Posted in இலங்கை செய்திகள்

கட்சியில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர்

கட்சியில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர்

ஜாதிக எல உறுமயவின் பொதுச்செயலாளராக இருந்த நாடாளுமன்ற

உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அப்பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்து இன்று (12) விலகியுள்ளார்.

இந்த திடீர் விலகல் கோட்டா கட்சியில் இணைய உள்ளதான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறன்றன

Posted in இலங்கை செய்திகள்

சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து

சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து

சுகாதார விதிமுறைகளை மீறிய 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ்

வண்டிகளின் போக்குவரத்து அனுமதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்துகளில் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று பயணம்

செய்வதற்கும் சுகாதாரத்துறை அனுமதியளித்ததுடன் பஸ் கட்டணங்களை மீண்டும் முந்திய நிலைக்கு கொண்டு வர

நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா

மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்

தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு புது நியமனம் ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராகவே மஹிந்த

தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in இலங்கை செய்திகள்

வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி

வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி

பூநகரி தெளிக்கரை கிராமரத்தில், வீதியின் குறுக்கே வெட்டுப்பட்டுள்ள வாய்க்கால் காரணமாக தாம் போக்குவரத்துச்

செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பெய்த மழைக் காரணமாக வீதியில் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்றுவதற்காக, பொதுமக்கள் நாளாந்தம்

பயன்படுத்தும் வீதியின் குறுக்கே, கனரக வாகனம் கொண்டு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாய்க்கால் மூடப்படாததால் தாம் போக்குவரத்துச் செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில், பூநகரி பிரதேசசபையின் செயலாளரை தொடர்பு கொண்டுகேட்டபோது, வெள்ளநீரை கடத்துவதற்காக வாய்க்கால்

வெட்டப்பட்டது என்றும் எனவே, நீர் வடிந்தோடியதும் வாய்க்கால் மீண்டும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்

வாய்க்கால்
வாய்க்கால்
Posted in இலங்கை செய்திகள்

42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு

42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு

கண்டி நகரில் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும்

திறக்கப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இன்று (11) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் டிரினிட்டி கல்லூரி, கலைமகள் கல்லூரி மற்றும் தக்‌ஷிலா

கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா

பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா

நாவலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் ஆண்டில்

கல்வி கற்று வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலபிட்டிய நகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில்

இருந்த ஒருவரின் மகளே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மாணவி பெனிதெனிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த 4 ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய தாய் ஒருவருக்கு

ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததன் காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சை முறைப்படி பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 170 கர்ப்பிணி பெண்களுக்கு

அதிகமானவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது

பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர

போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், ‘எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப்

பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும். அதனோடு மேலும் பல பிரச்சினைகளை கோர்த்து விடுவதும் இவர்களது வரலாற்று செயற்பாடுகளாகவே தொடர்கின்றன.

புரெவி புயல் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகளின் பிறவிக் குணங்களில் எவ்வித மாற்றமும்

இல்லை. ஆயிரம் புரெவிகள் வந்தாலும் இவர்களது பிறவிக் குணங்கள் மாறுமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது

மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது பாராளுமன்றத்தைப்

பிரதிநிதித்துவப் படுத்தியவர்களை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை. புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலே இருந்தார்கள்.

இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் – எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில்

ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு அன்றாட – அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும்

கத்தோலிக்க மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பகிரங்க அழைப்பினை விடுப்பதாவும் இறுதி யுத்த காலத்தில் அதனை புறக்கணித்தது போன்று, எமது

மக்களின் நலன்கருதிய இந்த அழைப்பையும் சுய இலாபங்களுக்காக கோட்டைவிட்டு விடாது, கைகோர்த்து வரும்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள் குவிகின்றன
:

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை

தொடுத்து உள்ளனர். ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ‘பேஸ்புக்’ நிறுவனம் ஈடுபடுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து

பரிசீலிக்குமாறு அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ‘பேஸ்புக்’ நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்.டி.சி.) எங்கள்

கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது. பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை

மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ராக்கெட்

வெடித்து சிதறிய ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக தயாரித்துள்ள பிரமாண்ட ராக்கெட்டான

ஸ்டார்ஷிப் வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு – வெடித்து சிதறிய ராக்கெட்

அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப்

ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

ஆனால் தனது சில நிமிட பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகையில், இந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறில் வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்து எரிந்தது.

இது செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு ஆகும்

Posted in இலங்கை செய்திகள்

நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு

நடிகை சித்திரா தற்கொலை – சடலம் ஒப்படைப்பு

பிரபல சின்னத்திரை நடிகை சித்திரா மரணத்தின் சந்தேகங்கள் உள்ளதாக

தெரிவிக்க பட்டு வந்த நிலையில்
இரு மருத்துவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற மரண

பரிசோதனையில் இவர் தற்கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது

படுகொலை என தெரிவிக்க பட்ட பொழுதும் மரண பரிசோதனை அறிக்கை இவ்விதம் தெரிவித்துள்ளது

தற்போது சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்

எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது

இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராடடத்தி ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும் சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து

தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவில் சற்று முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்து இருப்பதோடு

போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள உறவுகள் தொடர்போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மனித உரிமைகள்

நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே போன்ற வாசகங்கள்

எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் நீதி வேண்டும் போன்ற கோஷங்களை

எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்

இலங்கை நீதி துறையில் நம்பிக்கையில்லை – சூத்து மாத்து சுமந்திரன்

இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்

நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி

நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (09)

கலந்துகொண்டு உரையாற்றும் போதேஇ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்துரைத்த சுமந்திரன் எம்.பி, ‘இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதைஇ ஆட்சி

செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன’ என்றார்.

‘நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள்இ வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது. அண்மைக் காலமாக,

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர், டுவிட்டர் மூலமாக கருத்துகளைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.

‘சிறைச்சாலைகளில், 1983, 2000 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த

விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

‘திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,

சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட

சம்பவம் ஆகியவற்றுக்கு, இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?
‘நாட்டில் மோசமான, சர்வதேசக் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே, சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம்.

அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது’ என்று, அவர் மேலும் கூறினார்

Posted in இலங்கை செய்திகள்

போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

இச்சம்பவம், அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதுடன்,

சம்பவத்தில் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞன், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு கான்ஸ்டபிள் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற

வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள்

ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்

மகன் ,தந்தையின் தேர்தல் பரப்புரையில் பொழுது நிதி கையாடல்

புரிந்தார் என்ற குற்ற சாட்டில் அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

தனது பதவி முடிந்து வெள்ளை மாளிகையை விட்டு செல்ல முன் புதிய ஜனாதிபதியை பழிவாங்கும் நகர்வில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்

என்ற கருத்து இதன் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி
சித்ரா


தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர்

சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு

ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

சித்ரா
சித்ரா
Posted in உலக செய்திகள்

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு சாதனை

அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை

கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில்

மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, காகித அடிப்படையிலானது.

கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும்

பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது.

இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆண்டில் இந்தியா ரூ.25,500 கோடி ஆயுதங்கள் கொள்முதல்

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடப்பு 2020-ம் ஆண்டில், அதாவது டிரம்ப் ஆட்சியின் கடைசி ஆண்டில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற

விவரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டிஎஸ்சிஏ) வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

  • 2019-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்த விற்பனை 50.8
  • பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4
  • பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. அதுவும் 2019-ம் ஆண்டில் இந்தியா
  • வெறும் 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.46.5 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்கி உள்ளது.
  • இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ, 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை இந்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. கடந்த
  • ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) ஆயுதங்களை மட்டுமே இந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது.
  • 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல நாடுகள் 2020-ம் ஆண்டு
  • அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே வாங்கி உள்ளன. சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த கொரனோ நோயானது தற்போது குறைந்து வருகிறது

இதற்கும் கரணம் இந்த நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்

பணியில் புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டு அது மக்கள் பாவனைக்கு விட பட்டது

இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

முன் கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ஐநாவில் விரைவில் தண்டிக்க படும் -சவால் விடும் அமைப்பு

இலங்கை ஐநாவில் விரைவில் தண்டிக்க படும் -சவால் விடும் அமைப்பு

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும்,

தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால்

முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில் Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.

டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை tgte.tv
TGTE TV
The Transnational Government of Tamil Eelam. TV Channel
tgte.tv
வலைக்காட்சியூடாகவும், FB: @tgtealaigal2020, Youtube : @ALAIGAL WAVES ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் காணமுடியும்.

சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப்

பெற்றுத்தரும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்னராக இந்நாள் தொடர்பில் குறிப்பிட்டிருந்ததோடு,

தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு, தமிழர்களுக்கான பிரகாரநீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட

வேண்டும் எனவும் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.