Posted in உலக செய்திகள்

டொயிலட் பேப்பர் தர மறுத்த தாயை கோரமாக தாக்கிய மகன்

டொயிலட் பேப்பர் தர மறுத்த தாயை கோரமாக தாக்கிய மகன்

அமெரிக்கா -வடக்கு Los Angele பகுதியில் தாய் ஒருவர் மகனுக்கு டொயிலட்

பேப்பரை குறைத்து வழங்கியுள்ளார் ,அத்துடன் மறு ரோல்களை எடுத்து பதுக்கி வைத்துள்ளார் .

இதனால் ஆத்திரமுற்ற மகன் தாயை அகோரமாக தாக்கியுள்ளார் ,பலத்த

காயமடைந்த தயார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

மகன் அதிக பேப்பரை தினமு பாவிப்பதால் தாயார் இதனை பதுக்கி

வைத்துள்ளார் ,கொரனோ வைரஸ் காரணமாக டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது

இதனால் தான் இவ்விதம் மறைத்து வைத்து சேமிப்பு முறையில் பாவித்து வந்ததாக தயார் தெரிவித்துள்ளார் .


ஆனால் இருபத்தி ஆறு வயது மகனோ அதனை கருத்தில் கொள்ளாது இந்த கோர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

வெளி நாடுகளில் இந்த டொயிலட் பேப்பருக்கு கடும் தட்டு பாடு நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

டொயிலட் பேப்பர்
டொயிலட் பேப்பர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190

ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று

பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்

அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி

பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19

ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று

தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்

தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.

அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக

தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஊரடங்கு
இன்று முதல் ஊரடங்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

கடந்த மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்திற்கு மாற்ற பட்டார் ,
தற்பொழுது உயிர் ஆபத்தில் இருந்து மீண்டு

இயல்பான சாதாரன மருத்துவ மனை வாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார் ,

மேற்படி சம்பவமானது இவர் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உடல் தேறி நலமுடன் மீண்டு வரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள்

மாற்று மக்கள் வேண்டுதலாக இருந்ததது ,மேற்படி செய்தி அந்த மக்கள் மனதில் சற்று மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ ஆபத்தில்
கொரனோ ஆபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக

சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்

மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்


,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த

நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு
முன்னாள் எம்பி மஸ்தானுக்கு

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்

செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்

இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத

மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது

மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்

வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது

கொரனோவில் இருந்து
கொரனோவில் இருந்து
Posted in இலங்கை செய்திகள்

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

இலங்கை குருணாகல பகுதியில் உள்ள போதனா வைத்திய சாலையில்

அவசர சிகிச்சை பரிவு மற்றும் ,விபத்துக்கள் பிரிவு என்பன மறு அறிவித்தல்

வரை அடித்து பூட்ட பட்டுள்ளதாக அந்த மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் சுமார் ஒருவர் கொரனோ

நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார்சில நாட்களுக்கு இந்த

சேவை இரத்து செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குருணாகல மருத்துவமனை
குருணாகல மருத்துவமனை
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ்

நோயில் சிக்கி 1,341 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை 12,210 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயில் சிக்கி 117,749 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஆபத்தான நிலையில் 7,066 பேர் உள்ளனர் .

தொடர்ந்து அதிகரித்து செல்லும் மனித உயிர் பலிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் அதிகளவு ஆசிய நாட்டவர்கள் பலியாகி வருகின்றனர் ,இன்று இடம்

பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி ,ஸ்கந்த புரத்தை சேர்ந்த பாலசந்திரன் – கமலாம்பிகை பலியாகியுள்ளார் ,


இதுவரை பிரான்சில் ஐந்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

பிரான்சில் கொரனோவல்
பிரான்சில் கொரனோவல்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்ட தட்ட இரண்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 19,688 பேர் பலியாகியுள்ளனர் .

அது தவிர இந்த நோயினால் பாதிக்க பட நிலையில் 454,615 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன .

அரசு திணறி வருகிறது ,உயிரிழப்பு மேலும் ஆயிர கணக்கில் ஏற்படலாம் எனவும் ,வரும் நாட்களில் இவை அதிகரிக்கலாம் என தெரிவிக்க படுகிறது

காரணம் மிக ஆபத்தான நிலையில் 9,733 பேர் உள்ளனர் ,மருத்துங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

அமெரிக்காவில் ஒரே நாளில்
அமெரிக்காவில் ஒரே நாளில்
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த வயோதிபர் தங்குமிடம் – உடல் கருகி நால்வர் பலி – 16 பேர் காயம் – பலர் மீட்பு video

தீயில் எரிந்த வயோதிபர் தங்குமிடம் – உடல் கருகி நால்வர் பலி – 16 பேர் காயம் – பலர் மீட்பு video

இன்று Moscow வில் ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கி வசித்து வந்த காப்பகம்

ஒன்று திடீரென தீப் பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி நால்வர் பலியாகினர் ,

மிக வேகமாக பரவிய தீயில் சிக்கி 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் .சம்பவ

இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட வேகமான

மீட்பு நடவடிக்கையால் ,ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்ற பட்டனர் .

தற்போது தீ கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டது, அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேயற்ற பட்டுள்ளனர் .

குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

படத்தில் அழுத்தி வீடியோ பார்க்க

தீயில் எரிந்த வயோதிபர்
தீயில் எரிந்த வயோதிபர்

Posted in முக்கிய செய்திகள்

பிரிட்டனில் Sainsbury’s கடையில் பொருட்களில் எச்சில் தடவிய நபர்கள்

பிரிட்டனில் Sainsbury’s கடையில் பொருட்களில் எச்சில் தடவிய நபர்கள்

பிரிட்டன் Morecambe பகுதியில் உள்ள Sainsbury’s சூப்பர் மார்க் கட்டுக்கு சென்ற நபர்கள் அங்குள்ள இறைச்சி


வைக்கும் குளிர்சாதன கைபிடிகள் ,மற்றும் இறைச்சிகளில் எச்சில் தடவியுள்ளனர்

மேற்படி அதிர்ச்சிகர சம்பவம் அந்த கடையில் பொருத்த பட்டடிருந்த கமராவில் பதிவாகியுள்ளது .


இதனை அடுத்து விரைந்து செயல் பட்ட கடை நிர்வாகம் அந்த பொருட்களை குப்பையில் வீசினர் ,அந்த குளிர் சாதன பெட்டியை அங்கிருந்து அகற்றினர் .

காவல்துறையினருக்கும் சம்பவம் அறிவிக்க பட்டது , விரைந்து வந்த அவர்கள் அதனை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்

குறித்த காணொளியை வெளியிட்ட பொலிசார் ர் மக்கள் உதவியை நாடினர் ,தற்போது இவர்கள் பயணித்த சாலை வழியில் உள்ள

கமராக்கள் மூலம்
இவர்கள் கண்டு பிடிக்க பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறான செயல்களினால் மக்கள் பெரிதும் கலக்கம் உற்றுள்ளனர் ,

சூப்பர் மார்க் கட்டுக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்

மக்களே உசார் ,இந்த விடயங்களை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் .

இப்படியும் கொடூரமான மனம் படைத்தவர்கள் தமது நோயினையும் மற்றவர்க்ளு பரப்பும் இழி கெட்ட செயலாக இவை பார்க்க படுகின்றன

பிரிட்டனில் Sainsbury's
பிரிட்டனில் Sainsbury’s
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்கள் என அடையாளம்

காணப்பட்ட 47 பேர் அந்த நோயில் இருந்து குணமடைந்து தற்பொழுது

மீள தமது குடும்பத்துடன் இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

அவ்விதம் இன்று மூவர் குணமடைந்துள்ளனர் எனவும் ,தாம் கடுமையாக

மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது இந்த நோயின் அறிகுறியானது , இருபத்தி ஒரு நாளுக்கு பின்னரும் அடையாளம்

காண படுவதால் ,தனிமை படுத்த பட்டவர்கள் அனைவரும் 21 நாட்கள்

தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்

தொடர்ந்து 15 கிராமங்களுக்கு மேலானவை மக்கள் உள் ,வெளி ,செல்ல தடை விதிக்க பட்டு இராணு
முற்றுகை காவல் இடம்பெற்றுள்ளது

கொரனோ நோயில்
கொரனோ நோயில்
Posted in இலங்கை செய்திகள்

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா

உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க பட்ட பதின்மூன்று வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்

மேற்படி குற்ற செயலை புரிந்த இவருடன் மேலும் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் இணைந்தே இந்த பாலியல் வல்லுறவை மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்


கைதானவர்கள் அனைவரும் பதினேழு முதல் எழுபது வயது உடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது,

சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்த பட்டு தகுந்த தண்டனை வழங்க படும் என மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார்

தொடர்ந்து அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

13 வயது சிறுமியை
13 வயது சிறுமியை
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு

பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு

பிரிட்டனில் எதிர் வரும் வைகாசி மாதம் வரை லக் டவுன் செய்யும் நிலைக்கு அரசுக்கு செல்கிறது ,

அமைச்சர்களுடன் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர்
தொடர்ந்து அதிகரித்து செல்லும் உயிர் பலிகளை கட்டு படுத்த

மேலும் இந்த தடை எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க படவுள்ளதாக அறிவிக்க படுகிறது

கடந்த தினம் உயிர் பலிகள் அதிகரித்த நிலையில் இந்த நெருக்கடியான

நிலைக்கு அரசு தள்ள பட்டுள்ளது ,ஆளும் பிரதமர் ஜோன்சன் தொடர்ந்து

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது

அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் வருமானம் இழந்த நிலையில் தவித்து வருகின்றனர் .


மேலும் இந்த லக்கடவுன் நடவடிக்கையால் அரசுக்கு பல பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது ,

அதனை அடுத்து அரசு திறந்திட துடிக்கிறது .ஆனால் கொரனோ அதனை விடாது தடுக்கிறது

பிரிட்டனில் மே மாதம்
பிரிட்டனில் மே மாதம்
Posted in கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் 683 பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி

ஸ்பெயினில் 683பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி ஸ்பெயினில் 683பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு

இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 15,283 ஆக அதிகரித்துள்ளது

இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டு 152,446 சிகிச்சை பெற்று வருகின்றனர்


அது தவிர பெல்ஜியம் நாட்டில் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது
283 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 2,523 பேர் பலியாகியுள்ளனர்

24,983 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து உலக நாடுகளை இந்த கொரனோ வேகமாக துரத்திய வண்ணம் உள்ளது

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் தொடர்ந்து பெரும் பீதியில் உறைந்துள்ளனர்

ஸ்பெயினில் 446 பேர் பலி
ஸ்பெயினில் 446 பேர் பலி
Posted in குற்ற செய்திகள்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்

அமெரிக்கா South Lake Tahoe பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடை ஒன்றுக்கு

சென்றுள்ளார் ,அங்கு வைக்க பட்டிருந்த நகைகளை அவர் பார்வையிட்டுள்ளனர் ,

அதன் பின்னர் தான் பார்வையிட்ட நகைகளை நாக்கினால் நக்கியுள்ளார் .

இதனை கண்ணுற்ற ஊழியர்கள் பீதியில் பறந்தடித்து காவல்துறைக்கு

சம்பவத்தை தெரிவித்தனர் ,
விரைந்து வந்த போலீசார் விசாரணையை நடத்தினர் ,

அதன் பின்னர் இவர் நக்கிய பொருள்களை கொள்வனவு செய்திட மறுத்த நிலையில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்

தற்போது பத்தாயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் ,

கொரனோ தொற்றினால் மக்கள் அலறிய வண்ண இருக்க இந்த பெண் புரிந்தசெயல்

பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

மக்களே எச்சரிக்கை கடைக்கு சென்றால் முன் வரிசையில் உள்ள பொருட்களை வாங்கிடாதீங்க ,

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

கடைக்கு சென்று பொருட்களை
கடைக்கு சென்று பொருட்களை
Posted in உலக செய்திகள்

லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது அதி வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து காண படுகின்றன ,

மக்களை ஒன்றாக கூடிடவும் தடைகள் விதிக்க பட்டுள்ளன ,தொடர்ந்து

மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இவ்வேளை எதிர் வரும் ஈஸ்ட்டர் தினத்திற்கு தேவாலயங்களை திறந்து

மக்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என எம்பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இவர்களது இந்த பேச்ச மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நெருக்கமாக மக்கள் வழிபாட்டிற்கு செல்லும் பொழுது மீளவும் இந்த நோயானது வேகமாக பரவிடும் அபாயம் உள்ளது

அதனை மறந்து இவர்கள் இபப்டி கூறுவதே மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் ஈஸ்ட்டருக்கு
லண்டனில் ஈஸ்ட்டருக்கு
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 166 பேர் பலி 5,734 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 166 பேர் பலி 5,734 பேர் பாதிப்பு

இந்தியாவில் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நூற்றி அறுபத்தி

ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 5,734 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து பல மாநிலங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது


மக்கள் வெளியில் நடமாட தடை தொடர்கிறது

அத்து மீறி செல்பவர்கள் கைது செய்ய படுவதுடன் தடியடி நடத்த படுகிறது

இந்தியாவில் கொரனோ
இந்தியாவில் கொரனோ
Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்

பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்

வெனிசுவேலெ நாட்டு எல்லைக்குள் நுழைந்து அமெரிக்காவின் இரண்டு

Su-30 fighter jet விமானங்கள் பறந்து சென்றுள்ளன ,தமது வான் பாதுகாப்பு

படையினரின் ராடார்களுக்கு சிக்கிய இந்த விமானங்களுக்கு உடனடி

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,திரும்பி சென்று விடுஙகள் அல்லது சுட்டு வீழ்த்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

அதனை அடுத்து திடீரென தமது வான் பரப்புக்குள் நுழைந்து சென்று

தப்பித்து ஓடின .அமெரிக்காவின் இந்த அத்து மீறல் செயல்

பாடுகளுக்கு குறித்த நாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

ஈரானை தொடர்ந்து இங்கு தற்பொழுது அமெரிக்கா தனது அத்து மீறலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

பிற நாட்டுக்குள் நுழைந்து
பிற நாட்டுக்குள் நுழைந்து
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் உடைந்து வீழ்ந்த நீண்ட பாலம் -தப்பிய பயணிகள்

இத்தாலியில் உடைந்து வீழ்ந்த நீண்ட பாலம் -தப்பிய பயணிகள்

இத்தாலி Massa Carrara பகுதியில் அமைக்க பட்டிருந்த நீண்ட பாலம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது .


மிக முக்கிய பிரதான சாலைகளை இணைக்கும் பொருட்டு இந்த நீண்ட பாலம் அமைக்க பட்டது

அதுவே தற்பொழுது திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது .இந்த பாலம் எவ்வாறு

உடைந்து வீழ்ந்தது என்ற கரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

பயணிகள் எவரும் இவ்வேளை அதில் பயணிக்காத நிலையில் இந்த பாலம்

இடிந்து வீழ்ந்துள்ளதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இத்தாலியில் உடைந்து
இத்தாலியில் உடைந்து