Posted in இலங்கை செய்திகள்

சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !

சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !


சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது. நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல்

உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,

இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்

களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்

மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள் முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள்

மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு. இதனை நோக்கிய

ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தின் முழுமை பின்வருமாறு :

சிங்கள பேரினவாதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசம், தனது தேசப்புதல்வர்களை நினைவேந்துவதில் சிறிலங்கா அரசின் பெரும் சவால்களை இவ் வருடம்

எதிர்கொண்டிருக்கிறது. தனது காவல்துறையினையும் நீதிமன்றங்களையும் பயன்படுத்தி மக்கள் தமது

வீரப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்குச் சிறிலங்கா அரசு தடைவிதித்திருக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்தினை இனவழிப்புக்குள்ளாக்கும் சிங்கள இனவாத அரசின் இச் செயல் வியப்புக்குரியதொன்றல்ல.

எதிர்பார்க்கப்டாததொன்றுமல்ல. ஆனால் இத் தடையினை ஒரு அரசியல் முடிவாகக் காட்டாது சட்டம் ஒழுங்கு விடயம் போல காட்டுவதற்கு சிறிலங்கா அரசு முற்பட்டுள்ளது. கொரோனா

உலகப்பெருந்தொற்றுச் சூழலையும் சிறிலங்கா அரசு இவ் விடயத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது.

தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமை. அவர்களது ஜனநாயக உரிமை. அடிப்படையானதொரு மனித உரிமை. உலகளாவிய மக்கள் தங்கள்

தேசங்களின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினைக் கொண்டிருப்பது போல தமிழீழ மக்கள் இந்த உரிமையினைத் தம்;வசம் கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்

தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு மாவீரர்களை நினைவுகூர்வதற்கு விதிக்கும் தடைகள் அப்பட்டமான ஜனநாயக மனிதவுரிமை மீறலாகும்.

ஈழத்தமிழர் தேசம் சிறிலங்கா இனவாத அரசின் இத் தடைகளை உடைப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இதனை ஒரு நீதிமன்ற விடயமாகச் சுருக்கிக் கொள்ளக்கூடாது. நீதிமன்றங்களை

அரசியல் நியாயங்களை வெளிப்படுத்துவற்கான களங்களாகப் பயன்படுத்துவது வேறு. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவற்கான அனுமதியினை நீதிமன்றங்களிடம் வாதாடி

வென்று விடலாம் என நம்புவது வேறு. சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது.

நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,

இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்

களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்.

சிங்கள அரச கட்டமைப்புக்கள் மாவீரர் நாளுக்கென விதித்த தடைகளுக்கு எதிராக ஒன்றுகூடிய தமிழர் தேசியகட்சிகள், மக்களை வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு விளக்கேற்றுங்கள் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். குறைந்தபட்சம் மக்களைத்

தத்தமது வீடுகளுக்குள் ஒதுங்கிக் கொள்ளாது வீட்டு வாசல்களிலும் மதில்களிலும் தீபங்களை ஏற்றுங்கள் என அறைகூவல் விடுத்து தமிழீழ தேசத்தைத் தீபங்களால் ஒளிரச் செய்திருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புக்குள்ளாகி நிற்கும் நமது மக்களை ஆக்கிரமிப்பாளர்களை மூர்க்கத்துடன் எதிர்க்கும் போர்க்குணம்

கொண்டவர்களாக மாற்றும் சக்தி மாவீரர்களது மூச்சுக்கு உண்டு என்பதனை நமது அரசியற் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள்

முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள் மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு.

இதனை நோக்கிய ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கணவன் மனைவி மீது கத்திகுத்து தாக்குதல்

கணவன் மனைவி மீது கத்திகுத்து தாக்குதல்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தலை மறைவாகியிருந்த கணவனை

நேற்று (08) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு, புளியடிதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் திருமணம்

முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன்போது, கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் கணவன் தாபரிப்பு பணம் செலுத்துமாறு நீதிமன்றம் கடட்ளையிட்டது.

இந்த நிலையில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் மனைவிக்கு மாதாந்த தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்து வந்த கணவனான

செந்தூரன் என்பவருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த 40 வயதுடைய செந்தூரன். சம்பவ தினமான திங்கட்கிழமை (07) அதிகாலை மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சமையல்

அறைப்பகுதிக்கு இழுத்துச் சென்று அவரின் முதுகில் இரு கத்திகளால் 13 முறை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.சி.எம்..முஸ்தப்பா தலைமையிலான பொலிசார் தப்பிஒடி தலைமறைவாகிய செந்தூரனை தேடும் நடவடிக்கையில்

ஈடுபட்ட நிலையில். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவரை மட்டக்களப்பு நகரில் வைத்து நேற்று (08) மாலையில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 66 அதிகாரிகள் உட்பட மொத்தம் 1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி

உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.

´சிலோன் ரோயல் நெவ்´ என்ற பெயரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இலங்கை கடற்படை இந்நாட்டில் நிறுவப்பட்டது.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது கடற்படை சமுத்திர பாதுகாப்பிற்காகவும் கடல் ஊடாக இந்நாட்டிற்கு ஏற்படும்

அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும் பாரிய அளவான பங்களிப்பினை வழங்கிய கடற்படை தற்போது நில கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலுக்கு முன் உள்ள கடல் பரப்பில் இடம்பெறவுளளமை குறிப்பிடத்தக்கது.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல்போன வெளிநாட்டவர் சடலமாக மீட்பு

காணாமல்போன வெளிநாட்டவர் சடலமாக மீட்பு

காலி, ரத்கம பகுதியில் தியானம் செய்யும் போது காணாமல் போன வெளிநாட்டு

துறவியின் சடலம் ரத்கம கலப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த துறவி காணமல்

போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பனி மூட்டம்- மக்கள் அவதி

வவுனியாவில் பனி மூட்டம்-மக்கள் அவதி

வவுனியாவில் இன்று (09) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன்

காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும் நிலையில் தற்போது வவுனியாவிலும் உணரப்பட்டுள்ளது.

பனி
பனி
Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை

கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை

கண்டி நகரில் இருந்து நுவரெலியா வரையில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஆய்வுகள்

மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார். பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளை

போன்று பிரதேச சிறிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மாகும்புர நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு

செல்வதற்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

ன்மூலம் வெளியிடங்களில் இருந்து கொழும்பு செல்லும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது இதன் நோக்கமாகும்.

இந்த வேலை திட்டத்திற்காக தனியார் துறையின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. கிராமிய வீதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவையும் சித்தரிக்கப்படவுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 200 பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் காமினி லொகுகே மேலும் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவில் குவிக்க படும் துருக்கிய இராணுவ வாகனம்

வடக்கு சிரியாவில் குவிக்க படும் துருக்கிய இராணுவ வாகனம்

வடக்கு சிரியா பகுதியில் துருக்கிய இராணுவம் மேலதிகமாக இராணுவ

வாகனங்களை ,மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது
,விரைவில்

சிரியா பகுதியில் இருந்து நாம் விலகுவோம் என அறிவித்த

நிலையில் மேற்படி ஆயுத குவிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இந்த செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் மேலும் போர் வெறியை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

துருக்கிய இராணுவ
துருக்கிய இராணுவ
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு

அவுஸ்ரேலியா தெற்கு மெல்போர்ன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாககி

சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,சப்பவ இடத்திற்கு விரைந்து

வந்த பொலிஸ் காயாமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் இணைத்தனர்

குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது

அவுஸ்ரேலியாவில்
அவுஸ்ரேலியாவில்
Posted in உலக செய்திகள்

ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

அமெரிக்காவில் இடம்பெற்ற தொலைக்காட்சி லொத்தரியில் ஓரே

தடைவியில் ஐம்பது பேர் வென்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது

குறித்த தொகையானது அந்த ஐம்பது பேருக்கும் பிரித்து கொடுக்க பட்டுள்ளது ,
இவ்விதம் இதுவே முதன் முதலாக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா
நடராஜன் கையில் தொடர் நாயகன் கோப்பையை வழங்கிய

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. கான்பெர்ராவில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 11

ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.

இதற்கிடையே, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில்

நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள்

எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் வேட் 80 ரன்னும், மேக்ஸ்வெல் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

அதிரடியாக ஆடிய விராட் கோலி 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை

அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர் தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Posted in இலங்கை செய்திகள்

கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா

கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த

நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால்

சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.

சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,


‘முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின்

அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது.

எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.’ எனக் கேட்டுக்கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்

அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின்

சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.

படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின்

படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.

நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்

புயலினால் சேதமான நெடுந்தீவு - படகுகள் சேதம்
புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைபிரிவின் 521 வது பிரிகேட்டின் 11 விஜயபாகு காலாட் படை

படையினர் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி வல்வெட்டித்துறையில் சூறாவளி மற்றும் பாதகமான காலநிலை காரணமாக

பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த

சமைத்த உணவு விநியோகிப்பதை 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிதசிரி லியானகே மேற்பார்வை செய்தார்.

521 வது பிரிகேட் தளபதி கர்ணல் மஹேன் சல்வதுர, 11 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட்

கேணல் கீத் முனகமகே, அதிகாரிகள் மற்றும் படையினர் அவர்களின் அவசர தேவைகள் குறித்து விசாரித்தனர்.

இராணுவம்
இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்

வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில்

எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த

அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே

படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்

64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்

முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல்

நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல்
தனிமைப்படுத்தல்
Posted in உலக செய்திகள்

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்று தொடர்பாக

போலியாக இரத்த பரிசோதனை நடத்தி ,அதன் முடிவுகளை அறிவித்து

பணம் சம்பாதித்து வாட்ச் இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே

மேற்படி நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

அமெரிக்கா ஹாரோலினா பகுதியில் காதலியை காதலன் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் போட்ட சத்தத்தில் அயலவர்கள்

விரைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விரைந்த வந்த

போலீசார் பலத்த காயத்தில் இருந்த அவரை மீட்ட பொழுதும் சம்பவ இடத்தில அவர் பலியானர்

காதலன் கொலை குற்ற சாட்டில் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இவருக்கு

குழந்தை உள்ளது ,இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராரே இந்த கொலையில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Posted in உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி…. சோகத்தில் திரையுலகினர்
திவ்யா பட்நாகர்
இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா

கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த

வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில

தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு

பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Posted in உலக செய்திகள்

கரடி தாக்கி 4 பேர் பலி

கரடி தாக்கி 4 பேர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்

சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்குதல்

சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம்

காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.

இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன்

எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர

சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா

நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா

நாட்டில் நேற்று 648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 451 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்பு டையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், என்றும் ஏனைய 197 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.