Posted in Uncategorized

மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

மலசல கூடத்தில் ரிச்சார்ட் பதியுதீன் செய்த வேலை

இயற்கை உபாதைகளை கழிப்பதற்காகவே பலரும் மலசலக்கூடத்தை பயன்படுத்துவர். ஆனால், கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மலசலக்கூடத்திலிருந்து என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் ​செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்குள்ள மலசலக்கூடத்திலிருந்து இரகசியமாக செய்த விவகாரமே இப்போது அம்பலமாகியுள்ளது.

வைத்தியர்களால் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒளடதங்களை (குளிசைகளை) குடிக்காமல், மலசலக்கூடத்துக்குச் சென்று, அங்கிருக்கும் துளைகளின் ஊடாக அவர், வெளியில் வீசியெறிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தனக்கு வழங்கப்படும் குளிசைகளை, கடதாசிகளால் சுற்றிக்கொள்ளும் ரிசாட் பதியூதீன், இவ்வாறு வீசியெறிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், நோய்வாய்பட்டுவிட்டதாக கூறியதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சிறுமி, எரிகாயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த நாளன்றே, அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துக்கொள்வதற்கான அனுமதியை, கோரியிருந்த போதிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைகளைப் பெற்றுக்​கொண்டதன் பின்னர், அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்றையதினம் (24) அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலசலக்கூடத்துக்கு வெளியே வீசியெறியப்பட்ட குளிசைகள், ரிசாத் பதியூதீனுக்கு வழங்கப்பட்டவை என்பதை, அவரை கண்காணித்த வைத்தியரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

பூனேரி, காசிகுடாவில் உள்ள திரு. சின்னாவி நவரத்னம், மடுவில்நாடு திரு. ராமநாதன் மணிவத்தன் மற்றும் கிளிநொச்சி, பிலிமந்தனாரு, மயில்வானாபுரத்தில் உள்ள திரு. ஆறுமுகம் நகுலேஷ்வரன் ஆகியோருக்கு இந்த புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.

புதுமனை குடிபுகும் விழாவின் போது வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய வீடுகளுக்கு தனவந்தர்களின் நிதியுதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது ஆயுதத் தளவாடங்கள் காலாட்படை, 24வது விஜயபாகு காலாட்படை மற்றும் 14ஆவது தேசிய பாதுகாப்புப் படை ஆகிய படையணி வீரர்களினால் இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்ற புதுமனை புகுவிழாவில்.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

வயது குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள . தொழில் சட்டத்தில் திருத்தத்திற்காக இவற்றை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் புத்திஜீவிகள் அலோசனைகள் வழங்கலாம் என்றும் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (24) அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகளை பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்கவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புகாப்தற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தவிடயத்தில் ஆர்வங்கொண்டுள்ள அனைவரும் ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

இதற்கான தொலைப்பேசி இலக்கங்கள் 071 555 0666 051 222 2422 என்பதாகும். இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

எழுத்து மூலமான ஆலோசனைகளை jthondaman@gmail.com என்ற மின் அஞ்சல் ஊடகவும் ஆலோசனைகளை சமர்ப்பிக் முடியும்.
இதனூடாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராகவும், அச்சுறுத்துக்குள்ளான தொழில்களுக்கு அமர்த்தவதற்கும் அதற்கு சம்மந்தப்பட்ட தரகர்களுக்கு எதிராக அரச உயர் சபைகள் மூலம் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கிராம சேவகரின் ஊடாக அந்தந்த இடங்களில் இருந்து 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் எங்கு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள் என்ற தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்தும் ஆராயப்படும்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் இடை விலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி ,கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிககை வழங்கலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி ஊடாக இலவச கல்வி வழங்கவும் கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இந்த கல்லூரியின் கிளை காரியாலங்களை ஆரம்பிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு

உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்கிறது

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்கிறது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் பொலிசாரினால் இதுவரையில் 51 ஆயிரத்து 859 பேர் கைது செய்யப்பட்டு;ளளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் 13 இடங்களில் 3இ673 வாகனங்கள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றுள் 235 வாகனங்களில் வந்த 584 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in சினிமா

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்த ஆர்யாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
ஆர்யா – சாயிஷா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர்

நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நல்ல வரவேற்பு

கிடைத்து வருகிறது. இவர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த போது சாயிஷாயுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆர்யா – சாயிஷா

திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு

சாயிஷா கர்ப்பமானார். இந்நிலையில் ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

Posted in சினிமா

4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி

4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது

போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் வனிதா 4வது திருமணம் செய்துக் கொண்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார்,

பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் பிக்கப் டிராப் என்ற படத்தில் தான் நடிப்பதாகவும், அந்த படத்தின் போஸ்டர்கள்தான் அவை என்று எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது

என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால்தான் தற்கொலைகள் அதிகரிக்கிறது’ என்றார்.

    Posted in Uncategorized

    ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

    ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்

    ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்

    இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த

    வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

    வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது

    நீர் குடித்து மூச்சடக்கி
    நீ இறந்தாய்
    நீங்காத வலி தந்து
    நீ ஏன் மறைந்தாய்

    நிருபர் – வன்னி மைந்தன் –

    வாலிபர் மரணம்
      Posted in இலங்கை செய்திகள்

      ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்

      ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது-மனோ கணேசன்

      ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, தன் கடமையை செய்கிறது. எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்.

      ஹிஷாலினி பற்றி கூப்பாடு போடும் டிலான் பெரேரா இதை அறிய வேண்டும் என்கிறார் மனோ கணேசன்

      மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய்

      பேசும் ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி

      அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

      சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்

      நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத

      நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

      இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்

      போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

      இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

      இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த

      அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.

      சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச

      வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின்

      மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.

      சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும்

      நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத

      நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், “சிறுமி ஹிஷாலினி” விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது.

      இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம்

      போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

      “இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.

      ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

      எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

      இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி

      முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

      நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள் தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?

      ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம், என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு

      வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.

      இதுவே இன்று சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம்.

      வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா

      துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

      ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த

      அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.

        Posted in இலங்கை செய்திகள்

        வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

        வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

        இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

        நாள் தோறும் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் ,அதனை கட்டு படுத்த முடியாது

        காவல்துறை தினறி வருகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

          இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

          இலங்கையில் ஆண்டு தோறும் நீர் நிலைகளில் மூழ்கி சுமார் 800 பேர் பலியாகி வருவதாக

          இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

          இதனை தடுக்க பல்வேறு பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,அவை கடந்து இந்த

          மரணம் சம்பவிப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

            ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

            இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் மனைவி உள்ளிட்ட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட பட்டுள்ளது

            இவர்களது வீட்டில் சிறுமி ஒருத்தி வீட்டு வேலை செய்து வந்தார் ,இவர் தீயில் எரிந்த நிலையில்

            சடலமாக மீட்க பட்டார் ,இவரது இந்த கொலை தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

            மரணம் கொலை என நிரூபிக்க பட்டால் அமைச்சர் உள்ளிட்டவர்கள் சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிட தக்கது

              Posted in சினிமா

              எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு

              எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு

              அவன் இவன் படத்திற்குப் பிறகு ஆர்யா – விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

              எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்
              எனிமி படத்தில் விஷால் – ஆர்யா
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில்

              இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

              இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்

              இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

              இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், எனிமி

              படத்தின் டீசரை ஜூலை 24 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

                Posted in சினிமா

                அந்த நடிகரை புகழும் இந்த நடிகை

                அந்த நடிகரை புகழும் இந்த நடிகை

                தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

                அவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா
                ரித்விகா
                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை

                கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது.

                இப்படம் பற்றி ரித்விகா கூறும்போது, ‘அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகப்பெருமையான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக அவரை

                அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது’ என்றார்.

                நவராசா ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 190 நாடுகளில் வெளியாகிறது.

                  Posted in சினிமா

                  கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                  கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                  முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

                  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இது அவருக்கு சாதாரணமாகக்

                  கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

                  நட்சத்திர அந்தஸ்து

                  புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன.

                  படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

                  தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே

                  ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக்

                  வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

                  24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன்,

                  கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து

                  படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ்

                  சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் ‘சூரரைப்

                  போற்று’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

                    Posted in Uncategorized

                    கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் 15 photo

                    கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் photo

                    தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் ஒன்றை சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில்


                    தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்து இன்று 23/07/2021 மதியம் ஒரு மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை

                    தூதரகத்துக்கு முன்னால் ,பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில், மாபெரும் கண்டன
                    போராட்டத்தை நடத்தினர் ..

                    இதன் போது
                    கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற


                    அங்கு நடை பெற்ற நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
                    சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்தனர் .

                    கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலை
                    Posted in Uncategorized

                    வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                    வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                    வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.

                    இங்கு 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

                    இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால்

                    துண்டிக்கப்பட்டு, முற்றாக முடக்கப்பட்டது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்

                      இலங்கையில் 10,150 டெங்கு நோயாளர்கள்

                      இந்த வருடத்தில் கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் 10,150 பேர் அடையாளம்

                      காணப்பட்டுள்ளனர். ஆகக்கூடுதலான நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

                      இவர்களின் எண்ணிக்கை 2,975 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 2,150 நோயாளர்கள் அடையாளம்

                      காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 891 பேர் பதிவாகியுள்ளனர். களுத்துறை

                      மாவட்டத்திலும் 572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        1983 கறுப்பு யூலை : கவனயீர்ப்பு போராட்டமும் கருத்தாடலும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

                        1983 கறுப்பு யூலை : கவனயீர்ப்பு போராட்டமும் கருத்தாடலும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

                        தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 –

                        கறுப்பு யூலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று ம் , இணையவழி

                        கருத்தாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்;டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                        ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாப்பெருந்துயராகவுள்ள 1983 கறுப்பு யூலை தமிழினஅழிப்பு நாட்களின் 38வது ஆண்டு நினைவினையொட்டி இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

                        இன்று (யூலை23 – 2021) வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் லண்டனில் பிரதமர் வாயில் தளத்தில்

                        இடம்பெற இருக்கின்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நீதிக்காக குரல்கொடுக்க, கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரகட்டுப்பாடுகளுக்கு அமைய மாலை 3 மணிக்கு அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
                        .

                        Posted in Uncategorized

                        மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

                        Ethiri.com – எதிரி இணையம்

                        மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

                        இலங்கை மதுக்கம பிரதேசத்தில் ஒன்பது வயது மகளின் உடலில் அங்க சேட்டை புரிந்த நண்பனை ,அவளது தந்தை அடித்து கொன்றுள்ளார்

                        மேற்படி செயலை கண்ணுற்ற தந்தை கோபத்தின் உச்சத்திற்கு சென்று இந்த செயலை புரிந்துள்ளார்


                        கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுள்ளார் ,
                        மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது