ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை

Spread the love

ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதோடு, காலத்திற்கு ஏற்ற வகையிலும் அதிக விலைக்கு

விற்பனை செய்யக்கூடிய வகையில் சிறந்த விவசாய செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் விவசாயத் திணைக்களம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையிலே காலத்திற்கு காலம் புதிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்களுடனான விவசாய செய்கைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்ற விவசாய

திணைக்களத்தின் மற்றுமொரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் பாதுகாக்கப்பட்ட பச்சை இல்லத்தில் உண்டான கறிமிளகாய் செய்கையை

மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதனை கற்பிக்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடைய அறுவடையும் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக பயிர்களை சிறந்த முறையில் விலை கூடிய நேரங்களில் செய்கை பண்ணக்கூடிய விதத்தினை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இக் காலப்பகுதி கறிமிளகாய் செய்கைக்கு உகந்த காலப்பகுதியாக இல்லாத போதும் அதனை சிறந்த முறையில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும், கிருமி நாசினிகளை

பயன்படுத்தாது இயற்கை உரத்தினை பாவித்து அதிக வருமானம் ஈட்டக்கூடிய இச் செய்கை முறையை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டு அதனுடைய அறுபடை வைபவமும் இடம்பெற்றிருக்கின்றது.

இவ் அறுவடை வைபவத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த முயற்சிகளின் ஊடாக விவசாயிகள் முன்னுதாரணமாக செயற்படுவதற்கான

விளக்கங்களையும் இந்த கறிமிளகாய் செய்கை தொடர்பாக பண்ணை முகாமையாளர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *