28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

Spread the love

28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு

கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள்,

நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்படும்.

அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள்

கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும்

குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி,

சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய

அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப

தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்

ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள

மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்

      Leave a Reply