Author: நலன் விரும்பி
மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்
மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள்
மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டார் விமான சேவை, எமிரேட்ஸ் – துருக்கி விமான சேவை, குவைட் விமான சேவை, உக்ரைன் விமான நிறுவனம், ஓமான் விமான நிறுவனம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் 2019 – 2020 காலப்பகுதியில் 35 விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்
வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்
மீண்டும் நாட்டில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று (08) மாத்திரம் விபத்துகளால் 13 மரணங்கள் நாட்டில் பதிவானதாக கூறிய அவர், அதில் 7 மரணங்கள் 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஏனைய 6 மரணங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களால் காயமடைந்த நிலையில் நேற்று சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் பாதசாரிகள் என்றும், 4 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், சாரதிகள் இருவர் மற்றும் பயணி ஒருவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது
புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.
இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக்
கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த-மூன்று மீனவர்களை காணவில்லை
மூன்று மீனவர்களை காணவில்லை
கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப
வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம்
(வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது
98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது
98 கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டுக்கு உரிமையானவர் களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி
வைப்பதற்கு குறித்த நபர்கள் முயன்று உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்
வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன்,
பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்று (07) வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் குறித்த சம்பவம்
தொடர்பில் இருவர் இன்று (08 ) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?
யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?
யாழ்ப்பாணத்தில் திடீரென கொரனோ நோயானது அதிகரித்துள்ளதாக வடமாகாண சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார்
சீனாவுக்கு வடக்கின் மூன்று தீவுகளை வழங்கிய பின்னர் இவ்விதமான விடயங்களை சமீப
நாட்களில் சிங்கள பவுத்த அடக்குமுறை அரசு பரப்பி வருகிறது
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது
136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது
இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்
வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது
பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்த வாலிபன் ஒருவ
ர் யாழில் கைது செய்யப் பட்டுளளார்
இவ்வாறு கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,
மேற்படி வாலிபனை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்
மகிந்த விமான நிலையத்தால் 445.3 மில்லியன் இலாபமாம்
மகிந்தவின் ஆட்சியில் நிறுவப்பட்ட மகிந்தவின் பெயர் கொண்ட விமான நிலையத்தால் கடந்த
வருடம் மட்டும் சுமார் 453 மில்லியன் ரூபாய்கள் இலாபம் கிடைத்துள்ளதாக உல்லாசத்துறை
அமைச்சர் ,உல்லாசமாக தெரிவித்துள்ளார்
மைத்திரியின் ஆட்சியில் குறித்த விமான நிலையத்தால் வருமானம் இல்லை என கூறி அதனை
மூடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?
தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?
இலங்கை புறக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை புரியும் கடையில் திடீரென தீ பரவல்
ஏற்பட்டுள்ளது ,இதனால அந்தக் கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது
இந்த தீ பரவுக்குக்குரிய காரணம் உடனடியாகா தெரியவாவில்லை விசாரணைகள் தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
இலங்கை தலைநகர் கொலும்பை அண்மித்த கல்கிஸை காலி வீதியில் வீடொன்றுக்கு அருகில் இருபத்தி
இரண்டு வயது வாலிபன் ஒருவர் கழுத்து வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இது படுகொலை
என தெரிவிக்க படுகிறது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கோட்டா ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் இவ்வாறான மர்ம கொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே கவனிக்க தக்கது
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்
அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,
இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு
பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் – பீதியில் மக்கள்
இலங்கை மாத்தறை பகுதியில் மின்னல் தாக்கி முப்பத்தி நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர்
மரணமாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இறந்தவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க
பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
பாடசாலைகளுக்கு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இணைக்க கல்வி அமைச்சர் உத்தரவு
பாடசாலைகளுக்கு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இணைக்க கல்வி அமைச்சர் உத்தரவு
இலங்கையில் தேசிய அளவில் பாட சாலைகளுக்கு பட்ட படிப்பை முடித்து காத்திருக்கும்
ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளதாக இலங்கை கல்வி அமைச்சர் பீரீஸ் தெரிவித்துள்ளார்
இந்த நியமனம் எதிர்வரும் ஆண்டுக்குள் பூர்த்தி அடைந்து ,பாடசாலைகளில் ஆசிரியர்
பற்றாக்குறை தீர்க்க படும் என அவர் முழங்கியுள்ளார்
கொரனோ அச்சம் -இலங்கையில் 10,236 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
கொரனோ அச்சம் -இலங்கையில் 10,236 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இதுவரை 101
தனிமை படுத்தல் முகாம்களில் சுமார் 10.236 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்ட அனைவரையும் சிங்கள இராணுவமே பராமரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
யாழில் திருட ப்பட்ட 50 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மீட்பு
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டு
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண பாலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ. நெவில்பியந்த
தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஸ் ஓட்டியசிறுவன் கைது
பஸ் ஓட்டியசிறுவன் கைது
செல்லுப்படியாகும் உரிமம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை, தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின்
உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு, குறைந்தது 6 மாத காலம் தேவையென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சரான ஜி.எல். பீரிஸ், குழப்பகரமான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. சிறந்த தீர்வு கண்டதன் பின்னரே நடத்தப்படும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலில் எல்லை நிர்ணய பிரச்சினை பிரதானமாக கருதப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எல்லை நிர்ணய குழுவினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர்,மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
“தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக மாகாண சபை தேர்தலில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியது.
2017 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக பிறிதொரு தேர்தல் முறைமை அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை” என்றார்.
உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என தெரிவித்த அவர், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவோமென நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாற்றதாக உள்ளது என்றார்.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு சாதகமாக அமையவில்லை. 2020ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த
பொதுத்தேர்தலிலும் இத்தன்மை காணப்படுகிறது. விருப்பு வாக்குமுறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் மாத்திரமல்ல, அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, குறைப்பாடுகளுக்குத் தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து
அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 15 பேரை கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.







