Tag: பாடசாலை மாணவர்கள்
பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும்
பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த
யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (21) அனுமதி வழங்கியது.
இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்
கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மட்டுப்பாடுகளும் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளன.
எனவே, பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலம்,
தெலைநகல் மூலம் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.
அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்
அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்
அமெரிக்கா பாடசாலையில் நடந்த கத்தி குத்து ,சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .
அமெரிக்கா வடக்கு கரோலினா , உயர்தர பாடசாலையில் ,மாணவர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ,ஒருவர் பலியானார் .மேலும் இருவர் படுகாயமடைந்தனர் .
காலை ஏழு மணியளவில் ,பாடசாலையில் இடம்பெற்ற, இந்த கத்தி குத்து சம்பவத்தால், அங்கு பெரும் பீதி நிலை ஏற்பட்டது .
இந்த கத்தி குத்து சம்பவத்தை, அடுத்து ,பாடசாலை மாணவர்கள் தப்பி ஓடினர் ,மேலும் மாணவர்கள் யாவரும் வீடுகளுக்கு பெற்றவர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர் .
பாடசாலை மாணவர்கள் மீது, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ,கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவரிடம் தொடர் விசாரணைகள் ,இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
வடக்கு கரோலின் உயர்தர பள்ளியில், இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவம் ,அந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்
,எனினும் மாணவர்கள் ,மற்றும் பொது மக்களுக்கு எவ்வித அச்சறுத்தலும் இல்லை என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து வடக்கு கரோலினா உயர் தர பாடசாலையை சுற்றி ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் கத்தி குத்து மற்றும் ,துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அமெரிக்கா மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக வல்லரசாக விளங்கி வரும் அமெரிக்காவில் ,தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ,இந்த கத்தி குத்து தாக்குதல் ஊடாக ,உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிது நிற்பதை காணமுடிகிறது .







