Author: நிருபர் காவலன்
சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்
சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்
சீனா இராணுவத்தினர் 2023 ஆண்டு தமது வான் படையில்
13 வகையான முதல் தர தாக்குதல் உலங்கு
வானூர்திகளை வடிவமைத்து களம் இறங்கியுள்ளனர் .
தாக்குதல் ,தரையிறக்கம் ,படைக்காவிகள் ,
சரக்கு உலங்குவானூர்திகள் ,
மருத்துவ உலங்குவானூர்திகள்
என வகையாக பிரிக்க பட்டு களத்தில் இறக்கிவிட்டுள்ளது .
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் ,
கடும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் ,
இந்த வான்படையின் புதிய வரவுகள் ,
ஆயுத போட்டியில் தாம் வல்லாதிக்கம் மிக்கவர்கள் என்பதை
சீனா எடுத்துக்காட்டுவதாக இந்த
வான்படை காட்சிகள் அமைய பெற்றுள்ளன .
எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது
எயார் இந்தியா 470 விமானங்களை வாங்கி குவிகிறது
இந்தியாவின் டாடா குழுமத்தின் புதிய அறிவிப்பின்
பிரகாரம் 470 புதிய போயிங் விமானங்களை
எயார் இந்தியா வாங்கி குவிகிறது .
புதிதாக 470 போஜிங் மற்றும் எயர் பஸ் விமானங்களை வாங்கி குவிகிறது .
இந்த புதிய விமான கொள்வனவே மிக பெரும்
சாதனையில் ஒன்றாக உள்ளதாக
அமெரிக்கா ஜனாதிபதி ஜுபைடன் தெரிவித்துள்ளார் .
டடா குழுமம் இண்டிக்கோ நிறுவனத்திற்கு
போட்டியாக இந்த திட்டத்த்தை அறிமுக படுத்துகிறது .
விமான நிறுவனகளுக்கு இடையிலான
மிக பெரும் போட்டியில் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது .
இதன் ஊடாக இந்தியாஉள்ளிட்ட பல நாடுகளுக்கான
தனது சேவைகளை விரைவு படுத்தவுடன் ,
தனது விமான போக்குவரத்து வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது .
திருமதி விஜயலட்சுமி சிவபாக்கியநாதன்
நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் ,சித்தன்கேணியையும் ,
இலண்டன் ஈஸ்ட்காமை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி விஜயலட்சுமி சிவபாக்கியநாதன் (ஓய்வுபெற்ற அதிபர் /ஆசிரியர் ,
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி } 11-02-2023 சனிக்கிழமை
இறைவனடி எய்தினார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான -சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின்
அன்பு மகளும் ,சிவசுந்தரம் -சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும் ஆவார் .
அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி சிவபாக்கியநாதன் அவர்களின்
அன்பு மனைவியுமாவர் .
நித்தியலட்சுமி (கனடா ) பத்மாவதி (இலங்கை )சற்குணவதி (இலண்டன் )
ரூபவதி (இலண்டன்) இரத்தினேஸ்வரி (இலங்கை }கமலேஸ்வரி {கனடா }
ஆகியோரின் சகோதரியும் ,சிவபாக்கியசுந்தரம் (இலண்டன் )
காலஞ்சென்ற கனகரட்ணம் (இலண்டன் ) இராசலட்சுமி (இலங்கை )
காலஞ்சென்ற சந்தானலட்சுமி (பிரான்ஸ் ) ஜெயபாலசுந்தரம் (இலங்கை )
சிவஞான சுந்தரம் (இலண்டன் ) சிவரஞ்சிதம் (பிரான்ஸ் )சிவயோகவதி (பிரான்ஸ் )
இன் மைத்துனியும் ,
DR வசந்தன் (நியுசிலாந்து ) வாசுகி முருகதாஸ் (சட்டத்தரணி இலண்டன் )
கலாவதனி ( கணக்காளர் இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
சீதா ,முருகதாஸ் (தாசன் ),சிவநேசன் {பிரகாஷ் }ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
பிரசாந்த் ,நீரா ,ஹரிதரன் {தரன் } பிரியங்கா ,ஆகாஷ் ,சோபிகாவின்
அன்பு பேத்தியுமாவார் .
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 16-02-23 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை
8 -10 Shakespeare Crescent, Manor Park , London E12 6LN (Near East Ham station)
இலும், தகனக்கிரிகைகள் South Chapel at City of London Crematorium,
Aldersbrook Road, Manor Park, London E12 5DQ இல் காலை 10.15 மணி
முதல் 10.45 மணிவரை நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.
தொடர்புகட்கு
வாசுகி முருகதாஸ் (மகள் ) 0044 7960899219
கலாவதனி சிவநேசன் (மகள்) 0044 7958607214
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் ,
தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
இந்த பணம் விரைவில் இலங்கைக்கு வழங்க படவுள்ளது .
கடன் மேல் கடனை பெற்று
மீளவும் நாட்டை கேள் நிலைக்கு இலங்கை அழைத்து
செல்வதை இவை மீளவும் எடுத்து காண்பிக்கின்றன.
ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்
ரசியவினால் எமது பகுதிகளை மீள ஆக்கிரமிக்க முடியாது உக்கிரைன்
ரசியா இராணுவத்தினரால் மீளவும் எமது பகுதிகளை ஆக்கிரமிக்கவோ அபகரிக்கவோ
முடியாது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .
உக்கிரைன் பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்க ரசியா இராணுவத்தின் இராணுவ பலம் போதாமை உள்ளது என உக்கிரைன் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .
மேலும் நேட்டோ நாடுகள் உள்ளிட்டவைகள் எமக்கான ஆயுத
உதவிகள் மற்றும் இராணுவ உதவிகளை
பல படுத்த வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .
இவரது இந்த பேச்சு ரசியாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
ஆயுதங்களை உக்கிரைனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்
ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்
உக்கிரனுக்கு டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதற்கு ஜெர்மன்
நாடு இணக்கம் தெரிவித்தது .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஜெர்மன் மக்கள் போரட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் .
உடனடியாக உக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை,
ஜெர்மன் அரசு நிறுத்த வேண்டும் என
அந்த மக்கள் வேண்டுதல் விடுத்து மகயர் வழங்கியுள்ளனர் .
மக்களின் இந்த போராட்டம் ஆளும் அரசுக்கு
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான போராட்டங்கள் மேலும் வெடித்தால் ,
அது ஆளும் அரசு ஆயுத வினியோக முடிவில்
பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றுள்ளதால்
உக்கிரைன் அரசு கலக்கத்தில் உறைந்துள்ளது .
துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது
துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது
துருக்கியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி
பல்லாயிரம் மக்கள் இறக்க அந்த கட்டடங்களை வடிவைப்பு
செய்து உருவாக்கிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இவர்களின் பொறுப்பற்ற கட்டட வடிவமைப்பு காரணமாகவே
மக்கள் பெருமளவில் பலியாக காரணமாக இருந்தனர் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட பாரிய சேத விபரங்களை
அடுத்து, துருக்கிய காவல்துறையினர் விசாரணைகளை
ஆரம்பித்து இருந்தனர் .
அதன் பொழுதே இந்த மூவரும் நாட்டை விட்டு
வெளியேற முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளனர் .
விசாரணைகள் முடிவில் இவர்களுக்கு
பல்லாணடு சிறை தண்டனை வழங்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை எனவும் ,அவர் மக்களையும் கடைசி மகன் பாலசந்திரனையும் பலிகொடுத்து விட்டு தப்பிப்போகும் கோழை இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் .
தமிழக அரசியல் கூலிகள் சிலர் சிலரது நலனுக்கும் ,தமிழர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த இந்த சதிவேலைகளை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார் .
பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்
பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்
நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் பேய்க்கும் பேய்க்கும் சண்டை என ஆளும் ஆட்சிகளை வறுத்தெடுத்துள்ளார் .
நாம் வெல்ல நீங்கள் பேராதரவு தாருங்கள் நாம் சொல்லும் இந்த விடயத்தை காதில் போட்டு கொள்ளுங்கள் .
ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
உக்கிரைன் நடத்திய தாக்குதலில் ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் பலியாகியுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
இதே அளவிலான உக்கிரைன் இராணுவம் பலியாகியுள்ளது .
ஆனால் அதனை உக்கிரைன் தெரிவிக்க மறுத்து ,
தாமே வீர புதல்வர்கள் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்
புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்
புலிகளை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் கூலி பைலைப்பு நடத்தி வருகிறது .
புலிகள் உள்ள பொழுது இந்தியாவின் ராவுக்கு வேவு பார்க்க
புலிகளுடன் நெருங்கி பழகி ,பின்னர் புலிகளுக்கு
வேட்டு வைத்த கூலிகள், தற்போது புலிகள் உளளார் என ,
வெட்க மான ரோசம் அற்று மீண்டும் புலிகள் பெயரை உச்சரிக்கின்றன .
போரினால் பாதிக்க பட்டு அடக்கி ஒடுக்க படுகின்ற தமிழர்களுக்கு ,
தீர்வு காண மறுக்கும் ,இந்தியாவும் ,தமிழக அரசியல் கூலிகளும் ,
தற்போது புலிகள் பெயரை உச்சரிப்பது கேவலமாக உள்ளதாக ,
புலம் பெயரை தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ளனர் என்ற ஒலி நாட ஒன்று
வெளியாகியுள்ளது .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ள செய்தியானது தமிழ் மக்கள் மத்தியில்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் மனித சடலம் மீட்பு
வவுனியாவில் மனித சடலம் மீட்பு
வவுனியாவில் காட்டு பகுதிக்குள் இருந்து மனித சடலத்தின் எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .
இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது .
காணாமல் போயிருந்த சிங்கள நபர்
ஒருவரே உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் தொடர்ந்து வட கிழக்கு பகுயில் ,
இவ்வாறான மர்ம கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீனம் காசா பகுதியிலுள்ள கமாஸ் போராளிகள்
நிலைகள் மீது இஸ்ரேல் விமான படை அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் காமாஸ் போராளிகள்
முக்கிய நிலைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேல் நடத்தும் இந்த வலிந்து தாக்குதல்களை அடுத்து,
காமாஸ் ஜிகாத் இணைந்து இஸ்ரேல் மீது
கூட்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் இராணுவத்தின் 12 உளவு விமானங்கள் மற்றும் 12 ஹிமாஸ் ஆட்டொலொறிகள்
மற்றும் உக்கிரைனின் 78 பீரங்கி படை பிரிவுகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,ரசியா இராணுவ தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் ரசியா விமானங்கள் ஏவுகணைகள் ,
மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் இந்த விசேட அழிப்பு,
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது
20 நாடுகளின் ஆயுத உதவியை உக்கிரைன் பெற்றுள்ள பொழுதும் ,
இதுவரை ரசியா இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாது திணறி வருகிறது .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி 34 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க படுவதால் ,
இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த மக்கள் மரண எண்ணிக்கை உலக மக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி
வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
பியகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை கெப்சல்கள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
இது தவிர, போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





















































