காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது

காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது
Spread the love

காட்டுக்குள் குகையில் இளம் பெண்ணுடன் இரு ஆண்கள் கைது

இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58

வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட

போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *