Posted in இலங்கை செய்திகள்

முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக , நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில்விற்பனை செய்யப்படுவதுடன் ,ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி

1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும். கோழி இறைச்சிக்கான


நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

    கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

    கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

    கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.

    கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

    கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை,
    எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும்.

      Posted in இலங்கை செய்திகள்

      அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்

      அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்

      தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர உறுதிப்

      பத்திரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

      பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி

      குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வீட்டு உறுதிப் பத்திரம் வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

      தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

      இதேவேளை, உறுதிப் பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் இதுவரை உறுதிப் பத்திரங்கள வழங்கப்படாத பயனாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப்

      பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும், தற்போது தயாரித்துவரும் பத்திரங்களை, வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

      இந்த ஆண்டில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்; சட்டப் பிரிவுக்கு உறுதிப் பத்திரங்கள் தொடர்பாக 2,033 கோப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் 1,996

      கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,035 உறுதிப் பத்திரங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

      இது தவிர தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிப் பத்திரங்களின் எண்ணிக்கை 822 எனவும், 961 உறுதிப் பத்திரங்களின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு

      வருவதாகவும் தேசிய வீடமைப்பு
      அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

        சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை
        Posted in இலங்கை செய்திகள்

        சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

        சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

        காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

        இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்

        த பாடசாலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

        குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு

        சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.

        சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

        இந்த நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றினைந்து குறித்த சிறுவன் மீது தாக்கியள்ளார்.

        வீடு சென்ற சிறுவனின் உடலில் தழும்புகள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

        இதனையடுத்து காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11)

        முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்துள்ள ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

        அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய
        குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

          கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

          இனப்படுகொலையாளியும், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோத்தபாய இராஜபக்சே எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய

          நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

          இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக

          தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நா.தமிழீழ அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

          கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

          சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம்

          செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் இதனோடு இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பக்கத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என

          தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரியுள்ளது.

          இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின்

          கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

          Thailand Urged to Arrest Visiting Former Sri Lankan President Gothabaya for Tamil Genocide: TGTE

            Posted in இலங்கை செய்திகள்

            எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

            எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

            இலங்கையில் இன்னும் சில தினங்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய படி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

            இந்த எரிபொருள் கப்பல் வருகையுடன் மக்கள் நிரையில் நின்று எரிபொருள் பெற்றிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் அமைச்சர்.

            மக்களி குஷி படுத்த எரிபொருள் துறை அமைச்சர் இவ்வாறான பல விடயங்களை தொடராக கூறி வருகிறார் .

            குறித்த எரிபொருள் கப்பலுக்காண பணம் மத்திய வங்கியினால் செலுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

              துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

              இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.

              இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .


              கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.

              துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

              குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
                Posted in இலங்கை செய்திகள்

                சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

                சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

                சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று இந்கு கடல் பரப்பிற்குள் வருவதற்கு ன் அனுமதி கோரியது .இந்த அனுமதியை இலங்கை மேலிடம் இதுவரை வழங்கவில்லை என கடல்படை தெரிவித்துள்ளது.

                இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுபட சீன அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சீனாவின் இந்த ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதிக்கும்படி கோரியது .

                இந்த நிலையில் குறித்த சீனா கப்பல் இலங்கை உள்ளே நுழைவதற்கு தொடர்ந்து அனுமதி வழங்காது இலங்கை உள்ளது .

                இதனால இலங்கை சீனாவுக்கு இடையில் முறுகல் அதிகமாகியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது

                  இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது

                  இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

                  கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்த பட்டுள்ளனர்.

                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய
                  மீனவர்கள் கைது தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

                    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

                    இலங்கை மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி அடித்து செல்ல பட்ட நபர் ஒருவர் சில தினங்களின் பின்னர் சடலமாக மீட்க பட்டுளளார்.

                    இவருடன் மூவர் நீரில்அடித்து செல்ல பட்ட நிலையில் சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தீவிர படுத்த பட்டன.

                    அவ்வாறான தேடுதலின் பொழுதே திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்.


                    தொடர்ந்து காணாமல் போன ஏனையவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

                      தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

                      இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

                      தாய்லாந்துக்கு தப்பி சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச அங்கு மூன்று மாதம் மட்டுமே தங்க வைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது.

                      சிங்கப்பூரில் கோட்டபாய ராஜபக்ச வாசிப்பதற்கான விசா வழங்குதல் நிறுத்த பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .

                      கோட்டபாயவுக்கு விசா வழங்குதலை நிறுத்துமாறு முக்கிய வல்லரசு நாடு ஒன்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையியல் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் அந்த வல்லரசு ஈடுபட்டுள்ளது.

                      சீனாவுடன் ஒட்டி உறவாடிய நிலையில் கோட்டபாயவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                      தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்ட இதே கோட்டபாய ராஜபக்ச இன்று நாடு நாடாங்க ஓடும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது.

                      தமிழர் சாபம் கோட்டபாய ராஜபக்சாவை துரத்துகிறது என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

                        இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு
                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு

                        இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முட்டை அப்பம் ஒன்றின் விலை 150 ஆக உயர்வடைந்துள்ளது .

                        அதே போல முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .


                        நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

                        முட்டை அப்பம் இவ்வாறு விலை அதிகரிக்க பட்டதால் அப்ப பிரியர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர் .

                        புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது பதவியினை தக்க வைத்து கொள்வதில் குறியாக செயல் பட்டு வருகிறார் என மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது.

                        அரசியல்வாதிகள் தமது வியாபாரங்களை பெருக்கிய வண்ணம் உள்ளனரே தவிர ஏழைமக்கள் வாழ்வியல் நிலை தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்திட தவறிவிட்டனர் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள் .

                          Posted in இலங்கை செய்திகள்

                          பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்

                          பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்

                          காலி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கற்பழித்து வந்த 44 வயது நபர் ஒருவர் சிக்கினார்.

                          குற்ற புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .

                          வாட்சாப் மூலம் உரையாடல்களை ஆரம்பித்து அதன் பின்னர் தனது லீலைகளில் சிக்கும் மாணவிகளை குறிவைத்து தனது பாலியல் வெறியை தீர்த்து வந்துள்ளார் .

                          கைதான நபர் நீதிமன்ற பி விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

                            ஐந்து வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஐந்து வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                            ஐந்து வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                            செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

                            குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் வந்து செல்வதாகவும் நேற்று (10) பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள

                            குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

                            எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                            இதனையடுத்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

                              காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது
                              Posted in இலங்கை செய்திகள்

                              காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது

                              காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது

                              இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

                              அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

                              லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58

                              வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

                              அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட

                              போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

                              மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்

                                இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்

                                இலங்கையில் போக்குவரத்து துறையை மேலும் அபைவிருத்தி செய்திடும் நோக்குஇடன் இந்தியா வழங்கும் 500 மில்லியன் கடன் திட்டத்தின் கீழ் 500 பேரூந்துகளை வாங்கிட அரசு தீர்மானித்துள்ளது.

                                இதன் அடிப்படையில் இந்த பேரூந்துகள் தமது போக்குவரதத்தை ஆரம்பிக்கவுள்ளன .

                                நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இதன் மூலம் தீர்த்துவிட முடியும் என அரசு கருதுகிறது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

                                  மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

                                  அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (10) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றினார்

                                  இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,மின் கட்டண அதிகரிப்பு குறித்து பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்

                                  மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

                                  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , “மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் தயார் என்றார்.

                                  அதனைத்தொடர்ந்து , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு பதிலளிக்கையில்
                                  அதுதொடர்பான விவாதம் ஒன்றை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்
                                  கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்

                                    நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்

                                    தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்

                                    முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார்.

                                    ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை

                                    ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

                                    நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்

                                    அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று (10) இரண்டாவது நாளாக நடைபெற்ற போது

                                    அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

                                    நாட்டில் உள்ள மாற்றத்தை நாம் உணர வேண்டும். அந்த மாற்றத்திற்கு தேவையான பரிகாரங்கள் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

                                    அந்த கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இளம் ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். நாட்டினுள் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                                    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலையுள்ளது என்று

                                    தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்று தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.

                                    நாட்டு மக்கள் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம்

                                    கோட்டாபய ராஜபக்ஷ நெருக்கடிகளை சரியாக அடையாளம் காண தவறிவிட்டார். நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களும் கோட்டாபய ராஜப க்க்ஷவிடம் இருக்கவில்லை.

                                    2019 இல் இருந்தே அரசியல் புதியவர்கள் தெரிவாக வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பமாகியது. அதன்படியே எதிர்பார்ப்புகளுடன் வீதிகளில் சித்திரங்களை வரைந்தனர்.

                                    அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வில்லை போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 09 ஆம் திகதி போராட்டம் இவ்வாறான நெருக்கடியுடனேயே ஆரம்பமாகியது.

                                    போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இப்போது மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.அந்த எதிர்பார்ப்புகள்

                                    நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரலாம். நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்

                                    இதேவேளை, பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டுக்கு

                                    புதிய ஆரம்பம் தேவை என்றும் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தமது கட்சி சாதகமான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

                                    மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 75வீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இச் சந்தர்ப்பத்தில் இந்தளவு பாரிய தொகை மின் கட்டண

                                    அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வது. அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

                                    ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும்.அதற்கிணங்க விவாதம் முடியும் வரை மின்சார கட்டண அதிகரிப்பை இடை நிறுத்தவேண்டும் .

                                    அத்துடன், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

                                    பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் எரையாற்றுகையில் , ஜனாதிபதியின் பதவியேற்பு உரையில் அடங்கிய எதிர்க்கட்சிகள் பல விடயங்களை

                                    ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு நிலவுவதாகவும், அதற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

                                    பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு

                                    செல்வதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அவற்றை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

                                    பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் உரையாற்றுகையில் இ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், நாட்டின்

                                    பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

                                    கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால்

                                    குறைவடைந்து வருகின்றது எனபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

                                    அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த

                                    நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே.

                                    இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை.

                                    விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

                                    எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது.

                                    2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

                                    இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.

                                    தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது

                                    இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம்.

                                    அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும்.

                                    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.

                                    தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை

                                    வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

                                    கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ்
                                    பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.


                                    ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள்
                                    பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி

                                      மோசடி குற்ற சாட்டில் சிக்கிய மருத்துவர் சத்தியமூர்த்தி

                                      இலங்கை யாழ்ப்பாண போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் மோசடி குற்ற சாட்டில் சிக்கியுள்ளார்.

                                      இவரது கடந்த கால மோசடிகள் தொடர்பான விடயங்கள் சிக்கியுள்ள நிலையில் இவர் மீதான மோசடி புகார் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                      வெளி நாடுகளில் இருந்து மக்களினால் வழங்க பட்ட நித்திகள் என்பனவும் மோசடி செய்யபட்டுள்ளதாக உள்ளாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                                      இவரது கடந்த கால மோசடிகள் ,குற்ற செயல்கள் ,பழிவாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதால், சிறை செல்லும் நிலை சத்தியமூர்த்திக்கு ஏற்படலாம் என்பதாக தெரிவிக்கிறது அந்த வட்டாரங்கள்.

                                      இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள சத்திய மூர்த்தி அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        ஜனாதிபதி மாளிகை தீ வைப்பு 205 மில்லியன் சேதம்

                                        ஜனாதிபதி மாளிகை தீ வைப்பு 205 மில்லியன் சேதம்

                                        ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்ததன் ஊடாக இதுவரை கணக்கிடப்பட்ட சேதம் 205 மில்லியன் ரூபாவை

                                        தாண்டியுள்ளதாக இன்று (10) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

                                        ஜனாதிபதி பிரதமராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு 191 மில்லியன் ரூபாவும், வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் 14.5 மில்லியன் ரூபா

                                        எனவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

                                        அத்துடன், இச்சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
                                        நான்காவது சந்தேகநபரான அருள் பிரகாஷை குரல் பரிசோதனைக்காக எதிர்வரும் 12


                                        ஆம் திகதி அரசாங்க பரிசோதகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதவான்
                                        திலின கமகே சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.