Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
லண்டன் சிவன் ஆலயத்தில் சிக்கிய நகை திருடன் video
லண்டன் சிவன் ஆலயத்தில் சிக்கிய நகை திருடன் video
லண்டன் சிவன் ஆலயத்தில் மக்கள் நகை திருடிய திருடன் மடக்கி பிடித்து தர்ம அடி
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், 1 1/2 கோடி ரூபாய் பணத்துடனும் 5 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
அதன் போது, சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது, அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமையை கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல்ம் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, வியாழக்கிழமை (31) அறிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை (31) திகதியிடப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்தனர்.
ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் எம்.பிக்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
இதேவேளை, தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் போதே நீதிபதி மேற்குறித்த விடயத்தை அறிவித்தார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்
37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்தியர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர் என்றும் இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அரசின் நலனுக்காக தரம் தாழ்ந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவசர கொள்வனவு விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுவதாகவும் பெரும்பாலானவை தரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.
அவற்றில் ப்ரெட்னிசோலோன் கண் மருந்தும் ஒன்று என்றும் இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்
வைத்தியர்கள் என்று சொன்னாலும் சில இடங்களில் மனநோயாளிகள் போல நடத்தப்படுகிறோம் எனவும் இந்த நிலைமைக்கு இழுத்திருப்பது அரசாங்கமே என்றும் கூறிய அவர், வை்தியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததால் அவர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றார்.
சத்திரசிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்த இழப்பீடு நிவாரணமும் வழங்கவில்லை
இல்லை என்றும் இழப்பீடு வழங்கினாலும் அவை எவ்வளவு நாட்களுக்கு போதுமானது என்றும் கேள்வியெழுப்பிய அவர், அப்பாவி மக்களுக்கு இழப்பீடுக்கு அப்பாற்பட்ட ஒன்றை வழங்குவது கட்டாயமாகும் என்றார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்
மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்
பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான்
அறிவதாகவும், எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவிகளுக்கு ஏற்படுகின்றது. எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது, மாதவிடாய் காரணமாக தான் மாணவிகள
பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் பணித்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
3 ரூபாவினால் குறைத்தது சினோபெக்
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்துள்ளது.
- ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாய்.
- ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 414 ரூபாயாகும்.
- ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 338 ரூபாய்.
- சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 356 ரூபாயாகும்.
05.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.
சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை மத்தேகொட பகுதியில் ஆரம்பித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்
இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்
இந்நாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும்,சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றாலும் அவ்வாறான
கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை என்றும்,எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபையின் UNDP மற்றும் Oxford பல்கலைக்கழகத்தினால் இவ்வாறான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முறையான கணக்கெடுப்பு இல்லாமல் எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றும்,தற்போதைய அரசாங்கம்
அஸ்வெசும போன்ற திட்டங்களைக் கூட முறையாகக் கணக்கெடுக்காமல் நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதனால்,சமூகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு,கவனிப்பார் அற்ற மக்களிடையே தகராறுகள் கூட ஏற்பட்டுள்ளன என்றும், இதனால் சமூகத்தில் குழப்ப நிலை தோன்றியுள்ளதுடன் அஸ்வெசும வேலைத்திட்டம் நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் குழப்பிய திட்டமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து எமது நாடு தொடர்பில் மேற்கொண்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka என்ற
தலைப்பிலான ஆய்வறிக்கையை அதனை நடத்தியவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்காக வந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (31) இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்
வறுமைக்கு தீர்வாக அஸ்வெசும திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும்,அது தெளிவானதொரு தீர்வாக காணப்படாததால் நாட்டில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வங்குரோத்து நாட்டில் அரசாங்கம் திருட்டு,ஊழல் மோசடிளை செய்து வருவதாகவும்,தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் கூட நாட்டுக்கு தரம் குறைந்த மருந்துகள் கொண்டு வரப்பட்டதை
ஒப்புக்கொண்டார் என்றும்,அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி தரக்குறைவான மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதே ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வாய் திறந்தார் என்றும், இதுவரை ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி
எழுப்புவதாகவும், ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி Ms Azusa Kubota,Dr Sabina Alkire (Director -Oxford Poverty and Human Development Initiative (OPHI),University of Oxford), சமூகவியல் துறைப் பேராசிரியர் சிறி ஹெட்டிகே,Mr.Fadhil Bakeer Markar ( Team Leader, UNDP) மற்றும் Ms.Tshokey Zangmo, Researcher, (OPHI) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு திட்டமாக,பல் பரிமாண இடர் குறிகாட்டிகளை அடையாளம் காணும் திட்டம் நம் நாட்டிற்கு இன்றியமையாத திட்டமாகும் என்றும், குறிப்பாக நம் நாட்டில் ஆபத்தில் உள்ளவர்கள்,கடன் சுமையால்
பாதிக்கப்பட்டவர்கள்,நோய்வாய்ப்பட்டவர்கள், காலநிலை மாற்றம் காரணமாக கல்வி கற்க முடியாதவர்கள், வறுமையால் ஆபத்தில் உள்ளவர்கள்
போன்றோர் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச கொள்கைகளை வகுக்க இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்
கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்
போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மாலபே பகுதியில் கடமையாற்றும் 2 கலால் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்
குறித்த உத்தியோகத்தர்களை மத்துகம, சிறிகடுல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர்கள் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை அபகரிக்கச் சென்ற போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, சந்தேகநபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
விபத்தில் சிக்கி 15 பேர் காயம்
விபத்தில் சிக்கி 15 பேர் காயம்
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த குழுவினர், கெப் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கெப் வண்டியின் பின்புறத்தின் கதவு உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கி 15 பேர் காயம்
இதன்போது கெப் வண்டியில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்து காயமடைந்துள்ளனர்
பின்னர் அவர்கள் வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
பாடசாலை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை
பாடசாலை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை
காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான யோசனை, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காலியில் வைத்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியை சேர்ந்த , செனவிரட்ன (வயது 27) என்பவர்கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, கனரக வாகனம் ஒன்றுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
வேதா தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
வேதா தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், வேதா ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய (30) தினம் சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
“இன்று வேதா ஆதிவாசி தலைவர் உறுவாரிகே வன்னியலெட்டோ உட்பட ஆதிவாசி சமூகத்தை சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய சவால்கள் பற்றி அறிந்து கொள்வது பெருமையாக உள்ளது” என்று உயர் ஸ்தானிகர் தனது எக்ஸ் இல் (ட்விட்டர் )பதிவு செய்துள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிமார்க் சஜித் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிமார்க் சஜித் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche)மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (30)
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இச்சந்திப்பு இடம் பெற்றது.
இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.
நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிமார்க் சஜித் சந்திப்பு
அவ்வாறே,தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளாக Mr.Azam Bakeer Makar (Development Coordination Officer), Mr.Tharaka Hettiarachchi (Peace Window Coordinator) உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) பிற்பகல் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
அங்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளின் 2 பாகங்களும், வாயு துப்பாக்கி ஒன்றும், ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் ஈய குழாயும், 2 கிலோ கிராம் தொகையும், டிரில் இயந்திரம் ஒன்றும் வெவ்வேறு அளவிலான 5 கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. .
கலேலிய பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 62 வயதுடையவா்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (30) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
கவிழ்ந்த மீன் லொறி வீதியில் நடந்த நடந்த பயங்கரம்
கவிழ்ந்த மீன் லொறி வீதியில் நடந்த நடந்த பயங்கரம்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ம் கட்டை பகுதியில் புதன்கிழமை (30) காலை மீன் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவிழ்ந்த மீன் லொறி வீதியில் நடந்த நடந்த பயங்கரம்
குறித்த லொறி நிலாவெளி பிரதேசத்திலிருந்து கந்தளாயிக்கு மீன் ஏற்றி வந்த போது 87 ஆம் கட்டைப் பகுதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாகவும், இவ்விபத்தில் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த
வாகன சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து
உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி, இரு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து கொள்ளையடித்து.
பின்னர் பொலிஜாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இது மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழந்தார்
குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபர; உயிரிழந்ததுடன், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அவளை கர்ப்பமாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விருந்தினராக வந்திருந்த மாமா, அந்த யுவதியின் பெற்றோர் இருவரும் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள விலங்கு பண்ணைக்கு வேலைக்குச் சென்றிருந்த போதே, இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
தன்னுடைய மகளுக்கு தொடர்ச்சியாக வயிற்றுவலி ஏற்பட்டது தொடர்பில், வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மகள் கர்ப்பமாக இருக்கின்ற விடயம் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த பெண்ணின் தாய், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர், நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.