Posted in சினிமா

ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை

ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை


பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை… வைரலாகும் வீடியோ
லட்சுமி மேனன்


பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’

உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

லட்சுமி மேனன்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

    Posted in சினிமா

    நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

    நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்

    தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

    விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன்

    உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.

    பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

    இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

    நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.

      Posted in சினிமா

      நான் சிங்கிள் இல்லை – லட்சுமி மேனன்

      நான் சிங்கிள் இல்லை – லட்சுமி மேனன்

      நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

      அவர் நடிப்பில் குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

      இதற்கிடையில் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார்.

      முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றி பெற்றது.

      லட்சுமி மேனன்

      சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லஷ்மி மேனன், அவ்வெப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

      அதோடு ரசிகர்களுடனும் பேசி வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

      அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், ஆமாம்‌‌ என்று கூறினார். அதேபோன்று மற்றொரு ரசிகர்

      கேட்ட கேள்விக்கு, நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து யார் அந்த காதலர் என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்