Author: நலன் விரும்பி
பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் இராணுவத்தினர் அறு நூறு பேர் தற்போது கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இதே போல காவல்துறையினரால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
பிரான்சில் கடந் தினத்தில் ஆயிரத்து ஐம்பத்து மூன்று பேர் பலியாகி இருந்தனர் .
மேலும் சுமார் நான்காயிரம் பேர் வரை மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இன்று இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரான்ஸ் செய்திகள் அனைத்தும் தினம் தோறும் பார்க்க இதில் அழுத்துங்கள்

மருத்துவ மனையில் மாஸ்க் திருடி விற்ற ஊழியர் கைது
மருத்துவ மனையில் மாஸ்க் திருடி விற்ற ஊழியர் கைது
உலக நாடுகளை மிரள வைத்து வரு கொரனோ நோயில் பாதிக்க பட்ட மக்களை
காப்பாற்றும் முகமாக மாஸ்க் அணிவிக்க படுகிறது ,இந்த மாஸ்க் தற்போது பெரும் தட்டு பாடு நிலவுகிறது .
இவ்வேளை Prescott hospital மருத்துவ மனையில் பணிபுரிந்த பெண் ஒருவர் அங்கு
மாஸ்க்,மாற்றும் கிளீனிங் பொருட்களை திருடி விற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் மீதுசந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரது காரினை சோதனை
செய்த பொழுது மேற்படி பொருட்கள் அந்த காருக்குள் இருந்துள்ளமை கண்டு பிக்க பட்டுள்ளது
அதன் மொத்த பெறுமதி சுமார் 1700 டாலராகும் ,தற்போது குறித்த ஊழியர்
கைது செய்யப் பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
களவு செய்யும் பொழுது அது மகிழ்வு ,ஒரு நாள் சிக்கினால் இப்படி மானம்
போவதுடன் ,சிறை கம்பி தான் என்பதற்கு இந்த நபர் சிறந்த உதாரணம்
வேலையும் போனது ,மானமும் போனது .இது தேவையா ..?

Mexico வில் 19 பேர் சுட்டுக்கொலை – சிதறி கிடந்த ஆயுதங்கள்
Mexico வில் 19 பேர் சுட்டுக்கொலை – சிதறி கிடந்த ஆயுதங்கள்
வடக்கு மெஸ்சிக்கோ பகுதியில் போதைவஸ்து கும்பல் நடத்திய குழு தாக்குதலில்
பத்தொன்பது பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
இவர்கள் அருகில் கனரக ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
குறித்த நாட்டில் போதைவஸ்து வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது
ஆண்டு தோறும் பல்லாயிரம் பேர் இவ்வாறான தாக்குதல் மூலம் பாடுகொலை செய்ய படுகின்றனர்
சடலங்களை மீட்ட போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர் ,
இந்த போதைவஸ்து கும்பல் அந்த நாட்டுக்கு பெரும் தலைவலியாக உள்ளமை குறிப்பிட தக்கது

ஆப்கானிஸ்தானில் ஐ எஸ் ஐ தலைவர் கைது – அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஐ எஸ் ஐ தலைவர் கைது – அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்து போராடி வந்த உலக மகா பயங்கரவாத
இயக்கமாக விளங்கிய ஐ எஸ் இயக்கத்தின் குறித்த நாட்டின் தளபதியும் ,
தலைவருமாக விளங்கியவரை தாம் கைது
செய்துள்ளதாக
ஆப்கானிஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இவருடன் மேலும் பத்தொன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இங்கு இடம்பெற்ற
பல குண்டு வெடிப்புக்கள் ,மற்றும் படுகொலையுடன் இவர் தொடர்பு பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது
குறித்த நாட்டின் புலனாய்வு தலைவரை கொன்றது இவர் தான் என்ற செய்தியும் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை
திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை
இலங்கை குருணாகல அரசினர் மருத்துவ மனையில் காலை பதினொரு மணியளவில் தீபரவல் இடம்பெற்றுள்ளது .
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவைல்லை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில்
காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்
இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்
இலங்கையில் Milco milks நிறுவனம் தமது இணையத்தை வெளியிட்டு
வைத்து சுமார் ஐந்து மணித்தியாலத்தில் பதின் இந்து மில்லியனுக்கு ஆடார் கிடைத்துள்ளதக அறிவித்துள்ளது
இவ்வாறு பெரும் தொகையில் ஆடர் கிடைத்துள்ளதால் அந்த நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளது
மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலையில் டிலிவரி விநியோகத்திற்கு
அரசு அனுமதி வழங்கியுள்ளது ,இவ்வேளையே மக்கள் இவ்விதம் ஆடரை வழங்கியுள்ளனர்
குறித்த இணைய பக்கம் ஆரம்பித்து முகநூல் பக்கத்தில் அறிமுக படுத்த பட்டு
ஐந்து மணித்தியாலத்தில் இடம்பெற்றுள்ள இந்த சாதனை பெரும் சாதனையாக
நிலை பெற்று நிமிர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துளளது

கோட்டாவின் உத்தரவில் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை
கோட்டாவின் உத்தரவில் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை
இலங்கையில் நிலவும் அசாதாரண நிகழ்வின் காரணமாக சிறைகளில்
தடுத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
நோயின் பரவவல் வேகமாக செல்வதால் அதில் இருந்து இவர்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்துடன் ஒன்றித்து வாழும் நிலையை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது
குற்றங்கள் ,அவர் தம் சூழல்களை பொறுத்து ஏற்படுகிறது ,திட்டமிட்டு
குற்றங்கள் புரிவது 80 விகிதம் இல்லை என்பதான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
ஜனாதிபதியின் இந்த கரிசனை ,அன்பு செலுத்தல் மக்களினால் பாராட்ட பட்டு போற்ற படுகிறது

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
நாளை காலை ஆறுமணி முதல் ஊரடங்கு தளர்த்த பட்டு பின்னர் மதியம் இரண்டு மணியளவில் அமூல் படுத்த படவுள்ளது
இவ் வேளை மக்கள் வெளியில் சென்று தமது தேவைகளை நிரவர்தி செய்திட முடியும் என அரசு தெரிவித்துள்ளது
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய பயணங்கள் யாவும் முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
வைரஸின் பரவலை தடுக்கும் முகமாக இந்த தடைகள் தொடர்ந்து விதிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
,அதற்கு ஏற்ப மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
அரசு கூறும் இந்த நல்ல விடயங்களை பின்பற்ற வேண்டும் என தாழ்மையான வேண்டுதல் மீளவும் மக்களிடம் வைக்க பட்டுள்ளது

நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390
நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை நோயாளர்கள் வீடுகளில் தவித்து வருவதான செய்திகள் வெளியான
நிலையில் மருத்துவ சங்கம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொணடால், மருத்துவ குழு பாதிக்க பட்டவர்களுக்கு உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது
மக்கள் நலன் கருதி இந்த அவசர சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு
தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் Watford General Hospital மருத்துவனையில் கொரனோ நோயாளர்களுக்கு வழங்க படும் ஒட்ஸிசன்
முடிந்துள்ள நிலையில் மேலதிக நோயாளர்களை ஏற்றுக் கொள்ள அந்த மருத்துவ நிர்வாகம் மறுத்து வருகிறது
பிரசவத்துக்கு வரும் பெண்கள் மட்டும் அனுமதிக்க படுகின்றனர் women in labour to stay away.
மிகுதி எவரும் மருத்துவமனைக்குள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
பிரதான சுவாச காற்று கருவிகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம்
அப்படி என்றால் ,,?…இங்கே சுவாச காற்று தீர்த்து விட்டது என்பதே பொருள்
வரும் மணித்தியாலங்கள் பெரும் உயிர் பலிகள் அதிகம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது, மேலும் இந்த நோயினால் 163 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
Police are blocking access to a hospital after it discovered a problem with its oxygen equipment,
Watford General Hospital declared a critical incident and told anyone except women in labour to stay away.

பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு
பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு
பிரான்சில் இன்று சனிக்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம் 1.053 பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர் ,
பலி எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் 89,953 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் புதிதாக 7,788 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,பிரான்சில் அதிகரித்து
செல்லும் இந்த மாரணங்கள் மக்கள் பத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,
வீடுகளை விட்டு வெளியேறினால் இரு நூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுகின்றன
அத்துடன் இந்த நோயில் சிக்கி 6,838 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது

இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை 681 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு நிகழ்ந்த இறப்பு விகிதம் 15.362 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இன்று மட்டும் 4,805 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்
இதுவரை 124,632 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த உயிர் பலி அதிகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை எழுபத்தி ஆறு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,அத்துடன் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு
பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு
பிரான்சின் Romans-sur-Isère பகுதியில் கத்தியுடன் உலவிய நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .
இதில் சுமார் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
கத்தியுடன் அந்த பகுதியை சுற்றி திரிந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த கத்தி வெட்டு தாக்குதல் பயங்கரவாத செயலா என்பது தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தெரிவிக்கவில்லை
விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்த
பொழுதும் ,வெளியில் நடமாடிய மக்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தற்போது தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப் படுத்த பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
சுவிஸ் நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் மேலும் மொத்த பலி எண்ணிக்கை 641 ஆக உள்ளது .
இந்த நோயின் தாக்குதலில், சிக்கி இதுவரை 20,278 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அது தவிர 391 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் எதிர்வரும்
நாட்களில் மரணம் அடைய கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
இன்று மட்டும் புதிதாக சுமார் 672 பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்
என்ற அறிவிப்பும் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயில் சிக்கி தமிழர் ஒருவர் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்த
பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுகாதார அதிகாரி ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்
பலத்த கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளார்
பல கிராமங்கள் இந்த நோயின் சந்தேகத்தின் பேரில் முற்றாக தடை செய்ய
பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடுக்க பட்டு இராணுவம் காவல் உள்ளது தெரிந்ததே
இவ்விதம் குடும்ப உறவுகளை பிரிந்த நபர் மனவிரக்தியில் இந்த செயலை புரிந்துள்ளார்
இந்த குற்றங்கள் பெருக காரணம் யார் ..? அரசா ..? மக்களா ..?

கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்
கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்
இலங்கையில் வைரஸ் பரவலினால் பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 162 எனவும்
ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இந்த நோயில் இருந்து 27 பேரை தாம் குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
எனினும் அரசு வெளியிடும் இந்த தகவலுக்கு பல மடங்கு மக்கள் சேதங்கள் இருக்கலாம் என கருத படுகிறது
தேர்தலை மையமாக வைத்து இந்த செய்தி தணிக்கைகள் ,சேதங்கள் மறைக்க படுக்கின்றன என்பதே கள நிலவரமாக உள்ளது

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் ; சிக்கி 708 பேர் பலியாகியுள்ளனர் .
மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும்
இந்த நோயில் சிக்கி இதுவரை 41,903 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3,735 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,163 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
மிக வேகமாக பரவி செல்லும் இந்த நோயின் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது ,
மக்கள் பலி எண்ணிக்கை இன்றே பிரிட்டனில் பெரும் தொகையில் அதிகரித்துள்ளது
தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து செல்வதால் ஒரு வித பீதி நிலவுகிறது ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்,பராமரிப்பு நிலையத்தில் 13 பேர் மர்ம நோயல் பலி
பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்,பராமரிப்பு நிலையத்தில் 13 பேர் மர்ம நோயல் பலி
பிரிட்டன் Glasgow பகுதியி வயோதிபர்கள் பராமரிப்பு நிலையத்தில் வசித்து வந்த பதின் மூன்று வயோதிபர்கள் திடீரென பலியாகியுள்ளனர் ,
இவ்வாறு இறந்த பதின் மூன்று பேருக்கும் கொரனோ தோற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுளள்து
மேலும் இவர்களை பராமரித்து வந்த இரு தாதிமார்களும் இந்த கொரனோ
தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரிட்டன் எங்கும் இந்த நோயின் தாக்கத்தினால் பல நூறு பேர் தினம் தோறும் பலியாகி வருகின்றனர் ,
இந்த நோயானது இம்மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்பபோம் ,

லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
பிரிட்டன் – லண்டன் பகுதியில் தற்போது இலங்கை மீசாலையை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர்
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார் .குடும்ப தலைவனை இழந்து குடும்பத்தினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
இவருடன் தற்போது பிரிட்டன் தழுவிய நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட
இலங்கையர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
வர்த்தக நிலையங்கள் ,மற்றும் கடைகளுக்கு சென்று வந்தவர்களுக்கும் ,
டாக்சி சாரதிகள் ,மற்றும் பொது இடங்களை பயன் படுத்தியவர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளதும் ,இறந்துள்ளதும் தெரியவருகிறது
மேலும் மூன்று தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் ,குறித்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
அரசு மக்களை வீடுகளை விட்டும் ,பொது பாவனைகளை தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்களே எதிர் வரும் இரு வாரங்களில் பிரிட்டனில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது, மக்களே விழிப்பாக இருஙகள
பிரிட்டன் செய்திகள் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140
ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140
ஸ்பெயினி நாட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மக்கள் பலி 546 ஆக
உயர்வடைந்துள்ளது ,மொத்த இறப்பு எண்னிக்கை 11,744 ஆக பதிவாகியுள்ளது
மேலும் இந்த நோயினால் 124,736 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் 5,537 பேர் இதுவரை புதிதாக பாதிக்க பட்ட நிலையில்
அடையாளம் காண பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரம் காரணமாக பல்லாயிரம் பேர் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது
மேலும் பெல்யியத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர் 18,431 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,1,283 மொத்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது
நெதர்லாந்து 164 பேர் பலி மொத இறப்பு எண்ணிக்கை 1,651 ஆக உயர்ந்துள்ளது 16,627 பேர் பாதிப்பு
அதேபோல ஈரானில் இன்று மட்டும் 158 பேர் பலியாகியுள்ளனர் 55,743 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .3,452மொத்த இறப்பாக பதிவாகியுள்ளது
தினம் தோறும் புதிய கொரனோ செய்திங்கள் படிக்க இதில் அழுத்துங்க








