Tag: பிக்கு கைது
திருகோணமலை புத்தர் சிலை பிக்கு கைது
திருகோணமலை புத்தர் சிலை பிக்கு கைது
திருகோணமலை புத்தர் சிலை பிக்கு கைது ,திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக வணக்கத்துக்குரிய பாலங்கொட காசப்ப தேரோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜர் கோயில் வளாகத்தில் கருவறை கட்டுவது மற்றும் அனுமதியின்றி புத்தர் சிலை
நிறுவியது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
வணக்கத்துக்குரிய பாலங்கொட காசப்ப தேரோ, இன்று (17) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காகவும், திருகோணமலை நீதிமன்றம் மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ஒரு நீதிபதி குறித்து தனது வழக்கறிஞர் மூலம் இழிவான கருத்துக்களைத்
தெரிவித்ததற்காகவும் தேரோ மன்னிப்புக் கோரியதை அடுத்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கீர்த்திபண்டாரபுர பொலிஸார் சனிக்கிழமை (25) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு கேகாலையைச் சேர்ந்தவர், காலியைச் சேர்ந்த பெண், மீரிகமயைச் சேர்ந்த ஆண்ணொருவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் ஒருவர் வலப்பனை கீர்த்திபண்டாரபுர பகுதியைச் சேர்ந்தவர் மற்றைய மூவரும் தம்புள்ளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
அதேநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வசமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல் தோண்டுவதாக பயன்படுத்த கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இப்பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த விடயம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, கைப்பற்றிய பொருட்களுடன் வலப்பனை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.









