Author: நலன் விரும்பி
பல வருடங்களுக்கு முன் காணாமல் போன கடல் திரும்பி கிடைத்த அதிசயம்!
பல வருடங்களுக்கு முன் காணாமல் போன கடல் திரும்பி கிடைத்த அதிசயம்!
33 வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போன கடல் ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது எப்படி சாத்தியம் ..?
வரலாறுகளில் மறைந்து கிடைக்கும் பொக்கிஷங்கள் ஒன்றாக இவை பார்க்க படுகிறது
வாங்க காணொளிக்குள் போகலாம்
இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு
உலக நாடுகளை மிரளவைத்து கொரனோ நோயில் சிக்கு பல
லட்ஷசம் மக்கள் பலியாகியுள்ளனர்
இதில் இந்தியாவில் இதுவரை 4,971 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தீவிர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது ,
அவ்விதம் இருந்தும் இந்த கொரனோ தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று
கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று
கொரியாவில் மீளவும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இத்தனை ஒரே நாளில் 39 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 200 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டிருந்தனர்
அதன் பின்னர் இவர்கள் இவ்விதம் பாதிக்க பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே ஏதாவது ஒரு காரணங்களின் அடிப்படையில் மனுக்கள் மீதான
விசாரணை நிறைவடையும் வரையில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்படுமாயின்
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சில வருட காலம் செல்லும் என ஜனாதிபதி
சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் 29.05.2020 அன்று உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள்
நேற்று பரிசீலிக்கப்பட்டது. கலாநிதி குணதாஸ அமரசேகர சார்பாக ஆஜரான
போது ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த மனுக்களை அரசியல் லாபம் பெறும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக
அவர் கூறினார். இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் தற்போதைய
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை மத்திய நிலையமொன்றை அமைக்க தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை
மத்திய நிலையமொன்றை அமைக்க தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Pஊசு பரிசோதனை மத்திய
நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம்
திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, PCR பரிசோதனை மத்திய நிலையத்தையும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.
இதனடிப்படையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய விமான
நிலையத்தில் தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்
இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு
சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று (மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
கோவிட் -19 தொற்று நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச
விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில்
தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் நேற்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றுக்கான விநியோகத் தேவைகளை பூர்த்திச் செய்து நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு
எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தொற்றுநோய்களின் கீழ் அனைத்து நிலையான சுகாதார
வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டனர்.
கப்பல்கள் இன்று 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து செல்லவுள்ளன.
யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகள்- திங்கட்கிழமை மீள திறப்பு
யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகள்- திங்கட்கிழமை மீள திறப்பு
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மீள
திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் .
யாழ் மாட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும்
நிலையில் பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆளுநர் அவர்களும் சில பணிப்புரைகளையும்
அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றார். அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபை அங்கத்தவர்கள் மற்றும் ,உள்ளுராட்சி அதிகார சபையின்
அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம் அதனடிப்படையில் தங்களுடைய சந்தை
தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள் .
இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே
திறந்து செயல்படுத்தக்கூடியவாறாக இருக்கும் அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார
பரிசோதகர்களின்அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது அத்தோடு பொது மக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக
இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் என்று தெரிவித்த அரச அதிபர் , யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி சந்தை
பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி தொடக்கம் 12 மணி
வரையும் அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் பொலிசாருக்கு அறிவுறுத்தல்
வழங்கி யிருக்கின்றோம் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார் .
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வர நடவடிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வர நடவடிக்கை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக வெளியீடு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி
வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது தொழில் வாய்ப்புக்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய
கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களிலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் தொடரும் என வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள்
அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். சமீபத்தில் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அதிகரித்த எண்ணிக்கையைத்
தொடர்ந்து, சுகாதாரத் துறை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது காணப்படும் கணிசமான அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, கோவிட் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து
இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து விமானங்களிலும் ஏறுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் இரண்டு அமைச்சுக்களினதும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கலந்து கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் இன்று மாலை (மே 29, 2020) நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இந்த அவதானிப்புக்களை மேற்கொண்டார்.
அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, மே 27ஆந் திகதிய நிலவரப்படி, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவதுடன், அவர்களில் 20,893 பேர் மத்திய கிழக்கில்
வசிக்கும் அதே நேரத்தில், 4,961 பேர் குறுகிய கால வீசாவையுடையவர்களும், 2,016 பேர் மாணவர்களுமாவர்.
குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பான முன்னேற்றங்களை நோக்குகையில், நாடு திரும்பிய 466 பேரில் 379 பேர் பொது மன்னிப்பின் மூலம் பயனடையும்
நிமித்தம் ஏப்ரல் 21 – 25 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முகாம்களில் சரணடைந்து, திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 87 பேர் குவைத்
தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்தவர்களாவர். மே 19 ஆந் திகதி குவைத் எயார்வேஸின் இரண்டு விமானங்களின் மூலமாக இவர்கள் குவைத்திலிருந்து
புறப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை நடாத்துமாறு குவைத் வெளிவிவகார அமைச்சிடம் மே 11 மற்றும் மே 14 ஆந் திகதிய இராஜதந்திரக்
குறிப்புக்களினூடாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், இது சாத்தியமில்லை என்றும், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்ட எந்தப்
பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. குவைத்தை விட்டு வெளியேறிய
ஏனைய நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டது.
தற்போது மாலைதீவில் மிகப் பெரிய பாதிப்புக்கள் காணப்படுவதுடன், தமது பிரஜைகளை வெளியேற்றுமாறு வெளிநாட்டு அரசாங்கங்களிடம் வெளிப்படையாகக் கோரும்
வகையில், மாலைதீவு அரசாங்கத்தினால் கிரேட்டர் மாலியில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
மாலைதீவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படவேண்டிய 7000 பேரில், கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் உள்ளனர். மே
14ஆந் திகதி, 284 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ஒரு சில மருத்துவ அவசரகால நிகழ்வுகளின் காரணமாக, மாலிக்கு
வெளியிலிருந்து நபர்களை வெளியேற்ற சிறப்பு அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பி.சி.ஆர். பரிசோதனைகளை
மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை சாதனங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வழங்குதல்
வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர்.
பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த மாலைதீவு அதிகாரிகளிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆலோசனைகளை நடாத்தியுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் – 66 ஆயிரம் பேர் கைது
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திககி மாலை 6 .00 மணி தொடக்கம் இன்று காலை 4.00 (2020.05.30) மணி வரையிலான காலப்பகுதியில்
ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,835 கைது செய்யபட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 18,831
23,307 பேருக்கெதிராக நேற்று வரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமைவாக நீதி மன்றத்தினால் 9,494 பேருக்கு தண்டணை விதிக்கப்பட்டதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் வைரஸ் நோயின் காரணமாக மக்களை வீடுகளை
விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இவ்வாறான கால பகுதியில் வீதியில் நடமாடிய சுமார் 143 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது
யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலுடன்
தொடர்புடைய நபர் ஒருவரை தாம் கைது செதுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்த குண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
புலி பீதியை கிளப்பிட இவரது பரப்புரைகளை சிங்கள புலனாய்வுத் துறை திட்டமிட்டு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வைரஸ் தொற்றால் 357 ஆக சிங்கள படை பாதிப்பு
வைரஸ் தொற்றால் 357 ஆக சிங்கள படை பாதிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட
பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 08 நபர்கள் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 04
நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் 01 நபர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதன் படி குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ்
இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 மே 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இந்த 13 நபர்கள் உட்பட 357 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு
நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு
தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த மாயாவின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு
தாக்குதல்
தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.
இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில்
கடந்த வாரம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்பவரை விக்னேஷ் தாக்கியுள்ளார்.
அதற்கு பழி தீர்க்கும் வகையில் கண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை வீடு புகுந்து வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.
நாட்டைவிட்டு -தப்பி ஓட முயன்ற மனைவையி சுட்டு கொன்ற இராணுவம்
நாட்டைவிட்டு -தப்பி ஓட முயன்ற மனைவையி சுட்டு கொன்ற இராணுவம்
உலகின் மிகவும் விசித்திரமான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்று யாருக்கும் தெரியாது.
அவர்களாகவே வெளியில் சொன்னால்தான் உண்டு. பத்திரிகையாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்திகளை கசிய விட்டால் அவர்கள் கதி திண்டாட்டம்தான்.
தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கன் கையில் சிக்கியுள்ளது. முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட சீனா நாட்டின் எல்லையுடன் அமைந்துள்ளது வடகொரியா.
ஆனால் இதுவரை வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு யாருக்கும் கொரோனா இருந்ததாக தகவல்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில்தான் ரியான்காங் மாகாணத்தில் உள்ள ஹியென்சன் என்ற இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து
வந்துள்ளனர். மனைவியன் இளம் சகோதரரின் 14 வயது மகன் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
வடகொரியாவில் கொரோனாவை தடுக்கும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பயனை எப்படியாக தென்கொரியாவுக்கு அனுப்பிவிட்டு சீனாவுக்கு தப்பியோட வேண்டும் என அந்த தம்பதி
நினைத்துள்ளது. இருநாட்டிற்கும் இடையில் யாலு ஆறு ஓடுகிறது. இந்த ஆறு மூலம் கடக்க முயற்சி செய்தனர். ஆனால் வடகொரிய
அதிகாகரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர். சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்துவிட்டனர்.
அதன்பின் கடந்த சில நாட்களாக அந்த தம்பதியை கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு -கண் கலங்கிய டொனால்டு டிரம்ப்
ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு -கண் கலங்கிய டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட்
டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.
ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை
டொனால்டு டிரம்ப்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது
. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம்
என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா: டெல்லியில் 1,024 பேர்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் இன்று 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,546 ஆக
உயர்ந்துள்ளது. மேலும் இன்று 85 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1982 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்நிலையில் இன்று 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது.
கொரனோவால் பிரிட்டனில் 37,460 பலி
கொரனோவால் பிரிட்டனில் 37,460 பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 37 ஆயிரத்து 460 பேர் பலி யாகியுள்ளனர் ,கடந்த தினம் மீளவும்
இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது,மேலும் இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,அரசு தொடர்ந்து தமது இழப்பு விகிதத்தை மறைத்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளிநொச்சியில் கோரவிபத்து- மகள் முன்னே தாய் மரணம்
கிளி நொச்சியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் மகள் முன்பாக தாயார் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஊந்துருளியில் பயணித்த பொழுது எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன், மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில தாய் பலியானார் ,மகள்
படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டார் ,
குறித்த விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கு பகுதியை மைய படுத்தி வாகன விபத்துக்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது விபத்தாக அல்லது கொலையா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழ்ப்பாணத்தில் மணல் மாபியாக்கள்பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .
இவர்களின் இந்த கொள்ளையை முறியடிக்க தற்போது புதிய வியுயுகம் வகுக்க பட்டு அவர்களுக்கு பொறி வைக்க பட்டுள்ளது
ஆளும் கோத்தபாயாவிற்கு இந்த மணல் கொள்ளையில் ஒரு பங்கு உண்டு,அதாவது கமிஷன் ,
தனது முகவர்களை மட்டுமே அள்ளிட அனுமதிக்கும் இவர்கள் ஏனையவர்களை
செயல் படாது முடக்கும் வகையில் இராணுவம் காவல்துறையினரை வைத்து
புதிய செக்மேட் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்,எதிர் வரும் நாட்களில்
இந்த வெளிப்பாடுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
கண்ணி வெடி தாக்குதல் இந்த விடையதாகி அறிமுக படுத்தி வைக்கிறது
அது தவிர கப்பம் அறவிடும் வேட்டை சூடு பிடித்துள்ளது ,ஆளும் தமிழ் அமைச்சர் ஒருவரே இதன் தளபதியாம் என தகவல் கசிகிறது
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்-மனோ கணேசன்
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்-மனோ கணேசன்
ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்; இன்று நண்பர், அரசியல் சகபாடி ஆறுமுகன் இல்லை!
- கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விட தமுகூ தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள்
இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில்
நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து
வழிமுறைகளிலும் நாம் போராடுகிறோம், சண்டையிடுகிறோம், முரண்படுகிறோம்.
இந்த பின்னணியில் நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள். மறைந்த நண்பர்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி
தோழர்களையும், அனைத்து மக்களையும் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு
, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் தமுகூ தலைவரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரசின் மறுவடிவம். அந்த உறுதியான ஆரம்பமே இன்று ஒரு தொழிற்சங்கமாகவும், அரசியல் கட்சியாகவும் இதொகாவை
நிலைநிறுத்தி இருக்கிறது. இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தில் இருந்தே அதற்குள், நிகழ்ந்து வந்த கோட்பாட்டு முரண்பாடுகள் காரணமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிறந்தது. அந்த
சிந்தனையே இன்று ஜனநாயக மக்கள் முன்னணியாக, இன்று சகோதர கட்சிகளுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிணமித்துள்ளது.
இதொகாவை விட்டு, பலர் பல காரணங்கள காரணமாக பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு
நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.
அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது. இன்னமும் வாழ்ந்து இருக்க வேண்டும். நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க
இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை
விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.
கடந்த வருடம் இதே மே மாத இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று அன்றைய நமது நாட்டு ஜனாதிபதியின்
தூதுக்குழுவில் நாம் இருவரும் பயணித்தோம். அதுவே நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் ஒன்றாய் கலந்துக்கொண்ட இறுதி வெளிநாட்டு நிகழ்வு.
இதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன், 2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இலங்கையின் அனைத்து தமிழ் பேசும்
அரசியல் கட்சி தலைவர்களின் மாநாட்டில் நானும், அவரும் கலந்துக்கொண்டோம்.
இந்நிகழ்வுகளில், நமது மக்களின் நல்வாழ்வு தொடர்புகளிலும், அரசியல் முரண்பாடுகள் மத்தியில் எங்கெங்கே இணைந்து
செயற்படலாம் என்பது பற்றியும், நண்பர் ஆறுமுகமும், நானும் நடத்திய கலந்துரையாடல்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.
2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகள் மாநாட்டில், நண்பர் பெரியசாமி சந்திரசேகரனும் கலந்துக்கொண்டார். இன்று சந்திரசேகரனும் இல்லை. அவரும்
தனது 53 வயதில் இறந்து போய் விட்டார். இன்று நண்பர் ஆறுமுகன் தொண்டமானும் தனது 56 வயதில் இறந்து போய் விட்டார். இந்த
வெறுமை இன்று மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றதை நான் உணருகின்றேன். இந்த சவால்களை நாம் ஒருமுகமாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம்.












