நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணயவிலை அறிவிப்பு

நெல் கொள்வனவு நிர்ணய விலை அறிவிப்பு ஆளும் அனுரா அரசு செய்துள்ளது .

இந்த விடயம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது .

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலை

விளைவித்த நெல்களை சந்தையில் உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் திணறி வந்தனர் .

ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள இந்த விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள பொழுதும் ,

வழங்க பட்ட வாக்குறுதிக்கு இணங்க அரசு செயல் படுமா என்றா சந்தேகம் எழுந்துள்ளது .

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதி

அரசு மீது மக்கள் கவனத்தை திருப்ப வாக்குறுதிகளை ஆளும் அனுரா அரசு அடித்து விடுகிறது ,

அவ்விதமான நிகழ்வில் ஒன்றாக இது காணப்படலாம் என்ற சதேகத்தை இவை எழுப்பி நிற்கிறது .

நாட்டு நெல் கிலோகிராமுக்கு ரூ. 120
சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 130
கீரி சம்பா நெல் கிலோகிராமுக்கு ரூ. 140
இந்த பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

50 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு
Posted in இலங்கை செய்திகள்

50 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு

50 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு

புதுக்குடியிருப்பு பிரதேச விவசாயிகளிடம் கிலோ 100 ரூபாய் படி, 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் நேற்று (26) உடையார் கட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
உணவு இல்லாதவர்களுக்கு உணவு கிடைக்கவழி ஏற்படுத்தும் திட்டமாக வறிய மக்களுக்கு அரிசி வழங்கம் திட்டம் அமைந்துள்ளது.

அத்துடன், விவசாயம் சார்ந்த பகுதியான முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தரமான விலையில் நெல்லைச் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நெல்லை விவசாயிகளிடம் இருந்து கிலோ கிராம் 100 ரூபாய் விலையில் கொள்வனவு செய்து, மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் அரிசியாக்கி எங்கள் பகுதி மக்களுக்கே அதனை கிடைக்கச்செய்வது பல நல்ல அனுகூலங்களை தருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லைக் கொள்வனவு செய்துள்ளோம். 31 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் புதுக்குடியிருப் பிரதேசத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல், யாழ்ப்பாண மாவட்டத்துக்க வழங்கி வருகின்றோம். இந்த திட்டத்தில் பெருமளவு நன்மையடையும் பகுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய பகுதி அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

No posts found.