Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு
மட்டக்களப்பில் நித்திரையில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் தூக்கத்தில் இருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள நெடியமடு கிராமத்தில் தூக்கத்தில் இருந்த வேளை வீட்டில் நுழைந்த நபர்கள் தனது மூன்று பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த குடும்ப பெண் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில் குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்புடன் வசித்து வந்துள்ளார்.
வாள்வெட்டில் படுகாயமடைந்த குடும்ப பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
நகைக் கடைக்குள் வைத்து இரு இளம் பெண்களை மடக்கிய வவுனியா பொலிசார்
நகைக் கடைக்குள் வைத்து இரு இளம் பெண்களை மடக்கிய வவுனியா பொலிசார்
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் நகை கடை ஒன்றநில் வைத்து இரு இளம் பெண்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (03.03) மாலை வவுனியாவில் அடைவு வைக்கும் இடத்தில் அடைவு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு யுவதிகளை காப்பு, கைச்சங்கிலி, மோதிரம் என்பவற்றோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை
தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை.
தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பத்திரிகையின் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளரான என்னையும் எனது மனைவி குளோரி ரெபியா, மற்றும் எமது பத்திரிகையின் ஆசிரியர் கருப்பையா சசிகரன் உட்பட்டவர்களை நேற்று காலை 09.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரை பயங்கரவாதப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி முதலாவது விசாரணையினை என்னிடம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், என்னிடம் எனது குடும்பம் சம்பந்தமாக ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் எனது பத்திரிகையின் பதிவுகள் சரியானதா என பரிசீலிக்கப்பட்டது. அதன் பின்னர் 24.11.2019 அன்று எமது பத்திரிகையில் வெளிவந்த ‘வடக்கு – கிழக்கு – மலையகம் தமிழர் தாயகம் எனக் கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதித் தேர்தல்’ என்ற கட்டுரையில் முகப்புப் பக்கத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சீருடையில் இருக்கும் புகைப்படமும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் படமும் இக்கட்டுரைக்காக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஏன் புகைப்படம் வெளியிட்டீர்கள் என கேட்கப்பட்டது. காரணம் 29.08.2011 அன்று பாராளுமன்றத்தில் வெளிவந்த விடுதலைப்புலிகள் தொடர்பாக அவர்களது இலட்சினை பொறித்த கொடி, சீருடை அணிந்த புகைப்படங்கள் வெளியிடக்கூடாது என வர்த்தமானி வெளிவந்தது. அது உங்களுக்குத் தெரியாதா? தெரியாது எனக் கூறினேன். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவற்றை வெளியிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.
அதனை நான் ஏற்றுக்கொண்டு இனிவரும் காலங்களில் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறித்த விடயங்களை வெளியிட மாட்டேன் எனக் கூறினேன். சட்டங்களை மதிக்கின்றேன் எனவும் தெரிவித்தேன்.
அதேநேரம் 01.12.2019 அன்று வெளிவந்த மற்றொரு பத்திரிகையில் ‘இராணுவத்தளபதி சவேந்திர டி சில்வா ஒரு போர்க்குற்றவாளி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதற்கு விளக்கமாக இது சர்வதேச அமைப்பொன்றினால் தெரிவிக்கப்பட்ட ஒரு நபரது செய்தியாகும் எனத் தெரிவித்திருந்தேன். அதேநேரம் அதே பத்திரிகைகயின் 07ம் பக்கத்தில் ‘மண்ணுக்காகப் போராடி உயிர் நீத்த வீர மறவர்கள் என்ற தலைப்பில் பிரிகேடியர்களான மணிவண்ணன், தீபன், விதுசா, துர்க்கா’ ஆகியோரின் புகைப்படங்கள் தழுவிய கட்டுரையொன்று வெளிவந்தது. இக்கட்டுரையானது மீண்டும் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் செய்வதற்கு இக்கட்டுரை அமைகிறது என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இக்கட்டுரையானது யார் எழுதியது என வினாவ நான் தான் சுழியோடி என்கிற புனைபெயரில் எழுதினேன் என ஒப்புக்கொண்டு எனது ஒப்புதல் வாக்குமூலம் காலை 9.00 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரை பெறப்பட்டது. அத்துடன் உங்களுடைய பத்திரிகையின் நோக்கம் என்ன என்பது பற்றி கேட்டார்கள். தேசியம், சுயநிர்ணய உரிமையே பத்திரிகையில் இலக்கு எனக் கூறினேன்.
அதன் பின்னர் எனது மனைவியான குளோரி ரெபியாவிடம் பத்திரிகை தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டது. இவ் வாக்குமூலம் அரை மணி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் கருப்பையா சசிகரனிடம் மாலை 4.30க்கு ஆரம்பித்து இரவு 8.00 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றது. அவரிடம் எமது பத்திரிகையில் உங்களுடைய கடமை என்ன என்பது பற்றியும், வெளிவரும் கட்டுரைகள் தொடர்பாகவும், பணிபுரிந்த நபர்கள் குறித்தும், தற்போது கடமையாற்றும் நபர்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இத்துடன் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து நாம் எமது ஊடக நிறுவனத்தை வந்தடைந்தோம். பயங்கவரவாத தடைச்சட்டம் அகற்றப்படும் வரை நாம் ஊடகத்தில் சுதந்திரமாக விடயங்களை எழுத முடியாது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். என தெரிவித்திருந்தார்.
தேர்தலை அடுத்து அரசியல்வாதிகள் கைது தள்ளி வைப்பு
தேர்தலை அடுத்து அரசியல்வாதிகள் கைது தள்ளி வைப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தலை டுத்து தற்பொழுது அரசியல்வாதிகள் எவரையும் கைது செய்ய வேண்டாம் என கோட்டபாய அவச உத்தரவு பிறப்பித்துள்ளாரம் .
இவ்வாறு இடம்பெறும் கைதுகள் தமக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன் சிலவேளை கூட்டணி ஆட்சி அமைக்க நேரிடின்
அவை பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என மகிந்த முத்தரப்பு கருதுகிறது
அதனடிப்படையில் அரசியல் பழிவாங்கல் கைதுகள் திடீரென தள்ளி வைக்க பட்டுள்ளது
யானை கட்சியின் ஆயூள் இந்த தேர்தலில் தீர்மானிக்க படப்போவதுடன் அதுவே இலங்கை அரசியலில்
அரசியல்வாதிகளிற்கு பெரும் பாடத்தை புகட்டும் என அடித்து கூறலாம்
எதிர் வரும் நாட்களில் எம்பிக்கள் ,அமைச்சர்கள் இலவச அறிக்கைகள் ,ஆடு ,மாடு ,தையல் மெஷின் போன்றவை அன்பளிற்காக வழங்கும் காட்சிகள் வெளியாகும்
இவ்வேளையே அரசியல் வியாபாரிகள் மக்கள் முன் தோன்றுவார்கள் என்பது குறிப்பிட தக்கது

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது மின்சார பாதுகாப்பு, மின்சார பொருளாதாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என மூன்று துறைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொது பயன்பாட்டின் முன்னேற்பாடு அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஏற்றவாறு மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த திட்டம் வருகின்ற மாதத்திலிருந்து நடைமுறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் முக்கிய காரணம் மின்சார தாக்கத்தினால் ஏற்படும் மரணத்தினை குறைப்பதன் முகமாகவே இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மின்சாரத்தை பாவிக்கும் சொக்கற்ஸ் பிளக்குகளுக்கு ஒரு ஸ்ராட்ன்ட் ஒன்றினை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வட்டவடிவிலான அவற்றை இல்லாது செய்து சதுரவடிவிலான பிளக்குகளை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மின்சார வீண்விரையத்தை தவிர்க்கமுடியுமென அறிவுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் அரச அதிபர் எஸ். சமன்பந்துலசேன, பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேசிய தொழிற் பயிற்சி அதிகாரசபை மாணவர்கள், மின் பொறியியலாளர்கள், மின் துறை சார்ந்த பலரும் குறித்த கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இளம் குடும்ப பெண் யாழ் வைத்தியசாலையில் மரணம்: தப்பியோடிய மோட்டர் சைக்கிள்
இளம் குடும்ப பெண் யாழ் வைத்தியசாலையில் மரணம்: தப்பியோடிய மோட்டர் சைக்கிள்
வவுனியா கந்தசாமிநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருச்செல்வம் பிரேமதர்சினி வயது (27) என்ற இளம் குடும்பபெண் கடந்த 19 ஆம் திகதி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட குறித்த பெண்ணை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியபின் நிறுத்தாமல் தப்பிச்சென்ற நிலையில், விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்ப பெண்னை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக பூவரங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்திவந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டனர்.
அடம் பிடிக்கும் சகிலாபானு: குழப்பத்தில் பலர்
அடம் பிடிக்கும் சகிலாபானு: குழப்பத்தில் பலர்
வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் இரு பணிப்பாளர் கடமையாற்றுவதினால் ஊழியர்கள் மாத்திரமின்றி பொதுமக்களும் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபானுவிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (28.02.2020) காலை 8.30 மணிக்கு புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் கையெழுத்திட்டு கடமையினை பொறுப்பேற்றிருந்தார்.
எனினும் இடமாற்றம் வழங்கப்பட்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்கள் தான் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் இடமாற்றம் பெற்று செல்ல முடியாது என தெரிவித்து புதிய பணிப்பாளரிடம் கடமைகளை கையளிக்காது (பணிப்பாளரின் அறையில்) அவர் கடமைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளார்.
இதன் காரணமாக அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் யாரிடம் கையெழுத்து பெறுவது போன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் பொதுமக்களிடம் இரு பணிப்பாளர்களில் யாரிடம் செல்வது என குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையிலான வடமாகாண விவசாய திணைக்களத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை (02.03.2020) வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு கடமையாற்றும் ஊழியர்களிடம் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராகிய அருந்ததி வேல்சிவானந்தன் அவர்களின் கீழ் கடமையாற்றுமாறு தெரிவத்துடன் வரவேடுகளை பதிவு மேற்கொள்வதற்கு கைரேகை இயந்திரம் ஒன்றினையும் பாவனைக்கு வழங்கினர்.
எனினும் குறித்த வரவேடுகளை பதிவு செய்வதற்காக பொருத்தப்பட்ட கைரேகை இயந்திரத்தில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபானு வின் பதிவேடு நீக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் இன்றும் (03.03.2020) அங்கு பணிப்பாளரின் அறையில் கடமைகளை புரிந்து வருகின்றார்.
எவ்வித அனுமதியுமின்றி கடந்த சனிக்கிழமை விடுமுறை தினத்தில் (01.03.2020) அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 மணி திறக்கப்பட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு மற்றும் கணக்காளர் ஆகியோர் அலுவலகத்தில் (வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம்) கடையாற்றியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வட மாகாண விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா வீடுகளில் கோழிகளை திருடும் கொள்ளையர்கள்
வவுனியா வீடுகளில் கோழிகளை திருடும் கொள்ளையர்கள்
வவுனியா ஒசியர் சின்னக்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த கோழிகளை திருடி சென்றுள்ளனர்
அதிகாலை நித்திரையால் எழும்பி கோழிகளை திறந்து விட, கோழிக்கூட்டுக்கு சென்ற பொழுது கோழிகள் காணமல் போயிருந்தன
நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்ட பொழுதும் மக்கள் பீதியில் வெளியில் செல்லவில்லை ,.இவ்வேளையே இந்த களவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து குறித்த வீடுகளில் உள்ள மக்கள் மிளகாய் தூள் மற்றும் அசீட் என்பனவற்றுடன் தயார் நிலையில்
உள்ளனர் ,வீடுகளுக்கு திருடர்கள் புகுந்திட முனைந்தால் இந்த தாக்குதல் நடத்த படும் என நம்ப படுகிறது

வவுனியா கிணறுகளில் மிதக்கு பெண்களின் சடலங்கள்
வவுனியா கிணறுகளில் மிதக்கு பெண்களின் சடலங்கள்
வவுனியா வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றில் இருந்த்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் எவ்வாறு கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நித்திரைக்கு சென்றவரை காணவில்லை என தேடிய பொழுதே இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது

இத்தாலியில் வசிக்கும் இலங்கை பெண்ணுக்கு கொரனோ வைரஸ்
இத்தாலியில் வசிக்கும் இலங்கை பெண்ணுக்கு கொரனோ வைரஸ்
இத்தாலி நாட்டில் வசித்து வரும் இலங்கை பெண் ஒருவருக்கு கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்
சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது
இத்தாலி hospitalized in Brescia பகுதியில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார்
இலங்கைக்கு வெளியில் முதன் முதலாக இலங்கையர் ஒருவர் இந்த நோயல்ல பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

முன்னாள் போராளிகருப்பையா ஜெயக்குமார் என்பவர் மீது தாக்குதல்
முன்னாள் போராளிகருப்பையா ஜெயக்குமார் என்பவர் மீது தாக்குதல்
கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கருப்பையா
ஜெயக்குமார் மீது சுஙேட்சைக் குழுவைச் சேர்ந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் அவரது சகோதரர் மற்றும் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பிலர் சந்திரகுமாரின் ஆதரவாளர் ஓருவர் உட்பட மூவர் தாக்கிய நிலையில் காயமடைந்த நிலையில்
கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொதுச்சந்தையின் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு
வரும் வர்த்தகரும் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினருமாக செயற்பட்டுவரும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியை கரைச்சிப்பிரதேசசபையின்
சுயேட்;சைக்குழுஉறுப்பினர்ஒருவரும் அவரது சகோதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர் உள்;ளிட்ட
மூவரும் இணைந்து தாக்கியதாகவும் காயமடைந்த இவர் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்;ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. சந்தை வர்த்தகரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்
முன்னாள் போராளியுமான கருப்பையா ஜெயக்குமார் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினம்கொள் – ஈழத்துத் தமிழ்த்திரைப்படக்காட்சிகள் பற்றிய விபரம்!!
சினம்கொள் – ஈழத்துத் தமிழ்த்திரைப்படக்காட்சிகள் பற்றிய விபரம்!!
முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக
பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஓர் உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்துத் திரைப்படம்.
ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு
செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது.
முதற்கட்டத் திரையிடல்கிளின் பின் பெருவாரியான வரவேற்பையும் ஆதரவையும் பாராட்டையும் பெற்ற
இத்திரைப்படம் அவுஸ்திரேலிய நகரங்களில் திரையிடப்படும் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி கண்டு களிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள்.
திரையிடல் மூலம் திரப்பட்டடும் நிதியானது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்குதல் -3117 பலி
கொரோனா வைரஸ் தாக்குதல் -3117 பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944
பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி
எண்ணிக்கையும் சிறிது குறைந்துள்ளது. அதேநேரம், உலகளவில் 90,922 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,
இவர்களில் 80,151 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

யாழில் 281 கிலோ கேரளா கஞ்சா மீட்பு
யாழில் 281 கிலோ கேரளா கஞ்சா மீட்பு
இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதி கடற்கரையில் வைத்து சுமார் 281 கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த பெரும் தொகையிலான் கேரளா கஞ்சா
மீட்க பட்டுள்ளது
கைதானவர்கள் தொடர்ந்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

சாய்ந்தமருது அல்- ஹிலாலில் நிகழ்ந்த தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை
சாய்ந்தமருது அல்- ஹிலாலில் நிகழ்ந்த தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை
சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 8, 9 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை அண்மையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் கே.எம். நாஸரின் ஒரு
செயற்றிட்டமாகும். இதில் பாடசாலை பிரதி அதிபர் எம்.சி.என். றிப்கா, உதவி அதிபர் எம்.எச். நுஸ்ரத் மற்றும் ஆசிரியர் எம்.எஸ்.எஸ். சிப்லி, நுஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு மற்றும் ஏனைய சட்டங்கள் பற்றி பொலிஸ் சாஜன் ஏ.எல். ஹிதாயதுள்ளா 65832 மற்றும்
எச்.ஆர்.எஸ். டபிள்யு. குமார – பொலிஸ் கான்ஸ்டபிள் 46382 ஆகியோர் விரிவுரை நடாத்தினர்.
மேலும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். அன்சார் பயிற்சி நடாத்தினார்.
மாணவர்களுக்கான உணவுப்பழக்க வழக்கங்கள் பற்றியும் சத்தான உணவின் அவசியம் பற்றியும் தொற்றா நோய்கள் தொடர்பாகவும்
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் ஏ.எச்.எம். திலீப் மபாஸ் விரிவுரையாற்றினார்.
இறுதியாக மாணவர்களுக்கான தலைமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி டாக்டர் ஏ. ரமீஸ் பயிற்சி அளித்தார்.

கொரனோ வைரஸ் தாக்குதல் 3000 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதல் 3000 பேர் பலி
சீனாவை தாயகமாக கொண்டு பறவையை கொரனஸ் வைரஸ் தாக்கத்தில் சிக்கி உலகம் தழுவிய நிலையில் இதுவரை சுமார்
மூவாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 90,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த நோய் தாக்கத்தில் சிக்கியுள்ள நாடுகளில் முதலாவதாக சீனாவும் இரண்டாவதாக ஈரானும் மூன்றாவதாக இத்தாலியும் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
பபல் பொருள் அங்காடிகளில் பொருட்கள் இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கடைகளுக்கு முன்புகுந்து பொருட்களை
முண்டியடித்து வாங்கி செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது

ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது: சிவக்தி ஆனந்தன் எம்.பி
ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது: சிவக்தி ஆனந்தன் எம்.பி
இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்கு முறை தொடர்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொது அமைப்புக்களிற்கான உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றும் போது,
ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல்களும், கைதுகளும் தற்போதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய மனைவியும் தற்போது விசாரணைக்கு அழைக்கபப்பட்டிருக்கிறார்கள். கடந்த யுத்த காலத்திலும் கூட 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
கடந்த நான்கரை வருடகாலமாக நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்திலும் கூட கடந்த அரசாங்கத்தினால் கொலைசெய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் விசாரணைகள் நடைபெறவில்லை. ஆகவே இந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கூட அவர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. தொடர்ந்தும் அதே நிலைமை தான் நீடித்துக்கொண்டு இருக்கிறது.
ஆகவே அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர்களை சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்த போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான கைதுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே ஊடகவியாலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .
புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .
எதிர்வரும் பாரளுமன்ற டெஹ்ரதல் இடம்பெறவுள்ள நிலையில் யானை கட்சிக்குள் இடம்பெற்று வந்த அதிகார பகிர்வு மோதலை
அடுத்தும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றியை தோற்கடித்த ரணிலின் குள்ள நரித்தனத்தை கண்டு
பிடித்த சஜித் அணியினர் தற்பொழுது புதிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற காட்சியை நிறுவி எதிர்வரும் பாராளும்னற தேர்தலை முதன் முதலாக சந்திக்கிறது .
இந்த கட்சியியல் சம்பிக்க ரணவக்க ,பொன்சேகா ,மற்றும் முஸ்லீம் கட்சிகள் கூட்டணி ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கின்றன
இந்த கட்சியின் பலம் எதிர்வரும் தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்

தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்
தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்
ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள். மார்க்கம் வேறு அரசியல் வேறு. நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பல இடங்களில் பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்துகின்ற போதும் காலப்போக்கில் கிராம மக்கள் பயனடைவதில்லை. ஒழுங்காக பயனடையாததனால் இந்த திட்டங்களை சில இடங்களில் மறுபடியும் செயல்படுத்தும் போது அதிகாரிகள் அதற்கு சில காரணங்கள் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எமது நாட்டினுடைய தேவைப்பாடுகள், அபிவிருத்திகள், நாட்டின் பொருளாதார தன்மையை ஸ்தீரணப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக நான் பிரதி அமைச்சராக இருந்ததாலும், கடந்த அரசுக்கு எங்களுடைய ஆதரவை வழங்க முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு அதிலிருந்து நாங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை ஐம்பத்து நான்கு நாட்கள் திட்டத்தில் பிரதமராக்கி அவர்களுடன் இருந்து பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி செல்லும் போது அதனை நாங்கள் கட்டி எழுப்பும் முயற்சிகளை அன்றைய ஜனாதிபதி அவர்கள் எடுத்தார்கள்.
இந்த நாட்டினுடைய சட்ட திட்டத்திற்கு அது உடன்படவில்லை. தொடர்ச்சியாக பயணிக்க முடியாவிட்டாலும் நாங்கள் கடந்த காலத்திலிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க முடியாது என்று நாங்கள் வெளிநடப்பு செய்ததில் நானும் ஒருவன். அந்த அடிப்படையில் உங்களுக்கு தெரியும் சென்ற அரசில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதே போல பிரதி அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தோம். இப்போது மீண்டும் அரசியல் சுழற்சியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நாங்கள் மாறியிருக்கிறோம்.
அதிகாரத்தை தருவதும் இறைவன். அதிகாரத்தை எடுப்பதும் இறைவன். அதனை நாங்கள் நம்புவதாக தான் இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இன்று அதிகாரம் இந்த வன்னி மாவட்டத்தில் எனக்கு தரப்பட்டிருந்தாலும் என்னுடைய செயல்பாடுகளை நான் மிகவும் நிதானமாக ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு விதமான கொடுத்து சோதனைக்கும் உட்படுத்தும் காலமாக இருக்கும்.
உங்களுக்கு தெரியும் பலருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரங்களை அவர்கள் எவ்வாறு பாவித்தார்களோ, இல்லையோ, ஆனால் மக்களுக்குரிய தேவைப்பாடுகளை அந்தந்த அதிகாரத்தில் இருந்தவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நாங்கள் எடுத்து பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் பல அமைச்சர்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட பல வேலைத்திட்டங்களை செய்துதான் இந்த பகுதி கிராமங்கள் இவ்வளவு முன்னேறி இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்று கருத்துக்களும் இல்லை.
ஆனாலும் அன்று செய்த அவர்களுடைய ஆதரவாளர்களோ அல்லது நேரடியாக பணிக்கப்பட்ட சில செயற்பாடுகளும், திணிக்கப்பட்ட சில திட்டங்களும் இன்று இந்த நிலையை ஏற்படுத்தி இருப்பது என்பது உங்களுக்கு தெரியும்.
எனவே நாங்களும் தொடர்ச்சியாக கூறுகின்றோம். எமது இந்த அதிகாரங்கள் யாருக்கு இறைவன் கொடுத்தாலும் நாங்கள் அந்த மக்களை சார்ந்தவர்களாக இருந்து அந்த மக்களிடமிருந்து கேட்டு அந்த கிராமத்திற்கு என்ன தேவையோ அதை செய்யக்கூடியவையாக தான் எனது செயற்பாடுகள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றது. கிட்டத்தட்ட ஆயிரத்தி நானூற்றி இருபத்தி நான்கு கிராமங்களில் வன்னி மாவட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். அனைத்து கிராமங்களுக்கும் நாங்கள் தேவைகளை செய்ய வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சில கட்சிகளை சார்ந்தவர்கள் தவறாக பிரச்சாரங்களை ஊட்டுவார்கள். என்னை பொறுத்தளவில் எந்த கிராமத்துக்கும் எது தேவையோ நான் அதை அடையாளப்படுத்தி செய்வேன். ஏனென்றால் கடந்த காலம் பிரதி அமைச்சராக இருக்கின்ற போது இறைவனுடைய உரிமையோடு என்னால் முடிந்ததை செய்திருக்கின்றேன்.
அந்த அடிப்படையில் எதிர்காலங்களில் இறைவன் தந்திருக்கின்ற இந்த அதிகாரத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அவர்களுடைய எண்ண கருவில் அதே போல பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடைய ஒரு திட்டமிட்ட அபிவிருத்தி என்கிற பாதையை எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்திலே பாரிய திட்டங்களை செய்வதற்குரிய நாங்கள் முன் மொழிவுகளையும் தற்பொழுது கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
சாதாரண தரம் சித்தி அடையாதவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு கொடுப்பது என்பது பாரிய பிரச்சனையாக தான் எமது பகுதிகளில் இருந்தது. இளைஞர்களுக்கு உரிய வேலை வேலைவாய்ப்பு துரிதமாக விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான வீதிகள் திருத்தம் செய்யப்படுகின்றது. பதினொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததனால் கிட்டத்தட்ட அது ஒரு ஆயிரம் கிலோ மீட்டர்களை இந்தப் பகுதிக்கு கொண்டு வரக்கூடிய ஒரு நிலைமை இறைவன் உதவியுடன் கொண்டு வந்திருக்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள்.
மார்க்கம் வேறு அரசியல் வேறு நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சார்ந்தவராக ஒவ்வொருமுறையும் இறைவன் ஆளுங்கட்சியில் ஒருவரை வைத்து அவர்களுக்கூடாக பல வேலைகளை செய்து தந்திருப்பதன் அடிப்படையில் எதிர்காலங்களில் எங்களால் திட்டமிட்ட அடிப்படையில் எந்தவிதமான இன பாகுபாடுகளோ, சமூக பாகுபாடுகளோ அதே போல கட்சி பாகுபாடுகளோ, பிரதேச வேறுபாடுகளோ இல்லாமல் தொடர்ச்சியாக இந்த வேலை திட்டங்களை செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்
வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்
இலங்கை சிலாபம் குமரக்கட்டுவ பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களினால் படுகொலை செய்ய பட்டுளளார்
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்மணி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக , உடனடியாக தெரியவரவில்லை
மேலதிக விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது










