Posted in Uncategorized உலக செய்திகள்

ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்

நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24

மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

    நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

    உலக மக்களில் அதிக செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் பயன் படுத்தி வருவது


    டுவிட்டர் ஆகும் ,இது பேஸ்புக்கை விட கீழ் நிலையில் அதன் மதிப்பு விளங்கி வந்தது

    அனால் தற்போது டெஸ்டில கார் நிறுவனத்தின் அதிபர் Elon Musk அதன் பங்குகளில் 9,2 வீதத்தை தனதாக்கி கொண்டார்


    அதனால் இது பேஸ்புக்கிற்கு இணையாக விலை உயர்ந்துள்ளது

    உலகசந்தையில் இவரது வருகையின் பின்னர் அதன் பங்குகள் அதிக விலைக்கு சென்றுள்ளது


    ஒரே நாளில் அதன் பங்கு எகிறியது இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

      அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

      சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஒயில்,எண்ணெய் சேமிப்பு கூதம் அமைந்துள்ள


      Al-Omar oil இராணுவ தளம் மீ து நடத்த பட்ட திடீர் ரொக்கட் தாக்குதலில் சிக்கி

      இரண்டு அமெரிக்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்


      மேலும் அங்கிருந்த போர் தளபாடங்கள் பல சேதமடைந்துள்ளது

      இந்த முகாம் மீது தொடராக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

        ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

        உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியாவின் இராணுவ நடவடிக்கையை

        அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்டுள்ளது

        உக்கிரேனில் இனப் படு கொலையை ரசியா நடத்தி வருவயதான குரல்கள்

        ஓங்கி ஒலித்த நிலையில் இந்த தடை விதிக்க பட்டு நீக்க பட்டுள்ளது

        இது மேலும் ஐரோப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க

        படுகிறது ,இதுவே மூன்றாம் உலக யுத்தமாக


        மாறும் நிலை ஏற்படும் என ஏதிர்பார்க்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

          ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

          கோவிலின் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன், பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு துளை வழியே வெளியே வர முயற்சித்தபோது அவரது உடல் சுவர் துளையில் சிக்கிக்கொண்டது.

          கோவிலில் புகுந்து திருட்டு- ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த
          இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

          ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அஞ்சிலி ஜாடுபுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

          ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

          இந்த ஆண்டு திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக நடந்தது.

          பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

          இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் புகுந்தான்.

          கோவிலுக்குள் சென்ற கொள்ளையன் கருவறையில் இருந்த அம்மன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை

          மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் துளை வழியாக வெளியே வர முயற்சித்தான். ஆனால் அவனால் துளை வழியாக வெளியே வரமுடியவில்லை.

          உடல் பாதி சுவர் துளையில் சிக்கி கொண்டது. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி விட்டார்.

          நேற்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

          அங்கு மர்ம நபர் ஒருவர் சிக்கிகொண்டு இருந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை.

          இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்

          கஞ்சிலி பகுதியை சேர்ந்த பாப்பா ராவ் (வயது 40) என தெரியவந்தது.
          இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

            Posted in உலக செய்திகள்

            போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

            போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

            கல்லூரி மாணவன் கொலையில் 4 ஆண்டுக்கு பின் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

            மாணவனை கொன்று 2 இடங்களில் பிணத்தை மாற்றி வைத்த நண்பர்கள்- 4 ஆண்டுக்கு பின் போதையில் உளறியதால் சிக்கினர்
            கைது
            திருப்பதி:

            ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஷாகல்லு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷா (வயது17). இவர் வெளியூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

            கடந்த 2018 -ம் ஆண்டு தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ வர்ஷா அங்குள்ள கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர்.

            அப்போது ஸ்ரீவர்ஷாவுக்கும் அவரது எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

            அன்று இரவு ஷேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா ஆகியோர் ஸ்ரீ வர்ஷாவை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீ வர்ஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

            பிணத்தை அங்குள்ள செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 3 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தனர்.

            வெளியே சென்ற மகன் வராததால் அவரது தந்தை ரத்தினகுமார் போலீசில் புகார் செய்தார்.

            போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ வர்ஷாவை தேடி வந்தனர். ஸ்ரீ வர்ஷா கிடைக்காததால் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

            இந்த நிலையில் 1 ஆண்டு கழித்து ஸ்ரீவர்ஷாவின் உடலை வீசி சென்ற இடத்திற்கு வந்த ஷேக் ரஷீத் உள்பட 3 பேரும் செப்டிக் டேங்கில் கிடந்த ஸ்ரீவார்ஷாவின் எலும்புகளை எடுத்துச்சென்று ரெயில்வே கேட் அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

            இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் ஸ்ரீவர்ஷாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை எனஷேக் ரஷீத் தனது நண்பர்களிடம் உளறியுள்ளார்.

            இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

            இதையடுத்து போலீசார் ஷேக் ரஷீத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யா, முனேந்திரா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

            Posted in உலக செய்திகள்

            உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

            உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

            உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்

            உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

            உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்



            ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

            இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்

            டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

            ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.

            இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்


            ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

              Posted in உலக செய்திகள்

              இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

              இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

              இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

              இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

              பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டது.

              இதையடுத்து அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப் பட்டது. இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று

              பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.

              இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டார்.

              இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

              பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

              இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக விளங்கி வருபவர் பரக்கான். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி

              அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம்

              தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.

              பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான்

              மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பரக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.

              இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என

              பரக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

              இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

              இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து
              இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                Posted in உலக செய்திகள்

                லண்டனில் -வீட்டோடு மோதிய திருட்டு கார் – பயங்கர video

                லண்டனில் -வீட்டோடு மோதிய திருட்டு கார் – பயங்கர video

                லண்டன் லூட்டன் வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்களுடன் ,அதிவேகமாக பயணித்த கார் ஒன்று மோதி
                சிதறியது.

                இதன் போது அங்கு தரித்து நின்ற , ஐந்துக்கு மேற்பட்ட கார்கள் சேதமாகின ,மேலும் வீட்டு மதிலும் உடைந்தது.


                காரை திருடி வந்தவர்கள் காரை அவ்விடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

                போலீசார் நடத்திய தேடுதலின் பின்னர் அவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.

                பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ,ஒரு லட்சம் கார்கள் திருட்டு போவதாக ,போலீசார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                click here video

                பிரித்தானிய செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்

                  Posted in உலக செய்திகள்

                  பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

                  பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

                  ரசியா உக்கிரேனுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில்


                  ஐரோப்பா எங்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்க பட்டுள்ளன

                  பிரிட்டனில் 52 வீதத்தால் இவை விலை அதிகரிக்க பட்டுள்ளது

                  ரஷியாவில் இருந்து விநியோகிக்க படும் எரிவாயு நிறுத்த பட்டுள்ள நிலையில்

                  இந்த விலை அதிகரிப்பு இடம்,பெற்றுள்ளது

                  தற்போது வீடு ஒன்றுக்கு மாதம் 400 பவுண்டுகளாக மின்சாரம் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது


                  நாள் ஒன்றுக்கு 13 பவுண்டுகளுக்கு மேலாக செலவாகிறது

                  இலங்கை போல இங்கும் மக்கள் அரசுகளுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


                  ரசிய யுத்தம் ஒன்றினால் உலக நாடுகளில் அரசுகள் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு

                    ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு

                    ரசியா அதிபரின் மிக நெருங்கிய சகாவாக விளங்கி வந்த மில்லியனர் ஒலிகர்ச்

                    அவர் ஆடம்பர படகுடன் சிறை பிடிக்க பட்டுள்ளார்

                    இவரது நிறுவனம் மோஸ்க்கோவை தளமாக கொண்டு இயங்கி வருகிறது ,


                    அவ்விதமான இந்த செல்வந்தர் புட்டீன் செல்ல பிள்ளையாக வலம் வருபவர்

                    என தெரிவித்தே அமெரிக்கா உளவுத்துறை உதவியுடன் ஸ்பைனில் வைத்து

                    முடக்க பட்டுள்ளார்

                      Posted in உலக செய்திகள்

                      அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்

                      . அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்

                      மத்திய ட்ரை கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும், நோக்குடன்

                      புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று திடீரென கவிழந்ததில் அதில் பயணித்த

                      அகதிகளில் நூறு பேர் பலியாகியுள்ளனர்

                      இவ்விதம் சர்வதேச கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற

                      அகதிகளில் 15 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள்

                        பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை

                        பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை

                        பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் இலகுரக விமானம் ஒன்று பறந்து

                        கொண்டிருந்தது ,திடீரென அது அந்த கடலில் வீழ்ந்து மூழ்கியது

                        இவ்விதம் காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் பிரிட்டன்

                        கடல் படை ஈடுபட்டுள்ளது

                        இந்த விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை

                          Posted in உலக செய்திகள்

                          ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                          ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                          ஈராக் மொசூல் பகுதியில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan

                          முகாம் மீது பாரிய தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                          இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாம் பாரிய சேதம் அடைந்துள்ளதாக

                          தெரிவிக்க படுகிறது

                            Posted in உலக செய்திகள்

                            இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                            இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                            இஸ்ரேல் தலைநகர் Tel Aviv பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது


                            இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

                              Posted in உலக செய்திகள்

                              வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

                              வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

                              இன்று ஆப்கான் தலைநகர் மேற்கு காபூல் பகுதியில் உள்ள சந்தை பகுதியில்

                              மறைத்து வைக்க பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதில் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

                              மேலும் சிலர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்


                              தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் ஆளும் பகுதிக்குள் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது

                              இது இவர்களின் பாதுகாப்பில் உள்ள ஓட்டை எனவும் ,விரைவில் இவர்கள்

                              ஆட்சியும் கவிழ்க்க படும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                வடகொரியா ஏவுகணை சோதனை – கதறும் தென்கொரியா

                                வடகொரியா ஏவுகணை சோதனை – கதறும் தென்கொரியா

                                வடகொரியா மீது அமெரிக்கா நேசபடைகள் தாக்குதலை நடத்த முஸ்தீபுகளை

                                மேற்கொண்ட வேளை
                                வடகொரியா புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது

                                சமீப நாட்களில் நடத்த பட்ட சோதனை அமெரிக்கா வரை சென்று தாக்கும்

                                திறன் கொண்ட ஏவுகணைகள் வடிவமைப்பபை கொண்டது என அமெரிக்க

                                உள்ளிட்ட நடுகள் கூக்குரல் இட்ட வண்ணம் உள்ளன

                                வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நமக்கு பெரும் ஆபத்து என

                                தென்கொரியா,மற்றும் ஜப்பான் கூட்டாக தெரிவித்துள்ளன

                                வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை நாடுகளுக்கு இடையில்

                                பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது ,ஆனால் வடகொரியாவோ தமது நாட்டின் தேசிய


                                பாதுகாப்பிற்கு இவற்றை தாம் சோதனை செய்து வருவதாக தெரிவித்து வருகிறது

                                அடிபணிய மறுக்கும் வட கொரியாவின் அசுர வளர்ச்சி அடக்குமுறையாளர்களுக்கு

                                வழங்க பட்ட நெத்தியடி என்பது வீரத்தின் வடிவம் என்றால் மிகையாகாது

                                  Posted in உலக செய்திகள்

                                  ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

                                  ரசியாவுடன் வர்த்தக தொடர்புகள் இயல்பாக நடக்கின்றன – சீனா -கடுப்பில் அமெரிக்கா

                                  ரசியாவுடன் எமக்கான வர்த்தக தொடர்புகள் இயல்பாக இடம் பெறுகிறது என

                                  சீனா தெரிவித்துள்ளது

                                  சீனாவின் இந்த கூற்று அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு பெரும்

                                  சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  ரசியாவின் உக்கிரேன் மீதான போரினை சீனா தடுத்து இருக்க கூடும் எனவும்

                                  ,அதனை தவிர்த்து ஆயுதங்களை வழங்கி மேலும் யுத்தத்தில் சீனாவும்

                                  இணைந்து ஈடுபட்டு வருவதான குற்ற சாட்டை


                                  அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள்

                                    பிரிட்டனில் பரவும் புதியவகை கொரனோ

                                    பிரிட்டனில் பரவும் புதியவகை கொரனோ

                                    தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ கொரோனா வைரஸ் ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

                                    இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தகவல்

                                    சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

                                    இதை தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்த நிலையில் டெல்டா மற்றும் ஒமைரான் வைரஸாக பரவியது. இந்நிலையில், தற்போது

                                    இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                    உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸாக இது கருதப்படுவதாகவும்,

                                    புதிய வகை இந்த கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) என்று அழைக்கப்படுகிறது என பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                    ஒமைக்ரானை விட இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 19ந் தேதி எக்ஸ்இ வகை

                                    கொரோனா முதன் முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

                                    மார்ச் 2 ந் தேதிவரை இங்கிலாந்தில் 637 பேர் எக்ஸ்இ வகை கொரோனா

                                    வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவன தகவகல்கள் தெரிவித்துள்ளன.

                                      Posted in உலக செய்திகள்

                                      உக்கிரேன் தலைநகர் விமான தளத்தில் இருந்து விலகும் ரசியா இராணுவம்

                                      உக்கிரேன் தலைநகர் விமான தளத்தில் இருந்து விலகும் ரசியா இராணுவம்

                                      உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கும்

                                      இவ்வேளை உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் சர்வதேச விமான நிலையத்தின்

                                      அருகில் இருந்து ரஷியாஇராணுவம் விலகி வருவதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது

                                      ரசிய இராணுவத்தின் இந்த திடீர் விலகல் ஏன் என்பது இதுவரை தெரியவரவில்லை

                                      எனினும் குறித்த தலைநகர் நோக்கிய தீவிர தாக்குதல்கள் இடம்பெற்ற

                                      வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது