Author: நிருபர் காவலன்
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தகன் பட போஸ்டர்
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதேபோல் அனல்காற்று, 2கே அழகான காதல் போன்ற படங்களிலும் வனிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும்
தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
மயில்சாமி
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
பிரேமலதா
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2011-ல் அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது. அப்போது, அவர்களுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.க. சார்பில் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. உடனே, தே.மு.தி.க. சார்பில் கொடும்பாவி எரிக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் நடத்தப்பட்டது. உடனடியாக, ஜெயலலிதா தனது
சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, விஜயகாந்த் வந்தால் தான் நான் பிரசாரத்துக்கே செல்வேன் என்று சொல்லி விஜயகாந்தை சந்தித்து 41 தொகுதிகளை கொடுத்து சிறப்பான கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் அமர்ந்தது அனைவருக்கும் தெரியும்.
இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை.
விஜயகாந்தை அனைவரும் வந்து சந்தித்தார்கள். அதன்பிறகு கூட்டணி உருவானது. நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் கால தாமதமாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகளை கடைசி நேர கட்டாயத்தால் அப்போது ஏற்றுக்கொண்டோம். அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.
அந்த நிகழ்வு மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முறை பேச்சுவார்த்தையை டிசம்பரிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் காலதாமதப்படுத்தினார்கள். கடைசி நிமிடம் வரை எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்ற எண்ணிக்கையும், தொகுதிகளின் பெயர் பட்டியலும் இறுதி செய்யப்படவில்லை.
அவர்கள், தே.மு.தி.க.வை அழைத்து பேசுவதற்கு பதில் மற்ற கட்சிகளை அழைத்து பேசி வந்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தே.மு.தி.க.வுக்கு பக்குவம் இல்லை என்றும், பக்குவமற்ற அரசியலை தே.மு.தி.க. மேற்கொண்டு வருகிறது என்றும் கூறி உள்ளார்.
இப்போது கூறுகிறேன், கூட்டணியை உருவாக்கி 41 தொகுதிகளை வழங்கி வெற்றிக்கூட்டணியாக மாற்றியது ஜெயலலிதா தான். அந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி
அவர்கள் பா.ம.க., பா.ஜ.க.வினரை அழைத்து பேசிவிட்டு, தே.மு.தி.க.வை கடைசியில் அழைத்து பேசினார்கள். எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி தொகுதிகளை ஒதுக்கீடு
செய்யுங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அவர்கள் பரிசீலிக்கவில்லை. உண்மையிலேயே இந்த கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றும் பக்குவம் இல்லாத முதல்-அமைச்சராகத்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.
இறுதிகட்ட பேச்சுவார்த்தையின் போதும் அவர்கள் 12, 13 தொகுதியில் இருந்து மேலே ஏறி வரவில்லை. இதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் 41 இடங்களில் இருந்து
குறைத்து 25 என்று பேசி இந்த கூட்டணி சுமுகமாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை பேசி மிக மிக விட்டுக்கொடுத்தோம். கடைசியில் 18 சட்டமன்ற தொகுதியும் 1 மாநிலங்களவை உறுப்பினரும் கொடுங்கள் என்று இறுதியாக விஜயகாந்த் கூறியதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தோம்.
விஜயகாந்த்
ஆனால், அவர்கள் 13 தொகுதியில் இருந்து இறங்கி வரவில்லை. கடைசியில் நாங்கள் அதற்கும் ஒத்திசைந்து, எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கேட்டதற்கு அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், முதலில் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் அதற்கு பிறகு எந்தெந்த தொகுதி என்று சொல்கிறோம் என்றார்கள். இதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் உடன்படவில்லை.
எனவே, இந்த கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகிக்கொள்கிறோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
அதன்பிறகு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி, டி.வி.தினகரன் எங்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க-அ.ம.மு.க. கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் ஒரு சரித்திரம் படைக்கும். இந்த கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தான்.
தேர்தல் பிரசாரத்தில் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் ஈடுபடுவார்கள். இறுதிகட்ட பிரசாரத்தில் விஜயகாந்தும் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நன்றாக இருக்கிறார். பிரசாரத்துக்கு எல்லாம் வருவார். இன்னும் சிறிது காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் அறிவுரைப்படி விஜயகாந்த் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இது ஒட்டுமொத்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தெரியும். விஜயகாந்த் ஓய்வெடுத்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து தே.மு.தி.க. என்ன நோக்கத்திற்கு தொடங்கப்பட்டதோ? அதை அடைவார்” என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
அமெரிக்காவில் மூன்று அடிக்கு மேலான சினோ பொழிந்து வருவதால் மிக முக்கிய விமான நிலையமாக விளங்கும் Denver’s airport அடித்து பூட்ட பட்டுள்ளது
தொடர்ந்து எங்கும் சினோ பொழிந்து வருகிறது ,இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்
உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது
இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து
நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை
முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்
ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்
நையீரியாவில் ஆயுதமுனையில் மக்களை கடத்திய தீவிரவாதிகள் தாம் சிறைபிடித்துள்ள கைதிகளை காட்சி படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளனர்
இதில அரசுக்கு பலத்த செய்தியை வழங்கியுள்ளனர்
ஆயுதமுனையில் உள்ளவர்கள் மிக பெரும் கலக்கத்தில் ,பயந்த நிலையில் உள்ளதை காணமுடிகிறது
துப்பாக்கி முனையில் வைக்க பட்டுள்ள இவர்களை மீட்க இராணுவ நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ள வேளையில் இந்த காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
அமெரிக்காவில் Landon Grier fஇருந்து Colorado நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த இருபது வயதுடைய வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் ,
அது மட்டுமா அந்த விமானத்தின் விமானியின் அறைப்பகுதிக்குள் நுழைந்த அவர் சிறுநீர் கழித்துள்ளார் ,போதையில் அதிக தகராறு செய்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது
இவரை கைது செய்த உளவுத்துறையினர் நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் ,இவருக்கு இருபது வருட சிறை மட்டும் ,$320,000 தண்டம் விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்
அமெரிக்கா தெற்கு சிக்காக்கோ பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற பாட்டி நிகழ்வில் கலந்து கொண்ட
நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில் மரணமாகினர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
அதிகாலை 4,41 மணியளவில் அவசர மையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார்
மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் பாதிக்க பட்ட மக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மேற்படி சூட்டு தாக்குதலை மேற்கொண்டவர் 20 முதல் 44 வயதுக்குள் உட்பட்டவர்கள் என
போலிஸார் தெரிவித்துள்ளனர்,மேற்படி சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பங்கு சந்தையில் இழப்பின்றி இன்றி பணம் உழைக்க
பங்கு சந்தை ; பங்கு சந்தையில் நமது முதலுக்கு இழப்பின்றி இன்றி பணம் உழைக்க சில வழிமுறைகள் உள்ளது .
அந்த விதிகளை கடை பிடித்து முன்னேறி சென்றால் நாங்கள் பங்கு சந்தையில் அதிக பணத்தினை மிக இலகுவாக உழைத்து கொள்ள முடியும்.
உலக பங்கு சந்தையில் இழப்பின்றி எவ்வாறு பணம் உழைத்து கொள்வது என்பது தான் அனைவரது கேள்வியாகும் .இந்த கேள்விக்கு இலகுவான பதில் காத்திருத்தல் .
இந்த விதிகளை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் முதலுக்கு பாதிப்பு இன்றி பங்கு சந்தையில் அதிக இலாபத்தை ஈட்டி கொள்ள முடியும் .
ரேடிங் செய்திடமுன்னர் நீங்கள் உங்களுக்கு பிடித்த உங்களுக்கு என தயாரிக்க பட்ட விதிகளை பின்பற்றி அந்த சட்டத்துக்குள் நின்றவாறே ட்ரேடிங் செய்தாகவேண்டும் .
இரண்டு நீங்கள் சோர்ட் டர்டிங் ஆ அல்லது லோங் ரேடிங் என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும் .
மூன்று எந்த இடத்தில் வைத்து வாங்கவோ விற்கவோ போகின்றீர்கள் என்பதை டெக்கினிக்கல் ஆய்வை வைத்து ட்ரேடிங் எடுத்து கொள்ள வேண்டும்.
அவ்விதம் செய்தால் பங்கு சந்தையில் அதிக இலாபத்தை இலகுவாக இழப்பு இன்றி நாள் தோறும் பெற்று கொள்ள முடியும்.
ஒரு trade எடுக்கும் முன்பாக இதை ஏன் இந்த இடத்தில் எடுத்தேன் என உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் .அப்போது உங்களது கேள்விக்கு அதில் இருந்து பதில் கிடைக்கும் .
அவ்வாறே தொடர்ந்து பயணியுங்கள் .இந்த இடத்தில வந்தாலே மட்டுமே நான் வாங்குவேன் இந்த இடத்தில வந்தாலே விற்பேன் sell என உறுதி எடுத்து கொள்ளுங்கள் .
நீங்கள் விதித்த உருவாக்கிய விதியை rule பின்பற்றி பயணியுங்கள் வெற்றி உங்களை அழைத்து செல்லும் .டெக்கினிக்கல் அணைலஸ் Technical analysis மிகவும் பயன் தரும் ஒன்று .
இதில் யாரையும் எதனையும் ஒளித்து வைக்க முடியாது ,அதனால் என்னவோ நாம் இதனை பின்பற்றி பயணிக்கிறோம்.
நாள் தோறும் பங்கு சந்தையில் நமது முதலுக்கு இழப்பின்றி இன்றி பணம் உழைக்க மேலே நாம் கூறிய விடயங்களை கடைபிடியுங்கள்
உலக பங்கு சந்தையில் நீங்கள் திடீர் செல்வந்தராக மாறி விடுவீர்கள் என்பதை அடித்து சொல்கிறோம்
- பங்கு சந்தை ஆய்வு – வன்னி –
காசு கொடுத்தாதான் ஓட்டு – யோகி பாபு அதிரடி
காசு கொடுத்தாதான் ஓட்டு – யோகி பாபு அதிரடி
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாக ‘மண்டேலா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க
இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில், தேர்தலில் கள்ள ஓட்டுப்போட வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறார் யோகி பாபு. நெல்சன் மண்டேலா என்று பெயரிட்டிருப்பதால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
யோகி பாபு
ஒருகட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்கிய யோகி பாபு நோட்டாவைப் பார்த்து விட்டு மூன்றாவது ஒரு நபர் இருப்பதாகவும் யாராக இருந்தாலும் காசு
கொடுத்தால் தான் நான் ஓட்டுப் போடுவேன் என்றும் நகைச்சுவையாக கூறுகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
விஜய்க்காக உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா
விஜய்க்காக உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா
விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் ”இது உங்களுக்காக விஜய்… உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் மற்றும்
நண்பர்களுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீமானின் பேச்சை மெய்மறந்து பார்த்த வெள்ளைக்காரர் video
சீமானின் பேச்சை மெய்மறந்து பார்த்த வெள்ளைக்காரர்
சீமானின் பேச்சை வெள்ளைக்காரர் ஒருவர் மெய் மறந்து கேட்டு இரசித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இவர் தமிழ் கற்று ,தமிழை வாழ வைக்க முயலும் கட்சியின் பேச்சை கேட்டு மிரண்டு நிற்கிறார்
சீமான் தமிழர்கள் மனங்களை மட்டுமல்ல ,வெள்ளையர்கள் மனதுக்குள்ளும் ஊடுருவி விட்டார் போங்கள்
22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video
22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video
உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ளுவது எப்படி ..?
இதை பாருங்கள் ,நீங்களும் பணத்தை அள்ளிட முயற்சி செய்யுங்கள்
உலக நாடுகளே இதில் தான் இயங்கி கொண்டிருகிறது . ,அவ்வாறான இந்த பங்கு சந்தையில் , வீட்டில் இருந்தபடியே பல ஆயிரங்களை அள்ளுவது எப்படி என்பதை தான் குறித்த காணொளி மூலம் விளக்குகிறோம்
இதில் அதிக பணத்தை எவ்வித அனுபவம் இன்றி அள்ளிட பல வழிமுறைகள் உள்ளன ,அவை எவ்வாறு என்பதை நாம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்
காணொளியை பாருங்கள் இதனை செய்திட விரும்புகின்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
பயிற்சி அளித்து ,திறனை வளர்த்து நீங்களும் செல்வந்தராக மாற சிறந்த வழி
தொடராக எமது காணொளிகளை பாருங்கள் அதன் ஊடாக பங்கு சந்தைக்குள் நீங்களும் நுழைய முடியும்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும்
. சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
இது தவிர, உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்,
பால்வினை நோய், நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு, குறுகிய சிறுநீர் பாதை போன்றவையும் காரணம் ஆகும்.
எரிச்சலுக்கான தீர்வு என்ன?
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால்,
அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்
கொரோனாவை வென்ற சூர்யா
கொரோனாவை வென்ற சூர்யா
நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார்.
ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார்.
இருப்பினும் சில நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருந்து வந்தார். எனவே சூர்யா இல்லாமலே சூர்யா 40 படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
சூர்யா
தற்போது சுய தனிமையில் இருந்து வந்த சூர்யா, மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்
அரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா.
இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் நிச்சயதார்த்த புகைப்படம்
ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. மெஹ்ரீன் பிர்சாடாவின் காதலர் பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்
தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்
நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த போதே விஜய் இந்தப் படத்தில் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இந்தப் படத்தில் விஜய்க்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. எனவே இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
கேஜிஎப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விஜய் இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் கூர்மையான புத்தியுடனும், வழக்கம் போல சற்று காமெடி கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி
கஸகஸானில் இராணுவத்தினர் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது பொழுது அதிக புகை
மூட்டம் நிலவியாதல் விமானம் தெளிவாக குறித்த விமான நிலையத்தில் இறக்க முடியவில்லை ,இதனால் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது அதில் பயணித்த நால்வர் உடல் சிதறி பலியானதுடன் விமானம் பலத்த சேதமடைந்த நிலையில் காண படுகிறது
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்
கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்
நையீரியாவில் ஜிகாத் படைகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பத்தொன்பது அரச இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர்
மேலும் பலர் படுகாய மடைந்துள்ளனர்
அரச இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதுடன்
சோதனைகள் அதிகரித்துள்ளது
கொலண்டில் பொலிசார் மீது தாக்குதல் – தப்பியோடிய குற்றவாளிகள் பிரான்சில் கைது
கொலண்டில் பொலிசார் மீது தாக்குதல் – தப்பியோடிய குற்றவாளிகள் பிரான்சில் கைது
நெதர்லாந்து நாட்டின் காவல்துறை சிப்பாய் ஒருவர் மீது ஊந்துருளியில் பயணித்த இருவர் சரமரி தாக்குதலை
நடத்தினர் ,இவர்களின் தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த காவல்துறை சிப்பாய் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
Groningen பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர் ,தாக்குதல் நடத்தியவர்களோ நாட்டை விட்டு தப்பித்து பிரான்சுக்குள் நுழைந்தனர்
தாங்கள் தப்பி விட்டோம் என கருதிய அவர்களை வடக்கு பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீசார் மீது மேற்கொள்ள பட்ட தாக்குதல் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது







