Author: நலன் விரும்பி
கோர விபத்தில் தாய் மகள் பலி
தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த
முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய
மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்
பிரிட்டன் ஒருபகுதி அதிக வெப்பத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில்
பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதி நகர் பகுதி கடும் மழையின் கோரத் தாண்டவத்தால் வெள்ளத்தில் சிக்கியுள்ளது
இந்த வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்துள்ளது
சுமார் இருபது நிமிடங்கள் இடை விடாது பொழிந்த கனமழை காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது


பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
பிரட்டனில் வேகமாக பரவும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மீள் அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டது .
தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வியை தொடக்கி
வைக்க தமது ஆதரவை வழங்கிய நிலையில் திட்டமிட்டபடி பாடசாலைகள்
திறக்க பட்டு கற்றல் செயற்கைகள் ஆரம்பிக்க படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இவரது அறிவிப்பு மாணவர்கள் பெற்றோர்கள் இடத்தில எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கொரனோ நோயானது முழுமையாக கட்டு படுத்த தவறி வரும் அரசு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிட கூறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
வியாபார நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்விதம்
கல்வி சாலைகளை அரசு திறந்திட அடம் பிடித்து வருவதான குற்ற சாட்டுக்கள் மக்கள் மன்றில் முன் வைக்க படுகிறது
28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்
28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு
கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.
அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள்,
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்படும்.
அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள்
கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும்
குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி,
சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய
அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப
தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்
ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள
மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்
காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?
காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?
இலங்கை அளுத்மாவத்தை பகுதியில் காருக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
42 வயது நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்கப் படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது கொலையா ? அல்லது இயற்கையை மரணமா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு
திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு
இலங்கை திருகோணமலை சேருவளை பகுதியில் புத்தர் சிலை அடித்து நொறுக்க பட்டது
மேற்படி சம்பவத்தை புரிந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
அமைதியை குழப்பி இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில்
மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கருத படுகிறது
ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்
ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே
மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை மாத்திரம் நேற்று (09) மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை (8) வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.
பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார்.இவ்வேளை
குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளது.
இவ்வாறு இழுத்தச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின்
உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.
பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது.பின்னர் மீட்கப்பட்ட தலை
கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என சடலமாக மீட்கப்பட்டவரை சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிவானின் உத்தரவிற்காக சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு
அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் ரைவிஸ் கொஸ் அவர்கள்
பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான
லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உடனான சந்திப்பு கடந்த 07ம் திகதி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நல்லுறவு கலந்துரையாடலில் இரு நாடுகளிடையே மேம்படுத்த வேண்டி முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக
கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும்
பங்குதாரர்களின் பங்களிப்பை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பாராட்டினார்.
இந் நல்லெண்ண சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டது.

கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
கட்டார் மற்றும் ஜப்பானில் இருந்து 176 இலங்கையர்கள் இன்று (10) காலை நாட்டிற்கு வந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து 286 இலங்கையர்களுடன் விசேட விமானம் நேற்று இரவு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் நாட்டில் பதிவான கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (09) புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று.
அவர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தவர்., மற்ற இருவர் சேனகபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்த வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2579.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-08-10 11:07:07
2844
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
254
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
2579
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
11
இறப்பு எண்ணிக்கை
இலங்கையில் இன்றைய காலநிலை
இலங்கையில் இன்றைய காலநிலை
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்
மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்
சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான
கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரனோ தாக்குதல் – 1000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரனோ தாக்குதல் – 1000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த அமைத்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க
பட்டுளள்னர்
அதனை தொடர்ந்து வந்த நாட்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாகியுள்ளது
இதனால் 14 நகரங்கள் அடித்து பூட்ட படும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை பட்டுள்ளது
மக்கள் நட மாட்டத்தை குறைக்கும் வகையில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படலாம் என அறிவிக்க படுகிறது
மீளவும் மருத்துவ மனைகளில் மக்கள் அதிகமாக பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டு வருகின்றனர்
பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு
பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு
பாகிஸ்தான் நாட்டில் இடம் பெற்று வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர்
வீடுகள் ,விவாசாய நிலங்கள் என்பன முற்றாகஅழிந்துள்ளன ,வீடுகளுக்குள் வெள்ள நீ ர்புகுந்ததினால் மக்கள் அதிகளாகி தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை
நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை
நையீரியாவின் Koure பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்த்த
மனிதாபிமான பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
பார்க் ஒன்றில் வீற்றிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து மர்ம ஆயுததாரிகள் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினர் ,இதில் ஆறு பிரான்ஸ் நாட்டவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர்
இந்த படுகொலைகளுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்
புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல ஒட்டுக்குழுக்களின் ஒன்றியமாகும் ,தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக சிங்கள
அரசுகளுடன் இணைந்து சகோதர படுகொலை நடத்தி வந்த கூட்டணியாகும்
அவ்விதமான கூட்டணியை பொது மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் நீரோட்டம் கருதி ஒன்றாக இணைத்து
அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என பெயரும் வைத்து ,ஒட்டு குழு தலைவராக விளங்கிய சம்பந்தரை வயது மூப்பு கருதி தலைவராக்கினார்
அதேபோலவே மாவையும் இரண்டாம் நிலையில் வைக்க நியமிக்க பட்டார் ,ஒருமித்து இணைக்க பாட்டுக்கு வந்த அணைத்து காட்சி ளும் ஒன்று சேர்ந்தன
ஆனால் போரின் வலியும் ,தமிழ் தேசிய விடுதலை போரின் பெறுப்புக்கள் தெரியாத சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்க பட்டார்
அதற்கு முன்னர் இருந்த சுரேஷ் பிரேமசந்திரன் பேச்சாளர் பதவியில் இருந்து தூக்கி வீச பட்ட பின்னர் சுமந்திரன்
வருகையுடன் தேர்தல் காலத்தின் பின்னர் ஓவ் வொருவராக அந்த கட்சியில் இருந்து உடைக்க பட்டு புது முகங்களை அறிமுக படுத்த படுகின்றன
இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டவர்கள் .
புலிகள் மன்னித்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என இணைக்க
பட்ட ஒட்டு குழு கட்சிகள் ,சிங்கள பால்குடி சுமந்திரன் ,சம்பத்தரினால் சிங்கள ஆட்சியாளர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் உடைக்க படுகின்றனர்
இவர்கள் தொடர்ந்தும் தாம் செய்யும் அனைத்து கெடுதல்களையும் ஏற்று தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என எண்ணுகின்றனர்
,ஆனால் நிச்சயமாக அதற்கு தகுந்த பதிலடியை இந்த தேர்தலில் மக்கள்வழங்கியுள்ளனர்
சுரேஷ்,கயேந்திரன் ,அனந்தி போன்றவர்கள் இவ்வாறே அந்த கட்சியில் இருந்தும் விரட்ட பட்டனர்
அதே போன்ற செயல்பாடே இப்பொழுது மேற்கொள்ள படுகிறது
இது மிக பெரும் வீழ்ச்சி நோக்கி கூட்டமைப்பு அழைத்து செல்கிறது ,விரைவில் கூட்டமைப்பு உடைந்து காணமல் போகும் முழு நிலையை எட்டியுள்ளது
கோட்டா மகிந்தா சதிகள் இப்பொழுது சுமந்திரன் மூலம் வெற்றிகரமாக நடத்த பட்டு வருகின்றன ,
புலிகளும் இல்லை ,புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லை எனற நிலை இப்பொழுதே தோற்றம் பெற்றுள்ளது
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினால் அது பெரும் சிக்கலில் கூட்டமைப்பை திக்கு முக்காட வைக்கும் ,.அவ்விதமான போராட்டம் இடம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டும் நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர் ,அதனை நான்கே திட்டமிட்டு செய்து முடித்த நாரதர் சுமந்திரனுக்கு
மகிந்த அரசு பல கோடிகள் வழங்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை
கூட்டமைப்பில் ஒரு கருணா, இந்த கள்ளன் சுமந்திரன் ,இந்த வாசகத்தை யாழில் மக்கள் முழங்கினார் ,அந்த காணொளி வைராலகி வருகிறது
மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்
மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக விளங்கிய மாவை அந்த கட்சியின் தலைவராக விளங்கிய பொழுதும் ,தேர்தலில்
தோற்றமையால் அவருக்கு எம்பி பதவியை வழங்காது புதிய ஒருவருக்கு சுமந்திரன் சிபாரிசில்
சம்பந்தர் வழங்கியுள்ளார்
சம்பந்தரும் திருமலையில் தோல்வியடைந்த நிலையில் மீள வாக்குகள் எண்ண பட்டு அதில் 190 வாக்குகள் அதிகரித்த நிலையில் வெற்றியை தக்கவைத்து கொண்டார்
சம்பந்தர் ,சுமந்திரன் கருத்துக்களுக்கு மாவை கடும் கண்டனத்தை தெரிவித்து சுமந்திரன் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு செவ்வி செவ்வியும்வழங்கினார்
அதன் பழிவாங்கல் நோக்குடன் அவருக்கு பதவி வழங்க மறுத்து இவ்வாறு புதியவர் நியமிக்க பட்டுள்ளார்
யாழ்த் தேர்தல் வளாகத்தில் மாவையின் மகனுக்கு இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு சுமந்திரன் காரில் ஏறி தப்பி சென்றார்
,இவ்வாறு தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரனின் தமிழ் தேசிய இழிவு படுத்தும் நகர்வும் ,கூட்டமைப் முற்றாக உடைத்து நாசமாக்கும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவருக்கு நற் சான்றிதழ் வாழங்கி தமது ஊடகங்கள் மற்றும் ,அரசியல் வாதிகள் பைகளை நிரப்பும் முகவராக விளங்குவதால் இவரை தூக்கி வைத்து காவடி ஆடிவருகின்றன
வரும் தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தர் போன்றவரக்ள் முற்றாக மக்களினால் துடைத்து அழிக்க படும் நிலை ஏற்படும் ,அவ்வாறான
ஒரு தோல்வியை சம்பாதிக்க முன்னர் சம்பந்தர் விடை பெற்று விடுவார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
திருமலையில் சம்பத்தார் நான்காவது இடத்தில் அதிக குறைவான வாக்குக்களு 21 ஆயிரம் மட்டுமே பெற்று இருந்தார் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
அதே போலவே சசிகலாவை பின்தள்ளி விட்டு மோசடி வாக்குகள் மூக்கு சுமந்திரன் எம்பியாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது
புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு சிங்கள கூலியும் ,சிங்கள பால் குடியுமான சுமந்திரனால் உருவாக்க பட்டு வருகிறது
இது எதிரணியில் தெரிவானவர்கள் பக்கம் தமிழ் மக்களால் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது ,
தமக்கு தாமே குழி தோண்டி கொள்கிறது கூட்டமைப்பு ,கூட்டமைப்பை அழிக்கும் கொரனோ வைரஸாக சுமந்திரன் விளங்கி வருகிறார் என்பதே வெளிப்படை
- வன்னி மைந்தன் –
196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது
196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான 196உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..
இந்த வர்த்ததமானி அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
196 உறுப்பினர்களையும் 1981 இன் முதலாம் இலக்க நாடாளுமன்ற சட்டத்தின் 62 ஆவது சரத்திற்கு அமைய தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
29 உறுப்பினர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இலங்கையில் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
இலங்கையில் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து
ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.
இதன் கீழ், 200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து
நாட்களும் நடைபெறும். 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.
தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான மாணவர்கள் வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.
திங்கட்கிழமை தரம் ஒன்று மாணவர்களும், செவ்வாய்க்கிழமை தரம் இரண்டு மாணவர்களும், புதன்கிழமை தரம் மூன்று
மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். தரம் நான்கு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.
இதேவேளை, தரம் ஆறு மாணவர்கள் திங்கட்கிழமையும், தரம் ஏழு மாணவர்கள் செவ்வாய்க்கிழமையும், தரம் எட்டு மாணவர்கள் புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரம் ஒன்பது மாணவர்கள் வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். தரம் பத்து முதல் தரம் 13 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும்.
ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமாயின் சகல மாணவர்களும் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்லலாம்.
கொவிட்-19 நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தும் வரை இந்த நடைமுறை
அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.
இதேவேளை நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், தொடர்ந்தும் சகலரும் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில்
பின்பற்ற வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார். விசேடமாக சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு
பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து டோவர் ,மற்றும் கென்ட்
பகுதி ஊடாம் கடந்த மூன்று நாளில் மட்டும் 500 அகதிகள் நுழைந்துள்ளார்
சிறிய படகுகளை பாவித்து இவர்கள் இந்த நாட்டிற்குள் கடல்வழியாக நுழைந்துள்ளனர்
மேற்படி சமபவம் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சியையோ ஏற்படுத்தியுள்ளது
நேற்று மட்டும் சுமார் 151 பேர் நுழைந்துள்ளார்
இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் அனைவரும் கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகள் இவ்விதம் ஐரோப்பிய
நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் ,அந்த நாடுகளில் இராணுவ
ஆக்கிரமிப்பை மேற்கொள்வது இந்த ஐரோப்பிய நாடுகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது
இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?
இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?
டுபாயில் இருந்து 188 பேரை காவிய படி இந்தியா கேரளாவில் உள்ள மிக அபயம் நிறைந்த விமான நிலையம் நோக்கி எயார் இந்தியாவின் Boeing 737 பறந்து தரை இறங்கியது
மேசை வடிவில் உள்ள மேற்படி விமான நிலையத்தின் ஓடு பாதை மிகவும் அபாயம் நிறைந்த ஒன்றாக எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் விமானம் இரண்டாவது முறை வானில் ஏறி சுற்றி தரை இறங்கியது
குறுகிய தூரம் கொண்ட ஓடுபாதையில் விமானிகள் இடை நடுவில் விமானத்தை இறக்கியதால் ஓடுபாதை அரசிவசி கடந்து இறங்கியது
இவ்வேளை அதிகமாக விமானத்தின் பிரேக்கை அழுத்தி பிடித்ததினால் விமானம் குலுங்குகி ஓடுபாதை முடிவில் உள்ள மலை பள்ளதாக்கில் முன்பகுதி உடைந்து வீழ்ந்து நொறுங்கியது
பின்பகுதி அப்படியே ஓடுபாதையில் மிஞ்சியது
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 28 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
விமானத்தின் இரு விமானிகளும் இறந்து விட்டனர் ,மேற்படி விமான விபத்து
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விமானி ஒருவரது மனைவிக்கு
பிள்ளை பிறக்க உள்ள நிலையில் கணவன் இறந்துள்ள செயல் அந்த குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதே போல பிரதான தலைமை விமானிக்கு அவரது தயார் பிறந்த நாளுக்கு
செல்ல இருந்த நிலையில் அவரும் இறந்து விட்டார் என மனதை உருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன
கறுப்பு பெட்டியை மீட்க பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகிறது இதில் மறைந்து கிடைக்கும் விடயங்கள் வெளிப்படுத்த
பட்டு நேர்மையான விசாரணைகள் இடம்பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி
பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி
உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசில் நாட்டில் ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்
அமெரிக்காவில் இதுவரை 160ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை உலகம் தழுவிய நிலையில் கடந்துள்ளது
தொடந்து இந்த நோயானது வேகமான மீது பரவும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது








