Author: நலன் விரும்பி
உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை திருகோணமலை பாலையூற்று பகுதியில் உணவை உட்கொண்ட 11 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வழங்க பட்ட உணவில் நச்சுத்தன்மை காணப்படத்தினால் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி ,சத்தி தலைசுற்று என்பனவற்றுக்கு ஆளான நிலையில் 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
குறித்த உணவை தயாரித்தவர்கள மீது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
உணவில் நச்சு தண்மை ஏற்பட காலாவதியான உணவுகளை சமையல் செய்து இருக்கலாம் என நம்ப படுகிறது.
சமைத்த உணவில் ஏற்பட்ட நச்சு தன்மையால் அதனை உட்கொண்ட சிறார்கள் சுகவீனமுற்றது தொடர்ப்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து ஆரம்பிக்க பட்டுள்ளன.
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
உக்கிரேன் ; ரஷிய நாட்டின் அதி உயர் சண்டை விமானமாக விளங்கி வரும் SU 35 ரக விமனம ஒன்று உக்கிரேன் எதிரி இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
உக்கிரேன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த படும் ரஷ்ய விமான காட்சிகள் வெளியிட பட்டுள்ளன.
அவை தற்பொழுது சமுக வலைத் தளங்களில் அதிகம் பகிர பட்டு வருகிறது.
போர் முனையில் உள்ள உக்கிரேன் இராணுவ சிப்பாய்கள் விமானம் வீழ்வதை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைராலகிய வண்ணம் உள்ளன.
இதே போன்ற சண்டை விமானத்தை அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.
இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .
மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .
போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .
போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்
போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் இந்த திடீர் வன்முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
மக்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் சம்பவம் மக்களை மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
போராட்டக்கார்கள் மேலும் ஒன்று கூடி ஆளும் ஜனாதிபதி ரணில்,விக்கிரமசிங்கேவிற்கு எதிராக போராட்டம் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்
ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கொழும்பு-7, ப்ளவோர்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த அமைச்சரவை நியமனம் இடம்பெறுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தெரிவின் பொழுது பேரம் பேச்சுக்களின் பொழுது பேரம் பேச பட்ட விடயங்கள் தற்போது அமைச்சரவை நியமனத்தில் இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது.
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்
இலங்கையின் பிரதமராக ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு-7, ப்ளவோர்ஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், திரு .தினேஷ் குணவர்தன பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும், இலங்கை பாராளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
குணவர்தன 1983 முதல் இடதுசாரி மகாஜன எக்சத் பெரமுன (MEP) கட்சியின் தலைவராக செயல்பட்டுவருகின்றார்.
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு
அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக
முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை
யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை
சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..
நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.
மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான
அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.
இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும்
அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.
இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக
பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.
பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள்
நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை
பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக
இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு
உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை
முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
இலங்கை ;கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ்
பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொரி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம்
குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்
இந்த லொரியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது.
பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி இன்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள்
ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .
இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .
கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையாக அமைந்த கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவில் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ( 23-07-2022) யூலை23ம் நாள் சனிக்கிழமை, மதியம்11:20 மணி முதல் இக்குருத்திக் கொடை நிகழ்வு Richmond Hill பகுதியில் உள்ள Hillcrest Mall , 9350 Yonge St, Richmond Hill, ON L4C 5G2 இந்த மையத்தில் இடம்பெற இருக்கின்றது.
கறுப்பு யூலை-83 இனப்படுகொலையில் கொலையுண்ட உறவுகளை நினைவேந்தி ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இருக்கின்றது.
இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள பௌத்த இனவாதத்தினால் நடத்தப்பட்ட இந்த இனஅழிப்பினை எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார்
செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை.
ஐ.நாவுக்கு கொடுத்த இந்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு
வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்
ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்
ரஷ்ய மோஸ்க்கோ ; ரஷ்ய ஜனாதிபதி பிளாடீமீர் புட்டீன் கொடிய நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளார் என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .
உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய அதிபரின் மனோ நிலையை குழப்பிடவும், போரிடும் இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ,இவ்விதமான கட்டு கதைகளை அமெரிக்கா பிரிட்டன் உளவுத்துறைகள் கூட்டாக தெரிவித்து வருகின்றன .
வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்கின்ற வதந்திகளை பரப்பி உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்.
உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
அதன் பின்னரே மக்கள் முன்பாக வடகொரியா அதிபர் தோன்றினார் .
அதே போன்ற உளவுத்துறை சித்து விளையாட்டில் அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன .
அவர்தம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர் .
மேற்படி நாடுக்ளின் போலி பரப்புரை இவை வதந்தி எனவும் நம்பாதீர்கள் என ரஷ்ய உளவுத்துறை அறிவித்துள்ளது .
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .
இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்
இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .
பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்
118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .
இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .
பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ
அமெரிக்கா ,நியூயோர்க் ; அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
70 வயதாகும் ஜோ பைடன் நித்திரை கொள்ள கடினப்படுகிறார் என அந்த குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்கின்ற செய்தி ஊடாக அமெரிக்காவில் வேகமாக மீளவும் கொரனோ நோயானது பரவி வருகிறது என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இவ்விதம் நோக்கின் விரைவில் அமெரிக்கா அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
பிரேசில் நாட்டில் நாள் தோறும் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .
அவ்விதம் அமெரிக்காவில் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
.
இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா
இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா
இத்தாலிய பிரதமர் Mario Draghi தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்
இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக இந்த பதவி விலகலை அவர் மேற்கொண்டுள்ளார் .
தற்போது இத்தாலிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டி புதிய பிரதமரை தெரிவு செய்திடும் நிலையில் உள்ளார் .
உக்கிரேன் ரஷ்ய போர் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இவ்வாறான மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலியும் மூழ்கிய நிலையில் அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக வியாழன் இன்று பதவி விலகியுள்ளார் .
இத்தாலிய பிரதமர் பதவி விலகல் -பொருளாதார நெருக்கடி இலங்கை போல மாறுமா
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில் தற்போது இத்தாலிய பிரதமர் பதவி விலகியுள்ளார் .
இலங்கையை விட்டு கோட்பாயாவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களினால் துரத்த பட்டார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்க பதவியும் ஊசலாடி வருகிறது.
ஆக உக்கிரேன் ரஷ்ய போர் பெரும் நெருக்கடிகளை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே இந்தபதவி விலகல் உள்ளமை குறிப்பிட தக்கது.
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது
இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .
இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .
இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.
இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.
அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்
கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்
பிரான்ஸ் ; உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டபாய இராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பரிசில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்
பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான
குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்
சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த
நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது.
இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை
பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.
இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த
வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது சிங்கப்பூர் தூதரக இராஜதந்திரி ஒருவரை சந்தித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்கள் மகிந்தன்
மற்றும் சுதன்ராஜ் கோரிக்கை மனுவினை கையளித்திருந்ததோடு, தமிழர்களின் நிலைப்பாட்டினை வலியுறுத்தியிருந்தனர்.
இக்கவனயீர்ப்பு நிகழ்வில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதிகள்
மற்றும் தமிழ் சமூக அரசியல் செற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
இலங்கை கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என தெரிவித்துள்ளார் .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என்கின்ற தகவல் மக்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது.
எரிபொருள் கப்பல் வருகை அரசியல் நடத்தும் ரணில்
ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்
இதெல்லாம் அரசியலில் சகயமப்பா என்பதை ரணிலின் இந்த காமடி பேச்சில் தெரியப்படுத்த பட்டுள்ளது.
இலங்கை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ரணில் இவ்விதம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.
அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக,ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க
,பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாராளுமன்றத்தை வந்தடைந்த அவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
73 வயதான இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவர் 1993 முதல் 1994, 2001 முதல் 2004, 2015 முதல் 2018, 2018 முதல் 2019 மற்றும் 2022 வரை ஆறு முறை இலங்கையின் பிரதமராக பணியாற்றியுள்ளார்.
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை








