Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்க வேண்டிய துப்பாக்கிய சூழல் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்புக்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாயார் கூறிய போது ஊசி ஏற்றப்பட்டால் நோய் இருக்கும் என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த நிலையில் சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிறுமியின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டது.
சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொறுப்பு வைத்தியர் குறித்த தினத்தில் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும் நிலையில் விடுதியில் இருந்த தாதியர்களின் அலட்சியப் போக்கும் சிறுமியின் கை அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற சம்பவம் மனவேதனையை உண்டு பண்ணும் ஒரு சம்பவமாக பார்க்கிறேன்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.
விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு
4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு
UK Channel-4 News, ‘Sri Lanka’s East Bombings – Dispatches’ என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக செனல்-4 தாக்குதலுக்கு ‘உடந்தையாக உள்ள அதிகாரிகளின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
“2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளிப்பாடுகள், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளின் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்,” என்று அது கூறியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு
“இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் – அனுப்புதல்கள்” என்ற தலைப்பில் நாளை (05.09.2023) ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சியில், ‘அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகளே, தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.
இந்த காணொளியை ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஒளிபரப்ப சனல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் செனல்-4 க்கு, இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தனது சட்டத்தரணிகள் மூலம் வழங்கிய தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, அன்றைய தினம் காணொளி ஒளிபரப்பை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பில், ஆசாத் மௌலானா, தனது பெயரைப் பயன்படுத்தியுள்ள காலத்தில், தாம் இலங்கையில் கடமையாற்றவில்லை என்பதை,மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் செனல்-4 க்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் பதிலைத் தொடர்ந்து, செனல்-4 காணொளியின் தலைப்பை மாற்றி நாளைய தினம் அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் ஓர் ஆவணப்பட காணொளியை ஒளிபரப்பியது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் காணொளியாக வெளியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
238.5 மில்லியன் பணத்தாள்கள் முற்றாக அழிக்கப்பட்டன
238.5 மில்லியன் பணத்தாள்கள் முற்றாக அழிக்கப்பட்டன
ரூபாய் 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பணத்தாள்கள் கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தரமான மற்றும் சுத்தமான பணத்தாள்கள் நாட்டில் புழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல் ரூ. 44.3 பில்லியன் பெறுமதியான 108.2 மில்லியன் சேதமடைந்த பணத்தாள்கள் 2021 இலும் அழிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
தன்னுடைய மனைவி, ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து, அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த (31) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
இவர் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருமணமானபோது அவளுக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விமல் ஜயசிறி (62) என்பவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
உயிரிழந்தவர் கூலித் தொழிலாளி என்றும், (02) நாவலப்பிட்டி உயர் நீர்ப் பகுதியில் வீடொன்றுக்கு மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, மோசமான காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேட்டின் கீழ் விழுந்த நபரை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே வௌ்ளிக்கிழமை (01) கரடி தாக்கியுள்ளது.
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இவ்வாறு சனிக்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றுக்கு பின்னர், அங்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதன் பின்னரே திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
உணவு ஒவ்வாமையால் திடீரென சுகயீனமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், விருந்துபசாரத்தில் உணவு சமைத்தவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
தத்தளிக்கிறது கொழும்பு மரமும் முறிந்து விழுந்தது
தத்தளிக்கிறது கொழும்பு மரமும் முறிந்து விழுந்தது
கொழும்பில் சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் முழங்கால்கள் வரைக்கும் வெள்ளநீர் தேங்கி நின்றது.
இந்நிலையில், ஒரு சில நேரங்களில் மழையுடன் காற்றும் வீசியது. இதனால், விளம்பர பலகைகள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளன.
கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒல்கெட் மாவத்தை பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டது. கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மரத்தை அகற்றும் பணிகுளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்
கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்
அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கள்ளக்காதலியுடன் உல்லாசம் குடும்பஸ்தர் திடீர் மரணம்
உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்று மதியம் ஒரு மணியளவில், அவர் விடுதியில் திடீரென விழுந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இது திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
அசானிக்கு வீடு தரல எல்லாம் பொய் அசானி தாய் கண்ணீர்|asani saregamapa songs|zee tamil asani|அசானி வீடு
அசானிக்கு வீடு தரல எல்லாம் பொய் அசானி தாய் கண்ணீர்|asani saregamapa songs|zee tamil asani|அசானி வீடு
அசானி குடும்பத்திற்கு இதுவரை எவரும் வீடு கட்டி தரவில்லை என, அசானியின்
அம்மா கண்ணீரோடு தெரிவித்துள்ளார் ,இலங்கை யுடுபர்கள் பித்தலாட்டம் அம்பலம்
அசானி போட்டிக்கு தெரிவு |அசானி ஐந்தாவது பாடல்|asani saregamapa songs|zee tamil asani
அசானி போட்டிக்கு தெரிவு அனந்த கண்ணீரில் மக்கள்
கண்டி சின்ன குயில் ஆசானி போட்டியாளராக தெரிவு ,உலக தமிழர்கள் ஆனந்த கண்ணீரில் ,
ஆசானிக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி வாய்ப்பு ,அசானியின் முகத்தில் குழப்பங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தது ,இப்போதுதான் முழுமையான சந்தோஷம் அவளின் முகத்தில் வழிகின்றன.
- அருளினி பாட்டால் அழுத மக்கள்by நிருபர் காவலன்
- கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதிby நிருபர் காவலன்
- அசானி கிராமத்திற்கு உதவிய லோரன்ஸ்|அசானி|asani saregamapa song|asani song|ASHANI PAADALby நிருபர் காவலன்
- கில்மிசா போட்டியில் இருந்து விலக்கல்|கில்மிசாவுக்கு சதி|kilmisha song|kilmisha saregamapa today episodeby நிருபர் காவலன்
- புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songsby நிருபர் காவலன்
விபத்தில் தந்தையும் மகளும் பலி
விபத்தில் தந்தையும் மகளும் பலி
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தந்தையும் மகளும் பலி
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடைய தந்தை மற்றும் மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது.
கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்
100-120 நாட்கள் பயணித்து எல் 1 சுற்று வட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.
இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும். சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலம்
ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை தொடங்க இருக்கும் ஆதித்யா எல்-1, சூரியனை நாள் ஒன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.
நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும்.
இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் நேற்றுத் தொடங்கிய நிலையில் சரியாக இன்று காலை 11.50க்கு விண்ணில் பாய்ந்தது. ஆதித்யா எல்1 சோதனையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்
இஸ்ரேல் உளவுத்துறையை கவிழ்த்த ஈரான்
இஸ்ரேல் உளவுத்துறைக்குள் நுழைந்து வேலை பார்த்து இஸ்ரேலை உளவுத்துறையை கவிழ்த்த ஈரான் ,
அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் மொஸாட் ,
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
by நிருபர் காவலன்
வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி
வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பூவரசன்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று மாலை பயணித்துள்ளது.
இதன்போது திடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வவுனியாவில் 15 வயது சிறுவன் விபத்தில் பலி
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், இருவரில் ஒரு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணித்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு
தாக்குதலில், 26 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மோட்டர் சைக்கிளில் பயணித்த மனித வெடிகுண்டு தாரி ,
இராணுவத்தினரை நெருங்கியதும் ,வெடிகுண்டை வெடிக்க செய்தார் ,
இதில் இந்த பேரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,
பாதுகாப்பு பலப்படுத்த பட்டு சோதனைகள் முடுக்கி பட்டுள்ளன .