Posted in உலக செய்திகள்

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்தது.

13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,908 பேரும், பிரேசிலில் 754 பேரும், இத்தாலியில் 753 பேரும், போலந்தில் 603 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரத்து 752 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 1 ஆயிரத்து 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 53 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,56,206
பிரேசில் – 1,67,497
இந்தியா – 1,30,993
மெக்சிகோ – 99,026
இங்கிலாந்து – 53,274
இத்தாலி – 47,217
பிரான்ஸ் – 46,698
ஈரான் – 42,941
ஸ்பெயின் – 42,039

Posted in உலக செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்

தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்

அமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மோசடி குற்றச்சாட்டை நிராகரிப்பதா? -தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட

தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர்

வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.

இதனால் மேலும் கடுப்பான அதிபர் டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான

அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.

‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ்

கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.

ஆனால், கிறிஸ் கிரெப்ஸ் தனது பதவி பறிபோகும் என கடந்த வாரமே தன் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Posted in உலக செய்திகள்

இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்

இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்

இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி, மன்மோகன்சிங் என்று ஒபாமா தனது புத்தகத்தில் புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ‘எ பிராமிஸ்டு லேண்ட்’ (‘வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு நிலம்’) என்ற பெயரில் தனது அரசியல் வாழ்க்கையின் நினைவலைகளை இரு தொகுதிகளாக

எழுதுகிறார். முதல் தொகுதி உலகமெங்கும் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 2008-ம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி

தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து தனது முதல் பதவிக்காலம் வரையிலானவற்றை (பாகிஸ்தானில் ஒசாமா

பின்லேடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டது வரையிலானவை) பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த புத்தகத்தின் முதல் தொகுதிக்கு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை விமர்சனம் எழுதி, அதன் மூலம் சில தகவல்கள்

வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த புத்தகத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

இந்தியா பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தியா மீதான என் மோகம், மகாத்மா காந்தியுடன் தொடர்பு உடையது. ஆபிரகாம்

லிங்கன், மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருடன் மகாத்மா காந்தி என் சிந்தனையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினார்” என கூறி உள்ளார்.

“ஒரு இளைஞனாக நான் மகாத்மா காந்தியின் எழுத்துகளை படித்தேன். என் ஆழ்ந்த உள்ளுணர்வுகளுக்கு அவர் குரல்

கொடுப்பதை நான் கண்டேன்” என மகாத்மா காந்தியைப்பற்றி எழுதுகையில் நெகிழ்ந்து போய் இருக்கிறார் ஒபாமா.

இந்த புத்தகத்தில் அவர் இன்றைய நவீன இந்தியாவை பாராட்ட தவறவில்லை.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “மீண்டும் மீண்டும் ஆட்சி மாற்றங்கள், அரசியல் கட்சிகளுக்குள் கடும் சண்டைகள்,

பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்டங்கள், ஊழல் மோசடிகள் என எல்லாவற்றிலும் தப்பித்து பல அம்சங்களில் நவீன இந்தியா ஒரு

வெற்றிக்கதையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” என கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி ஒபாமா நிறைய சொல்கிறார். குறிப்பாக, “இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி மன்மோகன்சிங். அவர் முன்னேற்றத்தின் சின்னம்.

அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மத சிறுபான்மை வகுப்பில் இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக

மக்களிடம் நற்பெயரை சம்பாதித்ததுடன் பேணியும் வருகிறார்” என கூறி உள்ளார். மேலும், மன்மோகன் சிங், தனது சொந்த

பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி எழுதும்போது, “சோனியா காந்தி பேசுவதை விட, கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார். கொள்கை விஷயங்களைப்பற்றி பேசுகிறபோதெல்லாம் அதை

மன்மோகன்சிங் வசம் தள்ளிவிடுவதில் கவனமாக இருந்தார்” என்றும் ஒபாமா எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா

10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா
சசிகலா
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன

அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம்

மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு

விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை

செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்” என்று கூறி இருந்தார்.

வழக்கமான நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கினார்.

Posted in உலக செய்திகள்

உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

முருகன் அருளால் உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன். எனது கணவர்

வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் -34 பேர் உடல் சிதறி பலி

பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் -34 பேர் உடல் சிதறி பலி

எதியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

எத்தியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதே வேளையில் சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் சூடான், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அங்கு இன ரீதியிலான மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெனிஷாங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் பஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பஸ்சில் இருந்த பயணிகளின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்த நாட்டின் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்
சேரன், லாஸ்லியா


லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை

பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார்.

சேரன், மரியநேசன்

இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும்

வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல

முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்

Posted in உலக செய்திகள்

நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ

நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ

நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

புற்றுநோயால் பாதிப்பு: நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்
நடிகர் தவசி


கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தவசி.

இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

டாக்டர் சரவணன் உடன் நடிகர் தவசி

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன்

தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

Posted in உலக செய்திகள்

தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்

தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்

அமெரிக்காவில் ஆளும் அதிபர் டிரம்ப் தான் தேர்தலில் தோற்று

விட்டதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டு டுவிட் செய்துள்ளார்

தை மாதம் இருபதாம் திகதி இவர் வெள்ளை மாளிகையை விட்டு விலகி

பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் .அது நடக்குமா

என்ற சர்ச்சை சந்தேகம் நிலவி வந்த நிலையில் டிரம்ப் இவ்விதம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்

10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்

எத்தியோப்பியாவில் பத்தாயிரம் கைதிகளை காணவில்லை என அந்த

நாட்டு அரசு அறிவித்துள்ளது ,இவ்வாறு வெளியான அதிரடி

செய்தியால் கைதிகளின் உறவுகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

குறித்த சிறை உள்ள பகுதியில் மோதல்கள் இடம் பெற்று வந்த நிலையில்

இவர்கள் தப்பி ஓடியோ அல்லது குண்டு தாக்குதல்கள் மூலம் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னை தானே மீளவும்

தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,இவருடன் கூடி பழகிய சிலருக்கு கொரனோ

தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் இவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்

இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியான நிலையில் எதிர்வரும் இரண்டு

வாரத்திற்கும் பிரிட்டன் நாடு தழுவிய முழு அடைப்பு நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

காமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்

காமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல்ரொக்கட் தாக்குதல்

பாலஸ்தீனம் கமாஸ் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரல் திடீர் ரொக்கட்

தாக்குதலை நடத்தியது ,இதில் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாக தெரிய வரவில்லை

இஸ்ரேல் உளவுத்துறை நாடுகளின் முக்கிய தலைவர்களை கொன்று

ஒழிப்பதன் ஊடாக அந்த நாட்டின் இராணுவ படையெடுப்பை நிறுத்தி விடலாம் என கருதுகிறது

அந்த வகையில் தளபதிகள் ,மற்றும் தலைவர்களை இலக்கு வைத்து

ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்

சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்

தமிழகத்தில் கணவனின் அதீத மதுபாதை அடிமை தனத்தால் , அவரை

விட்டு மனைவி விவகாரத்து பெற்று ஓட்டம் பிடித்தார் .
தனிமையில்

வசித்து வந்த அவர் தான் வேலைக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார் .

ஆனாலும் மனைவிக்கு தொடராக குடிக்க பணம் கேட்டு கணவன் தொல்லை கொடுத்து வந்தார்

இந்த நிலையால் வீடேறி குதித்த கணவன் ,மனைவியின் மோட்டார் சைக்கிளை

தீவைத்து எரித்து விட்டார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கணவனை கைது சையது சிறையில் அடைக்க போலீசார் நடவடிகை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in உலக செய்திகள்

தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை

தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை

இந்தியா தமிழகத்தில் கோயில் யானை ஒன்று தண்ணீர் தாக்கத்தில் தவித்தது ,

அவ்வேளை அவ்வழியே வந்த நீர் தாங்கியை வழிமறித்த யானை

அதில் இருந்த நீரை அள்ளிக்குடித்து தனது தாக்கத்தை தனித்து கொண்டது

அங்கு வந்த மக்களுக்கும் ,வண்டிக்கு எவ்விதம் சேதமும்

விளைவிக்காது யானையின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு

வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு

தமிழகம் ஊரணியில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால்

அந்த ட் வீடு முற்றாக வெடித்து இடிந்து வீழ்ந்தது ,அவ்வேளை

அதற்குள் இருந்த தாய் மற்றும் ஒன்பது வயது மகன் உள்ளிட்ட மூவர் உடல் சிதறி பலியாகினர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்வாறு இறந்தவர்களுக்கு தாலா இரண்டு லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது ஆளும் தமிழக அரசு


மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்

வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்

இந்திய தமிழகத்தில் சாரதியின் கட்டு பட்டை இழந்து கார் ஒன்று

வீட்டுக்குள் புகுந்தது ,இதனால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது

இந்த சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேலும் கார் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு

கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 472 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 26,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்க பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக

தெரிவிக்க படுகிறது ,
மிரளும் டிசம்பர் மாதம் உயிர்பலிகள் எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை

பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை

பிரிட்டனில் எதிர்வரும் இடண்டாயிரத்து முப்பதாம் ஆண்டு

தொடக்கம் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க படுகிறது

அதற்கு பதிலாக மின்சார கார்கள் அறிமுக படுத்த பட்டு வருகின்றன

சுற்று சூழல் பாதுகாப்பு கருதி என ஐரோபியா தேசம் கூறி வருகின்ற

பொழுதும் நிலை அதுவல்ல என்பதும், அரேபிய நாடுகள் மீது பெரும் படை எடுப்பை மேற்கொள்ளவும் ,அங்கு எரிபொருள் இறக்குமதி

செய்வதை தவிர்த்து அந்த நாடுகளின் பொருளாதரத்தை வீழ்த்துவதன்

நோக்கமாக இந்த நகர்வை ஐரோப்பா தழுவிய நிலையில் மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ

2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ

எகிப்தின் வரலாற்று சாதனையாக பார்க்க படும் இரண்டாயிரத்து ஐநூறு

ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சவப் பெட்டிகள் சடலங்களுடன் மீட்க பட்டுள்ளது

இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்த பட்டு

வருவதுடன் அந்த சடலங்கள் ஸ்கனிங் முறைக்கு உள்ளாக்க பட்டு உடல்கூறியல் ஆய்வு செய்ய படுகிறது

இவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பன தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது
அரச குடும்பத்தை சேர்ந்த சிலரும் இதில் உள்ளதாக நம்ப படுகிறது

மேலும் குறித்த பகுதியில் அகழ்வாரச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள படுகின்றன

Posted in உலக செய்திகள்

பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு

பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு

பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.

பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு

பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில்

கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த

வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின்

எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.