Author: நலன் விரும்பி
விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது
விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306
பேரும் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பில் 518 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நயாழில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளை
நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீடு புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக்
கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது. அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை
மேற்கொண்டுள்ளார்.
யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை
மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல் வீரவன்ச
நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு
தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன்இ ஒற்றையாட்சி முறைமையின் கீழான அம்சங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றார்.
அநுராதபுரம்- சல்காது பிரதேசத்தில், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’ உற்பத்தி பொருள்கள் அடங்கிய கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘ஜெனீவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனீவா விவகாரத்தை
அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்றார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சியென எதிர்தரப்பினர், பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள். ரஞ்சனின்
வெற்றிடத்துக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறை
செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை
எதிர்த்தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவரது விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது என்றார்
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

காராச்சில் சிறுவன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்
மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மெதிரிகிரிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தமித் இந்துசர என் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தில் ட்ரக்டர் வாகனமொன்றை கழுவிக்
கொண்டிருந்த போது இன்று (11) மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு
1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு
சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 105 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக ´பாபரா´ என்ற கப்பல் நாளை (13) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நுகர்வோர் விவகாக அதிகார சபையினால் சந்தையில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வகத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.
இவற்றில் 109 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் இல்லாதது கண்டறியப்பட்டது.
மேலும் 10 மாதிரிகளில் அதிகபட்ச சாத்தியமான அளவை விட குறைவான அஃப்லாடொக்சின் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, மேலும் 06 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் அதிகபட்ச அளவை விட அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உணவுச் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளின்படி மாதிரிகள் எதுவும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என கூறப்படாததால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் கவலையடையத் தேவையில்லை என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் பிரச்சினை தொடர்பாக இலங்கை பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்
திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்
கொழும்பில் இருந்து சம்மாந்துறையில் உள்ள திருமண நிகழ்வு ஒன்றுக்கு கலந்து கொள்ளும்
முகமாக வான் ஒன்றில் பயணித்த இருவருக்கு எதிர்பாராத விடயம் இடம்பெற்றுள்ளது
கொழும்பு பிரதான வீதி வழியாக பயணித்து கொண்டிருந்த பொழுது கடவத்த பகுதியில் வானின் டயர் வெடித்து சிதறியுள்ளது
இவ்வேளை சாரதியின் கட்டு பாட்டை இழந்த வான் வயல் ஒன்றுக்குள் கவிழ்ந்தது ,இதில் ஒருவர்
பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார் ,வான் பலத்த சேதமடைந்துள்ளது

கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்
கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்
இலங்கை அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
அவ்வழியால் சென்றவர்கள் தூர் நாற்றம் வீசுவதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் சடலம்
மீட்க பட்டுள்ளது
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
,கோட்டா ஆட்சியில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகிந்தாவுக்கு இடையில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு ஒன்று
இடம்பெற்றுள்ளது ,இதன் போது இன்றைய சமகால நிகழ்வுகள் மற்றும் முக்கிய விடயங்கள்
தொடர்பாக பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காட்டி கொடுத்து ஆட்சியை பிடித்து அதிகாரத்தில் சுற்றி திரிந்த இவர் இன்று இவ்விதம்
கூட்டிணைந்து செயல்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்
காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்
வாதுவ பிரதேச பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்
.இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 57 வயதுடைய நபர் எனவும் ,இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது
என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்
இலங்கை விமானப்படையை சேர்ந்த ரோசன் அபேசுந்தர என்பவர் பாக்கு நீரிணையி நீந்தி கடந்து சென்று சாதனை படைத்துள்ளார் .
பாக்குநீரிணையை நீந்தி கடந்து செல்ல சுமார் 28 மணிநேரமும் 19 நிமிடங்கள் பிடித்து சாதனை
தலைமன்னாரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர் அங்கே மீண்டும் திரும்பி வந்து
சாதனையை படைத்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்
இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்
இலங்கையில் பொலித்தீன் ,மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் புதிய
சட்டம் ஒன்று ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்த பட்டு வருகிறது ,
சுற்று புற சூழல் மற்றும் உயிரினங்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த கவனம் செலுத்த
பட்டு வருவதாக அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது
லண்டனில் தமிழர் சந்தை – அசத்தும் தமிழர் – சீமானுக்கு என் ஒட்டு வீடியோ
லண்டனில் தமிழர் அசத்தும் – சத்தும் தமிழர் – வீடியோ
லண்டனில் அகதியாக வந்த தமிழர்கள் அசத்தும் அளப்பெரும் சாதனைகளில் இவையும் ஒன்று
,வர்த்தகரீதியில் பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் கொடி கட்டி பறக்கின்றனர்
அவ்விதமான காட்சி பதிவு இது,
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல் video
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல்
இலங்கையில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை வழங்கி இலங்கையை சிங்கப்பூராக மாற்றி
செல்ல வேண்டிய சூழலை மறந்து தற்போது இனவாதத்தை கக்கி தமது வாக்கு பெறும் நகர்வுகளை
நோக்கி செல்கின்றார்கள் ,தமிழர்களின் அடிப்படை அரசியலை புரிந்து கொள்ள ஆளும் சிங்கள அரசுகள் மறந்து வருகின்றன
இந்த தவறான பார்வை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ,சமத்துவம் ,ஒற்றுமை என்பது
தவறி செல்கிறது ,இதனால் தமிழர்கள் தோற்று போனார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பித்து கொண்டது ,ஆயினும் அதனை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தி இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட வேண்டும் எனவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
கூட்டமைப்பின் கடத்தி கொடுப்பு ,மற்றும் உள்ள அடி தடிகள் என்பனவற்றையும் இடித்துரைக்கின்றார்
பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது
பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது
இலங்கையில் எதிர்வரும் தமிழ் சிங்களபுத்தாண்டை முன்னிட்டு 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் பொழுது பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
போதையில் வண்டி செலுத்தி சென்ற சாரதிகள் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,அவர்கள்பயணித்த
வண்டிகளும் பறிக்க பட்டுள்ளது ,இவ்விதமான சாரதிகளினால் தான் வீதி விபத்து ஏற்படுவதாக குற்றம் சுமத்த பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
மனைவியை அடித்து கொன்று கட்டிலுக்குள் மறைத்து வைத்திருந்த கணவன் கைது செய்யப் பட்டுளளார் ,
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தை அடுத்து கணவன் மனைவியை அடித்து
கொன்று தாம் உறங்கிய கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்திருந்துள்ளார்
அதன் பின்னர் சாக்கு ஒன்றில் உடலை கட்டி புறநகர் பகுதியில் வீசி விட்டு வருவதற்கு தயாராகி
கொண்டிருந்த வேளையில் அவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு கொலை செய்ய பட்ட மனைவி 29 வயதுடையவர் எனவும் கணவனுக்கு 35 வயது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு
புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு
இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசினால் ஐந்தாயிரம் ரூபா வழங்க பட உள்ளது
சில எம்பிக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி வழங்க படவுகள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,தமிழகத்தை போன்று பணத்தை வழங்கி வாக்கினை அள்ளி செல்லும் புதிய அரசியல்
கலாச்சாரத்தை ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் ஆரம்பித்து வைக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது
கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்
கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்
யாழ்ப்பாணம் கடலில் மிதந்துந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய நபர்
ஒருவர் அவ்விடத்திலேயே சுருண்டுவீழ்ந்து மரணமாகியுள்ளார்
மரணமானவர் 47 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது
குடிபானம் என நினைத்து அதனை அருந்திய நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் ,சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
உளவுத்துறை டிரக்ட்டர் திடீர் மாற்றம் -கோட்டா அதிரடி
உளவுத்துறை டிரக்ட்டர் திடீர் மாற்றம் -கோட்டா அதிரடி
இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியில் இராணுவ படைத்துறை கட்டுமானங்களில் திடீர் இட மாற்றங்கள்
இடம் பெற்று வருகிறது அவ்விதம் தற்போது குற்ற தடுப்பு பிரிவின் செயல் பாட்டு தலைமை அதிகாரியாக பணியாற்றி
வந்தவர காவல்துறை தலைமையக குற்ற பிரிவிற்கு நியமிக்க பட்டு ,இவரது இவ்விடத்திற்கு SSP
Rohan Premaratne நியமிக்க பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
புலி வருகுது புலி வருகுது – எழுச்சி கொள்ளும் தமிழ் தேசம் – video
புலி வருகுது புலி வருகுது – பீதி கிளப்பும் சிங்களம் – வீடியோ மேயர் மணிவண்ணன்
இலங்கை தமிழர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அவர்களை வழி நடத்துகின்ற அரசியல் தலைமகளை மிரட்டி அடிபணிய வைக்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுள்ளார்
பாராளுமன்றில் முன்னாள் இராணுவ தளபதியை வெளியில் வா பார்த்து கொள்கிறோம் என வாய் மிரட்டல் விடுத்த கோட்டா சகோதரனை பார்த்தோம் ,அவ்வாறு விரிந்து படரும் கொட்ட ஆட்சி
அடக்குமுறை வெறியர்களின் ஆட்சி அதிகாரம் இன்று சாதாரண மகக்ளை எவ்வாறு அடக்கி ஒடுக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும் .
அவ்விதம் படை உருவாக்கம் என முழங்கும் சிறிலங்கா சதிகளும் ,அவை சிக்க வைக்க நடக்கும் உலக சூழ்ச்சிகளும் எவ்வாறு உள்ளது என்பதை இந்த காணொளி இயம்புகிறது பாருங்கள் ,பரப்புங்கள்
எழுச்சி கொள்ளும் தமிழ் தேசம் – வெடித்து பறக்கும் அடக்குமுறை மிரட்டல்







