Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சுழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளது
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை கட்டுப்படுத்த பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் 1450 பேருக்கு தரம் உயர்வு
இராணுவ அதிகாரிகள் 1450 பேருக்கு தரம் உயர்வு
இலங்கை 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2024 பெப்ரவரி 4 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில், முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இலங்கை இராணுவத்தின் மொத்தம் 211 அதிகாரிகள் (நிரந்தரம் மற்றும் தொண்டர்) சிப்பாய்கள் 1239 (நிரந்தரம் மற்றும் தொண்டர்) வெற்றிடத்தின் அடிப்படையில் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேஜர் ஜெனரல் நிலைக்கு 02 பிரிகேடியர்களும், பிரிகேடியர் நிலைக்கு 12 கேணல்களும், கேணல் பதவிக்கு 13 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் நிலைக்கு 17 மேஜர்களும், மேஜர் நிலைக்கு 29 கெப்டன்களும் (உபகரண கட்டுப்பாட்டாளர்),
13 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் (உபகரண கட்டுப்பாட்டாளர்) மற்றும் 125 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்வு பெற்றுள்ளனர். சிப்பாய்கள் பிரிவில்,
அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I நிலைக்கு 49 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலைக்கு 111 பணிநிலை சார்ஜென்களும், பணிநிலை சார்ஜென் நிலைக்கு 135 சார்ஜென்களும், 170 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 364 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் மற்றும் 330 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் (நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணி) வெற்றிடத்தின் அடிப்படையில் நிலைக்க உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட சிரேஷ்ட பிரிகேடியர்களில் மேஜர் ஜெனரல் பீஎன்
கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் அடங்குவர்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இது தவிர, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், தூதுவர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
அதேநேரம் 76வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோர மார்க்கத்தில் பொதுச்
செயலாளர், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாமல் இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தற்போது செல்லும் பாதை சரியானது என முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து
சென்று செழிப்பை மீண்டும் பெற சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களில் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் 08 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 95 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியிருந்த 02 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
ஏலயாபத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம் காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (03) பிற்பகல், அந்த வனப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக ஏலயாபத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்
கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு
எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை.
தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும்
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு
போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே
என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான
ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். – என்றுள்ளது.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
மத்துகமையை உலுக்கிய படுகொலை
மத்துகமையை உலுக்கிய படுகொலை
கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
ஈரான் போர் ஆரம்பம் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்
214 டன் எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கைக்கு வழங்குகிறது
அனுரா அரசின் 8400கோடி நிலக்கரி மோசடி
வயசு புள்ள ஒண்ணு என்ன என்ன பாக்கிறா |VAYASU PULLA ONNU |568|
பாகிஸ்தான் காபூலை குண்டுவீசி தாக்குகிறது
பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
ஈரான் போர் ஆரம்பம் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்
214 டன் எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கைக்கு வழங்குகிறது
அனுரா அரசின் 8400கோடி நிலக்கரி மோசடி
வயசு புள்ள ஒண்ணு என்ன என்ன பாக்கிறா |VAYASU PULLA ONNU |568|
பாகிஸ்தான் காபூலை குண்டுவீசி தாக்குகிறது
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
விஜய் மக்கள் கட்சி பதிவு
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜயின் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் கட்சி பதிவு
புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம், புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில்
சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு ,இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலமாக 702 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க யுக்திய நடவடிக்கை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலம் இந்த குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆயராகியுள்ளார்
முன்னாள் சுகாதார அமைச்சராக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல்ல அவ்வேளை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது குற்றபாலனாய்வு திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆயராகியதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை
சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை
சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளளதாக அந்த குத்தகை நிறுவனம் தெரிவித்துள்ளது
குறித்த குத்தகை நிறுவனத்திற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த இரும்பு பெட்டகத்ததை வெட்டி உடைத்து அதற்குள் இருந்த 11 இலட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளனர் .
வளமை போன்று அலுவலகம் வருகை தந்த பணியாளர்கள் குறித்த குத்தகை நிறுவனம் உடைக்க பட்டு பணம் கொள்ளை அடித்து செல்ல பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .
இதனை அடுத்து தற்போது சிலாபம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு
இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு
இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு ,நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக, அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்
வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்
வவுனியாவில் சிறை கைதி ஒருவர் சிறையுடைத்து தப்பி ஓடியுள்ளார் ,இவ்வாறு ஓடிய சிறை கைதியை மீளவும் கைது செய்திடும் நடடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறை சாலையில் இருந்து கைதி தப்பி ஓடியது எப்படி என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற்றனர் .
மேற்படி சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பொலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .






































