Posted in இலங்கை செய்திகள்

கொண்டச்சி கிராமத்தில் மரமுந்திரிகை செய்கை

கொண்டச்சி கிராமத்தில் மரமுந்திரிகை செய்கை

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கூட்டாக இணைந்து மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு 2021.07.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2021.07.05 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாகப் புனரமைத்தல்

1979 ஆம் ஆண்டில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் 6000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் மரமுந்திரிகைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு

மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இடம்பெற்ற யுத்த சூழ்நிலையால் செய்கை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. தற்போது இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கூட்டாகக் குறித்த காணியில் 935 ஏக்கர்களில் மரமுந்திரிகைச்

செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கொண்டச்சி தோட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்காக 125 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியைப் பயன்படுத்தி இலங்கை மரமுந்திரிகைக்

கூட்டுத்தாபனம் 1500 ஏக்கர்களில் செய்கையை மேற்கொள்வதற்கும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் தற்போது செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள 935 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக 500 ஏக்கர்களில் மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கும்

திட்டமிடப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான கன்றுகளை வழங்கல், தொழிநுட்ப உதவிகள் மற்றும்

பயிற்சிகள் வழங்கல், கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளவும், செய்கையின் பராமரிப்பு நடவடிக்கைகளை குறித்த

திணைக்களத்தால் மேற்கொள்ளவும் இருதரப்பும் உடன்பாடுகளை எட்டியுள்ளன. அதற்கமைய

நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரிய அளவிலான சேதன பசளை உற்பத்தி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரிய அளவிலான சேதன பசளை உற்பத்தி

2021 பெரும்போக உற்பத்திற்கான 3600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின்

அறிவுறுத்தலின் பேரில் யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி தோட்டக்கலை நிபுணர்களுடனான கலந்தாலோசணையுடன் பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான பசளை உற்பத்தியைத் இராணுவம் ஆரம்பித்துள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பெரும்

போகத்தில் பயன்படுத்தும் வகையில் 3600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் திட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த திட்டத்திற்கான நிபுணத்துவ வழிகாட்டுதல் திரு கோலித விக்ரமசிங்க மற்றும் திரு ஜகத் சோமதுங்க ஆகியோரால் வழங்கப்பட்டது, அவர்கள் திட்டம் தொடங்குவதற்கு முன்பு யாழ்ப்பாண தளபதி மற்றும் பிறருடன் சில சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படை தலைமையக உறுப்பினர்கள் – தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றதும் குடாநாட்டு விவசாய சமூகத்திற்கு சேதன பசளை பயன்பாட்டு முக்கியத்துவம்

மற்றும் அத்தகைய நடைமுறைகளின் நீண்டகால விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Posted in சினிமா

நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன்

நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் கருத்து
ரம்யா கிருஷ்ணன் – வனிதா


பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.

அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று கூறப்பட்டது.

வனிதா – ரம்யா

இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை

. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் ‘நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    Posted in சினிமா

    சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது

    சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.

    சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
    சனம் ஷெட்டி


    அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு

    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

    சனம் ஷெட்டி

    இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல்

    நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      Posted in சினிமா

      பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி…

      பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி…

      பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

      பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி… வைரலாகும் புகைப்படம்
      ஷிவானி நாராயணன்


      தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்

      ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

      இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் இன்று விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      ஷிவானி
      ஷிவானி நாராயணன் – விஜய் சேதுபதி

      அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி

      நாராயணன் நடிக்க போகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

        Posted in Uncategorized

        30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

        30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

        புதிய லாம்டா என்ற வைரஸ் முப்பது நாடுகளில் பரவியுள்ளது ,மேற்படி நோயினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர் ,இது கொரனோவை விட கொடூரமானது என தெரிவிக்க படுகிறது

        சிலருக்கு இந்த நோயானது எவ்வித அறிகுறியும் இன்றி தொற்றியுள்ளதாக பாதிக்க பட்டவர்கக்ள் தெரிவித்துள்ளது மேலும் பீதியை கிளப்பியுள்ளது

        தற்போது இந்த நோயானது இலங்கை உள்ளே நுழைந்துள்ளது,மக்களே உசார் ,எமன் உங்களை தேடி வருகிறான்

          Posted in Uncategorized

          16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

          16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

          இலங்கையின் மகிந்தவின் விசுவாசியும் ,அடி தடி மன்னருமாக விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பலத்த தீ

          காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையின் அவச சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
          ,குறித்த சிறுமியை ரிச்சார்ட் குடும்பத்தினர் கொடுமை படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக பேச படுகிறது

          நாட்டின் மக்களின் காவலனாக விளங்க வேண்டிய ரிச்சார்டு தனது வீட்டில் சிறுமியை அடிமை

          தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            சிறைக் கைதிகள் 72 பேருக்கு கொரோனா

            சிறைக் கைதிகள் 72 பேருக்கு கொரோனா

            சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (05) உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், இன்று (06) தெரிவித்தார்.

            கொரோனாவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

            கொரோனா தொற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

            மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

            மட்டக்களப்பு சிறைக் கைதிகள் 72 பேருக்கும், பொலிஸார் இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய இரு

            சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்று பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.

            அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி

            பிரிவில் 2 பேர் உட்பட 116 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

              Posted in Uncategorized

              பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு

              பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு

              பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களில் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை

              மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.

              15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத்

              தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவை குறித்த பணியகம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

              குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

                Posted in Uncategorized

                வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு

                வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு

                வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

                குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.

                வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  Posted in Uncategorized

                  யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

                  யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

                  ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

                  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல்

                  உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06) எழுத்துமூலம் அறிவித்தார்.

                  அதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்

                  ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

                  ஜயந்த கெட்டகொட அவர்கள் 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப்

                  பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

                  அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும்

                  கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்

                  Posted in Uncategorized

                  சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது

                  சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது

                  15 வயது சிறுமி ஒருவரை இணையத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  33 வயதுடைய நபர் ஒருவரும் விசேட வைத்தியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  கொழும்பிற்கு அருகில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

                  இணையத்தின் ஊடாக குறித்த சிறுமியை பெற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

                  குறித்த இருவருடன் இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு

                    காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு

                    யான் ஓயா செயற்றிட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது.

                    கமசமக பிலிசந்தர எனும் கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                    இதனடிப்படையில் காணிகளை இழந்த 36 பேருக்கு மொத்தமாக 40 மில்லியன் ரூபாவுக்கும்

                    அண்மித்த தொகை நட்டஈடுடாக வழங்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரால தெரிவித்தார்.

                    கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

                    அங்கு வருகை தந்த காணிகளை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி ஜனாதிபதி முன்னர்

                    அதிகாரிகளுக்கு பணித்திருந்தார். அதற்கிணங்கவே இந்த நட்டஈடு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இராணுவத்தின் தடுப்பூசி நிலையங்களில் மக்கள்

                      இராணுவத்தின் தடுப்பூசி நிலையங்களில் மக்கள்

                      30 வயதிற்கு மேற்பட்ட மேல்மாகாண குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக படையினரால் நிறுவப்பட்ட நடமாடும் தேசிய தடுப்பூசி சமூக நிலையங்களில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய

                      செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (5) தனது வேலை பளுக்களுக்கும் மத்தியில் பத்தரமுல்லை தியத உயன தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

                      இந்த திட்டதை பார்வையிடுவதற்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவு (ASVU) தலைவியும் உடன் சென்றிருந்தார்.

                      அந்த இடத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும்

                      அவதானித்தார். இதனால் அங்கு வரிசையில் நின்ற பொது மக்களுக்கு மிகக் குறைவான தாமதம் அல்லது சிரமமே காணப்பட்டது. தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த பொது மக்கள் மற்றும் கடமையில் இருந்த படையினருடன் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

                      அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கட்டளைக்கிணங்க பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்

                      தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரையின்படி புதிய நடமாடும் தடுப்பூசி சமூக நிலையங்களை திங்கட்கிழமை (05) முதல் நிறுவ உள்ளதோடு, சினோபார்ம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் தேசிய செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டன.

                      அதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்டி), பத்தரமுல்லை தியத உயன, பானாகொடை இராணுவ விகாரை மற்றும் வெஹரஹேர முதலாவது இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையகம் என்பவற்றில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றுவதற்கான

                      நிலையங்களில் 2021 ஜூலை மாதம் 5ம் திகதி முதல் (திங்கள்) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் மாத்திரை தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்கப்படும். இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள

                      வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும்.

                      இதேபோன்ற இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்கள் காலி வித்தியாலோக வித்தியாலயம் (காலி மாவட்டம்), மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம் (மாத்தறை மாவட்டம்), மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் தியதலாவை (பதுளை

                      மாவட்டம்), அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை (அனுராதபுரம் மாவட்டம்), காலாட்படை பயிற்சி பாடசாலை மின்னேரிய (பொலன்னறுவை மாவட்டம்), கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் புதுகுடியிருப்பு மத்தியக் கல்லூரி, (முல்லைத்தீவு

                      மாவட்டம்) மற்றும் மன்னார் இலங்கை முதலீட்டுச் சபை கட்டிடம் (மன்னார் மாவட்டம்) ஆகியன ஒரே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை (05) தொடக்கம் காலை 0830 மணி முதல் மாலை 04.30 வரை வழங்கப்படும்.

                      பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மதொல , 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவா செனரத் யாப்பா, வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பதிரன 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே, இராணுவ நோய்

                      நிவாரண மருத்துவம் மற்றும் மனோவைத்திய சேவைகள் பணிப்பாளர் கேணல் சவன் செமகே ஆகியோர் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத்

                      தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்றனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் கொரானாவுக்கு 32 பேர் மரணம்

                        இலங்கையில் கொரானாவுக்கு 32 பேர் மரணம்

                        இலங்கையில் நேற்றைய (04) தினம் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32.

                        சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                        திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                          Posted in சினிமா

                          எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே

                          எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே

                          பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.

                          புராண கதைகளில் தீபிகா படுகோனே
                          தீபிகா படுகோனே


                          2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது.

                          இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில்,

                          “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்.

                          புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும்

                          அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.

                          தீபிகா படுகோனே

                          ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர்.

                          சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.

                            Posted in சினிமா

                            திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி

                            திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி

                            தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

                            திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி
                            சுவாதி


                            தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள்

                            இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

                            தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

                            2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில

                            மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

                            சுவாதி
                            படப்பிடிப்பில் சுவாதி

                            இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு

                            தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

                              Posted in Uncategorized

                              முல்லைதீவுக்கு புதிய இராணுவ படை தளபதி நியமனம்

                              முல்லைதீவுக்கு புதிய இராணுவ படை தளபதி நியமனம்

                              விஜயபாகு காலாட்படை படையணியின் (வி.ஐ.ஆர்) மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி புதன்கிழமை (23) முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக புதிய தளபதியாக கடமை ஏற்றுக்கொண்டார்.

                              புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு தளபதியை தலைமையக வளாகத்திற்கு 18 வது விஜயபாகு காலாட்படை படையினர் பாதுகாவலர் அறிக்ைகயிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர்.

                              சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு பதவி ஏற்பு விழாவுடன் தொடர்புடைய வழக்கமான இராணுவ நடைமுறைகள் குறைந்த அளவில் நடத்தப்பட்டன.

                              பின்னர், மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி தனது புதிய அலுவலகத்தில் அனைத்து மதங்களின் மத அனுசரிப்புகளுக்கு மத்தியில் பதவி ஏற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில்

                              கையெழுத்திடுவதன் மூலம் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதை அடையாளப்படுத்தினார். பின்னர் அன்றைய நிகழ்வைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் ஒரு மா மரக்கன்று நடவு செய்ய அழைக்கப்பட்டார்.

                              பின்னர் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொண்ட அனைத்து

                              நிலையினருக்கும் இடத்தில் உரையாற்றினார், மேலும் முல்லைத்தீவு பகுதியில் விவகாரங்களை சீராக நடத்துவதற்கான தனது எதிர்கால உத்திகளையும் விவரித்தார்.

                              இந்த நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி யாழ்ப்பாண குடாநாட்டில் 55 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற

                              கமாண்டோ ரெஜிமென்ட்டின் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவுக்குப் பதிலாக இந்நியமனதிற்கு நியமிக்கப்பட்டார்.

                              முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, படைப்பிரிவுகளின் தளபதிகள்,

                              பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் அனைத்து கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

                                Posted in Uncategorized

                                ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை

                                ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை

                                நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதோடு, காலத்திற்கு ஏற்ற வகையிலும் அதிக விலைக்கு

                                விற்பனை செய்யக்கூடிய வகையில் சிறந்த விவசாய செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் விவசாயத் திணைக்களம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

                                அந்த வகையிலே காலத்திற்கு காலம் புதிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்களுடனான விவசாய செய்கைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்ற விவசாய

                                திணைக்களத்தின் மற்றுமொரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் பாதுகாக்கப்பட்ட பச்சை இல்லத்தில் உண்டான கறிமிளகாய் செய்கையை

                                மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதனை கற்பிக்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடைய அறுவடையும் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

                                எனவே இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக பயிர்களை சிறந்த முறையில் விலை கூடிய நேரங்களில் செய்கை பண்ணக்கூடிய விதத்தினை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

                                இக் காலப்பகுதி கறிமிளகாய் செய்கைக்கு உகந்த காலப்பகுதியாக இல்லாத போதும் அதனை சிறந்த முறையில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும், கிருமி நாசினிகளை

                                பயன்படுத்தாது இயற்கை உரத்தினை பாவித்து அதிக வருமானம் ஈட்டக்கூடிய இச் செய்கை முறையை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டு அதனுடைய அறுபடை வைபவமும் இடம்பெற்றிருக்கின்றது.

                                இவ் அறுவடை வைபவத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

                                மேலும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த முயற்சிகளின் ஊடாக விவசாயிகள் முன்னுதாரணமாக செயற்படுவதற்கான

                                விளக்கங்களையும் இந்த கறிமிளகாய் செய்கை தொடர்பாக பண்ணை முகாமையாளர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..