Posted in இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்

வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்

அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்

மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா

மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்

இடம்பெற்று வருகிறது

இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

    மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு

    இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்

    ,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு

    அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது

    பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

      இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்

      இலங்கைக்கு கடந்த வரம் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் வெளிநாட்டடு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

      நோயின் காரணமாக வீழ்ச்கை உற்ற உல்லாச பயணம் மீள சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை

        வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை

        இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை

          மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை

          நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான

          அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

          கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக்

          குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

          இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி

          நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

          மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

          மீதமுள்ள நிவாரண குழுக்கள் அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

            அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

            அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


            நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
            கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

            டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

            கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
            பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


            கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
            சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


            கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
            கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
            தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

              காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

              இலங்கையில் காணாமல் போன 15 வயதுடைய மூன்று இளம் பெண்கள் காணாமல் போயிருந்தனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களை மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
              இவர்கள் அனுராத புரத்திற்கு சென்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

                வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

                .சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

                பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள்

                ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

                சீரற்ற காலநிலையால் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். 18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 960 சொத்துக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 23 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

                புத்தளம், முந்தல், மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பி வருவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

                கொழும்பு, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்றின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளது. புத்கமுவ கிராம

                உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை, அறநாயக்க, அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

                இறம்புக்கணை மாவனல்லை வீதியில் மரமொன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும், குருநாகல் புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக்குஅருகில் போக்குவரத்து

                தடைப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வெளிநாட்டவர்களைச் சேர்ந்த பஸ் வண்டியொன்று பாலாவி பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.

                நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் பிளக்புல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து தற்சமயம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மஹஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட

                தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கேகாலை, இறம்புக்கணை,

                புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டமையால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

                கம்பஹா, பியகம, யட்டவத்த கிராம செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்தின்

                குடாகங்கை, புளத்சிங்கல, தொடங்கொட உட்பட களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. கேகாலை,

                கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் களனிகங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க, தோம்பெ, பியகம, கொலன்னாவை, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களிலும் வெள்ளம் ஏற்படலாம்.

                கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹஓயாவை அண்டிய கிரியுல்ல, அளவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் வழங்கும் எச்சரிக்கை அறிவித்தல்கள் பற்றி என்றும் கரிசனையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                  Posted in சினிமா

                  எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்

                  எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்

                  மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கான பத்ம விபூஷன் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.

                  எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்
                  விருதை பெறும் எஸ்.பி.சரண்


                  பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன்,

                  பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

                  இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர்

                  பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

                  எஸ்.பி.சரண்

                  பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண்

                  பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

                    Posted in சினிமா

                    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி

                    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி

                    சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

                    புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
                    உதயநிதி ஸ்டாலின்


                    கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம்

                    மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர்.

                    படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

                    இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில்,

                    நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

                    அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர்.

                    நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த

                    நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

                      Posted in சினிமா

                      ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை

                      ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை


                      பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

                      மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை… வைரலாகும் வீடியோ
                      லட்சுமி மேனன்


                      பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’

                      உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

                      லட்சுமி மேனன்

                      இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

                      கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                        பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                        இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற

                        புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்

                        மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை

                        மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது

                        உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு

                        குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                        தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி

                        விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                          ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                          இலங்கை கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த


                          முருகன் சிலை ஒன்று திருட்டு போயுள்ளது

                          ஆலயத்திற்கு வழமை போன்று வழிபாட்டுக்கு சென்றவர்கள் மேற்படி சிலையை காணாது

                          திகைத்து போயினர்

                          இந்த சிலையை மீட்கும் பணியில் போலீசாரை ஈடுபட்டுள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                            பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்

                            யாழில் இருந்து பளைநோக்கி பாயணித்து கொண்டிருந்த வண்டி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            காலநிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை

                              இலங்கை

                              கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை

                              கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவெள்ள பெருக்கு


                              ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அணைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

                              அளிக்க பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

                              இலங்கை

                              இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

                              இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல

                              பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன


                              மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

                              வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                              Posted in Uncategorized

                              அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

                              அடித்து பாயும் வெள்ளம் பிரதான வீதிகள் -பூட்டு

                              இலங்கை புத்தளம் பகுதியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பாலாவி பகுதி மற்றும்
                              இரண்டாம்கட்டை ,அரேலிய உயன ,தம்பப்பண்ணி ஆகிய சாலைகள் பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன என தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in சினிமா

                              தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

                              தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

                              முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்த திரைப்படம் ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள்.

                              தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
                              விஜய்


                              கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.

                              இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

                              விஜய்

                              மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டு வரும் நோக்கில், விஜய் நடித்த கில்லி

                              திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டமாக கூட்டமாக வந்து ரசிகர்கள் குவிந்து கில்லி படம் பார்த்துள்ளனர்.

                                Posted in Uncategorized

                                ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்.

                                ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்.

                                பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.

                                ராசாக்கண்ணு மனைவிக்கு சொந்த வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்
                                ராசா கண்ணு மனைவி – ராகவா லாரன்ஸ்


                                த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப்

                                பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

                                இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில்

                                உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

                                ராகவா லாரன்ஸ்

                                இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

                                ”செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக்

                                கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

                                28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய

                                கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்”.

                                இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

                                  Posted in சினிமா

                                  காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்

                                  காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்

                                  அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு புரபோஸ் செய்து அசத்தி இருக்கிறார்.

                                  பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்
                                  கார்த்திகேயா


                                  அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் கார்த்திக்கேயா. இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில்

                                  நடந்த போது தனது காதலிக்கு அவர் முழங்காலிட்டு மலர் கொடுத்து புரபோஸ் செய்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

                                  கார்த்திகேயா

                                  கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தனது காதலை படக்குழுவினர்

                                  முன்னிலையில் புரபோஸ் செய்த கார்த்திகேயா தங்களது திருமணம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

                                  இந்த திருமணத்தில் இரு வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது