மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

Spread the love

மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (10) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றினார்

இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,மின் கட்டண அதிகரிப்பு குறித்து பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்

மின் கட்டண அதிகரிப்பு பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , “மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் தயார் என்றார்.

அதனைத்தொடர்ந்து , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு பதிலளிக்கையில்
அதுதொடர்பான விவாதம் ஒன்றை நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்
கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *