Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு ,ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனிமையில் வசித்த பெண் கொலை
விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வௌியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக தனிமையில் வசித்து வரும் பெண்கள் பலர் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
தொடரும் இவ்வாறான மர்ம கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு,யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்அதிக வெப்பமான காலநிலை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும்.
மூளை செயல் இழந்து மயக்கம்
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
வெப்பத்தின் பேராபத்தான நிலை
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.
வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும்.
கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் ,பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளின் குடும்பத்திற்கு மகளின் தந்தை கடும் அழுத்தத்தை கொடுத்த சம்பவம் ஒன்று பன்னிபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
திருமணத்தின் பின்னர் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதன்போது, தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாமல் இருவரும் துபாய் சென்றுள்ளனர்.
பெண்ணின் தந்தை மிரட்டல்
அந்த நாட்டுக்கும் வந்து பெண்ணின் தந்தை தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
பின்னர் இந்த இளம் தம்பதியினர் மீண்டும் நாட்டுக்கு வந்து வீரமாவத்தை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தப் பின்னணியில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் மூவர் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின்
புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.
காரில் தப்பிச் சென்ற அதிகாரிகள்
பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும்
பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும் ,பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய
பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (07) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன்,
இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும்
அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானி
ய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய
மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர் ,2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல்
வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை
தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா விலகினார்.
விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா நேற்று (06) குறித்த குழாமில் இருந்து விலகினார்.
இந்த மனுக்கள் நேற்று எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, ஐவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதியரசர் எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த
வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார்.
அதன்பிறகு, இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு
இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06
வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் ஏறக்குறைய
நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள பழுதடைந்த பகுதிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். .
அதன்படி, மொழிபெயர்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய
மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ஆம் திகதி அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்தி கொலை
2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்திச்
சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அந்த தண்டனைகளில் இருந்து
தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை ,வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (06) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் புகுந்துள்ள நிலையில், வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைகால்கள் கட்டப்பட்டு கொலை
பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வருவதுடன், இருவரும் இரவில் சிகிச்சைக்காக வெலிகம நகருக்குச்
சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு ,இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room),
திரையுடன் கூடிய வகுப்பறை
மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு
மையம் (Studio Room), ஒளிப்பதிவு அறை (Studio Room) , மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள
ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி
மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல்
மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம் ,புத்தளம் – ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆண்டிகம, மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த மனன்னலாகே பிலேமசிறி ( வயது 49) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி கணவன் மோதல்
உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (05) மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகிலுள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மரண விசாரணை
அத்துடன், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம்
ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மஹகும்புக்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.
கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்து
வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண் மீது கார் மோதல்
வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிகடமுல்ல, அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?
டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .
இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .
100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .
இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .
அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .
மதுபோதை அருந்தி காணொளி
தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .
அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்
அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .
மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .
யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?
லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .
பல கோடி பணம்
அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்
பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .
மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்
ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .
இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்
பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .
அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .
குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .
சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து
அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .
அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .
இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .
மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .
ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .
பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது ,வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து,
நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (6) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள்
கைது செய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.
பொலன்னறுவை வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்,
மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
திங்கட்கிழமை (6) காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த வேலையற்ற
பட்டதாரிகள் குழு வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம் ,குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத தந்தைகளுக்கு மத்தியில் அவர்களின் பெயரைக் கூட கேவலப்படுத்தும் சில தந்தைகளும் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய அத்தகைய தந்தை பற்றிய தகவல் ஒன்றே வௌியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பொலிஸ் கைது
சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தரையில் விழுந்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு ,ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த
தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (05) தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பணயக்கைதிகளாக வைத்திருந்துள்ளார்.
10 வயது சிறுமியும், இரண்டு வயது ஆண் குழந்தையமே பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக செயற்பட்ட ஹங்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் குழுவும் பொலிஸ் விசேட
அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
ஒரு மணி நேர போராட்டம்
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொலிஸ் அதிரடிப் படையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது.
இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது
எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா
வகைகளின்படி வருகை எண்கள் “புதுப்பிக்கப்பட்டுள்ளன” என்று SLTDA குறிப்பிட்டது.
புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன்
பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார்.
“வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை” என்று அவர் கூறினார்.
ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன,
அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பெரிய கொங்ரீட் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
பெம்முல்ல கந்தஒலுவாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
நேற்று மதியம் இந்த கொங்ரீட் தளம் உடைந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன் ,ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் இலங்கை வத்தளையை சேர்ந்த விஜய் லோசன் பாடல் பாடி அசத்தியுள்ளார் .
விஜய் லோசன் முதல் பாடல்
விஜய் லோசன் முதல் பாடல் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடியிருக்கிறார் .அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார் .
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் ,இலங்கையில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளனர் .
பதுளையை சேர்ந்த இந்திரஜித்
அதில் மலையகம் பதுளையை சேர்ந்த இந்திரஜித் ,சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா ,ஆகிய மூவரும் கலந்து சிறப்பித்து வருகின்ற்னர் .
கில்மிசா ,அசானி கலந்து கொண்டு அசத்தி சாதனை நிலை நாட்டிய பின்னர் ,தற்போது இவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வு மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
தமிழகம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா
எமது இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கனவுகளை சுமந்து இந்த சரிகமபா நிகழ்வில் கலந்து கொண்டு பாடும் இந்த பாடும் குயில்கள் வெற்றி பெறவேண்டும் .
முதலாவது இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்பது நோக்கல்ல ,இந்த சரிகமபா மேடையில் ஏறிவிட்டாலே அதுவே பெருமை என்பதே இன்றைய நிலையாக உள்ளது .
ஈழ தமிழர்கள்
அதற்காக உலகம் தழுவிய ஈழ தமிழர்கள் ,தமிழக தொலைக்காட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .
அவ்விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் விஜய் லோஷன் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் .
இலங்கை வத்தளை மக்களுக்கு சரிகமபா பாட்டு அரங்கின் ஊடக, விஜய் லோசன் பெருமை தேடி தருவார் என மக்கள் எதிர் பார்க்கின்றனர் .
மிகவும் இறுக்கமான இந்த போட்டி , இலங்கை வாலிபர்கள் நின்று தாக்கு பிடித்து வெல்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது .
இந்த சரிகமபா நிகழ்வில் ,போட்டி கொண்ட திறமை சாலிகள் மோதி கொள்ள போகின்றனர் என்பதே போட்டியாளர்களை பார்க்கும் பொழுது தெரிகிறது .
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம் ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன்
தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய அறிக்கையை குறிப்பிட்டு, கர்தினால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த முடியாது, ஏனெனில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதை மறுக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்
“2021 பிப்ரவரி 2ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசியதை நானும் எனது செயலாளரும் உறுதிப்படுத்தி நிரூபிக்க முடியும். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரித்த
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
ஜனாதிபதி ஆணைக்குழு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்று சமீபத்தில் ராஜபக்சே கூறினார்.
இஸ்லாமியம் அல்லாத ஒரு அமைப்பையும் தடை செய்யுமாறு அறிக்கை தெளிவாக பரிந்துரைத்துள்ளது, இந்த உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மறுக்க முடியாது” என்று கர்தினால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம்
செய்துள்ளதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்த போதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கம்பளத்தின் கீழ் தொடர்ந்து தள்ளுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் பிக்கு தாக்கியுள்ளார் .
அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்கு கைது
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.
ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,
“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன்.
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம்
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,
“இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.
பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.
மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த
படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது
முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்
பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .
இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு . அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் .
லுணுகலை கும்புக்கன் ஓயா பகுதியில் இறந்த நிலையில் மர்ம சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் காணமல் போனவரது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இவர் எவ்வாறு மரணமானார் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
கடந்த மூன்றாம் திகதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ,காணமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல் துறையில் முறைப்பாடு செய்தனர் .
அதனை அடுத்து காணமல் போனவர் தொடர்பாக காவல்துறையினர் தேடுதலை நடத்திய பொழுது ,லுணுகலை கும்புக்கன் ஓயாவில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக ,காவல் துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மர்ம கொலை
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்ய ப்பட்டு இருக்கிறார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்க பட்ட பகுதியில் ,கொலைக்கான தடயங்களை தேடி சேகரிக்கும் நடவடிக்கையில் குற்ற பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் தொடரும் இவ்வாறான கொலைகளும் ,சடலங்கள் மீட்க படுவதால் ,சீரியல் கில்லர் சிலர் இந்த கொலைகளை நடத்துவதாக சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .






































