Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

பிரித்தானியாவில் தீவிரவாதிகள் எப்பொழுதும் தாக்குதலை மேற்கொள்ள கூடும் என பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆப்கானை தளமாக கொண்டே தலிபான்கள் இயங்கி வருவதாலும் அவர்களது கைகளில் விமானங்கள்

உள்ளிட்டவை சென்றுள்ளதும்,அங்கு வைத்தே ஜிகாத் தற்கொலை தாரிகள் பயிற்றுவிக்க பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்

அவ்வாறான நபர்கள் எவ்வேளையும் பிரிட்டனில் தாக்குகள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted in மருத்துவம்

இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன.

இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

காலை உணவினை அரசனை போலவும், மதிய உணவினை இளவரசரைப்போலவும், இரவு உணவினை ஏழையை போலவும் சாப்பிட வேண்டும் என்பது உணவுமுறையை எடுத்துரைக்கும் வாழ்வியல் கூற்றாகும்.

3 வேளை உணவையும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது போல எந்தெந்த நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமானது. இதில் இரவு உணவை பொறுத்தவரை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிடுவதே சிறந்தது.

ஆனால் இன்றைக்கு பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, இரவு உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவிலும் சாப்பிட முடிவதில்லை என்பதே உண்மை.

முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வோருக்கு இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் இரைப்பை குடலை நோக்கி மேலே ஏறுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் குடல்

பகுதியில் புண்கள் உண்டாகின்றன. காலை நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.

துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவலாக உள்ளது. அவற்றை போல எண்ணெய்யில் பொரித்த உணவுகளும் இரவுக்கு ஏற்றவை அல்ல.

அவை செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால் நம்முடைய ஓய்வுக்கு மிகவும் தேவையான ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டவை.

முடிந்தவரை இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. அவை செரிமானம் ஆக நீண்ட நேரமாகும்.

இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?

தயிர், கீரை வகைகள் சார்ந்த உணவுகளை இரவில் தவிர்த்து விடுவதால் சில ஒவ்வாமைகளில் இருந்து தப்பிக்கலாம். அவற்றிற்கு மாற்றாக காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள், மிளகு, மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை பருகலாம்.

இவையெல்லாம் இரவு உணவில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளாகும். இவற்றில் சற்றே கவனமாக இருந்தால் செரிமான மண்டலம் நிம்மதி அடையும். ஏனெனில் நாம் உறங்கி

இளைப்பாறும் நேரத்தில் தான் செரிமான உறுப்புகளும் ஓய்வெடுக்கும். முறையற்ற இரவு உணவால் அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    Posted in Uncategorized

    காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

    காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

    அரச குடும்பத்தைச் சாராத காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பான் இளவரசி மகோ, சுமார் 8.7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளார்.

    காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி
    காதலனுடன் இளவரசி மகோ
    டோக்கியோ:

    ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018-ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.

    தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

    இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 29 வயதான மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார். இந்தாண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகளின்றி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு

    வழங்கப்படும். அதன்படி இளவரசி மகோவிற்கு 137 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி) இழப்பீடாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும்

    இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

      Posted in Uncategorized

      ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

      ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

      ஆப்கனிஸ்தான் நாட்டில் தலிபான் போராளிகள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்


      அரச இராணுவத்தினர் பாவித்து வந்த விமானங்கள் , உலங்குவானூர்திகள் டாங்கிகள் என முதல்தர ஆயுதங்களை மீட்ட அவர்கள் அதில் சிலவற்றை மக்கள் பாவனைக்கு காட்சி படுத்தினர்

      தற்போது அந்த காட்சிகள் உலகளாவிய ரீதியில் வைரலாகி வருவதுடன் பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது

      click here video

        Posted in Uncategorized

        நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி

        நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி

        நியூலாந்தில் பத்து வருடங்களாக வசித்து வந்த இலங்கையர் ஒருவர் பத்து பேரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்

        இவர் ஐ எஸ் தீவிரவாதிகளின் போதனைகளால் ஈர்க்க பட்டு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளதுடன் ,இவர் தொடர்ந்து போலீஸ்

        கண்காணிப்பில் உள்ளாக்க பட்டு வந்தவர் எனவும் அவ்விதமான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        இவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,சூப்பர் மரக்கட்டுக்கு வந்த அப்பாவி மக்களையே இந்த கொடூரன் குத்தியுள்ளான்

        ஒரு நபர் புரிந்த செயலினால் ஒட்டு மொத்த இலங்கையருக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு

          தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு

          குரான் மற்றும் ஷரியா சட்டப்படி பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியாது. அதன்படி ஆப்கானிஸ்தானின் புதிய அரசிலும் பெண்கள் இடம் பெறமாட்டார்கள்.

          தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு
          முல்லா ஹெபத்துல்லா
          காபூல் :

          ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து சென்றுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளும் நாடு திரும்பி விட்டன.

          இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தலிபான்கள் முடுக்கி விட்டு உள்ளனர்.

          இதில் புதிய அரசு குறித்த ஆலோசனைகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாகவும், மந்திரிசபை குறித்த விவாதங்களும் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தலிபான் தகவல் மற்றும் கலாசார கமிஷனின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான முப்தி இனாமுல்லா சமங்கானி தெரிவித்தார்.

          ஆப்கானிஸ்தானின் புதிய அரசு குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

          ஆப்கானிஸ்தானில் புதிய அரசு கட்டமைப்பில் ஈரானை பின்பற்ற தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அதிகாரமிக்க (உச்சபட்ச) தலைவர், அதிபர் என இரு பதவிகளை உருவாக்கி உள்ளனர்.

          ஈரானில் உச்சபட்ச தலைவர்தான் நாட்டின் அரசியல் மற்றும் மத அமைப்பின் தலைவராவார். அவரது மேற்பார்வையின் கீழ்தான் அதிபர் செயல்படுவார்.

          அதிபருக்கு மேல் அதிகாரம் படைத்த இவர்தான், ராணுவம், அரசு, நீதித்துறை ஆகியவற்றுக்கான தலைவர்களை நியமிப்பார். அரசு, ராணுவம் மற்றும் நீதித்துறையில் இறுதி முடிவை உச்சபட்ச தலைவர்தான் எடுப்பார்.

          அந்தவகையில் தலிபான்களும் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை (வயது 60) தேர்ந்தெடுத்து உள்ளனர். இவர் காந்தஹாரில் இருந்து செயல்படுவார்.

          இதைப்போல தலிபான்களின் அரசு கட்டமைப்பில் மாகாணங்களுக்கு கவர்னர்களும், மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கவர்னர்களும் தலைவராக இருப்பார்கள்.

          இந்த கவர்னர்கள், போலீஸ் தலைவர்கள் மற்றும் மாகாண, மாவட்ட கமாண்டர்களை தலிபான்கள் ஏற்கனவே நியமித்து உள்ளனர். அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

          இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தானின் புதிய மந்திரிசபையில் பெண்களுக்கு இடமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாகித் இத்தாலி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

          ஆப்கானிஸ்தான்

          தேசிய ஒற்றுமைக்கான ஒரு புதிய அரசை நாங்கள் வெகு விரைவில் அமைப்போம். மிகச்சிறிய அளவில் அரசை அமைக்க விரும்புகிறோம். அதாவது முந்தைய அரசில் இடம் பெற்றிருந்த மந்திரிகளின் எண்ணிக்கையில் பாதியளவுக்கே மந்திரிகளை வைத்திருப்போம்.

          குரான் மற்றும் ஷரியா சட்டப்படி பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியாது. அதன்படி ஆப்கானிஸ்தானின் புதிய அரசிலும் பெண்கள் இடம் பெறமாட்டார்கள்.

          ஆனால் அமைச்சகங்கள், போலீஸ் மற்றும் கோர்ட்டுகளில் உதவியாளர்களாக அவர்கள் பணியாற்ற முடியும். ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தடை விதிக்க முடியாது.

          பஞ்ஷிர் மாகாணத்தில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்டு வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் தரவில்லை.

          சர்வதேச உறவுகளை பொறுத்தவரை, சீனாவை எங்கள் முக்கியமான கூட்டாளியாக பார்க்கிறோம். ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும், நாட்டை மறுகட்டமைக்கவும் சீனா தயாராக இருக்கிறது.

          சீனாதான் சர்வதேச சந்தைகளில் எங்களின் நுழைவுச்சீட்டு.

          அதேநேரம் ரஷியாவுடனான உறவுகளும் மோசமடையவில்லை. ஏனெனில் அந்த நாடு இந்த பிராந்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாஸ்கோவுடனான உறவுகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது. மேலும் சர்வதேச அமைதிக்கான சூழல்களை உருவாக்க ரஷ்யா பங்களிக்கிறது

          Posted in Uncategorized

          ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

          ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

          சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

          ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

          ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி.

          ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

          ஜோ பைடன் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி, அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

          முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது, நமது கூட்டாளிகளுடன், அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும். நமக்கு அவர்களும் தேவை.

          இரண்டாவது, உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த (ஆப்கானிஸ்தானில்) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் பார்க்க முடியும்.

          நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது இணையதள பாதுகாப்பு, பத்திரமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங்களில் ஊடுருவுவார்கள்.

          ஏனென்றால் நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

          நாம் சீனாவைப் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது. (இந்த விமானப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.)

          சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

          நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம், நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாகும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும்.

          சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

          இவ்வாறு அவர் கூறினார்.

          Posted in உலக செய்திகள்

          வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்

          வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்


          கோல் மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், இது தங்க இதயம் கொண்ட மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.

          வலையில் சிக்கிய தங்க இதய மீன்கள்… ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்
          தங்க இதய மீன்கள்
          இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

          மும்பை:

          மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். முதல் நாளிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின.

          இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்,.

          கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது. இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டன. சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

          கோல் மீனின் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இது மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் இந்த மீன் தங்க இதயம் கொண்ட மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.

          Posted in உலக செய்திகள்

          அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- 42 பலி

          அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- 42 பலி

          நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

          அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
          இடா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

          அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.

          சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரெயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.

          வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலை

          இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

          தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

          நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரெயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          திருமணம் முடிக்க நான் வாரேன்

          திருமணம் முடிக்க நான் வாரேன்

          தீச்சுவாலை சமரதுவாய்
          தீண்டி என்னை வருபவளே
          வழிமறித்து தாக்கிடவே
          வழியமைத்து கொடுப்பவளே

          ஊந்துகணை தோள் சுமக்க
          ஊடறுப்பை நான் தொடுக்க
          சமராட அழைப்பவளே
          சம்மதமா நான் வென்றிடவே …?

          சூரிய கதிர் முற்றுகையாய்
          சுற்றி என்னை வலைத்தாயோ ..?
          தவளை பாய்ச்சால் நடவடிக்கையில்
          தத்தளித்து நின்றாயோ …?

          நீரூந்து விசை படகாய்
          நீந்தி வலம் வந்தவளே
          துறைமுகத்தில் நான் புகுந்து
          துணிவுடனே கடத்தி விட்டேன்

          பூநகரி தாக்குதலோ
          புது வரவை தந்து விட
          ஏறி களம் ஆடி நின்றோம்
          எரிமலையாய் வெடித்து வந்தோம்

          ஆழ பிறந்தவர் நாம் தானே
          ஆள்வோமே மீள்வோமே
          தலிபான்கள் போல
          தலைமையில மிதப்போமே

          கொஞ்ச நாள் பொறுத்திருப்பாய்
          கொளகை தன்னை வளர்த்திருப்பாய்
          நஞ்சை கட்டி களம் திறக்கும்
          நாளில் என்னை மணப்பாய் …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 02-09-2021
          http://ethirinews.com/

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in Uncategorized

            12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்

            12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்

            ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

            பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம்

            புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019

            *ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

            புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.

            மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.

            *உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.

            *புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இது தவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

            Posted in உலக செய்திகள்

            லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்

            லண்டனில் மனைவியை தீ மூட்டி கொன்ற கணவன்

            வடக்கு லண்டன் பகுதியில் கறுப்பின கணவர் ஒருவர் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி படுகொலை புரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            மேற்படி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஓராண்டுகளாக இடம் பெற்று வந்த நிலையில் கணவன் எரிபொருள் நிலையத்தில் டீப் ஒன்றுக்குள் நிரப்பி செல்லும்


            காட்சிகள் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் திட்டமிடப்பட்ட படுகொலை என கண்டறியப்பட்ட நிலையில் கணவருக்கு ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறிய பயணிகள் பேரூந்து – 29 பேர் மரணம்

            பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறிய பயணிகள் பேரூந்து – 29 பேர் மரணம்

            பேரூ நநாட்டில் Rimac நதியில் பயணிகள் பேரூந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறியது ,இதன்

            பொழுது அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்

            மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              Posted in Uncategorized

              எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

              எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

              ஈரானுக்கு விட படும் எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க தமது ஏவுகணைகள்

              எல்லையோரங்களில் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது

              அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதலை தம்மீது மேற்கொள்ள கூடும் என ஈரான் எதிர் பார்த்துள்ள வேளையிலேயே

              இந்த ஏவுகணைகள் எல்லையோரம் மற்றும் முக்கிய கேந்திர நிலைகளை சுற்றி நிறுத்த பட்டு அதி உச்ச கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்

                ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்

                ஈராக்கின் தியத்தல பகுதியில் பதுங்கி இருக்கும் ஐ எஸ் தீவிரவாதிகளை முற்றாக

                துடைத்தளிக்கும் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஈராக்கிய இராணுவம் மேற்கொண்டுள்ளது

                இந்த தாக்குதல் மூலம் இவர்கள் முற்றாக அழித்தொழிக்க படுவார்கள் என இராணுவ தளபதி சூளுரைத்துள்ளார்

                  Posted in மருத்துவம்

                  காது குடைவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்

                  காது குடைவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்
                  காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ்

                  என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது..

                  தலைக்கு குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது காது சரியாகக் கேட்பதில்லை.

                  `பட்ஸ்’ கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது என சிலர் சொல்வதை கேட்டு இருப்போம்.

                  காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று

                  கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம்.

                  பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும்.

                  அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக்

                  காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். `பட்ஸ்’ பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது

                  கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது.

                  காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி.

                  காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன.

                  குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான்

                  . இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

                  காது குடைவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்

                  அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே

                  வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

                  காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம்.

                  அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில்

                  எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும்.

                  பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும்.

                  எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயை காதுக்குள் ஊற்றக் கூடாது, அப்படிச் செய்தால் காது பாதிக்கப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

                    Posted in குற்ற செய்திகள்

                    குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்.

                    குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்.

                    பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது அவருக்கு எப்போதும் கோபம் உண்டு

                    குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்- பரபரப்பு தகவல்கள்
                    கைது செய்யப்பட்ட துளசி


                    மழலை மொழி மாறாத பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாய் துளசியிடம் சத்தியமங்கலம் போலீசார், குழந்தையிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

                    அப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது:-

                    துளசிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் கோகுல்(வயது 4) சுகபிரசவமாக பிறந்தார். இரண்டாவது குழந்தை பிரதீப்(2). இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

                    பிரசவத்துக்கு பின்னர் துளசி, சற்று உடல் பருமனாக மாறி உள்ளார். மேலும், அறுவை சிகிச்சையின் காரணமாக பிறந்ததால், 2-வது குழந்தை மீது துளசிக்கு எப்போதும் கோபம் உண்டு.

                    இந்த நிலையில் தான், துளசியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசியபோது, எதிரே பிரேம்குமார் என்பவர் பேசி உள்ளார்.

                    அவர் தான் சென்னையை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசி, நட்பு பாராட்டி வந்தனர். இதுவே நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

                    துளசியின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் வீட்டுக்கு திரும்புவார். இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி அவர்கள் செல்போன் மூலம் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

                    துளசி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட காட்சி.
                    அப்போது வீடியோ கால் மூலமாகவும் அவர்கள் பேசி வந்தனர். இதில் துளசியை பார்த்து, அழகாக

                    இருப்பதாகவும் கூறி பிரேம்குமார் பேசி வந்துள்ளார். மேலும் அவரது மூத்த மகன் கோகுலை பார்த்து அவன் உன்னை போன்று அழகாக உள்ளான். ஆனால், பிரதீப் அழகாக இல்லை, அசிங்கமாக உள்ளான்.

                    2-வது குழந்தை தான் உனது அழகை குறைத்து விட்டது என்று கூறியுள்ளார். பிரேம்குமார் இனிக்க இனிக்க பேசியதில், துளசி தன்னையே மறந்து விட்டார். இதனால் அவரது பேச்சில் மயங்கிய துளசிக்கு தனது குழந்தை பிரதீப் மீதான பாசம் போய்விட்டது.

                    மேலும், தனக்கும் அந்த குழந்தையை பிடிக்கவில்லை என்று கூறிய பிரேம்குமார், அந்த குழந்தையை அடிப்பது போன்று வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

                    கள்ளக்காதலனின் பேச்சில் மயங்கிய துளசி, தான் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி குழந்தையை அடித்து துன்புறுத்தி, அதை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் பிரேம்குமாருக்கு அனுப்பிவைத்தார். அதை இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.

                    குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து கணவர் வந்து கேட்கும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகவும், குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டான் என்றும் ஏதேனும் ஒரு

                    சாக்குபோக்கை கூறி தப்பி வந்துள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய வடிவழகனும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சையும் அளித்து வந்துள்ளார்.

                    மேலும், உனது கணவரிடம் சண்டையிட்டு வந்துவிடு, நான் உன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் பிரேம்குமார் ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

                    சென்னையை சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமார் தூண்டுதலின் பேரில்தான் துளசி தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. எனவே குழந்தையின் மீது

                    வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருந்த கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளர். இதையடுத்து தனிப்படை போலீசார் பிரேம்குமாரை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர்

                    Posted in உலக செய்திகள்

                    பாஸ்போர்ட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

                    பாஸ்போர்ட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

                    பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார்.

                    பாஸ்போர்ட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
                    பிரேமலதா விஜயகாந்த்

                    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல திட்டமிட்டார்.

                    நெல்லை மாவட்ட போலீசில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவழக்கை பாஸ்போர்டை புதுபிக்கும் போது மறைத்ததாக கூறி பிரேமலதா பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல

                    பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார். இதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது. இதனால், விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல பிரேமலதாவால் முடியவில்லை.

                    இதனால், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

                    சென்னை ஐகோர்ட்

                    அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் கோர்ட்டில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை.

                    பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது.

                    எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார்’’ என்று வாதிட்டார்.

                    இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், ‘‘பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

                    அதேவேளையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற

                    உறுதிமொழியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                      ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                      மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

                      ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                      அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

                      இந்த நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

                      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

                      ஓ பன்னீர்செல்வம்- விஜயலட்சுமி

                      அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

                      முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

                      Posted in Uncategorized

                      தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                      தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                      சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

                      ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

                      புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,

                      • வன்னி மைந்தன்-