Posted in இலங்கை செய்திகள்

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க கோரியுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருக்கும் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, ஏப்ரல் 9ம் நாள் சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் தோழமைக் கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, திரு.தொல் திருமாவளவன், திரு.பொன்னையன், திரு.கே.எஸ்.இராதகிருஸ்ணன், தோழர் அ.சா.உமர் பாருக்

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு

, தோழர் திருமுருகன் காந்தி, திரு.தி.வேல்முருகன், தோழர் கொளத்தூர் மணி, திரு.உ.தனியரசு, தோழர் கி.வெங்கட்ராமன், தோழர் சுப.உதயகுமார், தோழர்

மீ.த.பாண்டியன், போராசிரியர் ராமு மணிவண்ணன், தோழர் சிங்கராயர், தோழர் செந்தில், திரு.இலயோலா மணி, தோழர் கு.இராமகிருட்ணன், தோழர்

தியாகு, திரு.பாரிமைந்தன், திரு.அய்யாத்துரை தமிழினியன், திரு.அரவிந்த ஆகியோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் போட்டிக்களம் கூர்மையாகி வரும் இவேளையில், நடைபெறும் இம்மாநாடு

முக்கியமானதொன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டினை மையப்படுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகளையும் மாநாட்டு பேராளர்களை நோக்கி முன்வைத்துள்ளது.

⦁ தமிழ்நாடு, ஈழத்தமிழ் தாயகம், புலம் என மூன்று புள்ளிகளுக்கும் அமைப்புக்களுக்கும் இடையில் ஓர் உறவினை உருவாக்கி, ஈழவிடுதலை

சார்ந்த்து முத்தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான ஒர் தளத்தினை உருவாக்க வேண்டுகின்றோம்.

⦁ சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா வழங்குகின்ற உதவிகள், தொடர்பில் தமிழ்நாட்டு அரசினை ஓர் தரப்பாக ஏற்றுக் கொண்டு

அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி, ஈழத்தமிழ் நலன்சார்ந்த முன்உத்தரவாதத்துடன் நிதியுதவினை இந்திய ஒன்றிய அரசு வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம்.

⦁ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழ்மக்கள் அமைதிவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், போரின்

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு

ஓய்வுக்கு பின்னரும் தனது இராணுவத்துக்கு கட்டுக்கடங்காத வகையில் சிறிலங்கா செலவிட்டு வருகின்றமை இந்தியாவை நோக்கியதாகவே கருதவேண்டியுள்ளது.

பொருளதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார நெருக்கடிகளுக்கு தோழமையுடன் உதவிசெய்யும் நோக்கில் சிறிங்காவுக்கு

மனித நேய உதவிகளை வழங்கி வரும் இந்தியா, சிறிலங்காவின் இந்த இராணுவ செலவீனங்கள் எதற்காக என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவத்தினை முற்றாக விலக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா கொடுப்பதற்கான தூண்டுதலை

தமிழக மக்களும், தமிழக அரசும், கட்சிகள், அமைப்புக்கள் முன்வைக்க வேண்டுகிறோம்.

⦁ அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் தமிழ்நாட்டு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசுக்கு உந்துதலைக் கொடுத்து, அதற்கான உயர்மட்ட குழுவொன்றினை நியமிக்க கோர வேண்டுகிறோம்.

⦁ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம், தமிழினப்படுகொலைக்கான சிறிலங்காவின் பொறுப்புக்கூறலுக்கு, சர்வதேச நீதிப்பொறிமுறையினை நோக்கியதான ஓர்

தீர்மான வரைவொன்றினை தமிழ்நாட்டு அரசு சார்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்த வேண்டுகின்றோம்.

என கோரிக்கைகள் அமைந்துள்ளதோடு, மேலும் தனது வாழ்தறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என விரிந்து பரந்த இத்தோழமையும் உறுதுணையும் ஈழவிடுதலைப்

போராட்டத்துக்கான உந்துசக்திகளில் ஒன்றாக இருந்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர் தேசத்தின்

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு உலகத்தமிழர்களின் உறுதுணை என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான அரசியல்வெளி முழுமையாக இல்லாது போயுள்ள நிலையில், தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல்

பெருவிருப்பின் வடிவமாக இருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தி, அதன்வழி சுதந்திரமும் இறைமையும்

கொண்டு தமிழீழத்தினை வென்றைடைய, உலகத்தமிழ் மக்களின் பலமே பெரும் சக்தியாக காணப்படுகின்றது. குறிப்பாக இப்பலத்தில் தமிழ்நாட்டின் வகிபாகம் என்பது முக்கியமானது.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய ஒன்றிய அரசின் அயலுறவு கொள்கை நிலைப்பாட்டில் காத்திரமான

மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

உலக மக்களில் அதிக செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் பயன் படுத்தி வருவது


டுவிட்டர் ஆகும் ,இது பேஸ்புக்கை விட கீழ் நிலையில் அதன் மதிப்பு விளங்கி வந்தது

அனால் தற்போது டெஸ்டில கார் நிறுவனத்தின் அதிபர் Elon Musk அதன் பங்குகளில் 9,2 வீதத்தை தனதாக்கி கொண்டார்


அதனால் இது பேஸ்புக்கிற்கு இணையாக விலை உயர்ந்துள்ளது

உலகசந்தையில் இவரது வருகையின் பின்னர் அதன் பங்குகள் அதிக விலைக்கு சென்றுள்ளது


ஒரே நாளில் அதன் பங்கு எகிறியது இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்

    இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்

    இலங்கை செவனகலை ,மற்றும் கதிர்காம பகுதியில் இருவர் குத்தி


    கொலை செய்ய பட்டுள்ளனர்

    இருவேறு சம்பவங்களும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்தே

    இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு

      இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ற்போது

      நாட்டில் ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விலை 321.49 ஆக அதிகரித்துள்ளது

      மேலும் இது ஐநூறு ரூபாவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

        நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

        இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின்


        புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது

          Posted in Uncategorized

          கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

          கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

          இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் தீர்வு காண முடியவில்லை எனின்

          எம்மிடம் பொறுப்பை தாருங்கள் இல்லா விடின் வீட்டுக்கு செல்லுங்கள்

          கள்வர்களுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாம் தயார் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார் ,


          பாராளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு

            வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு

            இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்

            போராட்டம் நாடதி வருகின்றனர்


            இவ்வேளை மக்களின் உணர்வூகளுக்கு மதிப்பளித்து நாட்டில் நிலவும்

            நிலைகளுக்கு தீர்வு காணவேண்டும் தவறின் ஆளும் அரசுக்கு எதிராக

            நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சிகள்
            வேண்டுதல் விடுத்துள்ளனர்

              Posted in உலக செய்திகள்

              அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

              அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – இருவர் காயம்

              சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஒயில்,எண்ணெய் சேமிப்பு கூதம் அமைந்துள்ள


              Al-Omar oil இராணுவ தளம் மீ து நடத்த பட்ட திடீர் ரொக்கட் தாக்குதலில் சிக்கி

              இரண்டு அமெரிக்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர்


              மேலும் அங்கிருந்த போர் தளபாடங்கள் பல சேதமடைந்துள்ளது

              இந்த முகாம் மீது தொடராக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

                பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

                இலங்கை மத்திய வங்கி தனது கையிருப்பு சேமிப்பதில் 70 வீதத்தை இழந்து தவிக்கிறது


                இதனால் இலங்கையில் உள்ள ஏனைய வங்கிகளை கட்டு படுத்தும் அல்லது மைய

                படுத்தும் இந்த வங்கியின் வீழ்ச்சி அங்கு பணம் வைப்பில் செய்தவர்கள் பணம் மீள்

                செலுத்த முடியா நிலைக்கு வங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

                இந்த வங்கியில் இருந்து மக்கள் தமது பணத்தை மீள பெற்றால் அல்லது பெறமுடியா சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

                இந்த வங்கியில் இருந்த தங்கத்தின் சேமிப்பு, 98 மில்லியன் டொலராக இருந்த தங்கம்

                கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

                இதனால் இந்த பேரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது

                பசில் நிதி அமைச்சராகி மூன்று மாதத்தில் இந்த கயானா காலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

                முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

                முன்னாள்
                மத்திய வாங்கி ஆளுநர் Ajith Nivard நாதரை விட்டு செல்ல எதிர்வரும்

                பதினெட்டாம் திகதிவரை தடை விதிக்க பட்டுள்ளது


                நாடு பெரும் பொருளாதாரா சீரழிவை சந்திக்க இவரே காரணமாக இருந்தார்

                என தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர பட்டுள்ளது

                இவ்வேளையே இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது ,இவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டால் ஆளும் மகிந்தா


                ,கோட்டா சகோதர்கள் பெரும் நெருக்கடியில் சிக்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

                  Posted in Uncategorized

                  யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

                  யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

                  யாழ்ப்பாணம் மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவரிடம்

                  கடனை பெற்றுக்கொண்ட நபர்கள்


                  அதனை மீள செலுத்திட குறித்த பெண்ணின் வீட்டுக்குசென்றுள்ளனர்

                  ,அப்போது அங்கு எழுந்த வாய் தகராறை அடுத்து குறித்த பெண் அடித்து

                  கொலை செய்ய பட்டு அவரது வீட்டின் பின்புறத்த்தில் புதைக்க பட்டுளளார்

                  குறித்த பெண்ணை காணவில்லை என போலீசாரிடம் மேற்கொள்ள பட்ட

                  முறைப்பாட்டை அடுத்து , இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய கணவன் ,மனைவி உட்பட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  விசரணையின் முடிவில் மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in உலக செய்திகள்

                    ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

                    ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

                    உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியாவின் இராணுவ நடவடிக்கையை

                    அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்டுள்ளது

                    உக்கிரேனில் இனப் படு கொலையை ரசியா நடத்தி வருவயதான குரல்கள்

                    ஓங்கி ஒலித்த நிலையில் இந்த தடை விதிக்க பட்டு நீக்க பட்டுள்ளது

                    இது மேலும் ஐரோப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க

                    படுகிறது ,இதுவே மூன்றாம் உலக யுத்தமாக


                    மாறும் நிலை ஏற்படும் என ஏதிர்பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

                      வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

                      இலங்கை Thanamalwila பகுதியில் ஆட்டோ மற்றும் டபிள் கப்


                      இரண்டு மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்

                      மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


                      இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்தில் சிக்கி ஆறுக்கு மேற்பட்டவர்கள்

                      பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)

                        தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)

                        தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 – மெல்பேர்ண் (அறிவித்தல்)


                        பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான

                        முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 34வதுஆண்டு நினைவுநாளும் தாயக

                        விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர்

                        நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும்

                        உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

                        குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த

                        நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

                        அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து தமிழீழத் தேசியத்தலைவர்

                        அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் எலியேசர்

                        நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் ஆகியோர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந்நினைவுநாளின் சிறப்பம்சமாகும்.

                        மேலும் ஆண்டு தோறும் பள்ளிமாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் அன்னை பூபதி நினைவுதின பொதுஅறிவுப் போட்டி இவ்வாண்டும்

                        நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுஅறிவுப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் குழுவாகவோ தனிநபர்களாகவோ இணைந்துகொள்ள

                        இருப்பின் 20 / 04 / 2022 இற்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                        எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பதுநாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும்

                        நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்கள்,

                        பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளு-மாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                        இடம்: St John’s Catholic Church, 52 Yarra St, Heidelberg VIC 3084.

                        காலம்: 24-04-2022. ஞாயிற்றுக்கிழமை.

                        நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00மணிவரை.

                        மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.

                        சிட்னி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 அறிவித்தல்
                        காலம்: 10-04-2022 Sunday 4pm
                        நிகழ்விடம்: Reg Byrne Community Centre, Fyall Ave, Wentworthville, NSW 2145
                        தொடர்புகளுக்கு: 0424 757 814, 0401 842 780
                        இவ்வண்ணம்,
                        தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – சிட்னி

                          Posted in இலங்கை செய்திகள்

                          மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                          மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                          மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு

                          ,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்

                          எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது

                          அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா

                          குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது

                          மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,


                          மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

                            இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

                            இலங்கையில் எரிபொருள் காரணமாக மின்சார பாவனை தடை பட்டுள்ளது


                            இதன் காரணாமாக முக்கிய சில வங்கிகள் திறப்பு குறைக்க பட்டுள்ளது

                            மின்சார பாவனையை காரணம் காண்பித்து குறித்த வங்கிகள் பயன்பாட்டு

                            நேரத்தை குறித்துள்ளது மக்கள் மத்தியில் அசத்தை ஏற்படுத்தியுளளது

                            தனியார் வங்கிகள் நஷ்டம் என தெரிவித்து மூடி விடும் நிலை ஏற்படலாம்

                            என்பதால் மக்கள் வங்கிகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு

                              மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு

                              இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி வேளையில் புதிய ஆளுநர்

                              ஒருவர் தெரிவு
                              செய்ய படவுள்ளார்

                              இவ்விதம் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவு செய்ய படுவார் என தெரிவிக்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்

                                பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்

                                இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப்

                                போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம்.

                                சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

                                ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார்.

                                ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.

                                இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது,

                                அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.

                                பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம்,
                                அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

                                  பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

                                  இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த

                                  கோட்டா அங்கிருந்து வெளியேறினார்

                                  இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண

                                  இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக

                                  கோட்டா தொடர்ந்து மறுத்து
                                  வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

                                    கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

                                    இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கமாராக்கள் நிறுத்தி

                                    வைக்க பட்ட பின்னரே அங்கிருந்து அவன்கார்ட் தலைவர் மற்றும் முக்கிய

                                    மகிந்த குடும்பத்தினர் தப்பித்தனர் ர் என தெரிவிக்க பட்ட நிலையில் அவை

                                    வெறும் போலி பரப்புரைகள் எனவும் அவ்விதமான செயல் பாடுகளில் விமான நிலையம் ஈடுபடவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                                    சமுக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக

                                    சொல்வதெல்லாம் உண்மை பாணியில் விமான நிலையம் தெரிவித்துள்ளது