Author: நலன் விரும்பி
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
ஹீனா பாஞ்சல்
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி
பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில்
மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.
நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை
யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன்
சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வீடுகளுக்குள் அத்துமீறும் வாள்வெட்டுக் கும்பங்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.
அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
அத்துடன், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.
பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718 592 200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது
விபச்சாரத்திற்கு இளம் பெண்ணை விற்ற 17 பேர் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.
குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண், ஆட்டோ சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான
தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
மேல் மாகாணத்தில் இன்று முதல் 45 அரச வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இதன் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சயனோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ
1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ
இலங்கை சிறைகளில் உள்ள சுமாரா 1,717 கைதிகளுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்
இவர்களுக்கு மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையின் பொழுது மேற்படிவிடயம் தெரிய வந்துள்ளது
மேலும் இருபதுக்கு மேற்பட்ட சிறை கைதிகள் இந்த நோயினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
தமது நாடடுக்குகள் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆறு நாட்டவர்கள் உள்நுழைய தற்காலிக தடையினை துருக்கிய அரசு விதித்துள்ளது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது
ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு
ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு
இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக நான்கு
மாவட்டங்களை சேர்ந்தஆறு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்விதம் அறிவிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துத்துறையினர் குவிக்க பட்டு கண் காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது
சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை
சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை
கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த மிட்டாய் உற்பத்தி நிறுவனத்திற்கு இவ்வாறு மூன்று சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவர்களை வீடுகளுக்கு செல்ல விடாமல் நாளாந்தம் கொடூரமாக தாக்கி பணியில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் ஊழியர் அவரது பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக குறித்த சிறுவர்களை பலவந்தப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இணங்காத சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற சிறுவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நிறுவனத்தில் இருந்த மற்றைய சிறுவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி பொலிஸார் குறித்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணுக்கு மேலதிகமாக குறித்த மிட்டாய் நிறுவனத்தின்
உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில்
அவருக்கு எதிராக பெண் துஸ்பிரயோக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச் சாட்டில் 433 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை
தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்.
கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்.
ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதற்கு பதில் கிடைத்துள்ளது.
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது… கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்
ரஜினி, கஸ்தூரி
‛அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினி, உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக
. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை
இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி.
இந்நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன
கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த” என பதிவிட்டுள்ளார்
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு, ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும்
இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.
மஹா
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.
அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் – ரகுல் ப்ரீத் சிங்
இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தை தயாரித்து
நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
வணக்கம் சென்னை, காளி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக புதிய படத்தை இயக்கி வருகிறார் கிருத்திகா உதயநிதி.
படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி
திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கிருத்திகா உதயநிதி
இந்நிலையில் இன்று இயக்குனர் கிருத்திகா தனது பிறந்த நாளை காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக
கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள்
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்
அசோக் செல்வன்
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு
ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட்
நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி
கஸ்தூரி, ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக
இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.
தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப
அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது
. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்?
மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.
அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்களும்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற
படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான
கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன் தொகுப்பை காணலாம்.
கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?
பதில்: தங்கமே… பாடல்
கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?
பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பதில்: பிரார்த்தனைகள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?
பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.
கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?
பதில்: ராஜா ராணி
கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்
பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?
பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.
கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?
பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி
கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.
கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?
பதில்: பெருமையா இருக்கு
யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் வலி தென்மேற்கு பிரதேசசபை முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
சிங்கள ஆளும் அரசு அடக்குமுறை ,கைது ,காணி அபகரிப்பு ,தமிழ் கைதிகள் விடுதலை ,எரிந்த
கப்பலினால் ஏற்பட்ட மீனவர்கள் பாதிப்பு ,எரிபொருள் விலையேற்றம் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இந்த போரட்டம் இடம்பெற்றுள்ளது
பதவியை பறிகொடுத்த மாவை எம்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன
கொரனோ விதிகளை மீறி ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் இவர்கள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்
அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்
இலங்கையில் அதிக விலைக்கு கட்டுப் பாட்டு விலையை மீறி அரிசி விற்றால் ஒருலட்சம் ரூபா தண்டம் விதிக்க படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தனிமை படுத்தல் காலத்தில் மக்கள் மீது கட்டுப்பட்டு விலையை மீறி பொருட்கள் அதிக
விலையில் விற்று வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது
இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் இரண்டாவது அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக
நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
இந்த திடீர் முடக்கத்தால் மக்கள் பெரிதும் இன்னலை சந்தித்து வருகின்றனர்
திருகோணமலையில் அமெரிக்கா ,ஜப்பான் இராணுவம் போர் ஒத்திகை
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி’
நடைவடிக்கையின் இரண்டாவது கட்டம் திருகோணமலை கடற்பரப்பில் ஜூன் 26ம் திகதி ஆரம்பமானதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபா{ஹ, ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக ஹெலிகொப்டர்கள்,
டீ 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல் என்பன பங்கு கொள்வதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்த கூட்டுப் பயிற்சியில் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கவின் 7வது கடற்படை குழுமத்துக்கு சொந்தமான பி-8 பொசிடன் போயிங் ரக கடல் சார்
ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் என ஆகியன பங்கு கொள்வதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் பிராந்திய தந்திரோபாயங்கள் மற்றும் இராக்கால தொடர் பயிற்சிகளின் போதான கடல் அணுகுமுறைகளும் சோதனை நடவடிக்கைகள் என்பன ஜூன் 26ம்
திகதி இடம்பெற்ற அதேவேளை ஜூன் 27 இடைவெட்டு பயிற்சிகள் மற்றும் இடைமறிப்பு பயிற்சிகள் தொடர்பான கூட்டு பயிற்சிகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் தரையிறங்குவது தொடர்பான பயிற்சிகளில் சார்ள்ள்டன் அமெரிக்க கடற்படைக் கப்பலின் எம்எச் 60 எஸ் ஹெலிகொப்டர் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர்
என்பன கஜபாகுகடற்படைக் கப்பலில் தரையிறங்க உள்ள அதேவேளை, அமெரிக்க கடற்படை கப்பலின் எம்எச் 60ள ஹெலிகொப்டர் விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர் என்பன சுயுரல கடற்படை கப்பலில் குறுக்கு தரையிறக்கம் செய்யப்பட உள்ளன.
இதேவேளை இந்த கூட்டுப் பயிற்சியின் அடுத்தகட்டமாக தடங்களை கண்டறியும் பயிற்சி நடவடிக்கை நாளை தொடர உள்ளது. இதில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கப்பல்கள் ஆன ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுரல மற்றும் கஜபாகு என்பனவும் இலங்கை
விமானப்படையின் டீ 200 ரக பீச் கிராப்ட் விமானமும், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பலும் பி-8 பொசிடன் போயிங் கடல் சார்
ரோந்து விமானமும் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பலும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டரும் பங்குபற்றும் என எதிர்பார்க்க கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
பல் தரப்பு கடற் படைகளின் இந்த கூட்டுப்பயிற்சி, இலங்கை கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளில் பயனளிக்கத்தக்க நவீன அறிவு, தந்திரோபாயங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கவுள்ளன.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த பல பரபரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி, சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.







