Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு
10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு
இலங்கை வனவாசலை பகுதியில் பத்து கோடி ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

பிக்குகள் இருவர் உட்பட 22 பேர் கைது
பிக்குகள் இருவர் உட்பட 22 பேர் கைது
பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியகிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்க படுகிறது
இன்று இரவு பாராளுமன்றம் கலைக்க படுகிறது
இலங்கையில் இன்று இரவு பாரளுமன்றம் கலைக்க படுகிறது ,அதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் என ஆளும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
தாமதிக்காது உடன் தேர்தலை நடாத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் கோட்டபாய இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்
யாழ். மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும்
இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார்.
அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்
திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும்
ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கியுள்ளார்.

பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் இதுவரை 35 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,மேலும் புதிதாக 12 பேர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இதன் தொகை 35 ஆக உயர்வடைந்துள்ளது .
பிரபல பலசரக்கு கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி பதுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது
மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டால் என்ன செய்வது என்ற நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு சில தமிழர்கள் புரிந்துள்ளதையும் காணமுடிகிறது

இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?
இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?
இலங்கை ஐநாவின் மனித உரிமை பேரவையில் இருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தது ,இதன் அறிவிப்பு
உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் தற்போது ஐநா மனித உரிமை அமைப்போ உறுப்பு உரிமை பொறுப்பு குரலுக்கு
ஆளாக்க பட்ட நாடு ஒன்று அதன் விதிகளில் இருந்து இவ்வாறு விலக முடியாது என சாட்டை அடி வழங்கியுள்ளது .
ஐநாவின் இந்த அறிப்பு இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பின்னர் இலங்கையின் முடிவுகளில்
எவ்விதமான மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி – தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் -விபரம் உள்ளே
தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி – தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் -விபரம் உள்ளே
கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டது .சந்தை திறக்கும் பொழுது 1649 எட்டிய அதன்
உச்சம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை அது பாரிய வீழ்ச்சியை எட்டியது வரலாற்று சாதனையாக கிட்ட தட்ட 90 பிக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது .
இயல்பாக 50 பிப்ஸ் உள்ளாகவே இந்த சந்தை இறக்க ,ஏற்றத்தை காண்பிக்கும் ஆனால் வெள்ளிக்கிழமை பலரது கணக்குகளில் பணம் காணாமல் போயிருக்கும் .
அதாவது சுனாமி தாக்கம் இடம்பெற்றுள்ளது .மேலும் எதிர்வரும் வாரமும் தங்கம் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
அதாவது 1535 முதல் 1620 வரைக்குள் இதன் நகர்வு இருக்கும் என அவதானிக்க முடிகிறது
சாட் அவ்விதம் எச்சரிக்கிறது .சில ஊடகங்கள் இதன் விபரம் தெரியாது தவறாக செய்திகளை வெளியிட்டுள்ளன ,இதோ இது சாட் விபரம் உள்ளே .


நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும் – சுமந்திரன் சொல்லிட்டாறு
நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும் – சுமந்திரன் சொல்லிட்டாறு
இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்த அரசியல்வாதிகழ் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர முடியும்
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கருத்துரைத்துள்ளார்
இலங்கை ஆளும் அரசுகளின் செல்ல பிள்ளையாக விளங்கி வரும் இவரது இவ்வாறான தொடர் பேச்சுக்கள் தமிழ் மக்கள் மனங்களை
வென்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற கபட தானம் நிறைந்த நகர்வாக உள்ளது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
சுமந்திரனின் தவறான செயல்பாடு கூட்டமைப்பு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இழந்து மக்கள் வாக்குகள் பிற கட்சிகள் தாவி செல்லக்கூடும் என நம்ப படுகிறது
எதிர்வரும் தேர்தலில் இந்த மக்கள் மன மாற்றங்கள் இடித்துரைக்கும் என எதிர்பார்க்க படுகிறது

திடீர் சுற்றிவளைப்பு -8126 பேர் காவல்துறையால் கைது
திடீர் சுற்றிவளைப்பு -8126 பேர் காவல்துறையால் கைது
இலங்கையில் கடந்த இறுமாதத்தில் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது சுமார் 8126 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த சுற்றிவளைப்பில் நீதிமன்றினால் தேட பட்ட குற்றவாளிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தைச எழுதியவர்கள்
உள்ளிட்டவர்கள் கைதகையுள்ளனர் என காவல்துறையினர் தெறிவித்துள்ளனர் .
எவராயினும் இந்த சோதனைகள் தொடராக இடம்பெற்று வருகின்ற பொழுதும் நாட்டில் குற்ற செயல்கள் தடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது
மேலும் இதே கால பகுதியில் 200 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா பொதிகளும் மீட்க பட்டுள்ளனவாம்

தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பு
தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசின் ஏற்பாட்டின் பிரகடன திட்டத்தின் படி மலையக தோட்ட தொழிலார்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம்
ரூபா சம்பளம் வழங்க படும் என அறிவிக்க பட்டது ,அதன் படி திட்டமிட்ட இந்த சம்பளம் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது
இந்த இனிப்பான செய்தி தோட்ட தொழிலாளர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது .
கோட்டபாய அரசு பல நல்ல திட்டங்களை அறிமுக படுத்தியுள்ளதும் ,மக்கள் நலன் சார்ந்து அதிரடி விலை குறைப்புக்களை மேற்கொண்டுள்ளது
இது தேர்தல் நாடகமாக அல்லது மக்கள் நலனா என்பது தொடர்பாக தேர்தல் முடிவுற்றதும் தெரிய வரும் என நம்பலாம்

யாழில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஐவர் காவல்துறையால் கைது
யாழில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஐவர் காவல்துறையால் கைது
யாழ்ப்பாணத்தில் கொள்ளை ,மிரட்டல் ,வாள்வெட்டு ,பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு திருந்த சமூக
விரோதிகள் ஐவர் காவல்துறை சுற்றிவளைப்பில் அதிரடியாக கைதுசெய்ய பட்டுள்ளனர்
வட பகுதியை மிரள வைத்து வந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்த கைதுடன் ,இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்து தாதுக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
கண்துடைப்பு நிகழ்வாக இந்த கைது நடவடிக்கை பார்க்க படுவதாக சமூக நலன் விரும்பிகள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

காவல்துறை அதிகாரியை அடித்து கொன்ற ரயில் – இலங்கையில் பயங்கரம்
காவல்துறை அதிகாரியை அடித்து கொன்ற ரயில் – இலங்கையில் பயங்கரம்
இலங்கை கம்பாக பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த ரயில் ஒன்று இடித்து கொன்றுள்ளது
உடல் சிதைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது ,ஆண்டு தோறும் ரயிலில் மோதி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி
வருகின்றனர் ,எனினும் இந்த உயிர் இழப்புக்களை தடுக்க எந்த நடவடிக்கையும் ஆளும் அரசுகளால் மேற்கொள்ள படவில்லை என்பது குறிப்பிட தக்கது

குளத்தின் அருகே இருந்து காவல்துறை அதிகரின் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
குளத்தின் அருகே இருந்து காவல்துறை அதிகரின் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
இலங்கை தம்புள்ள ஓய அப்பகுதி நேர் தேக்கத்தின் அருகில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடமை முடிந்து ஊந்துருளியில் வீடு திரும்பி கொண்டிருந்த இவரே இவ்வாறு நீர்த்தேக்கத்தின் அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலத்தின் அருகே உந்துருளி உள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை

குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
கைது இலங்கையில் உள்ள கவ்வி நிறுவனம் ஒன்றில் மாணவர் குழு இரண்டுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது ,இதில் மாணவர்
ஒருவர் கடுமையான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து ஆறுபேர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .
கல்விய சமூகத்தில் ஏற்பட்டு வரும் இவ்வாறான குழு மோதல்கள் கற்ற சமூகத்தின் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

விகாரைகளை புனரமைக்க முன்னாள் அரசு உதவவில்லை – மகிந்தா கொந்தளிப்பு
விகாரைகளை புனரமைக்க முன்னாள் அரசு உதவவில்லை – மகிந்தா கொந்தளிப்பு
முன்னாள் நல்லாட்சி அரசு இலங்கையில் உள்ள பவுத்த விகாரைகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை என ஆளும் பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார் .
இது திட்டமிட்ட பட்டு மருத்துரைக்க பட்ட சதீ செயல் என அவர் சாடியுளளார் .
கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே மேற்படி விடயத்தை அவர் வெளியிட்டார் .
ஆகவே எமது ஆளும் அரசு அதனை கவனத்தில் எடுத்து ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
ஆட்சிகள் மாறியதும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதே அரசியலாகி போன ஒன்று என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது

வாங்கி கணக்குகளை காண்பிக்க – ரிச்சர்டு மனைவி ,சகோதரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
வாங்கி கணக்குகளை காண்பிக்க – ரிச்சர்டு மனைவி ,சகோதரனுக்கு நீதிமன்றம் உத்தரவு
இலங்கை முன்னாள் அமைச்சர் ரிச்சர்டு பதியுதீன் ,மோசி வழக்கு குற்றச்சாட்டில் தற்போது சிக்கியுள்ளார் ,
இவரது சகோதரன் ,மற்றும் மனைவி ஆகியவர்களது வாங்கி விபரங்களை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இவர்கள் மீது வைக்க பட்டுள்ள குற்ற சாட்டுக்கள் நிரூபிக்க பட்டால் இவர்கள் பல்லாண்டு காலம் சிறையில் அடைக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது
வன்னி முல்லைத்தீவு பகுதியில் மக்கள் காணிகளை அடாத்தாக பிடித்தது முதல் மக்களை மிரட்டி சர்வாதிகார ரவுடிச அரசியலை
நடத்தி வந்தவர் முசுலீம் அமைச்சர்ட் ரிச்சர்டு பதியூதின் என்பது குறிப்பிட தக்கது

தேர்தல் கால பகுதியில் பதாகைகள் வைப்பது தடை – தேர்தல் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
தேர்தல் கால பகுதியில் பதாகைகள் வைப்பது தடை – தேர்தல் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் காலத்தில் ,வீதிகளில் அரசியல் தலைவர்கள் பதாகைகள் வைக்க தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த கண்டிப்பான உத்தரவை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியா அதிரடியாக அறிவித்துள்ளார் .
தேர்தலை இலகுவாகவும் ,வன்முறை அற்ற வகையில் நடத்தி செல்ல இந்த விடயங்கள் உதவும் என அவர்
நம்பிககை வெளியிட்டுள்ளார் ,
தற்போது முதல் இந்த விடயத்தை கண்காணித்து நடவடிகை மேற்கொள்ள பொலிசாருக்கு பணிப்புரை விடுக்க பட்டுள்ளது

நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் – முழங்கிய மகிந்தா
நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் – முழங்கிய மகிந்தா
இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் நாம் பலமான வெற்றியை தட்டி பறிப்போம் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த மகிந்த ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .
சிங்கள மக்களின் தனித்த வாக்குகளினால் அமோக வெற்றியை பெற்று, நாடாளும் கோட்டபாய சகோதர்கள்
அவ்வாறே மீளவும் பலத்த வெற்றியை தமக்கு தமது மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றனர்
இலங்கை வரலாற்றில் தலைகீழாக இடம்பெற்ற தேர்தல் முடிவாகவும் ,சிங்கள அரசியல் தலைவர்களுக்கு மேற்படி சம்பவம் பெரும் எடுத்து காட்டாகவும் விளங்கியுள்ளது
இலங்கை வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் முன்னெப்போதும் இடம்பெற்று இருக்கவில்லை என அடித்து கூறும் செயலாக இந்த
வெற்றியை கோட்டா தட்டி பறித்தார் என்பது இங்கே கவனிக்க தக்கது

பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?
பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?
இலங்கை மலையகம் காட்டன் நல்லதண்ணி பகுதி மலை பகுதியில் உள்ள காடுகள் தொடராக பற்றியே எரிந்த வண்ணம் உள்ளது .
விஷம சக்திகள் இந்த தீ பரவலை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவதாக நம்ப படுகிறது .
மகிந்த குடும்பத்தினர் இலங்கையில் ஆள்கிற பொழுது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து
செல்வதை அவதானிக்க முடிகிறது
இலங்கையில் இவர்களது ஆட்சியிலேயே கிறிஸ் மனிதர்கள் ,ஆவா குழுக்கள் ,கடத்தல்கள்,கொலைகள் ,மிரட்டல்கள், கப்பம் ,கஞ்சா
என்ற வர்த்தகம் ,மற்றும் குற்ற செயல்கள் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

கூகிள் இணையத்தில் பணிபுரிந்த நபருக்கு கொரனோ வைரஸ்
கூகிள் இணையத்தில் பணிபுரிந்த நபருக்கு கொரனோ வைரஸ்
கூழில் நிறுவனத்தில் பணிபுரிந்த நபர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த நபர் ,ஜப்பான் ,தென் கொரியா ,ஈரான் ,இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுவிஸ் சூரிச் நகரில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தில் பணிபுரிந்த நபருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
கூகிள் நிறுவனத்தில் 120 ஆயிரம் பேர் வேலை செய்வது குறிப்பிட தக்கது







