Posted in சினிமா

3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை

3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

நிச்சயதார்த்தமான 3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை
மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்


சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்

தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும்

திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு

தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து

வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

    காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

    இலங்கையில் சிறுவர் துஸ் பிரோயோகம் அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,15 வயது

    சிறுமி ஒருத்தி இணைய தளம் ஊடக 40 பேர் ரகற்பழித்து அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க பட்ட சம்பவம் வெளியானது

    இதனை அடுத்து இந்த கோரிக்கை மக்களிடம் விடுக்க பட்டுள்ளது

    இந்த சிறுமியை விற்பனை செய்த 26 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 16 பேர் தேட பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி-மனோ கணேசன்

      இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி

      மனோ கணேசன்

      “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத்தக்கது.

      வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கை கடல் வளத்துக்கு, “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகள் மூலம் ஏற்பட்டது. இதனால் மேற்கு கரை முழுக்க மீனவ சமூகம்

      தொழில் இழந்து, வாழ்விழந்து, ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்துள்ளது. அவர்களது ஆவேச குரல் இலங்கை அரசுக்கு கேட்கவில்லை. ஆனால், இந்திய அரசுக்கு கேட்டுள்ளது.

      ஒரு நட்பு நாட்டு அரசு என்ற முறையில், எங்கள் மீனவர் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு செய்துள்ள உதவிக்கு, இலங்கை மீனவர்

      சமூகம் சார்பாக நாம் நன்றி கூறுகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

      “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகளை ஆய்வு செய்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் செய்து வரும் உதவிகள் தொடர்பில் மேலும் மனோ எம்பி கூறியுள்ளதாவது,

      நடுக்கடலில், இரசாயன பொருகளை சுமந்தபடி எரிந்து கொண்டிருந்த “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலை, இலங்கை துறைமுகத்துக்கு, இலங்கை கடல் எல்லைக்குள் வர சொன்னவர் யார் என

      எவருக்கும் தெரியாது. அந்த அமைச்சர் அல்லது அதிகாரி யார் என மக்கள் கேட்கிறார்கள். அவரை கண்டால் வரச்சொல்லுங்கள். அவருக்கு சுவையான மீன் உணவு தர தாங்கள் தயார் என மீனவ மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

      இலங்கை கடல் வளம் அழிகிறது. மீனவர் வாழ்வு அழிகிறது. இலங்கை மக்களுக்கு உணவில் மீன் இன்று சந்தேக பொருள் ஆகி விட்டது. இவற்றுக்கான நஷ்டஈட்டை “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” எப்போது

      தரும்? எத்தனை கோடிகள் கிடைக்கும்? அதில் எத்தனை இலட்சங்கள் மீனவர்களுக்கு கிடைக்கும்? இந்த கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் இல்லை.

      இலங்கை அரசு இவற்றுக்கு பதில் கூறாமல் ஒளிகிறது. இதுவரை துறைமுக துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவோ, மீன்வள துறை அமைச்சர் டக்லஸ் தேவாந்தாவோ இதுபற்றிய உண்மைமைகளை பேச மறுக்கின்றனர். பேரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர்.

      இந்த பின்னணியில் இந்திய அரசின் இந்த உதவி ஒரு ஆறுதல். “சாகர் ஆரக்ஸா” என்ற கடல் செயற்பாட்டின் மூலம் இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு,

      இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் குறிப்பிட்ட கப்பலின் தலைவர், மாலுமிகளுக்கு , இலங்கை மீனவர் சமூகம் சார்பாக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

      Posted in சினிமா

      இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்

      இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்

      சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இமான் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்…. பாராட்டும் ரசிகர்கள்
      இமான்


      சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.

      இந்த போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

      இமான்

      ரசிகர்களும் இமானுக்கு டேக் செய்து, உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என பலரும் பாராட்டி உள்ளனர்.

        Posted in சினிமா

        என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்

        என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்

        என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

        என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
        பாடகி பாக்கியம்மா


        அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் ‘என்னக் குறை என்னக் குறை என் செல்லப்

        பேராண்டிக்கு என்னக் குறை’ என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

        பாக்கியம்மா

        இவரது மறைவிற்கு பாடகர் அறிவு, பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி

        பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

          இலங்கையில் 7 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

          இலங்கையில் அதி உயர் காவல்துறை அதிகாரிகள் ஏழுபேருக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது


          உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in சினிமா

            சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

            சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

            இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

            சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
            இயக்குனர் சங்கர்


            சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது.

            இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

            இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.

            இதனால் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத்

            தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            இயக்குனர் சங்கர்

            ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’

            பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

            Posted in Uncategorized

            ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்

            ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்

            இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

            இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

            விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in Uncategorized

            இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை

            இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை

            100 மாணவர்களுக்கும் குறைந்த 2962 பாடசாலைகளில் இம் மாதத்திற்குள் (ஜூலை) கல்வி நடவடிக்கைகளை முழுமையான

            சுகாதார சிபார்சுகளுக்கு அமைவாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

            மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக்

            கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக மொத்தமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகள் இவ்வாறு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

            பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

            முதற்கட்டமாக இந்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய பாடசாலைகளை உரிய திட்டத்திற்கு அமைய திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்

            Posted in இலங்கை செய்திகள்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.

            எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் நேற்று (02.07.2021) நடைபெற்றது.

            இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

            அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் எக்ஸ பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

            இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.

            எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.

            எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

            மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

            பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

            இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது

            விதிக்க பட்டுள்ள விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் 563 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் முக கவசம் அணியாது உலவியமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி

              வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பிசிஆர் அறிக்கை கொண்டு வர வேண்டியது அவசியம்-இராணுவ தளபதி

              பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார

              சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் புதன்கிழமை (30) கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது.

              மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள், வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும்

              தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பெரிதும் ஆராயப்பட்டன.

              முறையான பீசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்றும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவோர் சிலர் அண்டிஜன் பரிசோதனைகளை மாத்திரமே செய்துக்கொண்டுள்ளனர் எனவும், இனிவரும்

              நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப

              ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

              அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2021 ஜூன் வரையிலான நிலைமை மற்றும் இலங்கையின் மூலோபாயம் என்பன தொடர்பில் விளக்கமளித்துடன் “வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என்றும் எடுத்துரைத்தனர்.

              அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், புதிய வைரஸ் வகைகள், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா பகுதிகளிலிருந்து உருவான கொத்தணிகள், புதிய தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்பித்து 6

              நாட்களில் 2000 க்கும் குறைவான நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலைகள் , இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், இறப்பு போன்ற விடயங்கள்

              தொடர்பிலும் விளக்கமளித்தார். அத்தோடு டெல்டா மாறுபாடு வைரஸ் பரவி வருகின்றமை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

              Posted in Uncategorized

              இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்


              இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்

              இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட

              முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில்

              இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை

              முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல்

              ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

              மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை

              குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

                Posted in Uncategorized

                ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை

                ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை

                ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

                அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.

                பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை

                நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆந் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு

                உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆந் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

                பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன்

                24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக்

                காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

                தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய

                ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29ஆந் திகதி ஒதுக்கப்பட்டது.

                வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது. 27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின்

                ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.

                இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது. இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக்

                கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க

                அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்புக்

                குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

                இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி,

                ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு

                செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24வது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

                நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.

                இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே

                ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின்

                உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

                வெளிநாட்டு அமைச்சு

                  Posted in Uncategorized

                  யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்

                  யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்

                  மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த

                  பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                  இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

                  வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

                  சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                    Posted in Uncategorized

                    முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை

                    முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை

                    புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது.

                    கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன்,

                    குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

                    ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

                      Posted in Uncategorized

                      துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்

                      துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்

                      நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில்

                      தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                      அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச்

                      சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

                      Posted in சினிமா

                      அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்

                      அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்

                      சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

                      ஓ.டி.டி. தளங்களால் அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்
                      ரகுல் பிரீத் சிங்


                      நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன்

                      மூலம் நடிகர் – நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.

                      இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும்

                      செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

                      ரகுல் பிரீத் சிங்

                      பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக

                      முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

                      Posted in சினிமா

                      அதிக படங்களில் நடிக்காதது ஏன்

                      அதிக படங்களில் நடிக்காதது ஏன்

                      அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.

                      அதிக படங்களில் நடிக்காதது ஏன்? அதிதி பாலன் விளக்கம்
                      அதிதி பாலன்


                      அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்

                      பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

                      இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார்.

                      இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான ‘கோல்டு கேஸ்’ மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.

                      நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய

                      பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.

                      அதிதி பாலன்

                      கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும்

                      , சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என்றார்.

                      அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.