Tag: வாய்க்கால்
Posted in இலங்கை செய்திகள்
வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி
Author: நலன் விரும்பி Published Date: 11/12/2020 Leave a Comment on வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி
வீதியின் குறுக்கே வாய்க்கால்; மக்கள் அவதி
பூநகரி தெளிக்கரை கிராமரத்தில், வீதியின் குறுக்கே வெட்டுப்பட்டுள்ள வாய்க்கால் காரணமாக தாம் போக்குவரத்துச்
செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பெய்த மழைக் காரணமாக வீதியில் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்றுவதற்காக, பொதுமக்கள் நாளாந்தம்
பயன்படுத்தும் வீதியின் குறுக்கே, கனரக வாகனம் கொண்டு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாய்க்கால் மூடப்படாததால் தாம் போக்குவரத்துச் செய்வதில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், பூநகரி பிரதேசசபையின் செயலாளரை தொடர்பு கொண்டுகேட்டபோது, வெள்ளநீரை கடத்துவதற்காக வாய்க்கால்
வெட்டப்பட்டது என்றும் எனவே, நீர் வடிந்தோடியதும் வாய்க்கால் மீண்டும் மூடப்படும் என்றும் தெரிவித்தார்







