Posted in இலங்கை செய்திகள்

பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு

பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றவுள்ள பண்டிகளி காலப்பகுதியில் பயன் கட்டுப்பாடுகள் விதிக்க பட

மாட்டாது என இராணுவ தளபதி தெரிவித்துளளார்

இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு பணியில் பல்லாயிரம் இராணுவம் போலீசாரை

கடமையில் ஈடுபடுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்

    சிறையில் அடைக்க பட்ட இந்திய நபர் மரணம்

    இலங்கை சிறையில் விளக்கமறியலில் வைக்க பட்டிருந்த இந்தியா நாட்டை சேர்ந்த ஒருவர்

    வைத்தியசாலையில் மரணமாகியுளளார்

    இவரர் சிறையில் அடைக்க பட்டதன் பின்னர் அங்கு வதைகள் இடம் பெற்று அதன் வழியாக இறந்திருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

      கொரோனா: மரணங்கள் 586 ஆக உயர்வு

      கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

      இன்றைதினம் மட்டும் 137 ​பேர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

      அத்துடன், இன்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா மரணங்கள் ஐந்து, சம்பவித்துள்ளன.

      அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.

      Posted in Uncategorized

      மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

      மாறு வேடம் தரித்த பொலிஸ்-பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

      மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

      பஸ் சாரதிகள் விடும் தவறுகளை குறித்த அதிகாரி விழிப்புடன் கண்கானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

      விசேடமாக அதிக வேகம், போக்குவரத்தின் போது கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தல் மற்றும் ஏனைய வீதி போக்குவரத்து விதிகளை மீறுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அந்த அதிகாரி கண்காணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

      அவ்வாறு சாரதி ஒருவர் தவறு இழைப்பானாரால் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

      இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 7 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      அவர்களில் ஐவர் மோட்டார் வண்டி செலுத்துனர்கள் என்பதுடன், ஒருவர் பதசாரி எனவும் மற்றையவர் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

      Posted in Uncategorized

      முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை

      முககாவசம் அணியாத 11 பேர் கைது – போலீஸ் வேட்டை

      இலங்கை பதுளை பகுதியில் நிகழ் கால கொரனோ விதிகளை மீறி முககாவசம் அணியாது உலவிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

      கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

        Posted in Uncategorized

        விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு

        விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு

        இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதிக்குள் கைவிட பட்ட

        நிலையில் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்க பட்டுள்ளன

        இவ்வாறு மீட்க பட்ட நகைகள் அரச உடமையாக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி

          இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி

          தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

          அதற்கமைய ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்கா எண்ணையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதாக அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

          இது குறித்து மேற்க்கொள்ளப்பட்ட இரண்டாவது தர நிர்ணய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணையில் புற்று நோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் கலந்துள்ளமை உறுதியானது.

          இவ்வாறான நிலையில் குறித்த தேங்காய் எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்திணைக்களம் சம்பந்தப்பபட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தது.

          தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை தொடர்பான பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டானையில் உள்ள ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்திற்கு எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

          அதற்கமைய இந்த வாரத்தில் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படும் என சுங்க பணிணப்பாளர் தெரிவித்துள்ளளளார்.

          இதேவேளை, இன்றைய தினம் மற்றுமொரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணைய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்

            .

            Posted in இலங்கை செய்திகள்

            நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

            நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

            இடர் வரினும் அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடும் அர்ப்பணிப்புடன் தீரமிகு உன்னத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை புகழ்வணக்கம் செலுத்திக் கொண்டது.

            2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவின் இனஅழிப்புப் போர்,பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசவையில் குறிப்பிட்டிருந்தார்.

            அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்வர் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.

            மேலும் அவர் தனதுரையில், 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில், ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.

            வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார்.

            முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராஜப்பு.

            விடுதலைக்கும், அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராஜப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.

            முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.

            எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
            நீதியின் ஒரு குரலிலிருந்து பல குரல்கள் எழும்.

            இராஜப்பு ஆண்டகையின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இழப்பாகும் எனத் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை துணைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள், போரின் இறுதிக் கட்டங்களில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவர் சாட்சியத்தை எவராலும் நிராகரிக்க முடியவில்லை என தனது இரங்கல் உரையில் தெரிவித்திருந்தார்.

            ஆயர் இராஜப்பு ஆண்டகை அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலாக விளங்கினார் எனத் தெரிவித்த தாயக தொடர்பாடலுக்கான அமைச்சர் விஜிதரன் அவர்கள், தமிழர் போராட்டத்தின் நியாயத்தைப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு

            எடுத்டுரைப்பவராகவும், தமிழினவழிப்பின் சாட்சியாகவும் இருந்தார் என்றார். இறுதி வரை தமிழர் போராட்டத்தின் வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியிருந்ததோடு, என்றார்.

            இறுதிப்போரின் போது தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லி உலகின் மனசாட்சியை ஓங்கி அறைந்தார் என தனது இரங்கலில் தெரிவித்திருந்தார்.

            போர்க் காலத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி தமிழ்மக்களுக்கான உணவையும் ,மருந்தையும் குறைத்து நேரடியாகத்

            தமிழர்களை அழிக்க முயன்ற போது, சிறிலங்கா அரச திணைக்களங்களின் அறிக்கைகளைக் எடுத்க்காட்டி, சிறிலங்கா அரசாங்கத்தினை உண்மை முகத்தினை உலகின் முன் ஆண்டகை அவர்கள் அம்பலமாக்கினார் என பிரதமர் பணிமனை பணிப்பாளர் நாயகம் கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.

            தாயகத்திலுள்ள மக்கள் ஆயர் இராயப்பு ஆண்டகைக்கு ‘புனிதர்’ என்ற சிறப்பை வழங்கும்படி பொப்பாண்டகையினை வேண்டிக் கொள்ள வேண்டுமென துணை அமைச்சர் கலையழகன் தனது இரங்கலுரையில் தெரிவித்திருக்க, நாடுகடந்த தமிழீழ அரசங்கமும் இக்கோரிக்கையினை

            பொப்பாண்டகைக்கு விடுக்க வேண்டுமென கோரிய அரசவை உறுப்பினர் லிங்க ஜோதி அவர்கள்,தமிழர் ஆன்மிகத்திற்கும் சான்றாக ஆண்டகை அவர்கள் திகழ்ந்திருந்தார் என குறித்துரைத்திருந்தார்.

            Posted in Uncategorized

            தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ

            தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ

            பிரபல தமிழர் உணவு கடை ஒன்றுக்குள் அறு சுவையாக சமைத்து வைக்க பட்ட உணவுகளின்

            மேலே தனது விருப்ப படி ஓடி விளையாடும் கரப்பான் பூச்சி ஒன்றின் காட்சி அந்த கடைக்கு சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்
            அந்த காட்சிகள் இவை

            தற்பொழுது சமூக வலைத்தளங்களில் குறித்த காட்சியானது வைரலாகி வருகிறது ,உணவுகளின்

            மேலே கரப்பன் பூச்சி உலாவினால் உயிர் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப படுகிறது

              https://www.youtube.com/watch?v=cysT-SEeaE0
              Posted in Uncategorized

              பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

              பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

              வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறியொன்று மோதியதில்

              பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

              நேற்று இரவு (04) பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில் இருந்து தெல்கந்த நோக்கி

              பயணித்த லொறி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

              விபத்தில் உயிரிழந்தவர் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த புளத்சிங்கள

              பகுதியில் வசிக்கும் 47 வயது பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

                19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

                இலங்கை கலேவெல பகுதியில் 19 வயது இளம் பெ ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்

                குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது

                குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த

                பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

                  Posted in Uncategorized

                  கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு தமிழர்கள் கைது

                  இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கைது செய்யப்பட்டனர்.

                  கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                  இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம் இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ

                  இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

                  விசாரணையில் இவர்கள், மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஸ் என தெரிய வந்தது.

                  இவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்தாக விசாரனைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

                  இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிஸார், அவ்விருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                  சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்கு சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரை சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                    யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்

                    யாழில் பொலிஸாரின் விரலை கடித்து குதறிய வாலிபன்

                    யாழ்ப்பாணத்தில் போலீசார் ஒருவருக்கும் வாலிபன் ஒருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது

                    இதன் பொழுது காவல்துரை சிப்பாயின் கை விரலைகடித்து குத்தறியுள்ளான்

                    பலத்த காய் காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

                      Posted in Uncategorized

                      சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?

                      சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?

                      சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே சடலத்துடன் சென்றிருந்தவர்கள் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

                      இந்த சம்பவம், கண்டி, மஹியாவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கண்டி- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      சடலத்தை மயான பூமியில் வைத்துவிட்டு, இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பட்டாசும் கொளுத்தப்பட்டுள்ளது.

                      அந்த சத்தத்துக்கு களைந்த குளவிகள் கடுமையாக கொட்டியுள்ளன. இதேவேளை, அந்த மயானத்தை சுற்றியிருக்கும் மரங்களில் பெருமளவில் குளவி கூடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

                      சடலத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். எனினும், சவப்பெட்டி மூடியிருந்தமையால்

                      சடலத்தின் மீது குளவி கொட்டவில்லை. அதேவேளை, இருட்டியதும் மயானத்துக்குச் சென்ற மற்றும் சிலர் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்

                        திடீரென அதிகரித்த டெங்கு நோயாளிகள்

                        இலக்கை இரத்தினபாரிமாவட்டத்தில் கடந்த 90 நாட்களில் 89 பேர் டெங்கு நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்

                        இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இதனை தடுப்பதற்குரிய விழிப்புணர்வு கருத்தரங்ககுள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க பட்டு வருகிறது

                        சுற்று புறத்தை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாக இந்த நோயானது அதிகமாக பரவி

                        வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்

                          பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்

                          பிரிட்டனில் 18 மில்லியன் மக்கள் Oxford-AstraZeneca தடுப்பு ஊசியினை செலுத்தியுள்ளனர் ,அவ்விதம்

                          செலுத்தியவர்களில் ஏழுபேர் இரத்த உறைதல் காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும்

                          அது இதன் மூலம் தான் இந்த இறப்பு ஏற்பட்டதா என்பதை தெளிவாக கூற இயலவில்லை என்ற குழப்பமான தகவலை வெளியிட்டுள்ளது

                          மேலும் முப்பது பேருக்கு இந்த இரத்த உறைதல் கட்டிகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது

                          ,நமது தமிழர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்கத்தில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          In total, 30 people out of 18 million vaccinated by 24 March had these clots.

                          It is still not clear if they are just a coincidence or a genuine side effect of the vaccine.

                          The Medicines and Healthcare Products Regulatory Agency says the benefits continue to outweigh any risk

                            Posted in இலங்கை செய்திகள்

                            இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது

                            இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது

                            இலங்கை கண்டி பகுதியில் இணையதளத்தின் மூலம் விபச்சாரம் புரிந்து வந்த 29 வயது பெண்

                            ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                            வெளிநாட்டு வாலிபர்களை இலக்கு வைத்து இவர் திறந்த மேனியை காட்டி அதிக பணம் பறிமுதல்

                            செய்து வந்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                              Posted in Uncategorized

                              விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

                              விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

                              இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு நாயாக்க விமான நிலையத்தில் 17

                              கிலோ தங்கத்தை கடத்தில் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் சுங்க பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                              இவர் கடத்த முற்பட்ட தங்கம் பறிமுதல் செய்ய பட்டுள்ளதுடன் ,குறித்த நபரும் கைது செய்ய பட்டுளளார்


                              இந்த ஆண்டில் முறியடிக்க பட்ட மிக பெரும் தங்க கடத்தல் இதுவாக பார்க்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 575 பேர் மரணம்

                                இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 575 பேர் மரணம்

                                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 575 பேர் மரணம் ,


                                கடந்த தினத்தில் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்

                                மேற்படி நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற

                                பொழுதும் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன்

                                  உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை

                                  தமுகூ தலைவர் மனோ கணேசன்

                                  உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.

                                  2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள்

                                  இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

                                  மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                                  ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக

                                  ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.

                                  அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.

                                  நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின்

                                  மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.

                                  ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.