Posted in உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் – குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் – குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் சில நாட்களாக, புதிய கொரோனா நோயாளிகள்

எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் மேலும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கொரோனா நோயாளிகள் இரட்டிப்பு ஆகும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று இல்லாத மாவட்டங்கள் 319 என அறிவிக்கப்பட்டுள்ளது.

து தொடர்பாக இந்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவிக்கையில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 74 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா ஆஸ்பத்திரிகளில்

இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. நாடு முழுவதும் 20 லட்சம் பாதுகாப்பு கவசங்களை அனுப்பி உள்ளோம். நூற்றுக்கும்

மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதுடன், வைத்தியர்களை கௌரமாக நடத்த வேண்டும். நாம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு இந்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

        Posted in உலக செய்திகள்

        ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

        ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

        தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

        ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

        உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை

          கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

          இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.

          இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

          மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

          குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

          வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

          வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

          ஒரே நாளில்
          ஒரே நாளில்
              Posted in உலக செய்திகள்

              ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரேநாளில் 10,633 பாதிப்பு

              ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரேநாளில் 10,633 பாதிப்பு

              ரஷியாவில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது ,இங்கே

              கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
              10,633 பேர்

              புதிதாக இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
              இதுவரை சுமார் 134,686 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,.

              இதுவரை 1,280 பேர் இறந்துள்ளனர் என அரசு உத்தியோக பூர்வகாம அறிவித்துள்ளது


                ஆனால் மறுபட்ட தகவலோ அமெரிக்காவை போல ரசியாவிலும் பாதிப்பு அதிகம் எனவும் ,அந்த நாடு திட்டமிட்டு உண்மை தகவலை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது

                இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் இதுவரை மக்களுக்கு முழுமையாக

                வழங்கும் நிலைக்கு நாடுகள் எவையும் தம்மை தயார் படுத்தவில்லை என்பதே துயர் தோய்ந்த நிலையாக உள்ளது

                Russia's new daily coronavirus
                Russia’s new daily coronavirus
                    Posted in உலக செய்திகள்

                    14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு

                    14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு

                    ஆப்கானிஸ்தான் Panjwai பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக

                    தாலிபான்கள் முயற்சித்து வந்த நிலையில் ,அதனை அறிந்து கொண்ட அரச

                    இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலை நடத்தியது ,இதில் 14 தாலிபான்கள் பலியாகினர்

                    அவ்வாறு படு கொலை செய்ய பட்டவர்கள் சடலங்கள் மீட்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது


                      தெற்கு கந்தகார் பகுதியில் நடத்த பட்ட இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களில் குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                      தாலிபான்களின் தாக்குதலில் அரச இராணுவத்தின் உளவுத்துறை தலைவர்

                      படுகொலை செய்ய பட்டதில் இருந்து தற்பொழுது தாக்குதல்கள் உக்கிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                      14 தாலிபான்கள் சுட்டு
                      14 தாலிபான்கள் சுட்டு
                          Posted in உலக செய்திகள்

                          வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு

                          வடகொரியா ,தென்கொரியாவுக்கு இடையில் மோதல் – போர் பதட்டம் அதிகரிப்பு

                          வடகொரியா அதிபர் பலியாகி விட்டார் என உளவு துறை நிறுவனங்களினால் செய்திகள் பரப்ப பட்டது ,அதனை

                          பொய்யாக்கும் விதத்தில் நான் நலமாகவே உள்ளேன் என அவர் மக்கள் முன் தோன்றினார் .

                          இவர் வெளியில் தோன்றி 24மணித்தியாலத்தில் தென்கொரிய இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது

                          இதற்கு பதலடியாக தென் கொரியாவும் பதில் தாக்குதலை நடத்தியது ,இதனால் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது

                            155 மைல் நீளம் கொண்ட வடகொரியா எல்லையில் ,தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,இதில் முக்கியான அபாய

                            பகுதிகளில் இரு தரப்பு இராணுவத்தை குவித்துள்ளது

                            இந்த சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகின்ற பொழுது வடகொரியா தாக்குதலி நடத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது

                            கிங் யோங் உன் எப்பொழுது எதை செய்வார் என்பதே எவருக்கும் தெரியாது .


                            ரொக்கட் மான் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை செய்திடுவார் என்பதே உலக நாடுகளின் அச்சமாகும்

                            வடகொரியா தென்கொரியாவுக்கு
                            வடகொரியா தென்கொரியாவுக்கு
                                Posted in உலக செய்திகள்

                                சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்

                                சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்

                                இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

                                சிகிச்சை அளித்த டாக்டர்கள் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
                                போரிஸ் ஜான்சன், கேரி சைமண்டஸ்
                                லண்டன்

                                இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன்

                                மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

                                  மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

                                  கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன்

                                  நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.

                                  ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன.

                                  இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.

                                  இதுதொடர்பாக, போரிஸ் ஜான்சன் காதலி கேரி சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள

                                  செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த

                                  இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிக்கோலஸ் என்ற பெயரை சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

                                  சிகிச்சை அளித்த
                                  சிகிச்சை அளித்த
                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                                      கொரனோ தாக்குதலில் சிக்கி பிரிட்டனில் 27,500 பேர் பலி

                                      பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர்

                                      பலியாகியுள்ளனர் .
                                      மேலு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                                      இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                                      இவ்வாறான நெருக்கடியான நிலையில் மீளவும் பாடசாலைகளை திறந்திட அரசு முயல்கிறது ,

                                      மக்கள் அச்சத்துடன் உலவி வரும் வேளையில் மீளவும் கல்வி நிலையங்களை அரசு திறந்திட முனைவதும் ,

                                      அவ்வாறு திறக்க பட்ட கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பிட மறுக்கும் பெற்றவர்களுக்கு தண்டம் அறவிடும்

                                        நிலையை உருவாகக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

                                        எப்போது யாருக்கு எது நடக்கும் என்ற நிச்சயம் அற்ற நிலையில் எவ்வாறு

                                        பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என மக்கள் கொந்தளித்து வருகின்றனர்

                                        பாடசாலைகள் திறக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறக்க முடியும் ,அதனால் இந்த விளையாட்டை அரசு மேற்கொள்ள முயல்கிறது

                                        கொரனோ தாக்குதலில்
                                        கொரனோ தாக்குதலில்
                                            Posted in உலக செய்திகள்

                                            பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை

                                            பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை

                                            இந்தியா காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த

                                            இந்தியா இராணுவத்தினர் மீது திடீரென பாகிஸ்தானை இராணுவம் தாக்குதல் நடத்தியது

                                            இதில் இரண்டு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் ஒருவர் பலத்த

                                              சூட்டும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                              பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை

                                              தாம் நடத்துவோம் என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது

                                              பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் - இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை
                                              பாகிஸ்தான் இராணுவம் வெறியாட்டம் – இந்தியா இராணுவத்தினர் சுட்டுக்கொலை
                                                  Posted in உலக செய்திகள்

                                                  3000 இராணுவ வாகனங்களுடன் சிரியாவுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவம்

                                                  3000 இராணுவ வாகனங்களுடன் சிரியாவுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவம்

                                                  துருக்கிய இராணுவம் தமது எல்லைகள் கடந்து வடக்கு இட்லி பகுதியில் நிலை கொண்டுள்ளன,


                                                  சுமார் மூவாயிரம் இராணுவ வாகனங்கள் ,ஆயுத தளபாடங்களுடன் இட்லியை ஆக்கிரமிக்க காத்துள்ளனர் .

                                                  தொடர்ந்தும் சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                                    6,335 டிரக்குகளுடன் ,10,300 துருப்பினருடன் அப்போலோ பகுதிக்கு அண்மையில் மட்டும்

                                                    நிலை கொண்டுள்ளனர் என சிரியா அரச படைகள் தெரிவித்துள்ளன

                                                    இவை துருக்கியின் அத்து மீறல் செயல் பாடு என சிரியா அறிவித்துள்ளது

                                                    3000 இராணுவ
                                                    3000 இராணுவ
                                                        Posted in உலக செய்திகள்

                                                        கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video

                                                        கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video

                                                        கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

                                                        உணவுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த மக்கள் – அதிர்ச்சி சம்பவம்
                                                        உணவுக்காக காத்துக்கிடந்த மக்கள்
                                                        ஜோகனஸ்பர்க்:

                                                        உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 33 லட்சம் பேர்

                                                        பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

                                                          இதற்கிடையில், வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

                                                          மேலும், பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும்

                                                          இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

                                                          தென் ஆப்ரிக்காவிலும் வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

                                                          செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர்.

                                                          வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

                                                          இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

                                                          கொரனோ அவலம்
                                                          கொரனோ அவலம்
                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                              லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

                                                              லண்டனில் சிறுவன் சுட்டுக் கொலை – இருவருக்கு கழுத்து வெட்டு

                                                              நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் Kerry Drive, Upminster, பகுதியில் 11 வயது சிறுவன் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளான் .

                                                              மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டனர் .

                                                              இதில் கழுத்தில் பலமான வெட்டு காயங்களுடன் இவர்கள் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                              ஆபத்தான நிலையில் இருவரு சிகிச்சை பெற்று வருகின்ற்னர் ,துப்பாக்கிகள்

                                                                மீட்க பட்டுள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரிய

                                                                வரவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                                                                லண்டனில் சிறுவன் சுட்டுக்
                                                                லண்டனில் சிறுவன் சுட்டுக்
                                                                    Posted in உலக செய்திகள்

                                                                    கொரனோ கிருமியை உருவாக்கியது சீனா – ஆதாரம் பார்த்தேன் அமெரிக்கா டிரம்ப் அறிவிப்பு

                                                                    கொரனோ கிருமியை உருவாக்கியது சீனா – ஆதாரம் பார்த்தேன் அமெரிக்கா டிரம்ப் அறிவிப்பு

                                                                    உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை பரப்பியது சீனா என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மீளவும் குற்றம் சுமதியுள்ளார்

                                                                    சீனாவின் குவான் மாகாணத்தில் உள்ள உரு மறைப்பு செய்ய பட்ட ஆய்வு கூடத்தில் வைத்து இந்த கொரனோ கிருமிகள் உருவாக்க

                                                                    பட்டன எனவும் ,அந்த ஆதாரங்களை தான் பார்வை இட்டுள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

                                                                      சீனா இவ்வாறு செய்த இந்த பெரும் அபாயகாரமான வேலைக்கு எங்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் தவறின் பெரும்

                                                                      விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அதிபர் மிரட்டியுளளார் ,

                                                                      இவரது மிரட்டலுக்கு சீனா அடங்கி போகுமா..? அப்படி போவதற்கு என்ன ஈராக்கா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்

                                                                      இந்த கிருமிகளை தயாரித்த அமெரிக்கா உள்ளிட்ட ,சீனர்களை ,அமெரிக்கா உளவுத்துறை கைது செய்து வைத்துள்ளது ,

                                                                      இவ்வாறான பலமான ஆதாரங்களை தன்னகத்தே வைத்துள்ள போதும் சீனாவை அடிபணிய வைத்திட அமெரிக்காவினால் முடியுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                                                                      நேரடியாக முதன் முதலாக தான் ஆதாரத்தை பார்த்தேன் என டிரம்ப் கூறுவதில் இருந்து சீனாவின் அபாயகர விளையாட்டு

                                                                        எதுவரை சென்றுள்ளது என்பதும் , சீனா மேலும் என்ன சதிகளை செய்ய போகிறது என்பதையும் அமெரிக்கா நான்கே அறிந்துளளது

                                                                        அப்படி என்றால் திட்டமிட்ட படி சீனா மீது அமெரிக்கா கூட்டணி நாடுகள்

                                                                        இணைந்து தாக்குதலை நாடத்துமா ..? இங்கிருந்து மூன்றாம் உலக யுத்தம் வெடிக்குமா ..?

                                                                        என்ற பரபரப்பு எழுந்துள்ளது ,கொரனோ பரப்பியா சீனாவுக்கு எதிராகா

                                                                        சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திட ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா முயன்று வருகின்றன .

                                                                        சர்வதேச நீதிமன்றினால் கூட சீனாவை அடக்கிட முடியுமா என்பதே சந்தேகம் ஆகிறது .

                                                                        பார்க்கலாம் ஏதோ ஒன்று விபரிதமாக நடக்க போகிறது ,அது என்ன என்பது சில நாட்களில் தெரியவரும் .

                                                                        கொரனோ கிருமியை
                                                                        கொரனோ கிருமியை
                                                                            Posted in உலக செய்திகள்

                                                                            அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி

                                                                            அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி

                                                                            அவுஸ்ரேலியா Western Australia’s Pilbara பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி

                                                                            மற்றும் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் . இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்

                                                                            கத்திமுனையில் சிசு மற்றும் தாயை கடத்திய நபர் இந்த படுகொலை செயலை புரிந்துள்ளார் ,


                                                                            தற்போது கடைத்தெரு எங்கும் இரத்தம் சிந்திய நிலையில் காண படுகிறது

                                                                            போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது, கொலையாளி

                                                                            கைது செய்யப் பட்டுள்ளார்
                                                                            இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை

                                                                                70 லட்சம் பெண்கள் கர்ப்பம் -கொரனோ வேளையில் நடந்த கொடுமை

                                                                                உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் காரணமாக ஊரடங்கு மற்றும் ,மருந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது

                                                                                இந்த கால பகுதியில் மாட்டும் உலகளாவிய ரீதியில் சுமார் எழுபது லட்சம்

                                                                                பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளனர் என உலக சுகாதா மையம் தெரிவித்துள்ளது

                                                                                கருத்தடை சாதனங்கள் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக

                                                                                இந்த கர்ப்பம் தரிப்பு நிகழ்ந்துள்ளது எனவும் ,இதில் மருத்துவ மனையில்

                                                                                  கருக்கலைப்பு விகிதம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                                                                  ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு அதிகமான கரு கலைப்பு இடம்பெற்று

                                                                                  வருகிறது ,இது ஒரு சிசு படுகொலை என்பதாக கத்தோலிக்க சபைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன

                                                                                  பாவத்தின் பலனால் பாவத்தை சுமக்கும் இந்த சிசு கொலையை தடுத்து

                                                                                  நிறுத்த பல்வேறு பட்ட விடயங்கள் நிகழும் பொழுதும் இதனை தடுத்திட இயலவில்லை

                                                                                  70 லட்சம் பெண்கள்
                                                                                  70 லட்சம் பெண்கள்
                                                                                      Posted in உலக செய்திகள்

                                                                                      அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

                                                                                      அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

                                                                                      அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

                                                                                      Cape Girardeau, Missouri பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வணக்கத் தளமான பள்ளிவாசலை ,நபர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ளார்

                                                                                      இந்த தீ வைப்பு சம்பவத்தில் பலமாக மசூதி பாதிக்க பட்டுள்ளது ,
                                                                                      குறித்த

                                                                                        தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார்

                                                                                        தற்போது ரமளான் நோன்பு காலத்தில் இந்த செயல் இடம் பெற்றுள்ளது

                                                                                        இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                                        அமெரிக்காவில் முஸ்லீம்
                                                                                        அமெரிக்காவில் முஸ்லீம்
                                                                                            Posted in உலக செய்திகள்

                                                                                            1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

                                                                                            1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

                                                                                            மராட்டிய மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திருக்கோவிலூருக்கு 1,300 கி.மீ. நடந்தே வந்த வாலிபரை குடும்பத்தார் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்.

                                                                                            16 நாளில் 1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்


                                                                                            முகையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
                                                                                            திருக்கோவிலூர்:

                                                                                              கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொல்லூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் மராட்டிய

                                                                                              மாநிலம் உஷா நகரில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக

                                                                                              அங்கு வேலை இன்றி தவித்தார். உணவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு பயணிக்க முடிவு செய்தார். அதன்படி சதீஷ்குமார் கடந்த

                                                                                              14-ந் தேதி சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினார். ஐதராபாத், பெங்களூரு வழியாக இரவு-பகல் என பாராமல் நடந்தே வந்தார்.

                                                                                              அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தன்னார்வலர்கள், போலீசார் உணவு வழங்கினார்கள்.

                                                                                              நேற்று காலை சதீஷ்குமார் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து திருக்கோவிலூர் நோக்கி நடந்து வந்து

                                                                                              கொண்டிருந்தார். வரும் வழியில் வெறையூர் போலீசார் சதீஷ் குமாரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

                                                                                              வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரை ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

                                                                                              இதையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-.வுக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்முடி பேசியதால் சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டார்.

                                                                                              இது குறித்து உடனடியாக செல்போன் மூலம் சதீஷ்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொல்லூர் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெறையூர்

                                                                                              கிராமத்துக்கு உறவினர்கள் விரைந்தனர். அங்கிருந்த சதீஷ் குமாரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை பார்த்ததும்

                                                                                              குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர். இவர் 16 நாட்களில் 1,300 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்ததாக தெரிவித்தார்

                                                                                              1 300 கி மீ நடந்தே ஊருக்கு
                                                                                              1 300 கி மீ நடந்தே ஊருக்கு
                                                                                                  Posted in உலக செய்திகள்

                                                                                                  100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                                                                                                  100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                                                                                                  அமெரிக்காவில் நாள் தோறும் கொரனோ நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில்

                                                                                                  பலியாகி வருவதால் சடலங்களை வைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .


                                                                                                  இதனால் குளிரூட்ட பட்ட லொறிகளுக்கு மூடைகள் போல அடுக்கி வைக்க

                                                                                                    பட்ட நிலையில் 100 மனித சடலங்களுடன் லொறிகள் வீதியில் நிறுத்த பட்டுள்ளன

                                                                                                    இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் , 70 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் ,

                                                                                                    தொடர்ந்து வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

                                                                                                    100 சடலத்துடன்
                                                                                                    100 சடலத்துடன்
                                                                                                    Posted in உலக செய்திகள்

                                                                                                    ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

                                                                                                    ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

                                                                                                    பூனை ஒன்றின் சுட்டி செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது ,

                                                                                                    ஆட்டின் மேலே பூனை ஒன்று ஏறி சவாரி செய்யும் காட்சி தான் அது .

                                                                                                    ஆடோ பூனையை தாக்காமல் விட்டு அப்படியே சுமந்து செல்கிறது
                                                                                                    இரண்டு நிமிடம் அடங்கிய இந்த காணொளி ரெம்பவே வைரலாகி வருகிறது

                                                                                                    ஆட்டின் மேலே சவாரி
                                                                                                    ஆட்டின் மேலே சவாரி
                                                                                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                        பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                                                                                        பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                                                                                                        பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்

                                                                                                        துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்

                                                                                                        இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்

                                                                                                        இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்

                                                                                                          ,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்

                                                                                                          கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்

                                                                                                          காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது

                                                                                                          ,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்

                                                                                                          இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை

                                                                                                          பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

                                                                                                          https://www.youtube.com/watch?v=qUSrB55b5gA
                                                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                              வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                                                                              வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

                                                                                                              வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

                                                                                                              திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

                                                                                                              சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

                                                                                                              ,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                                                                                                              இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

                                                                                                              உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


                                                                                                              இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                                                                                                              போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                                                                                                              போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்