Author: நலன் விரும்பி
வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்
வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்
கடந்த தினம் இலங்கை Kotadeniyawa பகுதியில் உள்ள தொழில்சாலை
ஒன்றின் கூரை வீழ்ந்து பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 52 வயது நபர் பலியாகியுள்ளார்
இவரது இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
உலக நாடுகளை பேராபத்தில் துரத்தி வரும் கொரனோ வைரஸ் மக்களை
துரத்திய வண்ணம் இருக்க தற்பொழுது ,ஈராக்கில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது ,
இதனால் இதுவரை சுமார் அறுபதாயிரம் கோழிகள் படு கொலை செய்யப் பட்டுள்ளன
இந்த நோயானது ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
அவ்விதம் ஏற்பட்டால் ,கொலண்டில் இருந்தே அதிகமான கோழிகள் லண்டனுக்குள் இறக்குமதி செய்ய படுகின்றன
அவ்விதம் நோக்கின் லண்டனில் உள்ள தமிழர் கோழிக் கடைகள் மூடு விழா
காணும் நிலை மீளவும் ஏற்பட கூடிய பேராபத்து நிலவ கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது

கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது
கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய
வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்
அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்

பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் லக்கடவுன் நிறைவு பெற்ற சில இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவ்வாறு அண்மைய நாட்களில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வருகை தந்தனர் .
இவ்வாறு வருகை தந்தவர்களிடத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் எழுபது மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
இதனால் பெற்றவர்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது ,ஆனால் அரசோ மாணவர்களை தொடர்ந்து கல்வி
நிறுவனகளுக்கு அனுப்பிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது
மன விரக்தியில் உள்ள பெற்றோர்கள் சிலர் இணைந்து இது தொடர்பான
சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதான கருத்துக்கள் கசிகின்றன .

சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்
சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்
இலங்கை ,சிங்கள இராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பபு துறை சார்ந்த
இணையங்களை கைக்கிங் புரிந்து அதில் புலிக்கொடி மற்றும் ,புலிகளை
வெற்றி காணொளிகளை வெளியிட புலிகளின் வெளிநாட்டு கைக்கிங்
குழு ஒன்று முயன்றுள்ளதாக சிங்கள அரச பயங்கரவாதம் அறிவித்துள்ளது
முள்ளி வாய்க்கால் தினத்தில் இந்த நாசகார வேலைகளை புரிந்திட அவர்கள்
முயன்றுள்ளதாகவும் ,ஆனல் அவை தமது பாதுகாப்பு பிரிவினரால் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு
மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த
காற்றுடன் கூடிய கன மழை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சில சேதம் அடைந்துள்ளன.
அத்தோடு தோட்ட செய்கைகளும் நேதமடைந்துள்ளன. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும்
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களை சேர்ந்த 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் 28 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 18
குடும்பங்களை சேர்ந்த 60 நபர்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 நபர்களும் முசலி
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் பாதிக்கப்படுள்ளனர் .
குறிப்பாக ஜீவபுரம் சாந்திபுரம்இ ஜிம்றோன் நகர் இவஞ்சியன் குளம் இதரவான்கோட்டை வெள்ளாங்குளம் சிறுநாவற்குளம் உற்பட
அதிகளவான கிராமங்களில் வீடுகள் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன முன்னால்
வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முதலாம் இரண்டாம் கட்ட மிகுதி பணம்
வழங்கப்படாமல் பழையா வீடும் இன்றி புதிய வீடும் கட்டி முடிக்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வந்த
அதிகமான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட வீடுக சொத்துக்கள் தொடர்பில்
கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது

கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்
கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில்
இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் வழங்கும் பணி இன்று ஆரம்பமானது.
பிரிவு உத்தியோகத்தர்கள் குறித்த தொகையினை வழங்கி வருகின்றனர்.
2020 ஆண்டு மே மாதத்தில் சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் தகுதியான 24040 குடும்பங்களுக்கான
கொடுப்பனவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன்
முறையீடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் 10564 பயனாளிகளுமாக 34604 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும்
29.05.2020 ஆம் திகதி வரை தொடரும் என கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனை வறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க
பேஸ்புக்கில் தேச துரோகி சுமந்திரனைவறுத்தெடுக்கும் மக்கள் – பார்த்து சிரிங்க
இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளாராக விளங்கும் சுமந்திரனின்
நரித்தனமும் ,சிங்கள தேசியவாத கொள்கைக்குள் தன்னை முன்னிலை படுத்தி தமிழினத்தை ,அதன் விடுதலையை கொச்சை
படுத்தி நகரும் இவரது இந்த செயல் பாடுகள் மக்கள் மத்தியில் உலகலாவிய ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இவரது இந்த செயல் பாடுகள் சரி எனவே பொறுப்புணவு அற்று சுமந்திரனுக்கு
வக்காளத்து வழங்கி அவரை காப்பாற்றியுள்ள சம்பந்தர் மீதும் தமிழர்கள் அதிகம் கோபம் கொண்டுள்னனர் .
இறுதி போர் முடிவடைந்து இன்று 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று தந்த தீர்வு என்ன ..?
இந்த பத்து ஆண்டுகளில் சிங்கள அரசுகளை காப்பாற்றி கரை சேர்ந்துள்ளன .எனவே இம்முறை சம்பந்தர் ,சுமந்திரனை மக்கள்
தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,விக்கினேஸ்வரன் போன்ற மாற்று காட்சிகளுக்கு தமது வாக்குகளை அளித்து தமது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்
அவ்வாறு செய்திட தவறின் தமிழினத்தை யாராலும் காப்பற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்றாக மாறும்
எனவே மானமுள்ள தமிழர்களே கூட்டைமைப்பிற்கு வாக்களிப்பதை தவிர்ப்பம் ,சிறந்த சரியான பாடத்தினை கூட்டமைப்பிற்கு மக்கள்
வழங்க வேண்டும் என்பதே நமது அவா .ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் .
சிங்கள பால் குடி சுமந்திரனுக்கு மக்கள் வழங்கிய செருப்படியை பாருங்கள் .இதுக்கு பிறகுமா சுமந்திரன் உயிருடன் இருப்பான் ..?



யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –
யாழ்ப்பாணத்தில் வீடுகளில் தீப்பற்றி வணங்கிய மக்கள் –
முள்ளி வாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெறுகிறது ,
இவ்வேளை யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மானமுள்ள தமிழர்கள்
தமது பிள்ளைகளுடன் இணைந்து வீட்டின் முன்பாக தீபம் ஏற்றி இறந்த மக்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்
வீடுகளை விட்டு மக்கள் வெளியேற அஞ்சி வரும் இவ் வேளையில் இந்த நினைவை நெஞ்சுறுத்தி இவர்கள் வழங்கியுள்ளமை இங்கே காணத்தக்கது


முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில்
இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது உறவுகளை இழந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
படையினரின் கெடுபிடிகளை கடந்து அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவர்
இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு மேல்மட்டம்
கொண்டு சென்று உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்காரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நேரத்துக்கு
செல்ல வேண்டிய விடயங்களை பற்றி தெளிவு படுத்தியநிலையில், தனது
ஆதரவாளர்களுடன் சென்ற நான்கு வாகனங்களில் முன்னாள் பிரதி அமைச்சர்
சென்ற வாகனத்தை மாத்திரமே அனுமதித்திருந்தனர்.உண்மையில் எமது மக்களின் இந்த உரிமையைக் கூட போராடி பெறவேண்டி
ஏற்பட்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.
கடைகளை உடைத்து உள்ளே புகுந்த லொறி – அதிர்ச்சி photo
கடைகளை உடைத்து உள்ளே புகுந்த லொறி – அதிர்ச்சி photo
இலங்கை குருநாகல் பிரதான வீதியில் சீமேந்து ஏற்றி என்ற லொறி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்துள்ளது
இதனால் நான்கிற்கு மேற்பட்ட கடைகள் முற்றாத உடைந்து சேதமாகின
,எனினும் இந்த விபத்த்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது



கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம் -அமைப்பு
கிளிநொச்சியில் 60 000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம் -அமைப்பு
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை
ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம்
மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்
ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
அமைக்கப்படவுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹோமாகம தியகம என்ற இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட
நிலப்பகுதியை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன , மா நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி திரு. பிரியந்த
பந்துவிக்ரம , நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. பிரசாத் ரணவீர , இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு
சபையின் தலைவர் திரு.சமின் சில்வா , நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரின் பங்களிப்புடன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள்
நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை
முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ் போட்டியை பார்வையிடும் சுமார்
நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000
பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் இன அழிப்பு நாளில் 14,617 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
தமிழர் இன அழிப்பு நாளில் 14,617 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்த பேரினவாதி மகிந்தா ,கோட்டா
அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு இடம்பெற்று 11 வருடங்களை
எட்டியுள்ள நிலையில் ,ஆறாத வடுவோடும் வலியோடும் உலவும் தமிழர்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை
இந்த தமிழின அழிப்பு வெற்றி நாளில் 14,617 சிங்கள இராணுவத்தினருக்கு
பதவி உயர்வு வழங்கி கவுரவித்துள்ளார் ஆளும் இன படுகொலையாளி கோட்டபாய
இதில் பதவி உயர்வு வழங்க பட்ட அனைவரும் இறுதி போரில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ
முள்ளி வாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற நிகழ்வு – வீடியோ
முள்ளி வாய்க்கால் மண்ணில் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டன ஆளும் சிங்களஅரசு அந்த தமிழ் இன அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன
எனினும் இதுவரை தமிழர்களுக்கு எவ்வித தீர்ப்பும் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க படவில்லை
ஆளும் வல்லரசுகள் ஆதரவு வழங்கி செல்ல ,அந்த இன அழிப்பு நிகழ்வில் இருந்து சிங்கள அரசு தப்பித்து செல்கிறது
இந்த மக்கள் படுகொலைகளைக்கு தீர்ப்பு தருவது யார் ..? சிங்கள அரசுக்கு என்ன தண்டனை ..?
நன்றி தோழர்



ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்வு- மக்கள் நடமாட அனுமதி
ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்வு- மக்கள் நடமாட அனுமதி
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த
ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மக்களில் வாழ்கைளை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் படி மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய நடைப் பயணமாக செல்ல முடியும்.
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில்
கோரிக்கைக்கு அமைய பஸ் வசதிகளும், ரயில் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று (18) 19 தடவைகள் ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் ஏற்கனவே ஆசனங்களை முன்பதிவு செய்துக்கொள்ளாத
தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்
தமிழன் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதிகள்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுககான மண்சரிவு அனர்ரத எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று வீசி கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய
மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி
மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய
நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி
மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல்
மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,
நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான
இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை
ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்
கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின்
பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை
பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை –
கடந்த தினம் மதியம் ஒரு மணியளவில் பிரிட்டன் Lancashire town.
பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம ஆயுத தாரியால் சூப்பர்
மார்க்கட் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
குறித்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .
அவசர காவு உலங்கு வானூர்தி சம்பவ இடத்துக்கு அழைக்க பட்ட பொழுதும் குறித்த பெண்ணை காப்பாற்றிட முடியவில்லை
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய ,வரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video
கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
கடந்த தினம் கனடாBritish Columbia,பகுதியில் உள்ள Kamloops விமான
நிலையம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மேலே விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது
ஜெட் ரக விமானமே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது எனவும் அதில் சிப்பந்தி
பலியாகியும் மேலும் ஒருவர் பாடுகாய மடைந்துள்ளதாக கனடா விமான படை தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த விபத்துக்குரிய காரணம் உடடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த தினம் மட்டும் நான்கு விமான விபத்துக்கள் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி
முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு
ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு
பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு
ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு
பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து
நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே
மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு பங்களிக்க விரும்புபவர்கள் மாத்திரம்
அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக
ஊடகங்களில் வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை
இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு
அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவது முப்படை, பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்புப்
படைக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு
இன்று முதல் ரயில் பயணங்கள் அதிகரிப்பு
ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல்
19 ரயில்; சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதற்கமைவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெக்கத்த
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாவலப்பிட்டியிலில் இருந்து கண்டிக்கும் மாத்தளையி;ல் இருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள்;
இடம்பெறவுள்ளன.இதேபோன்று பொல்காவலையில் இருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து காலிக்குமிடையிலும் இதற்கு
முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே
திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவரமேலும் கூறினார்.







