Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்

காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு படித்த வாலிபர் ஒருவர் முகநூல் ,மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடக பல பெண்களுக்கு காதல்

வலை விரித்து அதில் பெண்களுடன் ஆபாசமாக உரையாடி

அவர்கள் அந்தரங்க காட்சிகளை கைபேசியில் வைத்திருந்த நிலையில் சிக்கினார்

இவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்க பட்டு வந்த இளம் பெண் ஒருவர் பெற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய

தகவலின் அடைப்படையில் குறித்த வாலிபர் நகர்வுகள் கண்காணிக்க பட்டன


அதன் வழியே காதல் மன்னன் மடக்கி பிடிக்க பட்டார்
அப்பொழுது

அவர் கைபேசியை ஆராய்ந்த பொழுதே இந்த அந்தரங்க ஆவணங்கள் பலநூறு சிக்கியது

சினிமாவை மிஞ்சிய காதல் கில்லாடி இவர் தான் போல

Posted in உலக செய்திகள்

ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி

ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி

தமிழகத்தில் சினிமா பாணியில் ஒரு பெண்ணை அண்ணன் தம்பி

காதலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

அண்ணன் காதலித்த பெண்ணை அதே தம்பி காதலித்து திருமணம் முடித்தார் ,

இதனால் மனம் உடைந்த அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ,

இதனை அறிந்த தம்பதிகள் நஞ்சை அருந்தினர் ,இதனால்

தம்பதிகள் தொடர்ந்து மருத்துவ மனையில் அபாயம் கட்டத்தில் உள்ளனர்

சினிமாவை மிஞ்சிய அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு நிலவுகிறது

Posted in உலக செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்

மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்

தமிழகத்தில் மீனவர் வலையில் ஆயிரம் கிலோ எடையுள்ள திருக்கை மீன் ஒன்று சிக்கியுள்ளது


வலையை கரைக்கு இழுத்து வர சிரம பட்ட மீனவர்க்ள, மேலும் சில

படகுகளை இணைந்து கரைக்கு இழுத்தனர் அப்பொழுதே வலையில்

இந்த இராட்சத மீன் இழுத்து வரப்பட்டது

Posted in உலக செய்திகள்

பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை


கலவரம் நடந்த பல்பொருள் அங்காடியை படத்தில் காணலாம்
பிரேசிலியா:

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால்

அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத்

தொடங்கியுள்ளன. பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து

வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட

காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள டாட்டின்ஸ்கி என்ற மாவட்டத்தை

சேர்ந்த சிலர் போதைக்காக மதுவுக்கு பதில் கிருமி நாசினியை குடித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த

போதும் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது

வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது

அந்தேரி வீட்டில் கஞ்சா சிக்கியதை தொடர்ந்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.

வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு

பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்

தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது

செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை

பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை

நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும்

அடிபட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு

வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Posted in உலக செய்திகள்

மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

ஆர்மேனியா மற்றும் சேர்பியன் படைகளுக்கு இடையில் கடும் சண்டை

இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,உலக நாடுகளின் தலையீட்டால் இரு நாட்டு இராணுவம் போர் ஓய்வு நிலைக்கு செல்வது என முடிவு செய்தன

இதன் படி அசேர்பியா இராணுவத்திடம் மீட்க பட்ட பகுதிகளில் சிலவற்றை

ஒப்படைக்க முடிவு செய்ய பட்டது ,அதன் படி அந்த அபகரிக்க பட்ட பகுதிகளில்

இருந்த மக்கள் வீடுகளை தீ வைத்து ஏறித்தான் அதன் பின்னர் எலும்பு

கூடுகளாக அந்த கிராமங்களை ஆர்மேனிய இராணுவம் ஒப்படைத்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

துருக்கியில் ஆளும் சண்டியர் எடகோனின் ஆட்சியில் சர்வாதிகாரம் முற்றி உள்ளது

,தனி இனவெறியுடன் அவரது செயல் பாடுகள் இடம்பெற்று வருகிறது ,

நாடுகள் மீது படையெடுப்பு மற்றும் தனக்கு பிடிக்காதவர்களை இரகசியமாக

போட்டு தள்ளுவது மேலும் பயங்கரவசதிகளுடன் தொடர்பு என கோரி கைது செய்வது என்ற படலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இவ்விதம் குருதீஸ்தான் போராளிகளுடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற

சாட்டில் முக்கிய சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட நூற்றி ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி விவகாரம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசில் நாட்டில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் எதிர் வரும் சில மாதங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை

அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஜேர்மனியில் மக்களை கத்தியால் வெட்டிய மர்ம நபர்

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார்.

இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை அவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றார். அவரை சிலர் தாக்கினார்கள்.

இதனால் மேலும் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் குத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.

குடும்ப பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக

முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்

நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்

பிரிட்டனில் எதிர் வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்பாக

பாடசாலைகள் விடுமுறை விட கூடும் என எதிர் பார்க்க பட்டு வந்த நிலையில் அவ்விதமான செயல்கள் எதுவும் இங்கு இடம் பெறாது

என
கல்வி அமைச்சர் தடாலடியாக அறிவித்துள்ளார்

இவரது அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் இடியாக வீழ்ந்துள்ளது

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை

பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்.

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்தது ஹாங்காங்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத்

திட்டத்தின் கீழ் ‘ஏர் பப்பிள்’ முறையில் வெளிநாடுகளுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம்

போடப்பட்டது. இதன்படி, ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை

மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா தவிர, வங்காளதேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,

அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி – ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில்

சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வரும்

டிசம்பர் 3-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


கொரோனா காலத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 5வது முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது

Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

வடக்கு சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்

போராளிகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

இதனால் குறித்த போராளிகள் அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா ஆதரவு பெற்ற அமைப்பு ,அதே அமெரிக்காவினால் கைவிட

பட்ட நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல அழிந்து செல்லும் விளிம்பு நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்

தெற்கு லெபனான் போராளிகள் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் அகோர தாக்குதலை மேற் கொண்டுள்ளது

மேற்படி தாக்குதலில் குறித்தா அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக

இஸ்ரேல் அறிவித்துள்ளது
மேலும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய ஜனாதிபதியாகி புதிதாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன் இடம் பிடித்துள்ளார்

இவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது
இவர் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் இறந்து விடுவார் எனவும்

அதன் பின்னர் முலாவது ஜனாதிபதி என்ற பெருமையை கமலா காரிஸ் பெறுவார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது

பாக்கலாம் வரப்போகும் ஆண்டுகள் சொல்ல போகும் செய்திகள் எதுவாக உள்ளது என்பதை

Posted in உலக செய்திகள்

ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

அமெரிக்க முன்னாள் அதிபார் ஒபாமா எழுதியுள்ள ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தின் பதிப்பாளார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது, ஒபாமா எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பு புத்தகமான ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’,

வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலும் கனடாவிலும் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

முன்பதிவு செய்து வாங்கப்பட்ட பிரதிகள், மின்னணுப் பிரதிகள், மற்றும் ஒலி வடிவப் பிரதிகளும் இதில் அடங்கும்.

எங்களது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எந்தவொரு புத்தகமும் இதுவரை இவ்வளவு அதிக பிரதிகள் விற்பனையானதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ஒபாமாவின் மனைவி மிஷெல் எழுதிய ‘பிகமிங்’ புத்தகம் தான் பெங்குயின் வெளியிட்ட ஒரே நாளில் மிக அதிகமாக விற்பனையானது.

2018 ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் வெளியான 24 மணி நேரத்தில் 7.25 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின. புதன்கிழமை

நிலவரப்படி, அமேஸான் வலைதளத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் ஒபாமாவின் ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ முதலிடத்தில் உள்ளது

Posted in உலக செய்திகள்

உலக மக்களினால் அதிகம் விரும்ப படுபவர்களாக ஒபாமா தம்பதிகள் தெரிவு

உலக மக்களினால் அதிகம் விரும்ப படுபவர்களாக ஒபாமா தம்பதிகள் தெரிவு

உலக மக்கள் அதிகம் நேசிக்கும் நபர்களாக அமெரிக்காவின்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தம்பதிகள் தெரிவு செய்ய பட்டுள்ளனர்

இவர்களின் மனித நேய அறம் சார்ந்த செயல் பாடுகள் மற்றும்

,வெளிப்படை தன்மையான நகர்வுகள் மக்கள் விரும்ப காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அவுஸ்ரேலியா இராணுவம்

அந்த நாட்டின் அப்பாவி மக்கள் முப்பத்தி ஒன்பது பேரை கொன்று

குவித்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா ஆதரவு படைகளாக செயல் பட்டு வரும்

அவுஸ்ரேலியாவின் இந்த செயல் தொடர்பான நீதி விசாரணைகள் மேற்கொள்ள படவுள்ளன

போர்க்குற்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு

பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு

பிரிட்டன் ஆளும் அரசு இராணுவத்தில் புதிய ஆயுத தளபாட உற்பத்தி

மற்றும் இராணுவ அபிவிருத்திக்கு என சுமார் 16.5 பில்லியன் பவண்டுகளை ஒதுக்கியுள்ளது

தொடர்ந்து நிலவி வரும் பனிப்போர் காரணமாக தமது

இராணுவத்தை மீள கட்டமைக்க இந்த நிதி தேவை படுவதாக கூறி மேற்படி நிதி ஒதுக்க பட்டுளள்து

பாதுகாப்பு செலவீனத்திற்கு மிக பெரும் நிதி ஒதுக்கியுள்ளது மூன்றாம்

உலக போருக்கு நாடுகள் தயாராகி வருகின்றனவா என்ற சந்தேகத்தய் கிளப்பியுள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி

அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி

மத்திய ம்,ஏரிக்காவில் கடும் புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி

ஆறு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் பல ஆயிரம் மக்கள் தமது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்

தொடர்ந்து கடும் மழை புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது

மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன