Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது
பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை கொடுத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது
பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேக நபர்களும், குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் 189 சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பின்வருமாறு,
128 கிராம் ஹெரோயின்
115 கிராம் ஐஸ்
8 கிலோ 626 கிராம் கஞ்சா
138,676 கஞ்சா செடிகள்
57 கிராம் 200 மில்லி கிராம் மாவா
34 போதை மாத்திரைகள்
125 கிராம் மதன மோதக
பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 596 சந்தேக நபர்களில் 7 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 189 சந்தேக நபர்களில் 29 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 155 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 5 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்
முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்
முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற 14வது கடற்படைத் தளபதியான தயா சந்தகிரி (VSV, USP rcds, MSc (DS), psc, FCMI), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
கடல் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் அபார அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் பற்றிய ஆலோசகராக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த கெஹெலிய.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த கெஹெலிய.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07) நடைபெறும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்
பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்
பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் பிள்ளைகளுக்கு தகரத்தாலும் ஓலைகளாலும் பின்னப்பட்ட குடிசைகளும், ஆட்சியாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகையும் அலரி மாளிகையும் உரித்தாகியுள்ளது.
இந்த இரண்டு மாளிகைகளும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச மட்டத்தை எட்டும் மிக உயர்ந்த மாதிரியிலான தகவல் தொழிநுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படும்.ஆட்சியாளர்களுக்கு மாளிகைகள் தேவையில்லை.
இந்நாட்டின் பிள்ளைகளுக்கும் பொது மக்களுக்குமே மாளிகைகள் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் ஏழை எழிய பெற்றோரின் பிள்ளைகள் இருந்தாலும்,இப்பிள்ளைகள் அறிவு,திறன் மற்றும் ஆற்றல் நிரப்பப் பெற்ற வளம் கொழிப்போராக உள்ளனர்.
சர்வதேச தரத்திலான உயர்தரக் கல்வியைப் பெறுவது நாட்டின் மாணவச் செல்வங்களது உரிமையாகும்.இந்தக் கடமையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஆனால் வங்குரோத்து நாட்டில் ஆட்சி செய்பவர்களும் திருடும் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரசின் சொத்துக்களையும் வளங்களையும் சூறையாடுகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த பொருளாதார பயங்கரவாதிகளும் கொலையாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அவர்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்த பணம் மீளக் கொண்டுவரப்பட்டு,
இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படும். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 88 ஆவது கட்டமாக, அனுராதபுரம்,ராஜாங்கனை யாய 13/14 மஹசென் தேசியப் பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான
ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் பாடசாலை மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட மதிய உணவு கூட நிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்
நாட்டின் குடிமகன் அறிவு,கல்வி,ஞானம் ஆகியவற்றின் காரணமாகவே ஒரு நல்ல உலகளாவிய குடிமகனாக மாறுகிறான்.இதை வளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாக அமைய
வேண்டும்.இதனை சாத்தியப்படுத்த எடுக்க முடியுமான சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். எத்தகைய தடைகள்,சவால்கள், பிரச்சினைகள் வந்தாலும்
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தப் பயணம் நிறுத்தப்படாது. எமது நோக்கமும் பயணமும் தூய்மையானது.
41 இலட்சம் மாவணச் செல்வங்களையும் உலகளாவிய ஸ்மார்ட் குடிமக்களாக மாற்றுவதே பிரபஞ்ச வேலைத்திட்டத்தின் ஒரே குறிக்கோள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத நிலையை உருவாக்குவோம் அமைச்சர் அலி சப்ரி
மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத நிலையை உருவாக்குவோம் அமைச்சர் அலி சப்ரி
நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,
ஸ்திரமான பொருளாதாரத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையின்படி, போட்டித்தன்மை வாய்ந்த புதிய சந்தைகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்புகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
அதன் வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்பாக, அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தற்போது இருபத்தி இரண்டு கோடி நபர்களுள்ள சந்தைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதைக் கண்டுகொள்ளலாம்.
மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத நிலையை உருவாக்குவோம் அமைச்சர் அலி சப்ரி
ஆனால் உலகில் பாரிய அளவில் சந்தை வாய்ப்புகள் உள்ளன. அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் அந்தப் பாரிய சந்தை வாய்ப்புகளை சிறப்பாகக் கையாள்வதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இன்று உலகின் பாரிய சந்தைகளுடன் சுதந்திர பொருளாதார
ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை அடைந்துள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
1991 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதே காலகட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் வியட்நாமும் இதே பெறுமதியில் இருந்தன. ஆனால் 2022 இல் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 373 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது. இவை அனைத்துக்கும் அவர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியமை தான் பிரதான காரணமாகும்.
ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார். அது வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
அண்மையில் தாய்லாந்துப் பிரதமருடன் இந்நாட்டுக்கு வருகை தந்திருந்த தூதுக்குழுவினர் இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் மாத்திரமன்றி பல முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் ஒருபுறம் ஏற்றுமதி வலுவடையும் அதே வேளையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் காரணமாக, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆகியவற்றில் இலங்கை பெருமளவிலான முதலீடுகளைப் பெறும் வாய்ப்பும் எற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சேவைகளை வழங்கவும் தாய்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தவும் எதிர்பார்க்ப்படுகின்றது. அதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, வளமான இலங்கையை உருவாக்குவதற்கான முதல் அடியை எடுக்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளின் பாரிய சந்தைகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன,அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
இந்நிலையில், தனது மனைவியின் வைத்திய செலவுக்கு போதிய பணம் இல்லாததால் சுதந்திர தினத்தன்று (04) மாலை 4.30 மணியளவில் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விஷம் அருந்தி வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (06) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 900 கிராம் 1725 கிலோகிராம் கஞ்சா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களில் 05 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 08 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 108 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 128 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு பெத்தேவெவ, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை
இதேவேளை, மாவத்தகம, உதானகம என்ற இடத்தில் வேனில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து வேனை நிறுத்தி தடியால் தாக்கிய பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் கொகரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 53 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் விஹார சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளத்திலிருந்து பிரதான வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றை சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
விபத்தில் படுகாயமடைந்த நபரும், குழந்தையை சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் 9 மாத கைக்குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபை தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி
இவ்வருட ரமழான் மாதம் மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்ள கூடிய வகையில் பணி அட்டவணையை தயாரிக்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், அரச சேவையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகளில் தகுதியான முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி
கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பிட்டி – பலாவியா வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டியிலிருந்து பலாவியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் திரும்பும் போது அந்த வீதிக்கு முன்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது 2 முச்சக்கர வண்டிகளில் சாரதிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
65 வயதுடைய கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்
மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஜனாதிபதி
மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை, புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதி வாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை, புதுருவகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது குறித்த மாணவர்களால் தங்களின் பாடசாலைக்கு இசைக் கருவிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
தங்கள் பாடசாலைக்கு திடீரென வருகை தந்த விருந்தினர் நாட்டின் ஜனாதிபதி என்பதை அறிந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
அந்த சமயத்தில் உலங்குவானூர்திக்கு அருகில் வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் மாணவர்கள் ஈடுபட்டனர். பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஜனாதிபதி
பாடசாலையில் இசைக்கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதன்படி, மிகக் குறுகிய காலத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, டிரம்பெட், டிராம்போன், சாக்ஸபோன், கிளாரினெட், மவுண்டபிள் டெம்பரின் உள்ளிட்ட இசைக்கருவிகள் பரிசளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஞ்ஜித் கீர்த்தி தென்னகோன், வலயக் கல்விப் பணிப்பாளர் கே. ஜே. சுசில் விஜேதிலக, வலயக் கல்விப் பணிப்பாளர் எச். டி.தர்மசிறி, மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய அதிபர் எச். எம். யு. திரு.பி.ஹேரத், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (05) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன
பூஞ்சை நோய் மீண்டும் பரவல்
பூஞ்சை நோய் மீண்டும் பரவல்
அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பூஞ்சை நோய் மீண்டும் பரவல்
தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது.
மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.
இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும்.
மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும்.
மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.
மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும்.
மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.
அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 69951 புஸ்பகுமார மற்றும் 93731 தேஷான் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (04) மாலை இவர்கள் அலையில் சிக்கிய போது, இந்த இரண்டு அதிகாரிகளும் பிள்ளைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்து உடனடியாக முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் மரியாதை செலுத்துவதோடு மறுபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய
ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது.ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும், நாட்டில் அரசியல் சுதந்திரம் எந்தளவு உள்ளது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் தலைமையிலான அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனூடாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக,காலி ஹபுக்கல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வங்குரோத்து நிலைமையால், 220 இலட்சம் மக்களும் பொருளாதார சுதந்திரத்தையும் சமூக சுதந்திரத்தையும் இழந்துள்ளனர். சேதன உர மோசடியால் விவசாயத்தில் ஈடுபடும் சுதந்திரமும் இழக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்க, குரல் கொடுக்க, வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போது, பேராட்டம் நடத்தும் போது,நீர் தாரை தாக்குதலுக்கும், கண்ணீர் புகைத் தாக்குதலுக்கும், தடிகள் தாக்குதல்களுக்கும் மக்கள் உள்ளாகும் போது நாட்டில் உண்மையான சுதந்திரம் உள்ளதா என்பது குறித்து பெரும் கேள்வி எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தகங்களும் சொத்துக்களும் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் நாட்டில், கல்வியில் சுதந்திரம் இல்லாத நாட்டில், சுதந்திரத்தை உண்மையாக கொண்டாட முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் சுதந்திர செயல்பாடு இல்லாது போனமை, நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் மீன் வளத்தில் தன்னிறைவு இன்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நாட்டில் சுதந்திரத்தை அபிமானத்துடன் கொண்டாட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காத்தே 76 ஆவது சுதந்திரத்தை நாம் உண்மையில் கொண்டாட வேண்டும். இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து மீள 220 இலட்சம் மக்களும் சாதி, மதம், இனம் ,குலம், கோத்திரம் மற்றும் கட்சி என அனைத்து வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து, பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (04) அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
























