Author: நலன் விரும்பி
கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்
கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர
சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆறு வீடுகள் கட்டப்பட்டு வரும் அதேவேளை
இந்த திட்டத்தை 66 பிரிவு பின் பொதுக்கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் 20வது இலேசாயுத படையணி, 24வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 11வது கஜாபா ரெஜிமென்ட், 20 வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 5 ஆயுத தளவாட
படைப்பிரிவு மற்றும் 2வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி
இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 26910 (pfizer) பைசர் என்ற கொரோனா தடுப்பூசி மருந்து இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இவை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிடமிருந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும்.
இதன்கீழ் முதல் கட்டமாக இந்த தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது.அடுத்த வாரம்
அளவில் மேலும் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் பைசர் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்க உள்ளன. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக ஒருவர்
இரண்டு பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது அவசியமாகும். இதேவேளை இலங்கைக்கு
இம்மாத இறுதிக்குள் 64 ஆயிரம் அஸ்ராசெனகா மற்றும் கொவிஷில்ட் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 300 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாப்பத்திரண தெரிவித்துள்ளார்.
இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா
இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வடிவேலு பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா?
நயன்தாரா
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல
ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
நயன்தாரா
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தமிழில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி, வடிவேலு நடித்த
தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய யுவராஜ், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
இலங்கையில் கடந்த 14 நாட்களாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு சில தளர்வுகளுடன் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிபடப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து சில பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. அதன ;அடிப்படையிலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோருக்கு மாத்திரம் பயணிக்க முடியும்
மேல் மாகாணத்தில், ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க முடியும்
தனியார்/ வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி.
திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை, எவ்வாறாயினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.
ஒருவர் உயிரிழந்தால், சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக்கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்
செயலமர்வு, மகாநாடு, வர்த்தக குறி வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு 25 பேருக்கு இனுமதி
ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அனுமதி.
நிதி நிறுவனங்கள் ஆகக்குறைந்த ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: எந்த சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானசாலைகள், கெசினோ மற்றும் இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை திறப்பதற்கு அனுமதியில்லை.
மசாஜ் நிலையங்களை திறக்க அனுமதி
திறந்த வெளி சந்தை வாராந்த சந்தை உள்ளூராட்சி மன்றங்களின் வலுவான கட்டுப்பாடுகளுடன் இடமபெற முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்க முடியும்.
ஜவுளி கடைகள் ,தொடர்பாடல் நிலையங்கள் முதலானவற்றுக்கு அனுமதி
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்றார்.
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்றபோது எடுத்த புகைப்படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார்.
தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம்
முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிறது.
நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
பாபநாசம் 2-வில் நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இதுதவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக
கலந்துரையாடிய நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் ‘பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், அதை நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்
நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர் – சைபர் கிரைமில் நடிகை சனம் ஷெட்டி புகார்
சனம் ஷெட்டி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த
ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் ‘சுதந்திரத்திற்கான பறைக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இனப்படுகொலையை மறைக்க சிறிலங்காவை அனுமதிக்க வேண்டாம், இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம் என கோசம் எழுப்பியதுடன்,
சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர் – அரசன்
இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி
இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுக்கு தடை
விதிக்க பட்டுள்ளது ,இதனை அது நாளை முதல் புதிய திருத்த சட்டம் வெளியிட படவுள்ளது
இதில் திருமண நிகழ்வுகள் மற்றும் ,பொது நிகழ்வுகளில் மட்டு படுத்த பட்ட மக்கள் கலந்து
கொள்ளும் புதிய விதிகள் அறிவிக்க பட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்க படவுள்ளதாக தெரியவருகிறது
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீடடு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்
செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
14 வயது சிறுமியை கற்பழித்தவர் கைது
14 வயது சிறுமியை கற்பழித்தவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்
செய்த 43 வயதுடைய ஆண் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (03) உத்தரவிட்டார்.
குறித்த சிறுமியின் தந்தையார் அவர்களை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வருவதுடன் தாயார்
வேலைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள இரு திருமணங்கள்
முடித்த 3 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெரியதாயார் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து
பொலிஸார் வெள்ளிக்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்
முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் பத்தாம் திகதி வரை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.இதற்காக 50 ஆயிரம் சைனாபார்ம் தடுப்பூசி மருந்து கிடைத்திருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் யூலை மாதம் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகள் தொடர்பில் ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும், எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பபடுபவர்கள், தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட வகையில் அடங்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
தொழிற்சாலைப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் அறிவிக்கப்படும்.
யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் 49,602 பேருக்கு முதல் தடவை கொவிட் 19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ம் திகதி முதல் யூலை 3 ம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46,648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தினை பெற்றுக்கொண்டனர்.
முதலாவது தடுப்பு மருந்தினை தடவை பெற்றுக் கொண்டவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதனால் அப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்து வழங்கப்படும்.
.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணிதாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிதாய்மார்களுக்கும், முன்களப்பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கும் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
தொழிற்சாலை பணியாளர்களுக்கும்,, ஏனைய முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது பெண்ணை இணைய தளம் மூலம் விற்ற கும்பல் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை, நல்லூருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இணையதளத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிலியந்தல, அளுபொலந்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரை இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 16 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் போலீசா வேட்டை – 417 பேர் கைது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 417 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் முக கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை நாற்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேலானவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொலை மிரட்டல் – 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
கொலை மிரட்டல் – 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
நடிகை ராதா தனது இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கிறார்… 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
நடிகை ராதா
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில்
சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், கணவர் வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராதா, பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.
ராதா, வசந்தராஜா
ராதா, வசந்தராஜா
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்த புகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக வசந்தராஜா கூறியதாகவும், போலீசில் புகார் கொடுத்து
என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகவும், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர்
மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை
இலங்கையில் ஆடம்பர பொருட்களுக்கு ஆளும் கோட்டா அரசு தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை நிலை நிறுத்தும் முகமாகவும் ,இலங்கையின்
பொருளாதாரத்தை முன் நிறுத்தவும் இந்த தடை ,அல்லது கட்டுப்பாடு விதிக்க படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு
முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு… குவியும் லைக்குகள்
யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனும் நண்பர்கள்.
சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து நடராஜன் பாராட்டி இருந்தார்.
யோகி பாபு
யார்க்கர் கிங் நடராஜன் – யோகி பாபு
இந்த நிலையில் யோகி பாபு, நடராஜனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் மற்றும் யோகி பாபு இருவரும் தனது சமூக
வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது…. மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
மனைவியுடன் அமீர்கான்
நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.
எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க
விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.
சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம்.
எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.
அமீர்கான்
இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள்
கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி
ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி
சரண்யா சசி
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல
படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.
சரண்யா சசி
இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா
ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்












