Author: நலன் விரும்பி
வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு-500 டொலர் தண்டம்
வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு-500 டொலர் தண்டம்
வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் தங்கியிருக்கும் காலத்துக்கான வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலரை அறவிடுவது உள்ளிட்ட வீசா வழங்கும்
நடைமுறைகளை மறுசீரமைக்கும் குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (06) கூடிய பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளுக்காக -2019 யூன் 03ஆம் திகதிய 2126/13 ஆம் இலக்க அதிவேட வர்த்தமானி பத்திரிகை யூலை 08ஆம் திகதி அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான
டிரான் அலஸ் மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் கீழ் கலந்துகொண்டனர்.
சுற்றுலா வீசா கட்டணத்தை அறவிடும்போது தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் குழப்பான முறைக்குப் பதிலாக ஒரே கட்டண முறையை அறிமுகப்படுத்துவது, சுற்றுலா வீசாவுக்காக
வழங்கப்படும் காலத்தை மூன்று மாதங்களிலிருந்து 09 மாதங்களாக மாற்றுவது உள்ளிட்டவை இதன்மூலம் மேற்கொள்ளப்படும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் திரு.யூ.வீ.சரத் ரூபசிங்ஹ தெரிவித்தார்.
அத்துடன் தற்பொழுது இலங்கைப் பெறுமதியில் அறவிடப்படும் வீசா கட்டணம் அமெரிக்க டொலரில் அறவிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனைவிட, 2018ஆம் ஆண்டுக்கான ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது
ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள
பெறுமாறு வலியுறுத்தி அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.
எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்
நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்
இலங்கையில் ஆளும் மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆட்சியில் தற்பொழுது நிதி அமைச்சர் ,பசில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துள்ளார்
அலிபாவாவும் நாற்பது திருடர்களும் இணைந்து நாட்டை கொள்ளை இடுகின்றனர் ,ஆட்சி கவிழ்ப்பின் பின்னரே இந்த கொள்ளைகள் அம்பலமாகும் என்பது குறிப்பிட தக்கது
12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி
12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி
அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கல்வி அமைச்சர், மேலும் தெரிவிக்கையில் வயது வேறுபாடுயின்றி கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.
ஜனாதிபதியுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.
மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது தடுப்பூசி
ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கல்விசாரா ஊழியர்களும் வருகை தருவதற்குரிய திகதியும் நேரமும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் பாடசாலைகளை விரைவாக
ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .
15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .
15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை
15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின்
பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர
சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வைகயில் இடைநிறுத்தம் செய்துள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின்
எந்தவொரு கடற்படை தளத்திற்குளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்
நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்
இயக்குனர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் தங்களது செல்ல நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்கள்.
நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்
நாய்க்குட்டி பிறந்தநாள்
ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர்
ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் அட்லீ. தற்போது இவர் பிரபல
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அட்லீ
அட்லீ – பிரியா அட்லீ
இந்நிலையில் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தங்கள் செல்ல நாய்க்குட்டியின் 5-வது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்தநாள்
கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா வருத்தம்
வனிதா
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வனிதா அளித்த பேட்டியில், “தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை
சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின்
மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு
மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக சப்போர்ட் செய்கிறார்கள்.
வனிதா
சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட
விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள் என்றார்.
விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
விஜய்யின் ‘பிகில்’ ப
டத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
விஜய்
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்துள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர்.
ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், டாக்டர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.
அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர், சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து, ‘உனக்கு என்ன பிடிக்கும்? என கேட்டார்’. அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.
விஜய்
விஜய்
மேலும் நடிகர் விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான்.
அப்போது, ஜின்னா, தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு, உற்சாக மிகுதியில், தலையில்
ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.
விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.
நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்-மஹிந்த
நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்-மஹிந்த
நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இத்தேசிய நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதியினால் சோமாவதிய ரஜ மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் ஆகியோருக்கு அதற்கான சன்னஸ பத்திரம் வழங்கப்பட்டது.
இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க ஆகியோர் இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் புதிய 14 நூல்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நான்கு தலைமுறைகளாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆற்றிய சேவைக்காக, சீகிரிய தல்கொடே அளுத்கெதர தலைமுறையினருக்கு பிரதமரினால் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதுகல தொல்பொருள் தளத்திலிருந்து இரு களிமண் பலகைகளை கண்டுபிடித்த நிமல் கருணாதிலக மற்றும் இதுவரை அறியப்படாத பண்டைய குகை ஓவியங்களை கண்டுபிடித்த ஓ.ஆர்.ஜயதிலக அவர்கள் மற்றும் தனூஜா தர்ஷனி அமரதுங்க ஆகியோருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், தர்ஷனி அமரதுங்கவினால் இரு ஓவியங்களும் வழங்கப்பட்டன.
சோமாவதிய ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
எங்கள் தேசத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். அந்த பண்டைய மரபுரிமை பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். அந்த மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நான் நம்புகிறேன்.
எமது நாட்டின் அந்த பண்டைய மரபுரிமையை வெளிக்கொணர்ந்து அவற்றை பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களமாகும். அவர்கள் அதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த மரபுரிமைகளை பாதுகாப்பதுடன் அது தொடர்பில் மக்களுக்கும் தெளிவுபடுத்துகின்றனர்.
1890 ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளிலேயே இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 131 ஆண்டுகளாகின்றன.
இந்த நீண்ட காலப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் ஆற்றிய பணிகளை வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது. எனினும் அது நாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட உன்னத பணி என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும்.
அன்று பெல் அவர்கள் பண்டைய மரபுரிமைகளை வெளிப்படுத்த அனுராதபுரத்தில் முதல் அகழ்வை மேற்கொண்டு ஆரம்பித்து வைத்த தொல்பொருள் அகழ்வு இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் அனுராதபுரம், பொலனறுவைக்கு செல்லும்போது இது சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த இடங்களுக்குச் செல்லும்போது, உலகில் வேறு எந்த தேசத்திற்கும் இல்லாத பெருமை நமக்கு இருப்பதாக இயல்பாகவே உணர்கிறோம். அதனை உணர்ந்த எவருக்கும் இந்த நாட்டின் மீதான அன்பு குறையாது என்பது எமக்கு தெரியும்.
தம்பதெனிய, யாபஹுவ போன்ற இடங்களுக்கு சென்றாலும் இதே நிலைதான். இத்திணைக்களத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட சேவையினாலேயே இந்த அனைத்து இடங்களும் நாம் காணும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது.
அவர்கள் கடந்த காலத்தை ஆராய்ந்து தற்போது அந்த மரபுரிமையை கண்டுபிடிப்பது மாத்தரமன்றி, எதிர்காலத்திற்காக அந்த மரபுரிமையை பாதுகாப்பதற்கும் பாரிய பங்களிப்பு செய்கின்றனர்.
இது முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணம் என்பதை நாம் அறிவோம். அந்த சவாலை வெற்றிக்கொள்வதற்கு ஒரு தேசமாக நாம் போராடி வருகின்றோம். நாட்டிற்கு எத்தகைய சவால்கள் ஏற்படினும் அதனை எதிர்கொள்வதற்கு எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற மரபுரிமைகள் எமக்கு ஒரு பலமாக இருக்கும்.
இன்று இவ்வாறானதொரு தொற்று நிலை இல்லாதிருப்பின் ஆண்டுக்கு இலட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் எமது நாட்டின் அழகையும், பண்டைய மரபுரிமைகளையும் பார்வையிட இலங்கைக்கு வந்திருப்பார்கள்.
சீகரியா மற்றும் தம்புள்ளைக்கு அதில் மிகச் சிறப்பான மதிப்புள்ளது. அன்று பெல் அவர்கள் காடுகளினால் சூழப்பட்டிருந்த சீகரியாவை கண்டுபிடித்து அதன் தொல்பொருள் மதிப்பை ஆராய ஆரம்பித்தார். செனரத் பரணவிதான அவர்கள் சீகிரியாவை பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி சீகிரியா பற்றி கவிதை புனைவதற்காக ஆயிரம் தடவைகள் சீகிரியாவில் ஏறியுள்ளதாக நாம் கேள்விபட்டுள்ளோம்.
தொல்பொருள் துறையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட சீகிரியாவின் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. இன்று சீகிரியா ஒரு உலக பாரம்பரிய தளம் மட்டுமல்ல, உலகின் அதிசயமும் கூட. இது அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் காரணமாகும்.
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் கூட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர. அவர்கள் ஒருபோதும் தமது பணியை கைவிடவில்லை. நாட்டை காப்பது போன்றே அவர்கள் பணியாற்றுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டார். எமது அமைச்சின் செயலாளர் தொடர்ந்து எம்மவர்களின் தேவை குறித்து அடிக்கடி நினைவுபடுத்துவார். அவற்றை நாம் நிறைவேற்றுவோம்.
அதனால் சிரமம் பாராது எதிர்கால சந்ததியினருக்காக தொல்பொருள் தளங்களை பாதுகாத்து, புதிய அறிவை உலகின் மத்தியில் முன்வைத்த அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.
பண்டைய கால மனிதன் தொடர்பில் அண்மைய வெளிப்பாடு வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உட்பட முழு உலகின் கவனத்தையும் ஈர்த்ததை நாங்கள் கண்டோம்.
கிழக்கு மாகாணம் என்பது பல தொல்பொருள் தளங்களை கொண்ட இடமாகும். சேருவில, முஹுது மஹா விகாரை, கிரிகடுசேய, லங்காபடுன, கோணேஸ்வரம் போன்ற வரலாற்று இடங்கள் பல அங்குள்ளன.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சில சமயங்களில், நாட்டை ஆட்சி செய்தவர்கள் கூட அவை அழிக்கப்படும் வரை காத்திருந்தனர். தொல்பொருள் தளங்களை என்ன செய்வது என்று அவர்கள் கேட்ட ஒரு காலம் இருந்தது. நினைவுச்சின்னங்கள் கொன்கிரீட் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவை குறித்து புதிதாக கூற வேண்டியதில்லை.
ஆனால் மக்கள் இவற்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
இவை எமது நாட்டின் மரபுரிமை. அவற்றை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் மாட்டோம்.
எமது ஜனாதிபதி தொல்பொருள் தளங்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் தலைவராவார். அவர் அவ்விடங்களுக்கு சென்று அவ்விடங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றையும் நிறுவியுள்ளார். அதற்கமையவே முஹுது மஹா விகாரை போன்று பாதுகாக்கப்பட வேண்டிய தளங்கள் இந்தளவிற்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வரலாற்று இடங்கள் தேசிய மரபுரிமையாகும். ஒரு இனத்திற்கும் ஒரு மதத்திற்கும் உரித்தானவை அல்ல. இந்நாட்டின் உரிமையாகும்.
எனவே இவ்விடங்களை பாதுகாக்கும்போது இனம், மதம் என பேதங்களை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. தொல்பொருள் தளங்களை எவரேனும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தண்டனை போதுமானது அல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அச்சட்டங்களை திருத்துவதற்கு எமக்கு முடியும்.
யுனெஸ்கோவினால் பெயரிடப்பட்ட 890 உலக பாரம்பரியங்களில் 7 எமது நாட்டின் மரபுரிமைகளாகும். சீகிரியா, அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, தம்புள்ளை, காலி கோட்டை ஆகிய ஆறு தொல்பொருள் தளங்களும் அதில் உள்ளடங்கும். சிங்கராஜவே ஏழாவதாகும்.
இந்த மரபுரிமையை பாதுகாப்பவர்கள் அனைவரும் நம் தாய்நாட்டின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கின்றனர். அவர்கள் போருக்குச் சென்ற போர் வீரர்களைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தை பாதுகாக்க முயல்கின்றனர்.
இன்று, தொல்பொருளியல் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மனித ரீதியாக வளர்ந்த அறிவியல் பாடமாக மாறியுள்ளது. எனவே, கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட அறிவை நிகழ்காலத்திற்காக பயன்படுத்துவது அவசியம்.
இறுதியாக, இலங்கையின் மரபுரிமை தொடர்பான புரிந்துணர்வுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் ஒன்றாகச் செய்து வரும் சிறந்த பணிகளுக்கு ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றேன். என பிரதமர் தெரிவித்தார்.
வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வன்னி பிராந்திய
இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் ஏற்றப்பட்டுள்ளன.
தடுப்பூசிகள் நேற்று வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டன.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (ஆழுர்-ஏயஎரnலைய) வைத்தியர்களுக்கும்
இராணுவத்தினருக்கும் பொதுமக்கள் சார்பாக நாம் நன்றியை தெரிவிக்கின்றோம் என்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை
26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த தீர்ப்பு நேற்று (07) வழங்கி உத்தரவிட்டார்.
குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாவது எதிரி அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறியமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
1995ம் ஆண்டு திருகோணமலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் இரவு படம் பார்த்துவிட்டு வந்த இளைஞர் திருமலை பகுதியில் வைத்து சுட்டுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 2008ம் ஆண்டு சட்டமா அதிபரினால் திருகோணமலை நீதிமன்றில் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு வராது தலைமறைவாக இருந்த சூழ்நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த திங்கட் கிழமை இரசாயன பகுப்பாய்வு கைத்துப்பாக்கி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை மன்றில் தாக்கல் செய்து நிபுணத்துவ சாட்சியம் அளிக்கப்பட்ட பின் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முதலாம் எதிரியான ஆயுத குழு உறுப்பினரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பளித்துள்ளார்.
இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு
இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு
இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான
ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு
மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும்
முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
13தி, 16தி, தோட்ட வீடமைப்பு, சம்பளம், சீனா ஆகியவை பற்றி தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு
13தி, 16தி, தோட்ட வீடமைப்பு, சம்பளம், சீனா ஆகியவை பற்றி தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு
தமுகூ தலைவர் மனோ கணேசன்
13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, பொது செயலாளர்சந்திரா சாப்டர்
ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.
இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ம் திருத்தம், 16ம் திருத்தம் என்பவை ஆகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது. 13ம் திருத்தம் மூலம்
உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்து விட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்ட விரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.
16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.
ஆகவே 13ஐ பற்றி பேசும் போது, இந்திய அரசு 16 பற்றும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு
பறித்துக்கொண்டு கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனரகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.
அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும்
இந்திய அரசுக்கும், புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.
அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட்சமபலம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழு முழுக்க தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. இதுவே
ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டு கொள்வது இல்லை.
அப்படியானால், இந்த மக்கள் வேறு நட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.
இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியிரை சந்திக்க விரும்புகிறது, இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை
ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவேதான், இலங்கையில் சீனா
நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்.
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன் பட இயக்குனர் ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன்
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர். இவர் 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார். சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த
படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தற்போதைய அனைத்து சூப்பர்மேன் படங்களுக்கும் இவை முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன
இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை உருவாக்கினார். இதுதவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். ரிச்சர்ட் டோனருக்கு திடீர்
உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
சமந்தா
தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது இந்தியில் மவுசு அதிகரித்துள்ளது. அதன்படி மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா,
துருவங்கள் பதினாறு, ஆரண்ய காண்டம் ஆகிய படங்கள் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘யூ டர்ன்’ படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதன் இந்தி ரீமேக்கில் சமந்தா
கதாபாத்திரத்தில் நடிகை அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
திலீப்குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு
காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே
சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது
முல்லைத்தீவு வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது
முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்ட
மூன்று சந்தேக நபர்களை யாழ்ப்பாண பொலிஸார் நவாலியில் வைத்து இன்று (06) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி
சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.
இந்த நிலையில் சி.சி.ரிவி கெமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பட்டவர்களாக பிரதான சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை இன்று (6) நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்பாண பொலிஸார் சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்க உள்ளனர்.
யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்
பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.
மைத்திரி வீட்டில் திடீர் கூட்டம் – திட்டம் நிறைவேறுமா..?
மைத்திரி வீட்டில் திடீர் கூட்டம் – திட்டம் நிறைவேறுமா..?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
நாளை (08) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று(06) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.







