடன்

ஒருவன் திருடி கொண்டு தப்பி சென்றுள்ளான்

இந்த திருட்டை மேற்கொண்ட பொழுதும் கடைக்கு சிறு சேதங்கள்

ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை குற்றவாளி

கைது செய்ய படவில்லை ,செல்வந்த வீட்டு பெண்களே இந்த

கைப்பையை பயன் படுத்துவது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 316 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் இவ்விதமான மரணங்கள் அதிகரிக்க கூடும் என அச்சம்

வெளியிட பட்டுள்ளது ,உலகிலேயே அதிக குறைவான மரணங்கள்

இடம்பெற்ற நாடக கோட்டா சிங்கள தேசம் பதிவு பெற்றுள்ளது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in Uncategorized

குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

இலங்கை வளைவை கங்கையில் நண்பிகளுடன் குளிக்க சென்ற 16

வயதுடைய மாணவி ஒருத்தி நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்

,இவருடன் குளித்து கொண்டிருந்த ஏனைய 16 நண்பிகளும் உயிர்

தப்பியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

Posted in Uncategorized

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா ..?

பெண்கள் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை

பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100

கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான்

உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன்

ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்என்ன நடக்கும் தெரியுமா

இதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு

தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை

என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில்

அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும்,

இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது.

பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை

இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.

தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட

பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு

இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ

அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால்

அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

அமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள்

தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை

மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்

பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் மிக அப்பதான் ஒன்றாக உள்ளது .

    Posted in Uncategorized

    பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

    பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

    தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன்

    இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த

    இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக

    தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    நிதி அகர்வால், பவன் கல்யாண்

    இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி

    அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில்

    பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.

    இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார்.

    முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளதால், நடிகை நிதி அகர்வால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம்

    Posted in Uncategorized

    ரகசிய திருமணமா? – சனம் ஷெட்டி விளக்கம்

    ரகசிய திருமணமா? – சனம் ஷெட்டி விளக்கம்

    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3

    போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால்

    நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்ட சனம் ஷெட்டி, தற்போது

    நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சில சமயங்களில் அதுபோன்று காணப்படுகிறார்.

    சனம் ஷெட்டி

    இதுப்பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம், எல்லாருமே இதே

    கேள்வியை தான் கேட்கிறார்கள். எனக்கு இப்போது வரை திருமணம்

    நடைபெறவில்லை. உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும்.

    மேலும், எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும்

    நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்று

    பதிலளித்த சனம், திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..

    Posted in Uncategorized

    நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட பிரபலம்

    நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட பிரபலம்

    மலையாள திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ஜோமோன்

    டி ஜான். இவர் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷின் எனை நோக்கி

    பாயும் தோட்டா போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். அண்மையில்

    வெளியான பாவக் கதைகள் எனும் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இவர்தான்.

    ஜோமோன் டி ஜான், அன் அகஸ்டின்

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அகஸ்டினின் மகளும்,

    நடிகையுமான அன் அகஸ்டினை திருமணம் செய்து கொண்டார். காதலித்து

    திருமணம் செய்து கொண்ட அவர்கள், தற்போது விவாகரத்து பெற்று பிரிய

    முடிவு செய்துள்ளார்களாம். நடிகை அன்னிடம் இருந்து விவாகரத்து கோரி

    ஜோமோன், நீதிமன்றத்தை நாடியுள்ளார். வருகிற பிப்ரவரி 9-ந் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது

    Posted in Uncategorized

    கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

    கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

    https://youtu.be/KHnSYypvvJo

    விவகாரத்தில் கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில்

    கனேடிய தமிழ்சமூகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கான செயல்முனைப்பினை

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

    சிறிலங்காவை மையப்படுத்தி புதிய தீர்மானமொன்று கூட்டுநாடுகளால்

    ஐ.நாவில் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில், அக்கூட்டு நாடுகளில்

    ஒன்றாக கனடா காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவை சர்வதேச

    குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் தீர்மானம் அமையவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தப்படுகின்றது.

    ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகமும்…

    என்ற தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இணைவழி கருத்தாடல் நிகழ்வில் இதற்கான செயற்திட்டங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

    கனேடிய அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில், இணைவழியிலான

    https://ctcja.com/ கையெழுத்து வேட்டை கனடா தமிழ்அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பினால்

    முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கனேடிய நேரம்

    இரவு எட்டுமணிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன்

    கணபதிப்பிள்ளை அவர்களினால் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.

    இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை

    உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

    அறிக்கை சுட்டிக்காட்டி கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

    Posted in Uncategorized

    2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

    2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

    இலங்கையில் பரவி வரும் கோவிட் நோயின் தாக்குதல் தடுப்பு

    விதிகளை மீறி செய்யப் பட்ட சுமார் 2,905 பேர் இதுவரை கைது

    செய்யப் பட்டுள்ளனர்

    இவர்களுள் கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் ஐம்பத்தி இரண்டு பேர்

    கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    மக்களின் அலட்சிய போக்கும் அது குறித்த தெளிவில்லாத

    நிலையுமே இந்த கைதிகளுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

    சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

    இலங்கையில் முன்கள பணியில் ஈடுபாடும் இராணுவத்தினர் என

    கூறி சுமார் முப்பத்தி ஓராயிரம் பேருக்கு கொரனோ தடுப்பூசி

    போடப் பட்டுள்ளது

    அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும் முன்னோக்கில்

    செயல்படாது பெரும் தொகையில் இந்த ஊசிகள் போட்டப்

    பட்டுள்ளது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

    Posted in Uncategorized

    இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

    இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்

    இலங்கை வளப்பனே ,நுவரெலியா பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது


    இதனால் பாதிப்புக்கள் ஏற்படாத போதும் தொடர்ந்து இலங்கையில்

    நில நடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை

    மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ள்து

    Posted in Uncategorized

    32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

    32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது

    இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்

    முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை

    சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த

    தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க

    பட்டுள்ளது

    Posted in Uncategorized

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    இரவில் தூங்கும்போது அறைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, போர்வையால் நன்றாக மூடி இருந்தாலோ

    உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. அறையின் வெப்பநிலையும், காற்றோட்ட வசதியும் சீராக இருந்தும்

    உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறிக்கொண்டிருந்தால் அது ‘இரவு வியர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது.

    சிலர் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் எழும்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் நனைந்து வியர்வை மழையில் குளித்துவிடுவார்கள். அதிக வேலை அல்லது உடல் சோர்வு

    காரணமாக எப்போதாவது இப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில்

    குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.

    அதிக தைராய்டு: உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் அதிக வெப்பத்தை உணர்வது ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளாகும். தைராய்டு சுரப்பிதான் உடலில் வளர்சிதை

    இரவில் தூங்கும்போதுவியர்த்தால் இந்த பிரச்சனை

    மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத்தொடங்கும்போது வழக்கத்திற்கு மாறாகவோ, அசாதாரணமாகவோ உடல் இயக்க செயல்பாடு நடைபெறும்.

    வழக்கத்துக்கு மாறாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதுபோல் பசியும், தாகமும் எடுக்கும். இதய துடிப்பும் வேகமெடுக்கும். கைகள் நடுங்கத்தொடங்கும். அதிக வியர்வையுடன் இந்த அறிகுறிகளில்

    ஏதேனும் ஒன்று தென்பட்டால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்பதை உணரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    குறைந்த ரத்த சர்க்கரை: நீரிழிவு நோயாளியாக இருந்தால் இரவு வியர்வைக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். சிலருக்கு தூங்க செல்லும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு

    சரியாக இருக்கும். ஆனால் தூங்கியதும் குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து போய்விடும். பகலில் அதிக வேலை பார்த்தாலோ, மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ

    , இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இந்த பிரச்சினை எழலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் பயன்படுத்தும் பட்சத்தில் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும்

    காரணமாக இருக்கலாம். தூங்க செல்லும் முன்பு குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் நன்றாக சாப்பிடுவது நல்லது.

    சுவாசிப்பதில் சிரமம்: இரவில் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் எழுந்தால் ‘சிலீப் அப்னியா’ எனும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.

    இதன் காரணமாக அதிகமாக வியர்க்க தொடங்கும். ஒவ்வொரு முறையும் மூச்சை நன்றாக உள் இழுத்து சுவாசிக்க

    தொடங்கும்போது தசைகள் இருமடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சுவாச கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் வியர்வை பிரச்சினை அதிகரிக்கும்.

    மார்பு வலி: இரவில் கடுமையான மார்பு வலி பிரச்சினை எழுந்தால் அதுவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலை நிமிர்த்த முடியாது. இது ‘ஆசிட் ரிப்ளக்ஸ்’ எனப்படும். இதன் காரணமாக இரவில்

    வியர்வை அதிகமாக வெளிப்படும். இத்தகைய பிரச்சினை இருந்தால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள்,

    பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இந்த பிரச்சினை எழுந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

    மருந்துகள்: காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சாப்பிடும் மருந்துகள் கூட இரவில் வியர்வை வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும். வென்லாபாக்சின், புப்ரோபியன், கார்டிசோன்

    மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சாப்பிடும் மருந்துகளும் வியர்வை சுரப்பியை தூண்டக்கூடும். இத்தகைய

    மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு இரவில் அதிகமாக வியர்த்தால் மருத்துவரை அணுகி மாற்று மருந்து சாப்பிடுவது நல்லது.

      Posted in Uncategorized

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.

      சிம்பு, நயன்தாராவை இணைத்து வைக்க முயற்சி செய்யும் பிரபல இயக்குனர்
      நயன்தாரா – சிம்பு


      சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை

      தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம்

      ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

      இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன்

      இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம்

      கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த

      அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

      சிம்பு – கவுதம் மேனன்

      சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’

      இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.