விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்

விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்

இலங்கை வெளிகந்தை பகுதியில் ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த, இராணுவ காப்டன் ஜீப் விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில கப்டன் பலியானர் .மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் .

,படு காயமடைந்தவர்கள் வெலிக்கந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஜீப் மரம் ஒன்றில் மோதியதில் ,இந்த அனர்த்தம் .இடம்பெற்றுள்ளது

எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

இறந்த இராணுவ கட்படன் 28 வயதுடைய மாத்தளையை சேர்ந்தவர் என இராணுவ அறிவித்துள்ளது .

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள் .

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் ,மன்னார் கடல் வழி ஊடாக ,தமிழகம் ,தனுஸ் கோடிக்கு சென்றடைந்துள்ளனர் .

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் சென்ற இவர்கள் ,தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், கரையோர கடற் படையினரால் காப்பாற்ற பட்டு , முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக,மக்கள் இலங்கையை விட்டு தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

யாழ்ப்பாணத்தில் வீதியில் எரிந்த வாகனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வீதியில் எரிந்த வாகனம்

யாழ்ப்பாணத்தில் வீதியில் எரிந்த வாகனம்


யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.

மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் பேருந்தில் பெண்ணை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பேருந்தில் பெண்ணை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்

யாழ் பேருந்தில் பெண்ணை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர்.

மடக்கிப்பிடித்த இளைஞனை யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து

ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார்.

2023ஆம் ஆண்டுக்குள் எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என

எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கான நிதிப் பரிமாற்றல், இலங்கை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு விமானங்களை தரையிறக்குவதற்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதால் சுற்றுலாத்துறையினருக்கு அதிக பாதிப்பு

ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது குறித்து ஆராய்ந்து பிரச்சினையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் முழுப் பயணத்தையும் உள்ளடக்கும் வகையில்

கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை சுற்றுலா அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கு குறிப்பிட்டார்.

பல சுற்றுலா ஹோட்டல்கள் இரவு 10.00 மணிக்குள் மூடப்படுவது சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதனால் வர்த்தமானி

அறிவித்தல் மூலம் சுற்றுலா வலயங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பிரபல சைக்கிள் ஓட்ட வீரர்களின் பங்கேற்புடன் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலான சைக்கிள் சவாரியை ஏற்பாடு செய்தல், Visit Sri

Lanka வேலைத்திட்டம் உட்பட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சுற்றுலா அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன்

ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர்

சூலானந்த பெரேரா மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனங்களின் தலைவர்கள்,சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரிய ஆகியோர் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும்

பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த

யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (21) அனுமதி வழங்கியது.

இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு

கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்

கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி

மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மட்டுப்பாடுகளும் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளன.

எனவே, பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலம்,


தெலைநகல் மூலம் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

இலங்கையை முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான நாடாக மாற்றுவதற்கும், இந்நாட்டிலுள்ள தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும்

இலங்கை முதலீட்டுச் சபை தயாரித்துள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை

அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் (20) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

*டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களுக்கு அவசியமான அனுமதியைப் பெற்றுக்கொள்ள தனியான ஒரு இடம்

இவ்வாறாக, தொழில்முனைவு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை முதலீட்டுச் சபையின் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள்

குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தொழிலாளர் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் தொடர்பாகவும் முதலீட்டுச் சபையின் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதார்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு முதலீடுகளை

ஊக்குவிப்பதற்காகத் தயாரிக்கப்பட வேண்டிய நீண்டகாலக் கொள்கைகளைத் தேசிய பேரவைக்குப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.

இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ சாகர காரியவசம் மற்றும்


இலங்கை முதலீட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெண்கள் தொலைபேசிகளை திருடிய திருடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் தொலைபேசிகளை திருடிய திருடன் கைது

பெண்கள் தொலைபேசிகளை திருடிய திருடன் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையே நேற்றைய தினம் (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தொலைபேசிகளை திருடிய திருடன் கைது

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகள் திருடப்பட்டு வந்த நிலையில், அவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

குறித்த, முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தொலைபேசிகளை தவறவிட்டவர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள்,
அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்

கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு பிரிட்டன் பொலிஸ் களத்தில்

இலங்கை கொழும்பு பகுதியில் 2019 ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு இடம்பெற்றன .இந்த குண்டு வெடிப்பு விசாரணைகளை மேற்கொள்ள ,பிரிட்டன் தயராக உள்ளது என அறிவித்துள்ளது .

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 30 இலங்கையர்கள் நன்கு பயிற்றுவிக்க பட்டு ,அவர்கள் சர்வதேச போலீசாருடன் இணைந்து செயல்படும் விதத்தில் ,தயாராகி உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது .

இலங்கையில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பு தொடர்பில் ,பிரிட்டன் காவல்துறையினர் இரகசிய புலனாய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர் .

தற்போது லண்டனுக்கு வருகை தந்து சென்ற ரணில் விக்கிரமசிங்கா, இந்த குண்டு வைப்பு பின்புலத்தில் செயல் பட்ட நபர்களை ,தமக்கு வழங்குமாறு பிரிட்டனிடம் கோரியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இதனை அடுத்தே பிரிட்டன் இந்த விடயத்தில் களத்தில் குதித்துள்ளது .

இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்

இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்

இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் ,இருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளனர் .

தனி நபர் பழிவாங்கல் காரணமாக இந்த ,படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் ,கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இதுவரை இந்த கொலைகள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது

இலங்கை கல்கிசை பகுதியில் ஆயூள் வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில், இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று, காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது .

இதன் போது அங்கு விபச்சாரத்தில் ல் ஈடுபட்டு கொண்டிருந்த இளம் பெண்கள் ,உள்ளிட்ட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

காவல் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ள பட்டுள்ளது என்கிறது பொலிஸ் .

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

இலங்கை நுவரெலியா தலவாக்கலை பகுதியில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது .

இந்த மண்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளன .

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்று வருகிறது .

தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

விபத்தில் தாய் மகன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தாய் மகன் பலி

விபத்தில் தாய் மகன் பலி

கொழும்பு குருநாகல் பிரதநா பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் , தாய் மகன் பலியாகியுள்ளார் .

பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சடல பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

மேற்படி விபத்து சம்பவம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது

யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீட்டு சமையலறைக்குள் கசிப்பு காச்சிய நபர் ஒருவர் ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .

இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா

இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா

இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு, சட்டவிரோதமாக பயணித்த இலங்கையர்கள் 183 பேரை ,அவுஸ்ரேலியா மீள இலங்கைக்கு நாடு கடத்துகிறது .

கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை ,தனி தீவில் அடைத்து வைத்த அவுஸ்ரேலியா ,தற்போது இலங்கைக்கு நாடு கடத்தி வருகிறது .

இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் தமிழர்கள் உள்ளிட்டவர்கள் ,முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ளாது இவ்வாறு பயணித்து ,பணத்தையும் ,வாழ்க்கையும் இழந்து போகின்றனர் .

கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் அகதிகளை, நாடு கடத்துவோம் என அவுஸ்ரேலியா அறிவித்து வருகிறது .

அவ்வாறான எச்சரிக்கை விடுத்தும் ,இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் - அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி

இலங்கையை பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல் ,மற்றும் லஞ்சத்தில் ஊறி திகழ்கின்றனர் என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

புத்த சாசனத்தை வரையறுத்து ,மக்கள் மத்தியில் சாந்தியும் சமாதானமும் நிலை நிறுத்தும் என்கின்ற கோசத்தை முழங்கி ,பவுத்த மக்களை வழி நடத்தி செல்லும் மிக முக்கிய பவுத்த பீடாதிபதி தெரிவித்துள்ள இந்த கருத்து மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகள் புரிந்த லஞ்ச ஊழல் மோசடிகளே காரணமாக அமைந்தது .

அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி

வீதியில் பிச்சை எடுத்து ,டீ கடை நடத்திய அரசியல்வாதிகள், சர்வதேச அளவில் பெரும் சொத்துக்களை குவித்து ,சர்வ வல்லமை பொருந்தியவர்களாக காண படுகின்றனர் .

அவ்வாறான நிலையிலே பவுத்த பீடாதிபதி இவ்விதம் ,இலங்கை தெரிவித்து அரசியல்வாதிகளை மிரள வைத்துள்ளார் .

இவரது பேச்சு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்

வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்

வரி அதிகரிக்க படும் ,அவ்வாறு வரி அதிகரித்து நாட்டை மீட்கா விட்டால் இலங்கையில் ,மீளவும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ,இலங்கையை மீளவும் கட்டியெழுப்பிட நாம் வரியினை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம் .

அவ்வாறு வரி குறைப்பில் தொடர்ந்து பயணிதல், நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெறுவதுடன், மக்கள் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படும் என ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை

பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை

இலங்கை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கைது செய்து சிறையில் ,அடைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் சித்திரவதைகள் மற்றும் தொந்தரவு வழங்கிய ,இரண்டு பொலிஸ்அதிகாரிக்களுக்கு 10 ஆண்டு சிறை விதிக்க பட்டுள்ளது .

குற்ற செயல்களில் கைது செய்ய படும் பெண்களை, சிறையில் அடைத்து ,இலங்கை காவல்துறையினர் வதைகள் புரிந்து வருகின்றனர் .

அவ்வாறு இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான ,வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் ,நீதிமன்றம் துணிகர தீர்ப்பை வழங்கியுள்ளது .

இந்த தீர்ப்பின் வாயிலாக சிங்கள காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் ,வதைகள் புரிகின்றனர் என்பது சர்வதேசத்துக்கு அம்பலமாகியுள்ளது.

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் - போதை பொருள் விற்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை ,அந்த கொடிய போதை பொருளை விற்பனை புரிந்த 23 வயது இளம் பெண் கைது செய்ய பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வருகை தந்ததன் பின்னர் ,போதை பொருள் பாவனை ,இலங்கை மக்களை ஆட் கொண்டு வருகிறது .

அதிகரித்து வரும் போதை பொருள் பாவனையால் கொலைகள் ,கடத்தல்கள் ,மற்றும் சமுக சீர் கேடுகள் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த போதை பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது யார் என்கின்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .

மோட்டார் சைக்கிள் திருட்டு - சிக்குவார்களா மோட்டார் சைக்கிள் திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு – சிக்குவார்களா மோட்டார் சைக்கிள் திருடர்கள்

மோட்டார் சைக்கிள் திருட்டு – சிக்குவார்களா மோட்டார் சைக்கிள் திருடர்கள்

மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர், தலைக்கவசம் அணியாமல் திருடிய ​மோட்டார் சைக்கிளுடன்,நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை பகுதி நோக்கி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி நகர மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்கு பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ​மோட்டார் சைக்கிள் ஒன்று, நேற்று ( 19)

அடையாளம் தெரியாத இருவரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைச்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகைத் தந்த சந்தேகநபர்கள் இருவ​​ர், தலைக்கவசம் இல்லாமல் கம்பளை பகுதியை நோக்கி, மோட்டார் சைக்கிளைக் கொண்டுச் சென்றுள்ளனர்.

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி

பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சிகள், நகரிலுள்ள பல பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.